Sunday, November 30, 2014

புருஸ் லீ

தன் அப்பாவை போலவே திரையில் நடித்துக்கொண்டு இருந்தான் இளவயதிலேயே அந்த
சிறுவன்.சீக்கிரமே குங் பூ கற்றுத்தேறிய அவன் தெருக்களில் மற்ற பிள்ளைகளோடும் ,போலீஸ் உடனும் தொடர்ந்து வம்புக்களில் ஈடுபடுவதை அவர் தந்தை கவலையோடு பார்த்தார்.அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். வயிற்றுப்பிழைப்புக்கு அங்கே குங் பூ சொல்லித்தந்து கொண்டிருந்தார் லீ

அப்பொழுது வோங் ஜாக்மான் எனும் அனுபவம் மிக்க குங்பூ வீரர் "ஆசியர் அல்லாதவர்களுக்கு ஏன் குங் பூ சொல்லித்தருகிறாய்" என்று கேட்க ,"கலை எல்லாருக்கும் பொதுவானது தானே " என அந்த இளைஞன் திருப்பிக்கேட்டார். "அப்படியில்லை ! வலியவன் சொல்வதை தானே உலகம் கேட்கும் ? நாமிருவரும் சண்டை போடுவோம். நான் வென்றால் நீ குங் பூ சொல்லித்தருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் ; நீ வென்றால் நான் குங் பூ என்கிற பெயரைக்கூட இனிமேல் உச்சரிக்க மாட்டேன் ! என்னோடு சண்டையிடு என்னோடு சண்டையிடு " என்றார் அவர்.





இளைஞன் இணங்கி சண்டையிட்டார். அனல் பறந்த சண்டையில் வேகம் மிகுந்த இவர் வென்றுகாட்டினார். அவரை வென்றதும் முன்னமே சொன்னபடி வோங் ஜாக்மான் குங்
பூ சொல்லித்தருவதை நிறுத்திக்கொண்டார் .ஆனால்,அது எண்ணற்ற கேள்விகளை அந்தப் பையனின் மனதில் விளைத்தது. ஹாங்காங்கில் மிகப்பெரும் குத்துசண்டை வீரனாக இருந்து நொடியில் பலரை நாக்கவுட் செய்த தான் அதிக நேரம் எடுத்து ஜாக்மான் உடன் மோதியது அவரின் பாரம்பரிய குங்பூவின் மீதான ஈர்ப்பை மங்கசெயதது .

தானே இன்னும் பல மாற்றங்களை உருவாக்கினார்.அவர் படித்த தத்துவம் அவருக்கு அதீத அமைதியை தந்தது,எவ்வளவு பெரிய சண்டையையும் எளிமையாக வென்றார். "நீர் போல அமைதியாக ஓடிக்கொண்டு ,சலனமற்று இருக்கிறேன் ,மூங்கிலை போல வளைந்து கொள்கிறேன்.ஆழ்ந்த அமைதி என்னை எப்பொழுதும் வழி நடத்துகிறது" என்ற அவர் டிவி ஷோக்களில் கலக்கிய பின் சீட்டின் முனைக்கே கொண்டுசெல்லும் சண்டைகாட்சிகள் மூலம் ஹாலிவுட்டில் கலக்கினார்.

புரூஸ் லீ ஒரு கவிஞர் என்பதை தாண்டி ஒரு தீர்க்கமான தத்துவ ஞானம் மிக்கவராக இருந்தார் என்பதே சரி. "எதிரி என்று ஒருவன் இல்லவே இல்லையே ; எல்லாமே பிம்பங்கள்,பிரதிபிம்பங்கள். அவற்றை நொறுக்கிவிட்டால் போதும். எதிரிகள் என்று யாருமில்லை என உணர்வீர்கள் !" என்றார் அவர். ஜென் அவரைத் தொடர்ந்து செலுத்தியது. பேரமைதி அவரிடம் குடிகொண்டு இருந்தது,ஒரு முறை சீன இளைஞன் ஒருவன் ஹோட்டலில் வம்புக்கு இழுத்துக்கொண்டே இருந்தான், லீ அமைதியாகவே இருந்தார் "ஏன் இப்படி ?" என்று கேட்ட பொழுது ,"நான் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். அதை மற்றவர்கள் திருட விடமாட்டேன் !" என்று மட்டும் சொன்னார். வீரம் என்பது
சண்டை போடுவதில் மட்டுமில்லை ; யாருடன் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என
உணர்ந்து நடப்பதிலும் இருக்கிறது.

நிறைய ஜென் கதைகள் சொல்லும் லீக்கு மிகவும் பிடித்த கதை ஒன்று உண்டு. கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி வந்த இளைஞனிடம் நிரம்பிய தேநீர் கோப்பையை மீண்டும் ஊற்றி நிறைக்க முயல்கிற செயலை செய்து "வெறுமையாக இருக்கிற பொழுது தான்,அறிதலைக்கடந்து உணர்தலை நோக்கி நகர்கிற பொழுது தான் நீ ஜென் ஆகிறாய் !" என்கிற ஆழ்ந்த தத்துவம் இருப்பதை உணர்த்திய அந்தக்கதை மிகவும் பிடிக்கும் . மனம் விரும்புவதை உடல் செய்ய இந்த அறிதல் முக்கியம் என்பார் புரூஸ் லீ. அதுவே அவரின் அசரவைக்கும் சண்டைக்காட்சிகளுக்கு அடிப்படை.

நம்பினால் நம்புங்கள் புருஸ் லீக்கு உடலில் குறைபாடு ஒன்றிருந்தது. அவரின் வலது கால் இடது காலை விட நான்கு சென்டிமீட்டர் உயரம் குறைவு. ஆனால்,உங்கள் தலையில் ஒரு நாணயத்தை வைத்தால் அதை உங்கள் தலைமுடியைக்கூட அசைக்காமல் அவரால் எடுக்க முடியும். கேட்ட பொழுது ,"நாணயம் மட்டும் தான் என்னுடைய கண்களில் தெரியும். அதில் மூழ்கிப்போவது தானே குங்பூ !" என்றார்

அவரின் வேகம் எந்தளவுக்கு இருந்தது என்றால் ஒரு காட்சிக்கு நொடிக்கு இருபத்தி நான்கு பிரேம்கள் அவரின் வேகத்தை பிடிக்க போதாமல் கூடுதலாக பத்து பிரேம்கள் தேவைப்பட்டன ! இருந்தாலும் அதை ஆழ்ந்த அமைதியோடு செய்கிற சமநிலை புரூஸ் லீக்கு இருந்தது. அவர் பட்டப்படிப்பு படித்தது
தத்துவத்தில் என்பது அவரின் ஆழ்ந்த தேடலை உணர்த்தும் . முப்பத்தி மூன்று வயதில் இறந்து போனாலும் இன்னமும் ஆக்ஷனில் தொட முடியாத உயரத்தில் இருக்கும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள அத்துணை பாடங்கள்.

அவரின் ஒரு கவிதை தான் அவரின் வாழ்வானது :

மேற்கே காற்றை
எல்லாம் தங்கமயமாக்கி
கதிரவன் கரடுமுரடான மலையில் கரைகிறான்

கரைந்துருகும் பனித்துளிக்கு
வெகுதூரம் தள்ளி
மலையுச்சியின் மீது
தங்க டிராகன்
தனித்து தன் கனவுகள்
வெளிச்ச மேற்கில் தேய,மறைய
சலனமில்லாமல் நிற்கிறது !

ஏழை மனிதனின் தாஜ்மஹால்!

தாஜ்மஹால்னா, அது ஆக்ராவில் உள்ளது என்றுதானே சொல்வீர்கள். அது, ஷாஜஹான் தன் காதல் மனைவிக்குக் கட்டிய நினைவுச் சின்னம். ஆனால், மஹாராஷ்ட்ரா மாநிலம், ஔரங்காபாத்தில் இருக்கும் தாஜ்மஹாலோ, மன்னர் ஆஜம்ஷா, தன் அம்மாவுக்குக் கட்டிய நினைவுச் சின்னம்.

மொகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் மகன்தான் இந்த ஆஜம் ஷா. 1651 முதல் 1661 வரை மன்னராக இருந்த காலத்தில், தாத்தா ஷாஜஹான் மும்தாஜுக்குக் கட்டிய தாஜ்மஹாலைப் பார்த்து ரொம்பவும் அசந்துபோய், அதேபோல் அச்சு அசலாக, தன்அம்மாவுக்குக் கட்ட ஆசைப்பட்டார். அந்தக் கல்லறைக்கு பீபீ கா மக்பாரா (Bibi Ka Maqbara) என்று பெயர் சூட்டினார். (இதற்கு, 'லேடி கல்லறை' என்று அர்த்தம்).

தாஜ்மஹாலைப் போலவே இருக்கும் என்று எண்ணிய ஆஜம் ஷாவிற்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. திறமையான தொழிலாளர்கள் அமையாததால், தாத்தாவின் தாஜ்மஹால் போல அழகாக அமையவில்லை. பளபளப்பாக தோன்றவில்லை. காரணம், தாஜ்மஹாலுக்கு உபயோகித்த தூய வெள்ளை சலவைக் கற்களை, இந்த பீபீ கா மக்பாராவிற்கு உபயோகிக்கவில்லை.
மக்பாரா கட்ட, அப்போது ஆன செலவு, 7,00,000 ரூபாய். ஆனால், தாஜ்மஹால் கட்ட ஆன செலவு, 32 மில்லியன். அதனால்தான் இந்த மக்பராவை, 'ஏழை மனிதனின் தாஜ்' என்று அடக்கமாகக் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால்,தாஜ்மஹாலுக்கு இணையாக சொல்லமுடியாவிட்டாலும் கூட இந்த நினைவுச் சின்னத்தின் உள்ளே இருக்கும் அழகிய வடிவங்கள், பார்வையாளர்களை மிகவும் கவர்கிறது. அங்கு அமைந்துள்ள தோட்டம், மொகலாயர்களை நினைவூட்டும் விதமாக உள்ளது.

மேடை நாடகம் வரலாறு

ஆடல் பாடல் இவைகளே பன்னெடுங்காலமாக நாடகம் என அறியப்பட்டு வந்திருக்கின்றன. மனித வாழ்க்கையில் ஆடலும், பாடலும் சிறப்பான இடத்தை வகிக்கின்றன. அசைவுகளும், ஓசைகளும் காலம் காலமாக மனித மனத்தை அலைக்கழித்துக் கொண்டிருகின்றன. தன்னுடைய மனத்தின் நுண்ணிய சலனங்களையும், அழகுணர்வுகளையும் இவைகளின் மூலமாகவே மனிதன் அடையாளம் கண்டு வந்திருக்கிறான். தன்னுடைய சுதந்திரத்தின் எல்லைகளை விரிவுபடுத்தி வந்திருக்கிறான். ஒரு வளர்ச்சிப் போக்கில் ஆடல், பாடலுடன் கதையைச் சொல்வது என்கிற நிலையில் நாடகம் தோன்றுகிறது. குழுச்சமூகங்கள் நிலவிவந்த ஒரு காலகட்டத்தில் இவை குழுச் செயல்பாடாகவும், குழுவின் அடையாளத்தைப் பேணவும், ஒரு கலாச்சாரப் பகிர்தலுக்கான தளமாகவும் பயன்பட்டிருக்கின்றன.

கிராமப் புறங்களில் மதச்சடங்குகளுடன் இணைந்த சில அதீத நடவடிக்கைகளின் பின்னணியைப் பார்க்கும்போது ஒடுக்கப்பட்ட மனம் தளைகளிலிருந்து விடுதலை பெறவும், பங்கு பெறுபவர்களும் பார்வையாளர்களும் வெளி உலகைக் கடந்து செல்வதற்கான முகாந்திரத்தையும், சுதந்திரத்தையும் இங்குப் பெறுவதையும் பார்க்க முடியும். தமிழ்ச் சமூகம் இதற்கு விதிவிலக்கல்ல. தொலைக்காட்சி, காணொளி, திரைப்படம் என்று பலவகையான தாக்கங்கள் மிகுந்த இன்றைய காலகட்டத்திலும் சில கிராமங்களில் கூத்துகள் நடைபெற்றுக் கொண்டிக்கின்றன.. மதச் சடங்குகளிலும், திருவிழாக்களிலும் கூத்துக்களே இடம்பெறுகின்றன. வருடம் தோறும் அண்ணன்மார் கதை கொங்குநாட்டுக் கிராமப்புறங்களில் நிகழ்த்தப்படும்போது மக்கள் பாறைகளின் மீது நின்று கொண்டு பார்ப்பதாகச் செய்திகள் வரும்.

கூத்துக்கள் உள்ளிட்ட நம்முடைய நாட்டுப்புற நிகழ்கலைகள் இத்தகைய ஒரு சமூகப்பங்கு கொள்வதை உறுதி செய்தவை. ஒவ்வொரு தனிமனிதனும் தானும் ஒரு சமூகக் குழுவின் அங்கமாக இந்த நிகழ்வுகளில் பங்கேற்றுத் தன்னுடைய அழகுணர்ச்சியின் வடிகால்களை இவைகளில் தேடி வந்திருக்கிறான்.

தொழிற்புரட்சி விளைவித்த விஞ்ஞான மாற்றங்கள், ஐரோப்பியர் வருகை, குழுச்சமூகம் சிதறுபடல், அச்சு எந்திரத்தின் தோற்றம் போன்றவை உலகெங்கும் நாடகம் குறித்த அணுகுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. தனிமனித உணர்வுகள் அங்கீகரிக்கப்பட்டு இலக்கியம் பெரும் மதிப்பு பெறுகின்றன. காட்சித் திறன் கொண்ட நாடகம் கருத்துத் தளத்திலும் பிணிக்கும் தன்மை கொண்டது எனக்கண்ட கிரேக்கம் துன்பியல் மனித உணர்வுகளை நாடகங்களில் அறிமுகப்படுத்தியது. மனித நடத்தைகளின் ஏற்ற இறக்கங்களை சேக்ஸ்பியர் நாடகங்களில் கவிதைகளாக வடித்தார். படிப்படியாக நாடகம் காட்சித் திறனும், சுவையும், சமூகப்பாங்கும் கொண்ட ஒரு ஊடகம் என்பது உணரப்பட்டது.

19ஆம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சி பெர்னாட்ஷா, இப்சன், செகாவ் போன்ற எண்ணற்ற நாடகாசிரியர்களை உலகிற்கு வழங்கியது. நடனங்கள், பாடல்கள் வாயிலாகத் தன்னை நிறுவிக்கொண்ட நாடகம் படிப்படியாக மனித உணர்வுகளின் ஏற்ற இறக்கங்களைக் களனாகக் கொண்ட பிரதிகளையும் உலகிற்கு அளித்தது.

ஆனால் இந்திய நாடகப் பாரம்பரியம் என்பது பெரும்பாலும் நிகழ்வு சார்ந்ததாகவே வடிவமைக்கப்பட்டிருந்தது. இங்கும் சிறந்த சமசுக்கிருத நாடகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. என்றாலும் அவை பேச்சு வழக்கில் இல்லாத மொழியில் எழுதப்பட்டிருந்தால் கூத்து, ஜாத்ரா, நௌடங்கி, தமாஷா போன்ற நாட்டுப் புறக்கலை மரபுகளின் வடிவாக்கத்தையே இந்திய நாடகம் சார்ந்திருந்தது.

19 ஆம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சி இந்திய மொழிகளில் உரைநடைக்கு இணையாக நாடகப் பிரதியையும் எடுத்துச் செல்ல உதவியது. ஆனால் தமிழில் நாடகம் அதற்குரிய இலக்கிய மதிப்பைப் பெறவில்லை. நடனத்திலிருந்து நாடகம் தோன்றியதால் அது முழுவதும் ஆடல், பாடல் சமபந்தப்பட்ட விசயமாகவே கருதப்பட்டுக் கூத்துக் கலைஞர்கள் சம்பந்தப்பட்ட விசயமாகவே மாறிவிட்டது. படைப்புக் கலைஞர்கள் நாடகத்தில் அதிக ஈடுபாடு காட்டவில்லை. நாடக நிகழ்வுகள் என்பவை பெரும்பாலும் தொடர்ந்த நிகழ்த்துதலால் பெற்ற வாய்மொழிச் செய்திகளின் அடிப்படையிலும் பரம்பரைச் செயல்பாடுகளாகவே வெளிப்பட்டன.

இலக்கியங்கள் என்பவை, கல்வி அறிவு பெற்ற புலவர்களாலும், ஆடல் பாடல் சம்பந்தப்பட்ட கூத்து வகை நாடகங்கள் பாமரர்களாலும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இங்கு ஒரு தொடர்ந்த இடைவெளி உருவாகிப் போனது. நாடகம் என்பது மனதைக் கிளரச்செய்து இன்பமூட்டிக் காமத்தை அதிகப் படுத்துவது என்று சமணம் போன்ற மதங்கள் பிரச்சாரம் செய்தன.

‘கூத்தாடுமிடத்தில் அறிவுடைய சான்றோர் எவரும் செல்லார்’ என்று ஏலாதி கூறுகிறது. இலக்கியம் என்பது அறிவு சார்ந்த செயல்பாடு என்பது போலவும், நாடகம் என்பது ஜனரஞ்சகச் செயல்பாடு என்பது போலவும் ஒரு கருத்துத் தமிழ்ச் சூழலில் உருவாக்கப்பட்டது. ஆனால் இசை, நடனம் ஆகியவற்றை மேல்தட்டு வர்க்கம் படிப்படியாகச் சுவீகரித்துக் கொண்டு அவைகளை (Classical) மேன்மை பெற்றவை என்று சொந்தம் கொண்டாடத் தயங்கவில்லை. நாடகம் மட்டும்தான் விடுபட்டுப்போனது.

அதனால்தான் தமிழ்ச் சூழல் சினிமா என்கிற வலிமையான தொடர்புச் சாதனம் வந்ததும், நாடகம் தன்னுடைய தொடர்ந்த ஜோவிதத்துக்கான நியாயங்களை இழக்கத் தொடங்கியது. தொலைக்காட்சி, திரைப்படம், காணொளி என்று புயல்கள் எழுந்தாலும், எந்த நாட்டிலும் நாடகம் தன்னுடைய மதிப்பை இழந்துவிடவில்லை. நேரில் நிகழ்த்தப்படும் ஒரு அரிய கலையாக இன்றும் அது தன் கவர்ச்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

நம்முடைய தமிழ் நாட்டிலும் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பம்மல் சம்மந்த முதலியாரும், சங்கரதாஸ் சுவாமிகளும் தங்களுடைய சிறப்பான நாடகச் செயல்பாடுகளால் நாடகத்துக்கு ஒரு மக்கள் எழுச்சியை உருவாக்கி இருக்கிறார்கள். பின்னர் மதுரகவி பாஸ்கரதாஸ், விஸ்வநாத தாஸ் போன்ற தேசிய நாடகவாதிகள் சுதந்திரப் போராட்டக் காலத்தில் நாடகம் என்றாலே பிரிட்டிசார் பயப்படும் அளவுக்கு, முன் அனுமதியின்றிப் பொது இடங்களில் நாடகம் போடக்கூடாது என்று தடைச்சட்டம் போடும் அளவுக்கு நாடகத்தை மக்கள்முன் கொண்டு வந்திருக்கிறார்கள். பின்னர் வந்த திராவிட இயக்கம் அரசியலையே நாடக மேடையாக்கிப் புதிய சமூக நீதிக்கான குரலை நாடகத்தில் எழுப்பி மக்களை ஒரு பெரும் அரசியல் மாற்றத்திற்கே அழைத்துச் சென்றது என்பது வேறு எங்கும் நிகழ்ந்திராத ஒரு நிகழ்வு.

நாடத்துக்கு இத்தகைய பின்பற்றுதலும், எழுச்சியும் கொண்டிருந்த தமிழ்ச் சூழலை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உரிய நாடகாசிரியர்கள் இங்கே தோன்றவில்லை. சினிமா பட்டி, தொட்டிகளிலெல்லாம் புக ஆரம்பித்த உடனேயே முழுநேர நாடகக் குழுக்களும் நாடகக்காரர்களும் கடையைக் கட்ட ஆரம்பித்தனர். அந்த இடத்தை நிரப்ப நகைச்சுவை நாடகங்களையும், சினிமா பாணியிலான மெலோ என்ற வகை நாடகங்களையும் சபாக்கள் உற்பத்திச் செய்தன. பம்மல் சம்பந்த முதலியார், சங்கரதாஸ் சுவாமிகள், நவாப் ராஜ மாணிக்கம், TKS குழுவினர் காலத்தில் கூட நாடக மேடையில் ஒரு பன்முகத்தன்மை இருந்தது.

மேடை பலவித உணர்ச்சிகளின் சங்கமமாக இருந்தது. இன்று (ஹாஸ்யம்) நகைச்சுவையைத் தவிர வெளிப்படுத்துவதற்கு வேறு உணர்ச்சிகளே இல்லை என்ற நிலைக்குத் தமிழ் நாடகமேடை தள்ளப்பட்டுவிட்டது. நகரங்கள் கலாச்சார உற்பத்திச் சாதனங்களாக மாறிய உடனேயே நாடகம் ப்ரொசீனிய மேடை வடிவத்தில் நடுத்தர வர்க்கத்தின் கைக்குப் போய்விட்டது.

உரையாடலும், பங்குகொள்ளலுமாகக் கலாச்சார இருப்பின் அடையாளமாகப் பேணப்பட்ட ஒரு வடிவம் ஒரு உள்ளீட்ட மத்திய வர்க்கத்தால் நான்கு சுவர்களுக்குள் வெறும் கேளிக்கை உணர்வுகளின் வடிகாலாகச் சுருங்கிப் போகிறது, இந்தியா முழுவதும் இந்தச் சூழலுக்கு உட்பட்டிருந்தாலும் தமிழுக்கு நேர்ந்த அளவுக்கு இந்த விபத்து வேறு எந்த மொழிக்கு நிகழவில்லை.

வங்காளத்தில் பாதல்சர்க்கார், உத்பல்தத், சோம்புமித்ரா, ஹிந்தியில் மோகன் ராகேஷ், சுரேந்திரவர்மா, ஹபீப் தன்வீர், மராட்டியில் விஜய் தெண்டுல்கர், கன்னடத்தில் கிரிஷ் கர்னாட், சந்திர சேகர கம்பார் போன்ற நாடகக்காரர்கள் சினிமாவுக்கு மாற்றான ஒரு புதிய நாடகத்தின் இருப்பை உறுதி செய்தனர்.

மரபின் ஆழங்களையும் இன்றைய யதார்த்தங்களையும் உள்வாங்கி நாடகம் இன்று இயங்கக் கூடிய புதிய தளங்களை அவர்கள் அடையாளம் காட்டி வருகிறார்கள். ஒரு பெரிய அளவுக்குத் தமிழில் இந்த மாற்றம் நிகழவில்லை. இங்கும் ந.முத்துசாமி, இந்திரா பார்த்த சாரதி, ஜெயந்தன் போன்ற புதிய நாடகக்காரர்கள் புதிய யதார்த்தங்களைத் தங்கள் நாடகங்களில் வெளிப்படுத்தினாலும் சூழலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. நம்முடைய நாட்டுப்புற நாடகங்களின் கேளிக்கை மனோபாவத்தையும் கடந்த நகர்புற நாடகங்களின் கேளிக்கை மனோபாவத்தையும் கடந்த புதிய வடிவங்கள் மற்ற மொழிகளில் மக்களைச் சென்றடைந்த அளவுக்கு தமிழில் நிகழவில்லை.

ஆனால் தமிழ் கலாச்சாரச் சூழலில் இது ஒரு தொடர்ந்த போராட்டமாக இருக்கிறது. ஒரு செறிவான தளத்தில் மேற்கொள்ளப்படுகிற நாடக முயற்சிகள் மட்டுமல்ல, ஆரோக்கியமான கலை இலக்கிய முயற்சிகள் எல்லாம் இங்குப் பத்திரிகைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் விளைவித்துள்ள வர்த்தக மதிப்பீடுகளைத் தாண்டிப் பரவலான கவனத்தைப் பெற முடிவதில்லை.

மக்கள் கற்பனையற்ற மலிவான விசயங்களைத்தான் விரும்புகிறார்கள் என்று இவர்களாகவே தீர்மானம் செய்து கொண்டு ஆழ்ந்த, செறிவான படைப்புகளை மக்கள் பார்வைக்குக் கொண்டு வருவதில்லை. இதனால் வாழ்க்கையின் மீதும் கலையின் மீதும் தீவிரமான அக்கறையும், அர்ப்பணிப்புத் தன்மையும் கொண்ட படைப்பாளிகள் வெகுஜனத்தளத்துக்கு வர இயலாமல் போகிறது. உண்மையான கலாச்சார அக்கறை கொண்ட படைப்புகளைப் பெருவாரியான மக்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. இன்று பார்வையாளர் மனோபாவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கும் இத்தகைய கற்பனையற்ற ஒரு சூழலே காரணமாக அமைகிறது.

அண்மையில் மோகமுள், அவதாரம் போன்ற வர்த்தக நோக்கிலிருந்து மாறுபட்ட திரைப்படங்களுக்கு நம்முடைய திரையரங்குகளில் கிடைத்த எதிர்வினைச் சூத்திரங்களைத் தாண்டிய எந்த முயற்சியையும் சகித்துக் கொள்ள முடியாத தமிழ்ப் பார்வையாளர் மனநிலையையே பிரதிபலித்தது. ஆனால் இத்தகைய ஒரு எதிர்வினைக்குத் தமிழின் ஒட்டுமொத்தச் சூழலும் தன்னுடைய பங்களிப்பை வழங்கியிருக்கிறது.

கடந்த 50 வருடங்களாகத் தமிழ்க் கலாச்சாரச் சூழலில் வர்த்தகச் சக்திகளின் பாதிப்பினால் செறிவான கலை, இலக்கிய முயற்சிகளுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும், கலை எழுச்சிக்கான நியாயங்களுடன் இவையே காலத்தைக் கடந்து நிற்பவையாக இருக்கின்றன. தமிழ் நாடகத்திலும் சிலப்பதிகாரம் முதற்கொண்டு ஆழ்ந்த கூறுகளை உள்ளடக்கிய மாறுபட்ட பல பிரதிகளை வெவ்வேறு காலகட்டங்களில் நாம் பார்க்க முடியும்.

அந்தந்தக் காலத்திய பொது மரபிலிருந்து வேறுபட்டு வேறு தளங்களில் சிந்தனையைப் பாய்ச்சியவை இந்தப் பிரதிகள். இவையே பின்னர் வரக்கூடிய செறிவான படைப்புகளுக்கு முன் மாதிரியாக அமைக்கின்றன. தலைவன் மற்றும் கடவுளின் சிறப்பை வழிபடுதல் அல்லது நல்லொழுக்கம் மற்றும் மத உணர்வுகள் ஆகியவற்றால் உந்தப்பட்டே பெரும்பாலான நாடகப் பிரதிகள் உருவான ஒரு காலகட்டத்தில் மனித இயல்புகளின் ஏற்றத் தாழ்வுகளைச் சிலப்பதிகாரம் எடுத்துக் கொள்கிறது.

கோவலனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லிக் கொண்டுபோகாமல் கோவலனின் வாழ்க்கையிலிருந்து சாரமான பகுதிகளை எடுத்து கால ஓட்டத்தில் மனிதர்கள் அடித்துச் செல்லப்படுவது குறித்த ஒரு நிதர்சன நோக்கிச் சிலப்பதிகாரம் வெளிப்படுத்துகிறது. நாடகத்தின் உணர்ச்சி நிலைகளை வலுப்படுத்த பல்வேறு குரவைக் கூத்துகள் நாடக அமைப்புகளுக்கும் தெருக்கூத்து நாடக அமைப்புக்கும் ஒரு ஆரம்பமாக அமைகிறது. பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகங்கள் போன்றவை வாழ்க்கையின் அடித்தளத்தில் ஒதுக்கப்பட்டிருந்த மக்கள் வாழ்நிலையை எதிரொலிக்கின்றன. இவற்றில் செந்நெறி மரபுகளுக்கு மாறாக எளிமையான நாட்டுப்புற வழக்காடல்கள் நிறைந்த ஒரு பாணி கையாளப்படுகிறது.

இந்த நாடகங்கள் சமூகத்தின் விளிம்பில் உள்ள மக்கள் குறித்த ஒரு பரிவுணர்வையும், அவர்கள் வாழ்க்கை முறையின் அழகியல் தன்மைகளையும் விளக்குவனவாக அமைகின்றன. இன்றைய தலித் மற்றும் ஒடுக்கப்பட்டோர் அரங்கு குறித்த பார்வைகளை இந்த நாடங்கள் தமக்குள் கொண்டிருப்பதை நாம் பார்க்கமுடியும்.

கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை இது போன்ற சிந்தனையின் இன்னுமொரு பிரதிபலிப்பு. சேக்கிழாரின் பெரிய புராணத்திலிருந்து நந்தனார் பாத்திரத்தை ஒரு குறியீடாக எடுத்துக் கொண்டு எளியவர்களுக்கும், செல்வர்களுக்கும் இடையிலான போராட்டம், உயர்ந்த சாதியினர் என்று கருதிக் கொள்பவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இடையிலுள்ள போராட்டம், தம் இணைத்துப் பழமைவாதிகளுடனும், வைதீக அந்தனர்களுடனும் இன்னொரு போராட்டம் என்று அன்றைய சமூக மனிதன் மேற்கொண்ட சிக்கலைப் பிரதி மையப்படுத்துகிறது.

பள்ளு, குறவஞ்சி, நொண்டி மற்றும் கீர்த்தனை நாடகங்களின் வளர்ச்சி பெற்ற பிரதியாகத் தெருகூத்து அமைகிறது. நாட்டுப்புற மக்களிடமும், பாமர மக்களிடமும் நாடகம் என்கிற வடிவத்தைப் பரவலாகக் கொண்டு சென்றது இந்தக் கூத்துப் பிரதியின் முக்கிய அம்சம். தெருக்கூத்து அடிப்படையில் ஒரு காவிய மரபைப் பின்பற்றினாலும் உடை, ஒப்பனை, உடல் அசைவுகள், இடைவெளியை உபயோகித்த விதம், பாத்திரச் சித்தரிப்பு, நிறங்கள் பற்றிய உணர்வு ஆகிய எல்லாவற்றிலும் அது ஒரு புது மொழியை உபயோகித்தது. பரம்பரை பரம்பரையாகவும் வாய்மொழியாகவும் கற்ற பல கூத்துப் பிரதிகள் காலப்போக்கில் உருவாயின. தெருக்கூத்து வெறும் நாடக வடிவமாக மட்டும் முன் வைத்து முழுச் சமூகத்தின் அடையாளமாகவும் உருமாறுகிறது.

பின்னர் சமுதாய நாடகங்கள் உருவாகின்றன. அரசியல் ரீதியாகப் பல மாற்றங்களை உலகம் சந்திக்கிறது. உலக அரங்கில் சேக்ஸ்பியரின் தாக்கம் பரவலாகிறது. தமிழில் பரிதிமாற் கலைஞர், சுந்தரம் பிள்ளை போன்றவர்கள் சேக்ஸ்பியர் போன்று (ரொமாண்டிசிசம்) காதல் ரசம் கொண்ட நாடகங்களை உருவாக்குகிறார்கள். பம்மல் சம்பந்த முதலியார் மேற்கத்தியக் கோட்பாடுகளின் தாக்கத்தில் புதிய பிரதிகளை உருவாக்குகிறார். துன்பியல் நாடகங்களும் தமிழுக்கு அறிமுகமாகின்றன. இந்தக் காலகட்டத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் ஒரு புதிய நாடக எழுச்சியை உருவாக்குகிறார். நம்முடைய மரபின் புதிய உருவாக்கங்களை அவர் அறிமுகப்படுத்துகிறார். தார்மீக நிலைப்பாடுகள் குறித்த தர்க்கப் பாடல்களையும், வசன அமைப்பையும் அவர் பயன்படுத்துகிறார். இசை அவருடைய நாடகங்களில் பிரதான அம்சமாகிறது. தம்முடைய காலத்தில் தோன்றிய பல இசை நாடகங்களுக்கும் இவரே ஆதர்சமாக விளங்குகிறார்.

பாடல்களில் ஆதிக்கத்திலிருந்து ஒரு கருத்து ஆதிக்கத்தை ஏற்படுத்தியவை திராவிடர் இயக்க நாடகங்கள். எளிய சமூக உணர்வுகளும், பகுத்தறிவு வாதங்களும், கருத்துப் போராட்டங்களும் கூட நாடக மேடையை அலங்கரிக்க முடியும் என்பதற்கு இவை நிரூபணமாக இருந்தன. நாடகங்களைத் தூரத்தில் இருந்து பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் சக மனிதனின் பிரச்சனைகளைப் பேசி ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியவை இத்தகைய நாடகங்கள். இதே அடிச்சுவட்டில் இடதுசாரி இயக்கங்கள் சுரண்டலற்ற சமதர்மச் சமுதாயம் குறித்த பார்வைகளை நாடகங்களை முன் வைத்தன. இவையெல்லாம் தமிழில் எதிர்ப்பு நாடகப் பிரதிகள் உருவாகக் காரணமாக அமைந்தன.

இவ்வாறு மரபு குறித்தக் கண்ணோட்டமும் மேற்கத்தியக் கோட்பாட்டுத் தாக்கங்களும், சமூக விமர்சனமும் சூழ்ந்த ஒரு காலகட்டத்தில் தமிழில் நவீன நாடகம் குறித்த பிரக்ஞை தோன்றுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சியின் பின்னணியில் கவிதை, உரைநடை போன்றவை பெரும் மாற்றங்களைச் சந்திக்கின்றன. பாரதி, பாரதிதாசன், பிச்சமூர்த்தி போன்றவர்கள் கவிதையில் புதிய வீச்சுக்களைக் கொண்டு வந்தனர்.

ஒரு புத்திலக்கிய அடிச்சுவட்டில் புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா., அழகிரிசாமி, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ஜானகிராமன், அசோகமித்திரன் போன்றவர்கள் தமிழ் உரைநடைக்குப் புதிய பார்வைகளையும் அணுகுமுறைகளையும் அளிக்கிறார்கள். சி.சு.செல்லப்பா தம்முடைய எழுத்து பத்திரிகையின் மூலம் கவிதை பற்றியும், உரைநடை பற்றியும் புதிய விமர்சன நோக்குகளை அறிமுகப்படுத்துகிறார். வாழ்க்கையை உள்நோக்கிப் பார்த்தலும், புதிய யதார்த்தங்களை அங்கீகரித்தலுமான ஒரு போக்கை இலக்கியம் மேற்கொள்கிறது. இந்தப் பின்னணியில் தமிழில் ஒரு புதிய நாடகப் பிரதிக்கான தேடல் துவங்குகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ்ச் சூழலிலும், உலக அரங்கிலும் கலாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களை நாம் பார்க்க வேண்டும். உலகப் போர்கள் மனித மதிப்பீடுகளின் சரிவையும், மனித வாழ்க்கையின் அவலத்தையும் உணர்த்தின. இந்தியச் சூழலிலும் சுதந்திரத்துக்குப் பின் சமூக அரசியல் தளங்களில் பெரும் மதிப்பீட்டுச் சரிவுகள் ஏற்பட்டன. நம்பிக்கைகளும், கனவுகளும் பொய்த்துப் போயின. கூட்டுக் குடும்பம் சிதறிப் போனது. இருப்புக்கான போராட்டத்திலேயே மனித உணர்ச்சிகள் வறண்டு போயின. வாழ்க்கை காப்பியத் தன்மை கொண்டதாக இல்லை. அது துண்டுகளாகச் சிதறியிருக்கிறது.

நம்பிக்கையின் ஊற்றுகளைத் தேடிக் கண்டடைய வேண்டும். இவ்வாறு சிதறிப்போன பிம்பங்களும், களைந்து போன கனவுகளுமாக 20ஆம் நூற்றாண்டு மனிதன் சிக்கலான வாழ்வு முறைக்குள் இயங்குகிறான். நவீன நாடகாசிரியனும் இந்தத் தளத்தில்தான் வாழ்வைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

ந.முத்துசாமி தம்முடைய நாடகங்களில் இருபதாம் நூற்றாண்டின் சிதறுண்ட முகமிழந்த மனிதர்களைப் பற்றிப் பேசுகிறார். தம்முடைய சிறு பத்திரிகைத் தொடர்புகளின் மூலம் கிடைத்த உணர்வுகளை அடித்தளமாகக் கொண்டு சில அபத்தபாணி நாடகங்களை அவர் எழுதினர். இந்திரா பார்த்தசாரதி உள்மனக்குழப்பங்கள், (Ego) ஈகோ போராட்டங்கள், உறவுப் பிறழ்ச்சிகள் இவைகளை மையமாக வைத்து மனோதத்துவ ரீதியில் சில நாடகங்களை எழுதினர்.

இன்றைய யதார்த்தத்தின் சில வினோதமான சித்திரங்களை ஜெயந்தனுடைய பிரதிகளில் பார்க்க முடியும். புனைகதைகளை மையமாக வைத்து பேரா.ராமானுஜம் எழுதினர். இலக்கியப் பின்னணியுடன் நாடகத்துக்கு வந்த எம்.டி. முத்துக் குமாரசாமி, எஸ். ராமகிருஷ்ணன், நிஜந்தன், பிரேம் போன்ற நவீன எழுத்தாளர்கள் வாழ்க்கையின் பல சாத்தியங்களை முன்வைக்கிறார்கள். வெறும் உரையாடலை மடக்கிப் போட்டுக் கதை சொல்வது என்ற நிலையில் இந்தப் பிரதிகள் இயங்காமல் கதையிலிருந்து கதையை அழித்து வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான நுட்பமான கோட்டை இவை விலக்க முயற்சி செய்கின்றன. ஒரு சிந்தனை மரபின் தொடர்ச்சியை இந்தப் பிரதிகளின் ஊடாக நாம் பார்க்க முடியும்.

ஆனால் எழுதப்படுவதால் மட்டும் நாடகம் முழுமையடைவதில்லை. நிகழ்த்தப்படும் போதுதான் அவை முழுமை அடைகின்றன. நிகழ்த்துதலின் நுட்பங்களையும், மனோதத்துவங்களையும் எட்டாமல் வெறும் பிரதியின் பலத்தில் நாடகம் செய்ய முடியாது. நாடகத்தின் காலம், இடம் மற்றும் வெளியில் உருவகப்படுத்த இலக்கியம், கவிதை, சங்கீதம், நாட்டியம் ஆகிய எல்லாக் கலைகளின் பங்களிப்பும் வேண்டும்.

சினிமாவின் வருகைக்குப் பிறகு முழுநேர நாடகக் குழுக்கள் நாடகத்தை நம்ப வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. ஆங்காங்கே தோன்றிய அமெச்சூர் நாடகக் குழுக்கள் பொழுது போக்கு நாடகத்துக்குரிய மனப் பயிற்சியும், உடல் பயிற்சியும் அற்ற நிலையிலேயே இங்கே குழுக்கள் இயங்கிக் கொண்டிருந்தன. கிட்டத்தட்ட ஒரு 50 ஆண்டு காலம் வரை தமிழ்நாடு முழுவதும் பரவலாக நாடகக் குழுக்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடனும், ஒழுங்குடனும் ஒரு ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன. அவர்களுடைய உழைப்பு குறித்தும், கலை குறித்தும் மக்களும் அதிக ஈடுபாடும், மதிப்பும் கொண்டிருந்தனர்.

கும்பகோணத்தில் அண்மையில் வாழ்ந்து மடிந்த பாலாமணி என்கிற நாடக நடிகையின் நாடக வாழ்க்கையைப் படிக்கும்போது நாடகத்தின் மூலம் அவர் எத்தகைய வீச்சுகளையும், அலைகளையும் உருவாக்கி இருந்தார் என்பதைப் பார்க்க முடிந்தது. கவனிக்க யாருமின்றி பாலாமணி கடைசியில் ஒரு குடிசையில் இறக்க நேர்ந்தது என்பது இன்னொரு சோக வரலாறு. நாடக நடிகர், நடிகையர் தாங்கள் ஈடுபட்ட கலைக்காக தங்களுடைய அனைத்தையும் அர்ப்பணிக்கத் தயாராக இருந்த நிலையிலேயே நாடகம் சமூகத்தின் மதிப்புக்கு உரியதாக இருந்தது.

அத்தகைய உழைப்பும், பயிற்சியும் இன்று நாடகத்தில் அரிதாகிவிட்டன. அண்மைக் காலமாக ந.முத்துசாமி கூத்துப்பட்டறை என்ற அமைப்பை நிறுவி முழுநேர நடிகர்களைத் தயார் செய்து வருகிறார். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நடிகர்கள் பல்வேறு பயிற்சிகளுக்குத் தங்களை உட்படுத்திக் கொண்டு வருகிறார்கள். பல்வேறு மொழிக் குழுக்களுக்கும் இடையில் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி நாடகக் கோட்பாடுகள் குறித்தும் நடிகனுக்கான பயிற்சிகள் குறித்தும் கூத்துப்பட்டறை சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. கடந்த 20 வருடங்களில் தமிழ் நாடகத்தில் நடந்த முக்கியமான சோதனை முயற்சிகளைக் கூத்துப்பட்டறையே நிகழ்த்தியுள்ளது. தமிழில் மட்டுமல்லாது பிற இந்திய மொழி நாடகங்களையும், மேற்கத்திய நாடகங்களையும் மொழியாக்கம் செய்து நிகழ்த்தியுள்ளது.

நாற்காலிக்காரர், காலம் காலமாக சுவரொட்டிகள், உந்திச் சுழி, நிரபராதிகளின் காலம், வெள்ளை வட்டம், Gas-II, மீள முடியுமா, தூத கடோத்கஜம், பகவதாஜ் ஜீகியம், காந்தியின் கடைசி 5 வினாடிகள், காலிகுலா, காண்டா மிருகம் என்று பல நாடகங்களைக் குறிப்பிட முடியும், இதே போன்று பரிக்ஷா, வீதி ஆகிய நாடகக் குழுக்களும் வழக்கமான சபா நாடகங்களுக்கு மாற்றாக இலக்கிய உணர்வும், சமூக உந்துதலும் கொண்ட பல நாடகங்களை நிகழ்த்தியுள்ளன.

இதே அடிச்சுவட்டில் மதுரையில் நிஜ நாடக இயக்கம், சுதேசிகள், திருச்சியில் திருச்சி நாடக சங்கம், பாண்டிச்சேரியில் கூட்டுக் குரல்கள், ஆழி நாடகக் குழு, தன்னானே குழு, திருவண்ணாமலையில் தீட்சண்யா, சென்னையில் ஆடுகளம், ஐக்யா, பல்கலை அரங்கம், மௌனக்குரல், டில்லியில் யதார்த்தா ஆகிய குழுக்கள் ஒரு அர்த்தமுள்ள நாடக இயக்கத்தை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளன.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகங்களில் நாடகத்துறை அமைக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நாடகத்துக்கென மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். இன்று தலித் அரங்கம், பெண்ணிய அரங்கம், ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கம் என்ற நாடகத்தில் பல்வேறு குரல்கள் ஒலிக்கின்றன. இன்று நாடகப் பிரதியின் தளம் விரிவடைந்துள்ளது.

இத்தகைய ஒரு புதிய நாடக இயக்கத்துக்கு உரிய மன வளமும், கற்பனையும் கொண்ட பயிற்சியை அளிப்பதில் தேசிய நாடகப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.ராமானுஜமும் (இவர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகத்தில் நாடகத்துறைத் தலைவராக இருந்து அண்மையில் ஓய்வு பெற்றவர்), சாந்தி நிகேதனில் பயின்று காந்திகிராமம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எஸ்.பி.சீனிவாசன் அவர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார். தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் நாடகப் பட்டறைகளை ஏற்பாடு செய்து கோட்பாட்டு ரீதியிலும், நடைமுறை ரீதியிலும் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார்கள். நாடகம் குறித்த புதிய கட்டுமானங்களையும், பார்வைகளையும் தளைகளற்று மனம் ஏற்பதற்குரிய ஒரு சூழலை அவர்கள் கட்டமைக்கிறார்கள்.

அண்மையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து பேராசிரியர் ராமானுஜம் 25 பேர் கலந்து கொண்ட ஒரு நாடகப் பட்டறையை ஏற்பாடு செய்திருந்தார். பட்டறையின் முடிவில் ஜரிஷ் நாடகாசிரியர் Syngeன் ‘கடலோடிகள்’ நாடகம். பங்கு பெற்றவர்களைக் கொண்டு நிகழ்த்தப்பட்டது. நடிக, நடிகையருக்கு ஏற்பட்ட தாக்கங்களையும், கிடைத்த அனுபவத்தையும் அந்த நிகழ்த்துதலில் பார்க்க முடிந்தது. சென்னையில் ஒரு நிரந்தரமான நாடகப் பள்ளி ஏற்பட்டு இது போன்று நாடகப் பயிற்சிகளுக்கு பரவலான வாய்ப்புகள் கிடைக்கும் போது நாடகத்தில் தேர்ந்த நடிக, நடிகையர் காலப்போக்கில் உருவாக முடியும்.

இன்று நாடகத்தின் இடம் என்ன என்கிற கேள்வி பலருக்கு எழுந்து வருகிறது. நாடகம் சிறு சிறு துகளாக மக்களுடைய வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த ஒரு வடிவம். இன்று சினிமா அசுர வலிமையுடன் ஒரு சேரப் பலரைச் சென்றடையும் அளவுக்குப் பாதிப்புடையதாக இருக்கலாம். ஆனால் நாடகம் நம் கண் முன்னே ஒரு யதார்த்தத்தை, ஒரு கனவை, நாம் இழந்து போன கணங்களை முன் நிறுத்துகிறது. ஒரு எந்திர உலகம் மனிதனின் கற்பனைகளையும், படைப்புச் சந்தியையும் நசுக்கிக் கொண்டிருக்கிறது.

அவன் ஒரு நுகர் பொருளாக உலவிக் கொண்டிருக்கிறான். நாடகம் அவனுடைய கற்பனைகளை மீட்டெடுக்க முடியும். ஒரு கவிதையை அவனுக்கு வசப்படுத்த முடியும், யதார்த்தத்தின் முன் அவன் வீறு கொள்ள முடியும். கற்பனையற்ற அவனுடைய வாழ்க்கையை இன்னும் அதிக கற்பனையுடன் இன்னும் அதிக படைப்பு மனத்துடன் அவன் எதிர்கொள்ள முடியும். அதற்கான ஒரு கலையின் அண்மையை நாடகம் அவனுக்கு வழங்க முடியும். அதற்கான ஒரு கலையின் அண்மையை நாடகம் அவனுக்கு வழங்க முடியும். நாடக வெளியில் ஒரு நடிகன் பார்வையாளனுடன் கொள்ளும் உறவு என்பது ஈடு இணை இல்லாதது.

ஆரோக்கியமான கலை, இலக்கிய வளர்ச்சிக்குப் பொறுப்பேற்கிற ஒரு அரசாங்கம் சில ஏற்பாடுகள் மூலம் நாடகம் தொடர்ந்து சிறப்பாக இயங்க வழிவகைகள் செய்ய முடியும்.

Wednesday, November 26, 2014

கம்போடியாவில் 500 ஏக்கரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய இந்துக்கோயில்

“மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்” என்ற வாக்கிற்கிணங்க உலகம் முழுவதும் நம்முடைய சமயம், கலை, பண்பாடு பரவியிருந்ததன் வெளிப்பாடே இத் திருக்கோவில்கள்.

கம்போடியாவில் 500 ஏக்கரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய இந்துக்கோயிலானது, உலகிலுள்ள எல்லா அதிசயங்களையும் வெல்லவல்ல தமிழர் அதிசயமாக காட்சிதருகின்றது. கம்போடியா நகரில் 1200க்கு மேற்பட்ட கோவில்கள் இந்து சமயக் கலாசாரத்தின் வெளிப்பாடாக ஓங்கி நிற்கின்றன. கலை, கலாச்சாரம், வியக்கத்தகு தொழில் நுட்பம், தொன்மை, பிரமிக்கத்தக்க அமைப்பு இவையாவும் பார்ப்போர் மனதில் ஓர் உலக அதிசயமாக காட்சி தருகின்றது.
அங்கூர், என்பது கம்போடியாவிலுள்ள ஒரு இந்துக் கோயில் தொகுதிக்கு உரிய இடமாலும். இது இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1113-1150) என்பவரால் கட்டப்பட்டது. வாட் என்பது கோயில் என்பதைக் குறிக்கும் கெமர் மொழிச் சொல். ஐந்நூறு ஏக்கர் சுற்றளவு நிலப்பரப்பில் 3 ஆயிரம் கோடி தொன் கருங்கல்லால், 10 இலட்சம் பணியாளர்களால் 40 ஆண்டுகளில் கட்டப்பட்ட திருக்கோவில் உலகின் மிகப் பெரிய கோவிலாக விளங்குகிறது. (இவ் ஆலையம் இரண்டாம் ஜெயவர்மன் (790 – 835) முதல் ஜெயவர்மன் பரமேஸ்வரா (1327) வரை உள்ள பல மன்னர்களால் கட்டப்பட்டவை என கூறுவாருமுளர்.)
சூரியவர்மனின் ஆட்சி, சோழ அரசர்களிடம் நல்லுறவுடன் இருந்ததால். மலாயாவின் முன்னேற்றம் அதி விரைவாக வளர்ந்தது. வியாபாரம், அரசியல், மதம் என அனைத்தும் மேலோங்க ஆரம்பித்தது. அக்காலத்தில் பெரிய கோவில்களை கட்டும் அரசனே தன் நாட்டில் செல்வச் செருக்குடன், விளக்குகிறான் என்ற நம்பிக்கை இருந்தது. சோழ அரசின் கீழ் இருந்த சூரிய வர்மனும் செல்வச்செருக்குடன் ஆட்சிபுரிந்தான் என்பதயே இவ் ஆலயங்கள் நினைவுபடுத்துகின்றன.
ஒரு அகழியும், மூன்று மண்டபங்களும் மத்தியிலுள்ள ஐந்து கோயில்களைச் சூழவுள்ளன. மேற்கிலிருந்து வரும்போது அகழியின் மேல் அமைந்துள்ள நீண்ட பாலத்தினூடாக முதலாவது வெளி மண்டபத்தை அணுகலாம். முதல் மண்டபம் வெளிப்புறம் சதுரத் தூண்களையும், உட்புறம் மூடிய சுவரையும் கொண்டுள்ளது. தூண்களுக்கு இடைப்பட்ட விதானம் (ceiling) தாமரைவடிவ அலங்காரங்களைக் கொண்டுள்ளது. மூடிய சுவர் நடன உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இச் சுவரின் வெளிப்புறம் தூண்களோடுகூடிய பலகணிகள், அப்சரஸ்கள் மற்றும் விலங்குகளின் மீதமர்ந்து நடனமாடும் ஆண் உருவங்கள் முதலியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

எல்லா மண்டபங்களினதும் சுவர்களில் அப்சரஸ் உருவங்கள் காணப்படுகின்றன. முதல் மண்டபத்திலிருந்து நீண்ட வழிமூலம் இரண்டாவது மண்டபத்தை அடைய முடியும். இது இரண்டு பக்கங்களிலும் சிங்கச்சிலைகள் அமைந்த படிக்கட்டைக் கொண்ட மேடையிலிருந்து அணுகப்படுகிறது.

இரண்டாவது மண்டபத்தின் உட்சுவர்களில் வரிசையாக அமைந்த புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. மேற்குப் பக்கச் சுவரில் மகாபாரதக் காப்பியக் காட்சிகள் காணப்படுகின்றன. மூன்றாவது மண்டபம், உயர்ந்த terrace இன் மீது அமைந்து ஒன்றுடனொன்று மண்டபங்களால் இணைக்கப்பட்ட ஐந்து கோயில்களைச் சூழ அமைந்துள்ளது. மண்டபங்களின் கூரைகள், பாம்புகளின் உடல்களையும், சிங்கம், கருடனின் தலையையும் கொண்ட உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இவ் ஆலயத்தை வேறு விதமாக தரிசிக்கும்போது, திருக்கோவிலைச் சுற்றியுள்ள அகழி அடுத்து பிரகார மண்டபம். அதனுள் திருக்குளம். 60 படிகள் மேல் ஏறினால் அட்டதிக்கிலும், திக்குபாலகர்கள். மேலே 60 படிகள் ஏறினால் நான்கு மூலையிலும் சிவலிங்கங்கள், மையத்தில் அற்புதமான சிவலிங்கம், அது தற்போது நூதனசாலையில் உள்ளது. 60 அடி விமானம், 500 ஏக்கரில் திருக்கோவில் அமைக்க எத்தனை ஆழம், அகலம் கொண்டு அஸ்திவாரம் செய்திருப்பார்கள்.
மன்னனின் மனம் போல உயர்ந்து நின்ற திருக்கோவில் 200 ஆண்டுகளாக வழிபாடின்றி இருக்கிறது. தற்பொழுது ஜப்பான், ஜெர்மன்காரர்கள் திருப்பணி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். கர்ப்பகிரஹத்தில் இருக்க வேண்டிய மூர்த்தங்கள் காட்சியகத்தில் இருக்கின்றன.

கம்போடியா:

கம்போடிய முடியரசு முற்காலத்தில் கம்பூச்சியா என அறியப்பட்ட ஒரு தெகிழக்கு ஆசிய நாடாகும். இந்நாட்டில் ஏறக்குறைய 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இந்நாட்டின் தலைநகர் “புலோம் பென்” நகரம். இதுவே இந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நாட்டுக் குடிமக்களை "கம்போடியர்" எனவும், கிமர் எனவும் அழைக்கின்றனர். எனினும், “கிமர்” என்னும் குறியீடு கிமர் இன கம்போடியர்களை மட்டுமே அழைக்க பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையான கம்போடியர் தேரவாத பௌத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.

கம்போடியாவின் எல்லைகளாக, மேற்கிலும், வடமேற்கிலும் தாய்லாந்து நாடும், வடகிழக்கில் லாவோஸ் நாடும், கிழக்கு மற்றும் தென்கிழக்கில் வியட்நாம் நாடும், தெற்கில் தாய்லாந்து வளைகுடாவும் அமைந்துள்ளன. கம்போடியாவின் முக்கிய புவியியல் கூறுகளாக திகழ்வன இந்நாட்டில் பாயும் மீக்கோங் ஆறும், “தொன்லே சாப்” ஏரியும் ஆகும். கம்போடியர்களின் முக்கிய தொழில்களாவன: நெசவு, கட்டுமானம், சுற்றுலா சார்ந்த சேவை. கடந்த 2007ம் ஆண்டு மட்டும் ஏறக்குறைய 4 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அங்கூர் வாட் கோவில் பகுதிக்கு வருகை தந்தருகின்றனர்.

தேசியக் கொடியில் இந்துக் கோயிலின் விம்பத்தைப் பொறித்துள்ள ஒரேயொரு நாடு என்ற சிறப்பு கம்போடியாவுக்கு உண்டு. பழைய தமிழ் இலக்கியங்களில் கம்புஜம் அல்லது காம்புசம் என்று அழைக்கப்படும் இந்த நாடு காலத்திற்க்கு காலம் பல பெயர்களைத் தாங்கி நிற்கின்றது.

மார்ச்சு 1970ல் அதிரடிப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய அமெரிக்க ஆதரவாளன் ஜெனரல் லொன் நொல் இந்த நாட்டிற்கு வைத்த பெயர் கிமர். ( KHMER ) அதன் பிறகு ஏப்பிறில் 1975க்கும் ஜனவரி 1979க்கும் இடையில் கம்போடியாவை ஆட்சி செய்த பொல் பொட் சூட்டிய பெயர் கம்புச்சியர்.

வியற்நாமியப் படையெடுப்பு மூலம் முடிவுக்கு வந்த பொல் பொட் ஆட்சிக்கு பிறகு இந்த நாடு பெற்ற பெயர் கம்போடியா இந்தப் பெயர் இன்று வரை நிலைத்து நிற்கின்றது.

மாக்சிசத்தைத் தவறாகப் புரிந்து கொண்ட காரணத்தால் பொல் பொட் செய்த இன அழிப்பில் 10 மில்லியன் மக்கள் கொன்றொழிக்கப் பட்டனர். அதாவது ஜந்தில் ஒரு பங்கினரை அந்த நாடு இழந்து விட்டது.

பொல் பொட் ஆட்சியில் பணப் புழக்கம் முற்றாக நிறுத்தப்பட்டது. மக்கள் அனைவரும் விவசாயத்தில் ஈடுபடுத்தப்பட்டனர் உலகத் தொடர்புகளில் இருந்து அரசு விலகிக் கொண்டது. தபால் சேவைகள் நிறுத்தப்பட்டன. இராசதந்திரப் பரிமாற்றங்கள் அனைத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. அதாவது வெளி உலகத் தொடர்புகளுக்கு முற்றுப்புள்ளி இடப்பட்டது.

கம்போடியா இன்று புத்துயிர் பெற்று வருகிறது. ஜநாவின் தலையீட்டில் தேர்தல்கள் நடத்தப்பட்டன.பொல் பொட் ஆட்சியில் அதிகார நிலையில் இருந்த கூன் சென் (HUN SEN ) என்பவர் பிரதமராகி விட்டார். இன அழிப்புக் குற்றத்திற்கான விசாரணைகள் தொடங்கப்பட்டுச் சிலர் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

படிப்படியாகக் கம்போடியப் பொருளாதாரம் வலுப்பெற்று வருகிறது. சுற்றுப் பயணிகளின் வருகை மூலம் கம்போடியா பெரும் வருவாயை ஈட்டுகிறது.

கம்போடியாவின் அங்கூர் வாத் திருக்கோயிலைப் பார்ப்பதற்கு அமெரிக்க, ஜரோப்பிய சீன, ஜப்பானிய, வியற்நாமிய மற்றும் கோறியப் பயணிகள் வருகின்றனர்.

900 வருடம் பழமை வாய்ந்த இந்த ஆதிகாலச் சிவன் கோயில் நாட்டிற்கு வருவாய் ஈட்டிக் கொடுக்கிறது. வருடமொன்றுக்குச் சராசரி ஒரு மில்லியன் பயணிகள் அதைப் பார்வையிட வருவதாக சுற்றுலாத் துறை தெரிவிக்கிறது. அடுத்து வரும் வருடங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

நெடுங்காலமாக காட்டு மரங்களால் மூடப்பட்டு வெளி உலகிற்குத் தெரியாமல் கிடந்த அங்கூர் வாத் (வாத் என்றால் தாய் மற்றும் கம்போடிய மொழிகளில் கோயில் என்று பொருள்) கம்போடியா பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியில் இருந்த போது ஒரு பிரெஞ்சு ஆய்வாளனால் கண்டுபிடிக்கப்பட்டது.

கோயிலின் உட்புறத்திலும் அதைச் சுற்றியும் நெருக்கமாக வளர்ந்த மரங்களை வெட்டி அப்புறப் படுத்திக் கோயிலின் தோற்றத்தைக் வெளிப்படுத்த பல வருடங்கள் பிடித்தள்ளன.

இந்திய கலாசாரம் தென் கிழக்கு ஆசியா முழுவதும் பரவியிருந்ததற்கான சான்றாக இந்த கோயில் இடம் பெறுகிறது.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பிரம்பென்னன் என்ற பெயரில் இன்னொரு சிவாலயம் இருக்கிறது. இந்துக்கள் நூறு வீதமாக வாழும் தீவாகப் இந்தோனேசியாவின் பாலித் தீவு இடம் பெறுகிறது. அதன் பக்கத்தில் மதுரா என்ற தீவும் இருக்கிறது இதில் கணிசமானளவு இந்துக்கள் வாழ்கிறார்கள்.

அங்கூர் வாத் சியம் றியப் என்ற நகரில் அமைந்துள்ளன. இங்கு வரும் பயணிகளின் வசதிக்காக பல நட்சித்திர விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் 10.000 அறைகள் எல்லா விடுதிகளையும் கூட்டிப் பார்த்தால் இருக்குமென்று நம்பப்படுகிறது.

உலக அதிசயங்களில் ஒன்றான அங்கூர் வாத் கோயிலின் காரணமாக சியம் றியப் நகருக்கு நேரடி விமான சேவை வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவிலிருந்து இலன்டனுக்கு நடக்கும் விமானப் பறப்பை கங்காரு சேவை என்று அழைப்பார்கள். கம்போடியா இந்தப் பாதையில் இல்லாவிட்டாலும் சுற்றுப் பயணிகளின் தேவைக்காகப் பறப்புக்கள் திருப்பி விடப்படுகின்றன.

வங்கிச் சேவைகள், பயணிகளுக்கான விடுதிகள், உள்ளுர் போக்கு வரத்து வசதிகள், சூதாட்ட மையங்கள், கடற்கரையோரத் தங்குமிடங்கள் என்பன கம்போடியாவில் நடக்கும் மாற்றங்களுக்குக் கட்டியம் கூறுகின்றன. இன்னொரு உலக அதிசயமான தொன்லே சாப் ஏரி அங்கூர் வாத் கோயிலுக்கு அண்மையில் இருக்கிறது.

இமய மலைப் பகுதியில் தொடங்கி வியற்நாம் நாட்டிற்கு உடாக தென் சீனகக்கடலில் பாயும் பெரு நதியின் நீர் தொன்லே சாப் ஏரியில் வீழ்கின்றது. பெரு நதியில் நீர் குறையும் போது ஏரியில் நீர் மட்டம் உயரும். பெரு நதியில் நீர் மட்டம் உயரும் போது ஏரி நீர் மட்டம் சம நிலைக்கு வந்து விடும்.

ஏரி என்பதை விட பெருங்கடல் என்பது மிகப் பொருத்தம். நெல் விளைச்சலை அடிப்படையாகக் கொண்ட விவசாய நாகரிகம் தொன்லே சாப் எரியைச் சுற்றி இருந்தற்கான சான்றுகள் தென்படுகின்றன. அங்கூர் வாத் கோயில் இதற்கு அண்மையில் கட்டப்படுவதற்குக் காரணம் இருக்கிறது.

தொன்லே சாப் எரியின் மீன் வளத்தை நம்பிப் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அதைச் சுற்றி வாழ்கின்றனர். ஏரியைச் சுற்றி வளரும் மரங்களில் பெரும் எண்ணிக்கையில் பறவைக் கூட்டங்கள் வாழ்கின்றன. அவற்றிற்கான உணவை இந்த ஏரி வழங்குகிறது.

அங்கூர் வாத் கோயிலின் புனருத்தாரணப் பணிகளில் இந்தியர்கள்,பிரெஞ்சுக்காரர்கள், ஜப்பானியர்கள் வேறு சில ஜரோப்பிய நாட்டவர்கள் இடைவிடாது ஈடுபடுகின்றனர். அழிவின் விழிம்பிற்குச் சென்று திரும்பிய கம்போடியா அழிவைச் சந்தித்த பிற நாடுகளுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்கிறது.

மாமன்னன் ராஜேந்திர சோழன்.

கடைச் சோழ மன்னர்கள் பெயர்களும் ஆட்சிக் காலமும். 
1. விஜயாலய சோழன் (கி.பி. 848 முதல் 871 வரை) 
2. முதலாம் ஆதித்த சோழன் (கி.பி. 871 முதல் 907 வரை) 
3. முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907 முதல் 950 வரை) 
4. கண்டராதித்த சோழன் (கி.பி. 950 முதல் 957 வரை)
5. அரிஞ்சய சோழன் (கி.பி. 956 முதல் 957 வரை) 
6. சுந்தர சோழன் (கி.பி. 957 முதல் 970 வரை) 
7. உத்தம சோழன் (கி.பி. 970 முதல் 985 வரை) 
8. மாமன்னன் ராஜராஜன் (கி.பி. 985 முதல் 1014 வரை) 
9. முதலாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1012 முதல் 1044 வரை) 
10. ராஜாதிராஜ சோழன் (கி.பி. 1018 முதல் 1054 வரை) 
11. இரண்டாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1051 முதல் 1063 வரை) 
12. வீரராஜேந்திர சோழன் (கி.பி. 1063 முதல் 1070 வரை) 
13. அதிராஜேந்திர சோழன் (கி.பி. 1067 முதல் 1070 வரை) 

பிற்கால சோழ மன்னர்கள் 
14. முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 முதல் 1120 வரை) 
15. விக்கிரம சோழன் (கி.பி. 1118 முதல் 1135 வரை) 
16. 2ஆம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1133 முதல் 1150 வரை) 
17. 2ஆம் ராஜராஜ சோழன் (கி.பி. 1146 முதல் 1173 வரை) 
18. 2ஆம் ராஜாதிராஜ சோழன் (கி.பி. 1166 முதல் 1178 வரை) 
19. 3ஆம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1178 முதல் 1218 வரை) 
20. 3ஆம் ராஜராஜ சோழன் (கி.பி. 1216 முதல் 1256 வரை) 
21. 3ஆம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1246 முதல் 1279 வரை) 
இந்த 3ஆம் ராஜேந்திரனுக்குப் பிறகு சோழ நாடு என்னவாயிற்று என்பதை பிறகு இவனுடைய ஆட்சிக் காலம் பற்றி எழுதும்போது பார்க்கலாம் இப்போது இந்த விவரங்களோடு, இதில் காணப்படும் ஒவ்வொரு மன்னனைப் பற்றியும் சிறிய குறிப்புக்களைப் பார்ப்போம். 
மாவீரன் முதலாம் ராஜேந்திர சோழன் தஞ்சையை ஆண்ட புகழ்பெற்ற ராஜராஜ சோழனின் குமாரன். தமிழக வரலாற்றில் வேறு எவரோடும் ஒப்பிடமுடியாத அளவுக்குப் புகழ்பெற்ற அரசன். தந்தை ராஜராஜன் 1014இல் காலமான பிறகு சோழ அரசனாக முடிசூட்டிக் கொண்டவன் ராஜேந்திரன். ஆனால் வரலாற்று ஏடுகளில் ராஜராஜனுக்குக் கிடைத்த அளவுக்கு இந்த ராஜேந்திரனுடைய புகழ் வெளிவரவில்லையே ஏன்? 

ராஜேந்திரசோழனுடைய காலத்தில் சோழ நாட்டின் எல்லை வடக்கே கங்கைக் கரை வரை பரந்து விரிந்து கிடந்தது. கடல் கடந்தும் இந்த மாமன்னனுடைய ஆட்சியின் அதிகாரம் பரவியிருந்தது. இப்படிச் சொன்னால் மட்டும் போதுமா? எதுவரையில் இவனுடைய ஆட்சியின் எல்லை விரிந்து கிடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? ஆம்! தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். சோழ சாம்ராஜ்யம் பர்மா அதாவது இப்போதைய மியன்மார் கடற்கரை வரையிலும் பரவியிருந்தது. அந்தமான் நிக்கோபார் தீவுகளும் அவன் ஆட்சியின் கீழ் இருந்தன. லட்சத் தீவுகள், மாலத்தீவுகள் இவைகளும் இவனது ஆட்சியின் கீழ் இருந்தன. அது மட்டுமா? ஸ்ரீவிஜய ராஜ்யங்களான சுமத்ரா, ஜாவா, மலேயா தீபகர்ப்பம் தவிர தூரக்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்தும் இவனது ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன. இவை தவிர சோழ கடற்படை வென்றெடுத்த நாடுகளும் பலப்பல. வங்கதேசம், இப்போதைய பிகார் மன்னன் மகிபாலனை வென்று அங்கும் தனது ஆட்சியை நிலைநாட்டினான் ராஜேந்திரன். 

ராஜராஜனின் மைந்தன் ராஜேந்திர சோழன். இவன் கி.பி.1012 முதல் 1044 வரை அரசாட்சியை நிர்வகித்து வந்தான். இவன் காலத்தில் சோழ் சாம்ராஜ்யம் பாரத வர்ஷம் முழுவதும், கடல் கடந்தும் பரவி நின்றது. இவனுக்குப் பரகேசரி எனும் பட்டப்பெயர் உண்டு. இவன் தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரம். இவனது ராணிமார்கள் திருபுவன மாதேவியார், முக்கோகிலம், பங்கவன் மாதேவியார், வீரமாதேவி ஆகியோர். பிள்ளைகள் முதலாம் ராஜாதிராஜன், 2ஆம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன், பெண்கள் அருண்மொழிநங்கையார், அம்மங்காதேவியார். 

இப்படி திரும்பிய பக்கமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டிய ராஜேந்திர சோழன் தன் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஒரு புதிய தலைநகரை உருவாக்கினான். அந்த தலைநகரம்தான் கங்கைகொண்ட சோழபுரம். அவன் வாழ்ந்த காலத்தில் கீழை ஆசிய கண்டத்தில் புகழ்வாய்ந்த சாம்ராஜ்யமாகத் திகழ்ந்தது சோழ சாம்ராஜ்யமே. மாமன்னன் ராஜேந்திரனின் தமிழ்ப் படை பல நாடுகளிடமிருந்தும் கப்பம் வசூலித்தது. அவை இப்போதைய தாய்லாந்து, கம்போடியா ஆகியவைகளும் அடங்கும்.
பொதுவாக தமிழ் மன்னர்கள் நாடுபிடிக்கும் ஆசையில் பிற நாடுகளை வென்று ஆக்கிரமிப்பது கிடையாது. ஆனால் ஒருசில மன்னர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களுக்கு இந்த ஆசை ஏற்பட்டு அதன் விளைவாகப் பல நாடுகளை வென்று ஆட்சி செய்திருக்கிறார்கள். அந்த வரிசையில் ராஜராஜசோழனும் அவனுடைய மகன் ராஜேந்திரனும் கடல்கடந்தும் சென்று மேலும் பல நாடுகளை வென்று வெற்றியைக் குவித்து வந்தார்கள். 

ராஜேந்திர சோழன் மற்ற எவரைக் காட்டிலும் அதிகமான கடல்கடந்த நாடுகளை வென்றெடுத்தவன். குறிப்பாக இவன்காலத்தில்தான் அந்தமான், லட்சத்தீவுகள், இந்தோசைனா என வழங்கப்பட்ட தாய்லாந்து, மலேயா, லாவோஸ், இந்தோனேஷியா, வியட்நாம் ஆகிய பிரதேசங்களையும் பர்மாவையும் வென்று தன் சாம்ராஜ்யத்தினுள் இணைத்துக் கொண்டான். 

ராஜேந்திர சோழனுக்கு முன்பாக பல்லவ மன்னர்களும்கூட கடல்கடந்து சென்று நாடுகளைப் பிடித்திருக்கிறார்கள். ஆனால் ராஜேந்திர சோழந்தான் பர்மா இந்தோசைனா பகுதிகளையும் வென்று வெற்றிக் கொடி நாட்டியவன். இந்த நாடுகள் அனைத்துமே ராஜேந்திர சோழன் காலத்தில் மட்டுமல்ல, அவனைத் தொடர்ந்து வந்த பல சோழ அரசர்கள் காலம் வரை அதாவது முதலாம் குலோத்துங்கன் காலம் வரை இவர்கள் ஆட்சியின் கீழ் இருந்திருக்கின்றன.

பல்லவர்கள் காலத்தைவிட ராஜேந்திர சோழன் காலத்தில் படையெடுத்துச் சென்ற அன்னிய மண்ணில் நமது கலாச்சாரத்தைப் பரப்பி, பல சிவாலயங்களை ஆங்காங்கே கட்டி வைத்தான். இன்றும்கூட தாய்லாந்து போன்ற இடங்களில் இவன் காலத்திய பழமையான உலக அதிசயங்களுக்கு ஈடான சிவாலயங்களைக் காண முடிகிறது. 

தஞ்சையில் அதிசயிக்கத்தக்க வகையில் தந்தை ராஜராஜன் கட்டிய ராஜராஜேச்சரம் கோயிலைப் போல தன்னுடைய புதிய தலைநகரமான கங்கைகொண்ட சோழபுரத்தில் தஞ்சைக் கோயிலைப் போன்றதொரு கோயிலைத் தானும் கட்டிவைத்தான். தன்னுடைய சாதனைகளின் காரணமாக இவன் பரகேசரி என்றும் யுத்தமல்லன் என்றும் விருதுகளைப் பெற்றான்.

ராஜராஜ சோழன் தன்னுடைய ஆட்சிக் காலத்திலேயே தன்னுடைய வீரம் செறிந்த மகனான ராஜேந்திரனை யுவராஜாவாக அங்கீகரித்து 1012இல் முடிசூட்டினான். ராஜராஜனுடைய இறுதிக் காலத்தில் இவ்விருவரும் செய்த சாதனைகள் அளப்பரியவை. மன்னன் ராஜராஜசோழன் சார்பாக தனையன் ராஜேந்திரன் சோழர் படைகளுக்குத் தலைமை தாங்கி வேங்கி, கலிங்கம் ஆகிய பிரதேசங்களின் மீது படையெடுத்து வெற்றி பெற்றிருக்கிறான்.

1012இல் யுவராஜாவாக அங்கீகரிக்கப்பட்டிருந்த போதும் ராஜேந்திரன் 1014இல்தான் அரசுரிமை பெற்று மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். தன்னுடைய தந்தை தன்னை யுவராஜாவாக அங்கீகரித்ததைப் போல ராஜேந்திரனும் 1018இல் தன்னுடைய மகனான ராஜாதிராஜனை சோழ இளவரசனாக அங்கீகரித்தான். அது தொடங்கி தன் தந்தைக்கு உதவியாக யுவராஜாவாக இருந்து அரசாட்சியைத் திறம்பட அடுத்த 26 ஆண்டுகளுக்கு நடத்தி வந்தான் ராஜாதிராஜன். மன்னனுக்குரிய அனைத்து அதிகாரங்களும் கொண்ட யுவராஜாவாக இவர்கள் ஆட்சிபுரிந்ததும் ஒரு வகையில் நல்லதாகப் போயிற்று. மன்னன் மரணமடைந்த பின்னர் யார் பட்டத்துக்கு வருவது என்ற வாரிசுரிமைப் போர் இதுபோன்ற நேரங்களில் வருவதற்கு வாய்ப்பு இல்லை அல்லவா? 
தொடக்க கால ராணுவ படையெடுப்புகளும் வெற்றிகளும். 
ராஜேந்திர சோழ மன்னனுடைய காலத்திய கல்வெட்டுகளிலிருந்து போர்களில் அவன் பெற்ற வெற்றிகள் குறித்த பல செய்திகள் கிடைக்கின்றன. கி.பி.1002ஆம் ஆண்டு முதல் தன் தந்தையின் காலத்திலேயே அவன் பல போர்களில் வெற்றி பெற்றிருக்கிறான். அப்படி அவன் படையெடுத்துச் சென்ற பெற்ற வெற்றிகளில் குறிப்பிடத்தக்கது ராஷ்டிரகூடர்களின் மீது படையெடுத்துச் சென்று வென்றதும் ஒன்று. அது தவிர தற்போதைய கர்நாடக மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் இருந்த மேலச் சாளுக்கியர்கள் நாடும், தென் கர்நாடகத்தில் கோலாப்பூர், பண்டரிபுரம் ஆகிய பகுதிகளும் இவன் வெற்றி பெற்ற பகுதிகள்.

மேலைச் சாளுக்கிய மன்னனான சத்யாசிரியன் அவனுடைய வாரிசு 2ஆம் ஜெயசிம்மா ஆகிய இடங்களையும் வெற்றி கொண்டான். துங்கபத்திரை நதியைத் தாண்டி இந்த நாட்டினை அடைந்து போரிட்டான். சாளுக்கியர்களின் தலைநகரமும் ராஜேந்திரன் வசம் வந்தது. சாளுக்கியர்களின் பரந்து விரிந்து கிடந்த நாட்டில் ரெய்ச்சூர் பகுதிகளையும் கிருஷ்ணா துங்கபத்ரா ஆகிய நதிகளைக் கடந்து சென்று போரிட்டு வெற்றியடைந்திருக்கிறான். மைசூருக்கு வடமேற்கில் இருந்த பிரதேசங்களையும் அங்கிருந்த அரசர்களைத் தோற்கடித்து மலைப்பகுதிகளுக்கு விரட்டிவிட்டு ராஜேந்திரன் பிடித்துக் கொண்டான். வெற்றி பெற்று பிடித்துக் கொண்ட பகுதிகளில் தனது வெற்றியைக் குறிக்கச் சில இடங்களில் சிவாலயங்களையும் எழுப்பினான். தற்போதைய ஆந்திரப் பிரதேசத்தில் ஐதராபாத்துக்கு வடக்கே இருந்த பகுதிகளையும், கர்நாடகப் பகுதிகளான கோலாரையும் பிடித்துக் கொண்டான். கோலாரில் தமிழில் வெட்டப்பட்ட ஒரு கல்வெட்டுப் பகுதியும் காணக் கிடைக்கிறது. 

இலங்கைப் படையெடுப்பு.

ராஜேந்திர சோழனின் தந்தையார் ராஜராஜ சோழன் காலத்தில் இலங்கையை முழுமையாகப் பிடிக்க வில்லை. மேலும் சில பகுதிகள் சோழ சாம்ராஜ்யத்துக்கு உட்படாமலே இருந்தன. அதை பூர்த்தி செய்து விட்டுப்போன பகுதிகளையும் பிடித்துவிட வேண்டுமென ராஜேந்திரன் இலங்கைக்குப் படையெடுத்தான். கி.பி.1018ஆம் ஆண்டு இந்தப் படையெடுப்பைத் துவக்கினான் ராஜேந்திரன். முன்பு பாண்டிய மன்னர்களின் செல்வங்களையும், பொன்னாபரணங்களையும் கவர்ந்து வைத்திருந்த இலங்கை அரசர்களிடமிருந்து ராஜேந்திரன் அவற்றை மீட்டதாகத் தெரிகிறது. இலங்கை அரசனின் தலைக் கிரீடத்தையும், ராணியையும் அவரது மகளையும் கூட ராஜேந்திரன் பிடித்துக் கொண்டதாகத் தெரிகிறது. சிங்கள ராஜா மகிந்தன் சிறைபிடிக்கப்பட்டு சோழ நாட்டுக்கு அனுப்பப்பட்டான். அந்த மகிந்தனுடைய துரதிர்ஷ்டம் அவன் சோழ மன்னன் சிறையில் பன்னிரெண்டு ஆண்டு காலம் சிறைப்பட்டுக் கிடந்து அங்கேயே மாண்டு போனான். இலங்கையின் "மகாவம்சமும்" இந்தச் செய்திகளை உறுதி செய்கின்றன. எதற்காக இப்படி சோழ மன்னன் இலங்கை மீது படையெடுத்து, அந்த ராஜாவைச் சிறைப்பிடித்து, ராணியையும், மகளையும் சோழ நாட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும்? இந்தக் கேள்வி நமக்கு எழத்தானே செய்யும். சோழ நாட்டு வணிகர்கள் தங்கள் கப்பல்களில் பொருட்களை ஏற்றிக் கொண்டு இலங்கைக்கும், தூரக்கிழக்கு நாடுகளுக்கும் செல்லும் வழியில் (இப்போது மீனவர்களைத் துன்புறுத்துவது போலவே) அப்போதும் அந்த வியாபாரக் கப்பல்களை வழிமறித்து கொள்ளையடித்தும், வியாபாரிகளை சிறையில் அடைத்தும் துன்புறுத்தியும் கொன்றும் வந்திருக்கின்றனர். இந்த அநியாயத்தை (இப்போது போல்) தட்டிக் கேட்காமல் இருக்க முடியுமா? சோழ தேசத்தை ஆளும் மன்னன் எனும் முறையில் ராஜேந்திரன் தன் படைகளை அழைத்துச் சென்று இதுபோன்ற செயல்களுக்கு ஒரு முடிவு கட்டினான். இது பற்றி கோலார் கல்வெட்டு செய்திகளும் கிடைத்திருக்கின்றன.

ராஜேந்திரனின் சிங்கள நாட்டு வெற்றியை அடுத்து அங்கு சிறைப்பிடிக்கப்பட்ட மகிந்தனுடைய மகன் ஒருவன் தமிழ் மன்னர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டான். தமிழர் படைகளுக்கும் சிங்கள படைகளுக்கு மிடையே பெரும் யுத்தமொன்று இலங்கையில் நடந்தது. அந்த யுத்தத்தில் மிச்சமிருந்த சிங்கள எதிர்ப்புகளையும் முறியடித்துவிட்டு இலங்கை முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இலங்கையில் தமிழர் ஆட்சி 2ஆம் குலோத்துங்கன் ஆட்சிக் காலம் வரை தொடர்ந்தது.

கி.பி.1041இல் மறுபடியும் ராஜேந்திர சோழன் இலங்கைக்குச் சென்று அங்கு தமிழர் படைகளுக்கு எதிராக உருவாகியிருந்த கலகத்தை ஒடுக்கினான். சிங்களர்களைத் தூண்டிவிட்டு தமிழர்களுக்கு எதிராகப் போரிட்டவன் பெயர் விக்கிரமபாகு என்பவன். இந்த விக்கிரமபாகுவும் சில நாட்களுக்குப் பிறகு கலவரத்தில் மாண்டுபோனான். தமிழ் மன்னருக்கு எதிராக இலங்கையில் சிங்களர் தவிர வேறு சிலரும் கலகங்களில் ஈடுபட்டு வந்தனர். சிங்களர்களுக்கு உதவியாக பாண்டிய நாட்டிலிருந்து ஓடிவந்து புகலிடம் தேடிக்கொண்ட பாண்டிய நாட்டு இளவரசர்களும், வடக்கே கன்னோஜ் பகுதிகளிலிருந்து வந்த சிற்றரசன் ஒருவனும் இருந்தனர். இவர்கள் அனைவரையும் சோழர் படைகள் வெற்றி கண்டன. ராஜராஜன் காலத்தில் நிறைவேறாமல் போன இலங்கையை முழுமையாகப் பிடித்துக் கொள்ளும் திட்டம் அவர் மகன் ராஜேந்திரன் காலத்தில் நிறைவு பெற்றது. 

பாண்டியர்களும் சேரர்களும்.
 

கி.பி.1018இல் ராஜேந்திர சோழன் தன்னுடைய பிரம்மாண்டமான சோழர் படையுடன் அதற்குத் தலைமை ஏற்று பாண்டிய, சேர நாடுகளுக்குச் சென்றான். அப்படி படையெடுத்துச் சென்ற ராஜேந்திர சோழன் பாண்டிய நாட்டின் நன்முத்துக்களையும், முத்துக்குளிக்கும் துறைமுகங்களையும் பிடித்துக் கொண்டதோடு மேற்கில் இருந்த மலைகளைத் தாண்டிச் சென்று சேர நாட்டினுள் நுழைந்து அந்த நாட்டை வெற்றி கொண்டான். இந்த பாண்டிய, சேர நாட்டுப் பகுதிகள் ஏற்கனவே ராஜராஜ சோழன் காலத்தில் சோழ மண்டலத்துக்குட்பட்டவைகளாக இருந்தும், ராஜேந்திரன் மறுமுறையும் அங்கெல்லாம் சென்று தங்கள் ஆட்சியை உறுதி செய்துகொண்டார். அப்படி ராஜேந்திரன் பிடித்துக் கொண்ட பாண்டிய மண்டலத்து அதிபதியாகத் தன்னுடைய மகனை ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன் எனும் பட்டப்பெயருடன் நியமித்தார் நிர்வாகியாக நியமித்தார். 

மேலைச் சாளுக்கிய யுத்தங்கள். 

கி.பி.1021 ராஜேந்திர சோழன் தனது கவனத்தை மேலைச் சாளுக்கியர்கள் பக்கம் திருப்பினார். 1015இல் 2ஆம் ஜெயசிம்மா என்பவன் மேலைச் சாளுக்கிய மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். அவன் ஆட்சிக்கு வந்ததும் தனக்கு முந்தைய அரசனான சத்யாஸ்ரயன் இழந்தவற்றை மீட்டெடுக்க வேண்டுமென்று முயற்சி செய்தான். அந்த சத்யாஸ்ரயன் சோழர்களோடு நடந்த யுத்தத்தில் தோற்று ஓடியவன். ஆனால் எப்படியோ ராஜராஜ சோழனின் அனுதாபத்தைச் சம்பாதித்துக் கொண்டு சோழ சாம்ராஜ்யத்துக்குக் கட்டுப்பட்டு கப்பம் கட்டும் சிற்றரசனாக இருக்க ஒப்புக் கொண்டு ராஜ்யத்தை மீண்டும் பெற்றுவிட்டான். இந்த 2ஆம் ஜெயசிம்மா ஆட்சிக்கு வந்தவுடன் தானே சுயமாக செயல்படத் தொடங்கினான்; காரணம் ராஜேந்திர சோழன் அப்போது தனது கவனத்தை இலங்கை மீதும், பாண்டிய சேரர்கள் மீதும் செலுத்திக் கொண்டிருந்தான். இந்த சமயம் பார்த்து ஜெயசிம்மா தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சி செய்தான்.
மேலைச் சாளுக்கியர்கள் கர்நாடகத்தின் வடக்கு, மராட்டியத்தின் பகுதிகளைக் கொண்டது. கீழைச் சாளுக்கியர்கள் என்பவர்கள் தற்போதைய ஆந்திரப் பிரதேசத்தின் வடக்கில் தென்னிந்தியாவின் கிழக்குப் பகுதியிலும் ஆட்சி செய்தவர்கள். மேலைச் சாளுக்கிய ராஜ்யத்தை ஆண்ட இந்த ஜெயசிம்மாவுக்குக் கீழைச் சாளுக்கியர் ஆட்சியிலும் தலையிட்டுக் குழப்பம் விளைக்க எண்ணினான். அந்த வேங்கியில் விமலாதித்தன் என்பவன் அரசனாக இருந்தான். அவன் காலமான பிறகு அவனது மகனும் சோழ மன்னர்களின் ஆதரவு பெற்றவனுமான ராஜராஜ நரேந்திரன் என்பான் ஆட்சிக்கு வரவேண்டும். ஆனால் ஜெயசிம்மா என்ன செய்தான் இவனுக்கு எதிராக அவன் சகோதரன் விஜயாதித்தன் என்பவனை ஆதரிக்கத் தொடங்கினான். விமலாதித்தன் ராஜராஜ சோழனின் மகளான குந்தவையை திருமணம் செய்து கொண்டவன். மாமன்னனின் மாப்பிள்ளை. விமலாதித்தனின் இரண்டு மகன்களில் ஒருவன்தான் இப்போது வேங்கி ஆட்சிக்கு வரும் ராஜராஜ நரேந்திரன். மற்றொருவனை ஜெயசிம்மா ஆதரித்தான். இந்த நிலையில் சோழ மன்னர்கள் யாரை ஆதரிப்பார்கள்? ராஜேந்திரன் ராஜராஜ நரேந்திரனை ஆதரித்தான். இந்தப் போட்டியில் வேங்கி நாட்டில் உள்நாட்டுக் கலகம் உருவானது. அண்ணன் தம்பிக்கிடையே பனிப்போர். ராஜேந்திர சோழனின் ஆதரவு பெற்ற ராஜராஜ நரேந்திரன் உள்நாட்டுப் போரில் வென்றான். வேங்கி அவன் வசம் வந்ததோடு, சோழர்களின் கரங்களும் வலுப்படுத்தப்பட்டன. 

ராஜேந்திர சோழன் தன்னுடைய படைகளை இரண்டாகப் பிரித்து ஒன்றை மேலைச் சாளுக்கிய ராஜ்யத்துக்கும், மற்றொன்றை வேங்கிக்கும் அனுப்பி வைத்தான். மேற்கே ஜெயசிம்மாவை எதிர்கொள்ள சென்ற படைகள் மாஸ்கி எனுமிடத்தில் நடந்த போரில் அவனைத் தோற்கடித்து வெற்றி பெற்றது. தொடர்ந்து சாளுக்கிய நாட்டின் தலைநகருக்கும் சென்று அங்கு அங்கிருந்த மற்ற சாளுக்கியர்களையும் தோற்கடித்தது. இந்தப் போரில் ஜெயசிம்மாவின் பெரிய தளபதிகள் பலரை சோழர் படைகள் போரில் கொன்றுவிட்டன. மகாசமந்தா என்றும் தண்டநாயகா என்றும் புகழ்பெற்ற தளபதிகள் கொல்லப்பட்டனர். ஜெயசிம்மாவின் பேராசைக்காகத் தங்கள் உயிரை ஈந்தனர் இந்த வீரம் செறிந்த தளபதிகள். இந்த போரின் மூலம் இரட்டைபாடி நாடு எனப்படும் மேலைச் சாளுக்கிய நாடு சோழரின் காலடியில் வீழ்ந்தது. இந்த சகோதர யுத்தத்தில் வெற்றிபெற்ற ராஜராஜ நரேந்திரனை, ராஜேந்திர சோழன் வடக்கே கங்கை வரை படையெடுத்துச் சென்று வெற்றிக்கொடி நாட்டித்திரும்ப வரும்போது வேங்கிநாட்டின் பட்டாபிஷேகத்தைச் செய்த கையோடு தன் மகளான அம்மங்கா என்பவரையும் அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.
கி.பி.1031இல் இரட்டைபாடி நாட்டார் (மேலைச் சாளுக்கியர்) மீண்டும் வேங்கி மீது படையெடுத்து வந்தனர். அந்தப் போரில் ராஜேந்திர சோழனின் மருமகனும் வேங்கியின் மன்னனாக இருந்தவனுமான ராஜராஜ நரேந்திரன் தோற்று ஓடிப்போனான். சாளுக்கியர்களின் ஆதரவோடு விஜயாதித்தன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தான். தோற்றுப் போன ராஜராஜ நரேந்திரன் தன் மாமனாருக்கு மீண்டும் உதவி கேட்டு ஆளனுப்பினான். இந்த முறை ராஜேந்திர சோழன் தன்னுடைய வீரம் செறிந்த மகனான ராஜாதிராஜனை பெரும் படையோடு வேங்கிக்கு அனுப்பினான். அப்போது நிகழ்ந்த பெரும் போரில் சோழர் படைகள் வெற்றி பெற்றன. நரேந்திரன் மீண்டும் கி.பி.1035இல் அரசனானான். விஜயாதித்தன் இரட்டைபாடி நாட்டுக்குப் போய் அடைக்கலமானான்.

ராஜேந்திர சோழன் காலத்தில் மேலைச் சாளுக்கியர்கள் பெரும் தொல்லையாகவே இருந்திருக்கிறார்கள். சத்யாஸ்ரயன் அவன் மகன் ஜெயசிம்மா ஆகியோர் தவிர அவர்களுக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசர்களான கடம்பர்கள், ஹொய்சாளர்கள், பாணர்கள், வைதும்பர்கள், கங்கர்கள் என அனைவருமே தமிழ் சாம்ராஜ்யத்துக்கு எதிரிகளாக இருந்தார்கள். இவற்களையெல்லாம் வென்று ராஜேந்திரன் பெட்ட பட்டங்கள் "முடிகொண்ட சோழன்", "ஜெயசிம்ம சரபன்", "மன்னைகொண்ட சோழன்" மன்னை என்பது சாளுக்கிய தலைநகர் மான்யகேட்டாவைக் குறிக்கும். தமிழில் இதை மன்னைகடகம் என்றழைப்பர், "இரட்டைபாடி கொண்ட சோழன்", "நிரூபதிவாகரன்" (நிரூபதுங்கன் எனும் ஹொய்சாளனை வெற்றி கொண்டதால்) இப்படிப் பல

இப்படிப் போர்க்களங்களைக் கண்டே ராஜேந்திரனுக்கு வயது முதிர்ந்து விட்டது. தன்னுடைய வயதான காலத்திலும் சாளுக்கியர்கள் மீது படையெடுத்துச் செல்ல நேர்ந்தது. காரணம் சாளுக்கிய 2ஆம் ஜெயசிம்மாவும் அவனுடைய மகனான சோமேஸ்வரனும் சோழ நாட்டு எல்லைப் பிரதேசங்களில் நுளம்பவாடி, கங்கவாடி எனும் கன்னட நாட்டுப் பகுதிகளில் கலவரம் ஏற்படுத்தி வழிப்போக்கர்களிடமிருந்து சுங்கம் வசூல் செய்யத் தொடங்கினர்.

ராஜேந்திர சோழனும், அவனுடைய மகனும் யுவராஜாவுமான ராஜாதிராஜ சோழனும் அவர்கள் மீது படையெடுத்து அவர்களை வென்று ஜெயசிம்மாவைப் போர்க்களத்தில் கொன்று, பல தளபதிகளைக் கொன்றும், சாளுக்கிய தலைநகரை வசப்படுத்திக் கொண்டு சித்ரதுர்கம் எனுமிடத்தில் நடந்த போரில் மாபெரும் வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றிக்கு ராஜேந்திரனின் மகனும் யுவராஜாவுமான ராஜாதிராஜன் காட்டிய வீரமும், போர்த்திறனும் மன்னன் ராஜேந்திரனுக்குத் திருப்தி அளித்தது. இதுதான் யுவராஜா ராஜாதிராஜனின் முதல் பெரிய யுத்தம். யுத்தத்தில் தான் பெற்ற வெற்றிப் பரிசாக இவன் தன் தந்தைக்கு இரண்டு துவாரபாலகர் சிலைகளைக் கொடுத்தனுப்பினான். அதில் ஒன்று கங்கைகொண்ட சோழபுரம் கோயில் வாயிலில் வைக்கப்பட்டது. இன்னொன்று திருபுவனம் சரபேஸ்வரர் கோயிலில் இருக்கிறது. இந்த கோயில் பின்னாளில் 3ஆம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டது. கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்த துவாரபாலகர் தற்போது தஞ்சை பெரிய கோயில் கலைப்பொருள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த விவரங்கள் எல்லாம் தஞ்சை பெரிய கோயில் ராஜேந்திர சோழன் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டன.

சோழர்களிடம் தோற்ற சாளுக்கியர்கள் தொடர்ந்து சோழர்களுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு முறையும் இவ்விரு சாம்ராஜ்யங்களுக்குள் யுத்தம் நடைபெறும் போதெல்லாம் சாளுக்கியர்களுக்குத் தோல்வியும், சோழர்களுக்கு ஏராளமான செல்வங்களும், பொன், நகைகள், குதிரைகள், யானைகள் மற்ற யுத்த தளவாடங்கள் இவைகள் அதிக அளவில் கிடைத்தன. இது தவிர சாளுக்கியர்கள் சோழர்களுக்கு பெரும் தொகையை கப்பமாகக் கட்டவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. சோழர்களும் ஒவ்வொரு முறையும் அவர்கள் பால் இரக்கப்பட்ட ராஜ்யத்தையும், மனைவி பிள்ளை குட்டிகளையும் அவர்களோடு சேர்ந்து கொள்ள அனுமதித்திருக்கின்றனர்.

தன் தந்தையார் கட்டிஆண்ட தஞ்சை சாம்ராஜ்யத்தின் தலைநகரை கங்கை கொண்ட சோழபுரத்துக்கு மாற்றிக் கொண்டாராயினும், ராஜேந்திர சோழன் தன் தந்தையுடையதும் மற்ற அவர்களது முன்னோர்களின் சாதனைகளைப் போற்றி மதித்து வந்திருக்கிறார். தன் தந்தையுடையதும், தன்னுடையதுமான போர் வெற்றிச் சாசனங்களை தஞ்சைக் கோயிலில்தான் அவர் வெட்டிவைத்திருக்கிறாரே தவிர கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் இல்லை. அவருக்குப் பின் வந்த சோழ மன்னர்களும் தங்கள் தலைநகரத்தையும், முடிசூட்டிக் கொண்டதையும் கங்கைகொண்ட சோழபுரத்தில் வைத்துக் கொண்டாலும், கல்வெட்டுகளை மட்டும் தஞ்சை கோயிலில்தான் எழுதி வைத்தார்கள். ராஜேந்திர சோழன் கங்கை, கடாரம் முதலிய நாடுகளை வென்றதன் விளைவாக அவருக்கு "பூர்வதேசமும், கங்கையும் கடாரமும் கொண்ட ஐயன்" எனும் பட்டப் பெயரைப் பெற்றார். 

கங்கை படையெடுப்பு.

மேலை சாளுக்கியர்களையும், கிழக்கில் வேங்கியையும் கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு மாமன்னன் ராஜேந்திரன் தன்னுடைய சாம்ராஜ்யத்தின் பெருமையையும், பலத்தையும் காட்டும் பொருட்டு மேலும் பல இடங்களுக்குத் தன் படைகளை அனுப்பி வைத்தான். கி.பி.1019இல் சோழப் படைகள் கலிங்க நாட்டின் வழியாக (இப்போதைய ஒடிஷா) கங்கைக் கரை நோக்கி நகர்ந்தது. அந்தப் படைக்குத் தலைமை தாங்கி ராஜேந்திர சோழ மன்னனே தெற்கே தொடங்கி கோதாவரி நதிக்கரையில் வந்தார். முன்னேறிச் செல்லும் சோழப் படையைப் பின்னாலிருந்து வேறு எந்த நாட்டுப் படையாவது வந்து தாக்கிவிடாமல் இருக்க மன்னர் இப்படி ஏற்பாடு செய்துகொண்டு வந்தார். வங்காள தேசத்தை அடைந்த சோழர் படைகள் அங்கு மன்னன் மகிபாலனை எதிர்கொண்டு போரிட்டு வென்றனர்.

இந்தப் படையெடுப்பு பற்றி திருவாலங்காடு செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. அதன்படி இந்தப் படையெடுப்பு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றதாகவும், இந்தப் படை செல்லும் வழிகளில் எல்லாம் பல நாடுகள் சோழர் படையின் வலிமையை உணர்ந்து சரணடைந்ததாகவும் தெரிகிறது. இந்தப் படையெடுப்பில்தான் சோழர்கள் ரணசூரன் என்பவனைத் தோற்கடித்து கங்கை நீரை அவனைவிட்டுச் சுமக்கச் செய்து சோழ நாட்டுக்குக் கொண்டு வந்ததாகத் தெரிகிறது.

வடக்கே படையெடுத்துச் சென்று, அங்கெல்லாம் வெற்றிகளைக் குவித்த சோழப் பேரரசனுக்கு அங்கிருந்து மேலும் பல புதிய நாடுகளுக்கு வழி தெரிந்து அங்கெல்லாம் செல்லத் தொடங்கினான். அப்படி அவன் செல்லும் வழியில் கலிங்கம் அதாவது இப்போதைய ஒடிஷா, வங்கதேசம், அசாம் முதலான பகுதிகளைத் தாண்டி பர்மா வரை சென்றான். அப்படி இவன் சென்ற வழியில் இருந்த வடமதுரை, கன்யாகுப்ஜம், சிந்து ஆகிய பிரதேசங்களும் சோழர் வசமாயின. சோழர் படையில் தரைப்படை எத்தனை வலிமையானதோ, அதே அளவுக்கு கடற்படையும் வலிமையானதாக இருந்ததால், கடல்கடந்து மட்டுமல்ல, நாட்டின் கிழக்கு மேற்குப் பகுதிகளும் சோழர் வசமாயின. சோழர்களிடம் தோற்ற அரசர்கள் வரிசை மிக நீண்ட வரிசை.

ராஜேந்திரனின் சோழர்படை வென்ற பகுதிகள் அனைத்தும் முதலில் சோழப் பேரரசோடு இணைத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் அவைகள் சோழர்களுக்கு அடங்கிய கப்பம் கட்டும் சிற்றரசர்களாக அங்கீகரிக்கப்பட்டுத் தனித்து அரசாள அனுமதிக்கப்பட்டனர். சோழர்களின் அன்னிய நாட்டு வணிகங்களில் இந்த சிற்றரசுகளும் பங்கு பெற்றன. ராஜேந்திரனுக்குப் பிறகும் மூன்றாம் குலோத்துங்கன் காலம் வரை இந்த ஏற்பாடு தொடர்ந்து நடைமுறையில் இருந்து வந்தன. 

தென்னாட்டில் சோழர்களின் வலிமை என்ன என்பது இவர் காலத்தில்தான் வடக்குப் பகுதி ராஜ்யங்களுக்குப் புரிந்தது. இத்தனை வலிமை பெற்றிருந்தும் சோழர்கள் தாங்கள் வென்ற பகுதிகளைத் தங்களுடையதாக ஆக்கிக் கொள்ளாமல் சிறிது காலத்தில் அவர்களிடமே திரும்பக் கொடுத்து தங்கள் ஆளுமையின் கீழ் சுதந்திரமாக ஆள வழிவகுத்துக் கொடுத்த பெருந்தன்மையை புரிந்து கொள்ளலாம்.

கடல்கடந்த படையெடுப்புகள்.

மாமன்னன் ராஜேந்திரன் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் கி.பி.1025இல் சோழ கடற்படையைக் கொண்டு கடல்கடந்து சென்று ஸ்ரீவிஜய ராஜ்யம், கடாரம் முதலிய நாடுகளை வெற்றி கொண்டிருக்கிறான். தவிர சுமத்ரா, மலாயா வளைகுடா, இப்போது மலேயாவில் உள்ள கேடா ஆகிய பகுதிகளையும் வெற்றி கொண்டார். இதில் ஸ்ரீவிஜய ராஜ்யம் முன்பு சோழர்களோடு நல்ல உறவில் இருந்திருக்கிறது. ராஜராஜ சோழன் காலத்தில் இந்த ஸ்ரீவிஜய ராஜ்யத்தின் மன்னராக இருந்த விஜயதுங்கவர்மன் என்பவனை நாகப்பட்டினத்தில் சூடாமணி விஹாரம் எனும் புத்த ஆலயத்தைக் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கியிருந்தார். அப்படி இருந்தும் அந்த ஸ்ரீவிஜய ராஜ்யத்தின் மீதும் ராஜேந்திரன் படையெடுத்து அதனைப் பிடித்துக் கொண்டது ஏன் என்பது தெரியவில்லை.

ராஜேந்திர சோழனின் இறுதி நாட்கள்.

 ராஜேந்திர சோழனின் வாழ்நாட்கள் முழுவதும் போரும், போர்க்களமுமாகக் கடந்து போயிற்று. அப்படி அவன் படையெடுத்துச் சென்ற இடங்களில் எல்லாம் மாபெரும் சாம்ராஜ்யங்கள் சரிந்து சோழர் வசமாயின. மன்னனுக்கு வயது அதிகமாகி மூப்பு அடைந்த போது அவனுடைய பிள்ளைகள் படையெடுப்புகளைத் தாங்களே தலைமை வகித்து முன்னின்று நடத்தலாயினர். தன் மக்கள் போரில் சூரர்களாக இருந்து வெற்றிகளைக் குவித்து வருவது கண்டு வயது முதிர்ந்த ராஜேந்திரன் மனமகிழ்ச்சியடைந்தான். மன்னனின் மூப்பு கண்டு பாண்டியர்களும், சேரர்களும் கலகம் விளவிக்க முயன்றனர். ஆனால் மன்னன் தானே இவற்றை முன்னின்று அடக்கினான். இலங்கையிலும் உருவான கலகத்தைத் தன் பலம் கொண்டு மன்னன் அடக்கி வைத்தான். 

ராஜேந்திர சோழன் விட்டுச் சென்றவை. 

மாமன்னன் ராஜேந்திரனின் இறுதி நாட்கள் மகத்தானவை. அவன் காலத்தில்தான் சோழ நாடு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் பரந்து விரிந்து கிடந்தது. சக்கரவர்த்திக்கு அவனுடைய மகன்கள் உற்ற துணையாக இருந்து அவற்றை காத்து வந்தனர். இரக்கம், இறையுணர்வு, பிறர்க்கு உதவுதல், மக்களின் நலன் பேணுதல் என்று இவர்கள் காலம் பொற்காலமாக இருந்திருக்கிறது. எல்லவற்றையும் விட ராஜேந்திரனின் பெருமைமிக்க குணமாக விளங்கியது அவன் வென்ற நாடுகளைத் தோற்ற அரசர்களிடமே பின்னர் ஒப்படைத்ததுதான். என்ன பெருந்தன்மை ராஜேந்திரனுக்கு. தமிழகத்தில் பஞ்சபூதத் தலங்களில் வாயுவின் தலமாகக் கருதப்படுவது காளஹஸ்தி. 12ஆம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழ மன்னரால் கட்டப்பட்ட இந்த ஆலயம் இன்றும் தலை நிமிருந்து நின்று தமிழனின் பெருமையைப் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.

 ராஜேந்திர சோழனின் காலம் தமிழரின் பொற்காலம், தமிழகத்தின் பொற்காலம், மக்கள் நலனுக்கு பொற்காலம், என்றும் மக்களால் மறக்கமுடியாத பொற்காலம் எனலாம். வாழ்க மாவீரன் ராஜேந்திரன் புகழ்!


ராஜேந்திர சோழன் 1000

வங்கக் கடல், கலிங்கம், சுமத்ரா, சீனம்... இங்கெல்லாம் தம் ரதகஜதுரக பதாதிகளுடன் சீறிப் பயணித்தவன் ராஜேந்திர சோழன். அவன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு இது. 'கங்கை கொண்ட சோழன்’ புதினம் மூலம் ராஜேந்திர சோழனின் அசகாய சாதனைகளை விவரித்திருப்பார் எழுத்தாளர் பாலகுமாரன். அவரிடம் ராஜேந்திர சோழனின் பராக்கிரமங்களைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லிக் கேட்டோம்...

''ராஜராஜ சோழன் காலத்துக்குப் பிறகு மிகப் பெரிய படை திரட்டி, கங்கை வரை போய் வெற்றிக்கொடி நாட்டி வந்த தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் மட்டுமே. அதன்பிறகு மற்ற மன்னர்கள் பகைவரைத் தடுப்பதோடு சரி. தாக்கியதற்கான சரித்திரம் இல்லை.

கங்கை கொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த ராஜராம் கோமகன் என்பவர், ராஜேந்திர சோழனின் 1000-வது பட்டாபிஷேக விழாவைக் கொண்டாடத் திட்டங்கள் போட்டிருக்கிறார். நானும் கலந்துகொள்கிறேன். இந்த மாதிரியான விழாக்கள், தமிழர் சரித்திரம் மீது ஆர்வம்கொண்ட இளைஞர்களுக்கு உதவி செய்யும். தமிழ், மேலும் வாழும்!''


'ராஜேந்திர சோழனின் தீரம் எத்தகையது?''

'' 'அலைகடல் மீது பல கலம் செலுத்தி’ என்றுதான் அவன் மெய்கீர்த்தி சொல்கிறது. கடலின் தன்மை தெரிந்து, காற்றின் தன்மை தெரிந்து, இருட்டில் சுடர் மூலம் வழி தெரிந்து, ஆமைகள் போகிற நீரோட்டப் பாதை தெரிந்து, நூற்றுக்கணக்கான நாவாய்கள் அதாவது மிகப் பெரிய மரக்கலங்களோடு அவன் கிழக்கே உள்ள நாடுகளுக்குப் போயிருக்கிறான். இன்றைய சிங்கப்பூர், மலேசியா, ஜாவா, இந்தோனேசியா... எனப் பல நாடுகளில் அவன் கால்கள் பதித்திருக்கிறான். போரில் வென்று பெரும்பொருட்களை தமிழகத்துக்குக் கொண்டுவந்திருக்கிறான்.

சோழர்களுக்கு நடு நாடு, தொண்டை நாடு, தாண்டி கீழைச் சாளுக்கிய நாட்டோடு மிக நல்ல நட்பு இருந்திருக்கிறது. அதாவது ஆந்திர மக்களோடு, தமிழர்கள் மிக நெருக்கமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், மேலைச் சாளுக்கியம் என்கிற கன்னட மக்களோடுதான் அவர்கள் எப்போதுமே முரண்பட்டு இருக்கிறார்கள். கீழைச் சாளுக்கியத்தை கன்னடர்கள் கபளீகரம் செய்யாதிருக்க, மணவினை ஏற்பாடு செய்து கீழைச் சாளுக்கியத்துக்கு மிகப் பெரிய படை அனுப்பவேண்டிய நிர்பந்தம் ராஜேந்திர சோழனுக்கு ஏற்பட்டது.

கீழைச் சாளுக்கியத்துக்கு மேல் இருந்து கலிங்க தேசமும் ஒட்ட தேசமும் அவனுக்குத் தொந்தரவு செய்ததால் அதைத் தண்டிக்கவேண்டிய அவசியமும் ஏற்பட்டது. அவ்வளவு தொலைவு போய்விட்டதால் இன்னும் சற்று நகர்ந்து, வங்காளத்தில் புகுந்து மிகப் பெரிய கங்கை நதியையும், படகுகளையும், முகத்துவாரத்தையும் அவன் பார்த்து வியந்திருக்கிறான். யானைகள் வைத்து பாலம் கட்டி, அதன் மீது குதிரைகள் ஏற்றி மறுகரைக்குப் போயிருக் கிறான். இடைவிடாது மழை பெய்யும் அசாம் வரைக்கும் அவன் போயிருக்க வேண்டும்.

அங்கு இருந்த பெண்டிர், பண்டாரங்களை மட்டும் அல்ல... கோயில் சிலைகளையும் பெயர்த்து எடுத்து வந்திருக்கிறான். அவன் கொண்டுவந்த பல சிலைகளை என்ன காரணத்தினாலோ கங்கை கொண்ட சோழபுரத்தில் வைக்காமல், அதன் அருகே செங்கமேடு என்ற கிராமத்தில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்படுகின்றன. எந்த வழிபாடும் இல்லாமல் இருக்கின்றன!''

''ராஜேந்திர சோழனின் சொந்த வாழ்க்கையில் என்ன செய்தி இருக்கிறது?''

''அவனுக்கு மனைவியர் பலர். அதில் வீரமா தேவி என்பவள் மிக நெருக்கம். ராஜேந்திர சோழன் தன் 84-ம் வயதில் மரணமடைந்தபோது அவளும் உடன்கட்டை ஏறினாள். ராஜேந்திர சோழன் தன் மத்திம வயதில் திருவாரூரைச் சேர்ந்த பரவை என்கிற தேவரடியாரை நேசித்தான். தேவரடியார் என்று அப்போது அழைக்கப்பட்டவர்கள், தங்களை கோயிலுக்கு எனத் தீர்மானம் செய்தவர்கள்; நித்யசுமங்கலிகள். அவர்களைத் திருமணம் செய்துகொண்டால் அது ஒரு வைப்பாட்டி நிலையில்தான் இருக்கும். ஆனால், பரவையின் அறிவிலும் அழகிலும் ஈர்க்கப்பட்டு, ராஜேந்திர சோழன் அவளை அவ்விதம் நடத்தாமல், தன் தேரில் ஏற்றி திருவாரூர் முழுவதும் சுற்றி வந்தான். அவள் விரும்பியதால் செங்கல்லால் அமைந்த திருவாரூர் கோயிலைக் கருங்கல்லால் உருவாக்கி, அதன் மீது தங்கத் தகடு வேய்ந்து, அவளை முதன்முதலில் சந்தித்த இடத்தில் ஒரு கல்வெட்டு பொறித்திருக்கிறான். அவள் உயரத்துக்கு ஒரு வெண்கலக் குத்துவிளக்குச் செய்யச் சொல்லி அதைக் கருவறையில் வைத்து ஏற்றியிருக்கிறான். இன்று இருக்கும் விளக்கும் அவன் கொடுத்ததாக இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது!

இதே விதமாக ராஜேந்திர சோழன் தன்னுடைய தந்தையின் அனுக்கிக்கு... அதாவது காதல் தோழிக்கு ஒரு பள்ளிப்படை கோயில் எழுப்பியிருக்கிறான். அவளுக்கு பஞ்சவன் மாதேவி என்று பெயர். பஞ்சவன் மாதேவி பட்டமகிஷியும் அல்ல; மனைவியும் அல்ல; அனுக்கி. அதாவது, கேர்ள் ஃப்ரெண்ட்போல. ஆனால், அவள் ராஜேந்திரனால் அங்கீகரிக்கப்பட்டு, தாய் எனப் போற்றியிருக்கிறான். அந்தப் பள்ளிப்படை கோயில் இன்றளவும் நன்றாக இருக்கிறது!''

''நாட்டின் நிர்வாகம் எப்படி இருந்தது?''

''மிகச் சிறப்பாக இருந்தது. விவசாயத் தொழில்கள் மிக அற்புதமாக நடைபெற்றன. ஒரு காசுக்கு 150 வாழைப்பழம். ஒரு பொற்காசுக்கு இரண்டு பசு மாடுகள், ஓர் எருமை. ஒரு பொற்காசுக்கு ஆழாக்கு ஏலக்காய் என வியாபாரங்கள் நடந்திருக்கின்றன. பசு சல்லிசாகக் கிடைக்கும். ஆனால், ஏலக்காய் கேரளத்தில் இருந்து வரவேண்டும். அதனால் விலை அதிகம். கம்மாளர்களுக்கும் சிற்பிகளுக்கும் உலோகத் தச்சர்களுக்கும் மரத் தச்சர்களுக்கும் மிகப் பெரிய மரியாதை இருந்தது. அவர்கள் நல்லது கெட்டதுக்கு சங்கு ஊதிக்கொள்ளவும், வீட்டுக்கு இரண்டு வாசல் வைத்துக்கொள்ளவும், சுண்ணாம்பு அடித்துக்கொள்ளவும், செருப்பு அணிந்துகொள்ளவும், பல்லக்கில் ஏறவும், தோளில் துணி போத்திக்கொள்ளவும், தலைப்பாகை அணியவும், பூணூல் அணிந்துகொள்ளவும் ராஜேந்திர சோழன் உரிமை கொடுத்திருக்கிறான். அளவான வரி, அனைவருக்கும் அத்தியாவசிய வசதிகள், கரை புரண்டோடிய செல்வம்... என வளமும் நலமுமாக இருந்தது சோழ சாம்ராஜ்ஜியம்!''

''இப்போது அந்தச் செல்வங்கள் எல்லாம் எங்கே?''

''400 வருட பகைமையைத் தீர்த்துக்கொள்ள, பாண்டியர்கள் படையெடுத்து வந்து சோழர்களைத் தாக்கி ஒரு தூணும் நிற்கவொட்டாது இடித்து, கோவேறு கழுதை பூட்டி, பேய் கடுகு விதைத்து ஊரை நாசம் செய்தார்கள். பொன் பொருட்களை வாரிக்கொண்டு போனார்கள். அவை அடுத்த தலைமுறையிலேயே டெல்லியில் இருந்து வந்த இஸ்லாமிய தளபதியால் கொள்ளையடிக்கப் பட்டன. 36 யானைகள் முழுவதும் பொன், பொருட்கள் டெல்லிக்குக் கொண்டுபோகப்பட்டன. டெல்லியில் உள்ள ஆட்சியாளர்களை அடுத்த 120 வருடங்களில் ஆங்கிலேயர்கள் தாக்கி, அந்தப் பொன் பொருட்களை எடுத்துக்கொண்டு இங்கிலாந்துக்குப் போனார்கள். இங்கிலாந்தின் பல சாலைகள், கட்டடங்கள் இந்தப் பொற்காசுகளால் நிர்மாணிக்கப்பட்டவை; தமிழக செல்வத்தால் வளர்ந்தவை!''

''பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் ஏன் பகை?''

''ஓர் இனம் மற்ற இனத்தால் அழிக்கப்படாது. எப்போதுமே ஓர் இனம் இரண்டாகப் பிரிந்து தன்னைத்தானே அழித்துக்கொள்ளும். தமிழ் பேசும் பாண்டியர்களைக் கடுமையாகத் தாக்கி தமிழ் பேசும் சோழர்கள் துன்புறுத்தினார்கள். கன்னியாகுமரி வரை துரத்தினார்கள். பனங்காட்டுக்குள் வாழச் செய்தார்கள். அதே பாண்டியர்கள் பல தலைமுறைகளுக்குப் பிறகு மிக வெஞ்சினத்தோடு, சோழர்களின் பல்வேறு பெருமைகளை அழித்தார்கள். மிகச் சிறந்த தமிழர் நாகரிகம் ஒன்று 10 சதவிகிதம் மட்டும்தான் பார்க்க, கேட்கக் கிடைத்தன!

இவ்வளவு செல்வாக்கோடு வாழ்ந்த ராஜேந்திர சோழன் காஞ்சிபுரம் அருகே பிரம்மதேசம் என்ற ஊரில் இறந்துபோனான். அவன் கடைசியாகத் தரிசித்த ஒரு கோயில் இருக்கிறது. சுற்றிலும் பனைமரங்கள்; பொட்டல்காடு. ஏன் அந்தக் கோயிலுக்கு வந்து இறந்துபோனான் என்று மனம் பதறுகிறது. 'இவ்வளவு செல்வாக்கோடு வாழ்ந்துவிட்டு, அங்கே அந்தச் சிறிய கிராமத்தில் இறந்துபோனாயே... ஏனப்பா?’ என்று அலறத் தோன்றுகிறது!''

ஆண்கள் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு

தொல்காப்பிய காலத்திலிருந்தே பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது நான்கே நான்கு குணங்களைத் தான். அவை (1) தன்மை, (2) நிறை, 3) ஓர்ப்பு, (4) கடைபிடி. அதென்ன கேள்விப் பட்டதே இல்லையே என்கிறீர்களா?

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு..பெண்களின் குணம் என்று சொல்லப்படுவது போல, இதற்கு இணையாக ஆடவர் குணநலன்கள்தான் இவை. பெரும்பாலான பெண்கள் ஆண் என்றாலே தைரியமானவன், பொறுப்பானவன், தன்னை பூ மாதிரி பார்த்துக் கொள்ளப் போகிறவன், எதற்கும் கலங்காத அஞ்சா நெஞ்சம் படைத்தவன், அவளிடம் ஆசையாய் பேசி, காதல் மழையில் நனைத்து களிப்புற வைக்கப் போகிறவன், தன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் திரும்பிக்கூட பார்க்க மனம் வராதவன் என்று எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுடன் உள்ளனர்.

ஆனால் மிகச் சில ஆண்களே மேலே சொன்ன மாதிரி எல்லாம் இருக்கிறார்கள்.மீதமுள்ள சாமான்ய ஆண்கள் எல்லாம் யதார்த்தத்தில் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

* பொறுப்பைத் தட்டிக்கழிப்பதில் கில்லாடியாய்,பிரச்னை என்றதும் இருந்த இடமே தெரியாமல் மாயமாய் மறைந்து போகும் கோழைகளாய், ஆபத்து நேரத்தில்கூட அருகில் இருக்கும் பெண்ணைத் தள்ளிவிட்டு தான் முந்திக்கொண்டு தப்பிக்க முயல்வது, டைனோஸர் காலத்து பிற்போக்குவாதிகளாய். துணைவியிடம் அன்பாய் ஒரு வார்த்தை கூட பேசத் தெரியாத சிடுமூஞ்சிகளாக, கணவனிடம் ஆசையாகப் பேசலாம் என்று இவள் காலையிலிருந்து காத்துக் கொண்டிருக்க, வந்ததும் வராததுமாய் தொலைக்காட்சியே கதி என்று கிடந்து விட்டு, அதிகாரம் செய்ய மட்டும் வாயை திறப்பவர்களாக, பக்கத்தில் மனைவி இருக்கும்போதே, போகிறவள் வருகிறவள் என்று எல்லாப் பெண்களையும், ஜொள்ளு விடும் சபலகாரர்களாக உள்ளனர்.

ஏன் ஆண்கள் இப்படி இருக்கிறார்கள்?

பெண்கள் ஆசைப்படுவது போல ஆசையாய், ஹாஸ்யமாய், பாசமாய், கம்பீரமாய், குறும்பாய், துணிச்சலாய் ஆண்கள் ஏன் அதிகம் பேர் இருப்பதில்லை? என்று நீங்கள் பார்க்கும் ஆண்களை எல்லாம் உங்கள் மனதில் கற்பனை செய்து வைத்துள்ள ஆதர்ஷ ஆண்மகனோடு ஒப்பிட்டு, `சீ, இவன் தேறமாட்டான்” என்று மட்டம் தட்டி, மீண்டும் மீண்டும் மனம் நொந்து போகாதீர்கள்.

A man is not born, he is made. பிறக்கும் போதே எவனும் பேராண்மை மிக்கவனாய் இருப்பதில்லை. அவனை இப்படி ஓர் ஆண்மகனாய் மாற்றுவது தான் பெண்களின் மிகப்பெரிய சமூகப்பணி. தாயாய், தமக்கையாய், மனைவியாய், மகளாய், மருமகளாய், இருந்து பெண்கள் எல்லோரும் தொடர்ந்து பதப்படுத்திக் கொண்டே இருந்தால் ஒழிய ஆதர்ஷ ஆண் உருவாவதே இல்லை. நீங்கள் எந்த பேராண்மைமிக்கமனிதனை வேண்டுமானாலும் உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்களேன், அவர்கள் எல்லாம் அத்தனை பேராண்மையைப் பெறக் காரணம், அவர்களை அப்படி பதப்படுத்திய பெண்களே.

பெரும்பாலான ஆண்கள் எல்லோருமே சாமானியர்கள்தான். அதனால் தான் அவர்களுக்கு பெண் ஒரு முக்கியமான ஈர்ப்பு விசை ஆகிறாள். இதுதான் யதார்த்தம் என்பதால், ஆண்களை ஹேண்டில் செய்ய விரும்பும் பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம், acceptance. அதாவது, நிபந்தனையற்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை. ஆண்களை உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ளப் பழகினால் தான், ஆண்களை ஹேண்டில் செய்யும் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் நகர முடியும்.

தீபாவளி



உண்மையான தமிழன்னா தீபாவளியைக் கொண்டாடணும்.
தீபாவளி தமிழர் திருநாள் தான்.

தமிழகத்தில் கொண்டாடப்பட்ட கார்த்திகை தீப வழிபாடே தீபாவளியாக மாற்றம் பெற்றது என்ற கருத்து உள்ளது. மதுரையை நாயக்கர்கள் ஆண்டபோது தற்போதைய தீபாவளியின் வடிவம் உருவானதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆயினும் அதற்கு முன்னரே தமிழகத்தில் தீபாவளியின் வடிவம் இருந்தமைக்குச் சான்றுகள் உள்ளன.
பழமையான சங்க இலக்கியங்களுள் ஒன்றான அகநானூறில், அமாவாசை நாளில் விளக்கேற்றி வழிபடும் வழக்கம் குறித்து இடம்பெற்றுள்ளது. அக்காலத்தில் இவ்வழிபாட்டுக்கு ‘தீபாவளி’ என்ற பெயர் இல்லையெனினும், அதையொத்த பண்டிகை கொண்டாடப்பட்டிருப்பது இப்பாடலில் உறுதியாகிறது.

“மழைகால் நீங்கிய மகா விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த
அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகத்தில் அம்ம!”
                 
                                        -(அகநானூறு – 141ம் பாடல்) என்று நக்கீரர் பாடுகிறார்.

‘அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்’ என்பது அமாவாசை நாளையே குறிக்கிறது. இந்தச் செய்யுளில் வரும் பழவிறல் மூதூர் திருவண்ணாமலையைக் குறிப்பதாகவும் கூறுவர். திருவண்ணாமலை தீப வழிபாட்டுக்கு சிறப்புப் பெற்றது. இங்கு ஈசன் சோதி வடிவமாகத் தரிசனம் தருவதாக ஐதீகம்.

கார்த்திகை தீபம் நிகழும் கார்த்திகை மாத பெüர்ணமிக்கும், தீபாவளிப் பண்டிகை வரும் ஐப்பசி மாத அமாவாசைக்கும் இடையே 15 நாட்கள் மட்டுமே வித்யாசம் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்.

இன்னும் சில தகவல்

எழுபது கோடி வருசத்துக்கு முன்னாடியாகட்டும், இருபத்தியாறு லட்சம் வருசத்துக்கு முன்னாடியாகட்டும், இந்த பூமி ஐஸ்கட்டியா ஒறஞ்சு போனப்ப எப்படி மீண்டுச்சுனு படிச்ச பேரப்புள்ளைக எல்லாத்துக்கும் தெரியும்ல?

அதாவது, எரிமலைக மூலமா பூமிக்கு கீழ இருக்கிற கரியமில வாயுவ நெறைய வெளிய அனுப்புச்சு. கரியமில வாயு அதிகமா இருந்தா பூமிக்கு சூடு கெடைக்கும். குளுரு கொறஞ்சு உசுருகள் தன்ன பெருக்கிக்க வசதியா எளஞ்சூடு கெடைக்கிறதுக்காக இயற்கையே அப்படி செஞ்சுக்குது. (நெறைய கரி வாயு இருக்குறதுனாலதேன் வியாழன் கெரகம் கொழக்கொழனு இருக்கு. ரொம்ப கொஞ்சமா கரி வாயு இருக்கிறதுனாலதேன் செவ்வா கெரகம் ஒறைஞ்சு போயி கெடக்கு.)

அத மாதிரிதேன் ஐப்பசி, கார்த்திகையில மழைக விடாம பேஞ்சு பூமிய ரொம்பத்தேன் குளுர வச்சுரும். அதுல இருந்து மீளத்தேன் “சொக்கப் பனை” கொளுத்தி புகையால கரி வாயுவ அதிகப் படுத்துற வழக்கம் வந்துச்சு. அதுவே பின்னாடி பட்டாசுகளெல்லாம் கண்டு புடுச்சதுக்கப்புறம், எரிமலை மாதிரியே புஸ்வானம் பொங்குறதும், வெடிக்கிற வெடியுமா வெடிச்சு குளுரக் கொறைச்சாக. (இல்லாட்டி வெவசாயம் பூராம் வெள்ளத்துல அழிஞ்சு போகும். சீவராசிக பெருகாம போயிடும்ல)

சித்தன் ரகசியம் (8)


“சித்தம் போக்கு சிவம் போக்கு” என்பதற்கு நிறைய சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம். அந்த சம்பவங்களை நுட்பமாய் உணர்ந்தால், ஒவ்வொரு சம்பவங்களுக்குள்ளும் பேருண்மை ஒளிந்திருப்பதை உணரலாம்.

பெரும்பாலும், சித்தர்கள் தங்களுக்கென எதுவும் வைத்திருக்கமாட்டார்கள். உணவு கூட பிட்சை தான். மறுவேளைக்கு கூட சேமித்து வைக்கமாட்டார்கள்.
பிச்சைக்கும், பிட்சைக்கும் கூட நிறைய வித்தியாசம் உள்ளது. இதை முதலில் தெளிவாக புரிந்துக்கொள்ளவேண்டும்.

"பிச்சை" என்பது எதைக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வது என்பதாகும். ஆனால், "பிட்சை"யாக அரிசி மட்டுமே கொடுக்க முடியும். விதிவசத்தால் சொத்து சுகம் இழந்து வாழ வழியின்றி எடுப்பது “பிச்சை”. சுகமாக வாழ வழியிருந்தும், சொத்து சுகங்களை உதறிவிட்டு துறவு கோலம் பூண்டு எடுப்பது “பிட்சை”. பிச்சை இடுவது என்பது கருணை, ஆனால் பிட்சை கடமையாகும்.

பிச்சை கேட்டு கொடுக்காமல் போனால் புண்ணியம் மட்டும் சேராமல் போகும், பாவம் ஒன்றும் இல்லை, ஆனால் பிட்சை இடாது போனால், பாவம் பின்தொடரும். ஏனென்றால், பிட்சை வாங்குபவர், நம்மிடம் இருந்து அரிசியை மட்டும் வாங்குவதில்லை, கூடவே சேர்ந்து நமது பாவத்தையும் பெற்று செல்கிறார் என்பார்கள். இப்படி பிச்சைக்கும், பிட்சைக்கும் உள்ள வேற்றுமைகளை புரிந்துகொள்ளவேண்டும்.

முந்தைய பதிவில் சொன்ன “பிராந்தர்” என்ற சித்தரும் பிட்சை கேட்டு வரும் அரிசியை கொண்டு அடுப்பெரித்து சமைப்பார். அதில் தான் ஒரு கவளம் சாப்பிட்டது போக மீதி உள்ளதை மற்ற ஜீவராசிகளுக்கு போடுவார். பின்பு பானையை கவிழ்த்து வைத்துவிடுவார்.
அதாவது, அவர் உறங்க செல்லும் பொழுது அவரிடம் தன் உடம்பு ஒன்றை தவிர வேறு உடுப்பு எதுவும் இருக்காது.. இருக்கவும் கூடாது..

இப்படி அவர் நடந்து கொள்வதற்குப் பின்னாலே நுட்பமான உண்மைகள் உள்ளன... அவை..?

சித்தன் ரகசியம் (7)

சராசரி மனிதர்களுக்கு, எப்போதுமே உடலுக்கும் மனதுக்கும் ஒரு தொடர்பு இருந்து கொண்டே தான் இருந்திருகிறது. உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் போது “எல்லாம் சாதித்துவிடலாம்” என்ற எண்ணமும், உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டால் மனம் சோர்ந்து குன்றிப்போய்விடுவதும்.. இதனை கொண்டே அந்த மனதிற்கும், உடலுக்கும் உள்ள தொடர்பை உணரலாம். இதனால் தான், ஆரோக்கியமே பெரிய செல்வம் என்றனர் சான்றோர்கள். சித்த புருஷர்கள், தன் உடம்பை பேணிக்காக்க இருவித முறைகளில் அணுகினர்.

காயகல்பம், எனப்படும் கல்பமூலிகைகளை கொண்டு நோய் நொடிகள், உடல் உபாதைகளை விடுப்பது ஒரு விதம்.உடலில் எப்பேர்ப்பட்ட உபாதைகள் ஏற்பட்டாலும், அதை கண்டுக்கொள்ளாமல் விட்டு விடுவது இன்னொரு விதம்.

இந்த இரண்டு விதமான போக்கிற்கும் சான்றுகள் கூட உண்டு...

“அல்லமர்” என்றொரு சித்தர், காயகல்ப மூலிகையால் தன் உடல் மொத்தம் வென்றுவிட்டார். இவரை ஒருவர், கத்தியால் குத்தினார், ஆனால் குத்து விழுந்த இடம், அதிகபட்சம் மூன்று நிமிடங்களில் குணமாகிவிட்டன. அவ்வளவு வேகமாக உடல் குணமடைந்ததை அனைவரும் ஒரு மாயை போல தான் பார்த்தார்கள்.

இவருக்கு நேர் எதிரானவர், “பிராந்தர்” என்கிற சித்தர். பிராந்தரை யானைக்கால் நோய் ஆட்கொண்டிருந்தது. ஆனால், அதை போக்கிக்கொள்ள இவர் மருந்தேதும் எடுக்கவில்லை மாறாக, அந்த வியாதியின் வலியையும் வேதனையையும் அனுபவிக்கவே விரும்பினார்.

பிராந்தர் முன், மயானகாளியே பிரசன்னமாகி, யானைக்கால் வியாதியை குணப்படுத்த முன் வந்த போதும் தடுத்துவிட்டார். உன் அருளால், குணமானது என்பதை விட, பிராந்தன் அதை சகித்துக்கொண்டான் என்பதும், அனுபவித்து என் கர்மக்கணக்கை தீர்த்தேன் என்பதும் தான் எனக்கு உகந்தது என்றார்.

சித்தர்களின், இப்படிப்பட்ட போக்கைதான், “சித்தம் போக்கு சிவன் போக்கு” என்றார்கள்.

சித்தன் ரகசியம் (6)


இந்த வயித்தை எப்படி அப்படி வச்சிகிறது? என்று கேட்கும் போது, “தினசரி காலைல கோயிலுக்கு போ, அதுவும் பெருமாள் கோயிலுக்கு போ... தீர்த்தம், துளசி, சடாரி, பொங்கல்,சுண்டல்னு அஞ்சும் அங்க தான் கிடைக்கும். தாயார் சன்னதில மஞ்சள், குங்குமம் கொடுப்பாங்க. அதுவே உன்னை ஆரோக்கியமா வச்சுக்க போதுமானது என்றாராம்! எப்படி என்ற கேள்விக்கு அவரின் பதில்...

பரிமள சித்தர் சொன்ன பெருமாள் கோவில் பிரசாதத்தில் வயிற்றுக்கு சுகம் தரும் விஷயங்கள் மறைமுகமாக உள்ளன.

தீர்த்தத்தில் கலந்திருக்கும், பச்சை கற்பூரமும், ஏலக்காயும் வயிற்றில் உள்ள கிருமிகளை கொள்ளும் தன்மை உண்டு.

வெண்பொங்கலில் இருக்கும் நெய் - உடலுக்கு தேவையான கொழுப்பையும், மிளகும் சீரகமும் உடலுக்கு மிதமான குளிர்ச்சியை தந்து செரிமானத்தையும் தந்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும். சீராக அகத்தை வைத்திருக்க உதவும் என்பதால் தான் "சீரகம்" என்ற பெயர் வந்தது போலும்.

துளசி ஒரு அற்புத மூலிகை....இது சற்று உஷ்ணத்தைக் குணமாக கொண்டது. ஆனாலும், இந்த உஷ்ணம் தான் கபம் கட்டாமலும், ஜலதோஷம் மற்றும் சீதளம் தொடர்பாய் வரும் நோய் நொடிகளில் இருந்தும் காப்பாற்றும்.

மஞ்சளும், குங்குமமும் கூட சிறந்த ஆன்டிபயோடிக் தான், மஞ்சளின் குணமும், அதன் நெடியுமே நம் உடலில் மேல் இருக்கும் கிருமிகளை அழிக்க வல்லது.

இது போக கோயிலில் தரப்படும் சுண்டல் என்ற புரதச்சத்தும் உடம்புக்கு தேவையான இதர முக்கிய சத்துக்களையும் தன்னகத்தே உடையது.
சுண்டல் எனும் போது, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பயறு வகைகள்.. இதில், கொண்டைக்கடலை, பட்டாணி, கடலைப்பருப்பு என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோளின் ஆதிபத்தியம் உடையவை.

இப்படி, பிரசாதத்திற்கு பின்னாலே சுவை மற்றும், பசியாற்றும் தன்மை கடந்து ஒரு ஆரோக்கியமான விஷயங்கள் பல புதைந்துகிடக்கின்றன.
இப்படி ஆரோக்கிய உணவு உண்ணுபவர்களின் வயிறு சுத்தமாக இருக்கும், அளவாகவும் மிகச்சரியான வேளைக்கும் சாப்பிடுவதால் வாயு தோன்றாது. அமிலம், உப்பு, சர்க்கரை எல்லாமே தேவைக்கு மிகாது. இதனால் வியர்வை நாறாது. மலமும் துர்குணம் கொள்ளாது.

தினம் கோயிலுக்கு சென்று சாமியார்தனமாய் வாழ்பவர்களுக்கே இப்படி எனும்போது...!

உப்பு, புளி , காரம் சேர்க்காமல் இயற்கை உணவு மட்டுமே உட்கொள்ளும் பரிமள சித்தர் மேனி எப்படி துர்நாற்றம் என்கிற ஒன்றை சந்திக்க முடியும்...?

சித்தன் ரகசியம் (5)



பரிமளசாமி என்று ஒரு சித்தர், தென் ஆற்காடு மாவட்டத்தில் சுற்றித் திரிந்தவர். இவரது பின்புலம் யாருக்கும் தெரியாது. பொதுவாக சித்தர்களின் பின்புலங்கள் யாருக்கும் தெரிவதே இல்லை. நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கத் தேவையில்லை என்று இதை வைத்துத்தான் சொன்னார்களோ என்னவோ?

பதினெட்டு சித்தர்களின் பெயர்கள் கூட பெற்றோர் சூட்டிய பெயர்கள் அல்ல! எல்லாமே காரண பெயர்கள் தான்.குதம்பைச்சித்தர், தேரையர், கருவூரார், கொங்கணர், சிவவாக்கியர் என்று எல்லாமே காரணப் பெயர்கள் தான். பரிமளசாமி என்கிற பெயர் கூட அவர் அருகில் சென்றால் ஒரு வித சுகந்த வாசத்தை நாம் உணரலாம் என்கிற அளவில், அதுவும் காரணப் பெயராகவே அமைந்துவிட்டது.

அவருக்கு எப்படி அது சாத்தியமாயிற்று என்பதும் ஒரு ஆச்சரியமூட்டும் விஷயமாகும். இத்தனைக்கும் அவர் குளிக்கவே மாட்டார். எப்பொழுதாவது மழை பொழியும் பொழுது அதில் நன்றாக நனைவார். அதுதான் அவர் வரையில் குளியல். அப்படிப்பட்டவர் உடலில் எப்படி நறுமணம்..? இப்படித்தான் கேள்விகள் எழும்.. என்ன மாயம் என்று...?

பரிமளசாமி சித்தரிடமே, ஒரு அன்பர் அந்த கேள்வியை கேட்கவும் செய்தார். “சாமி பார்க்க அழுக்கா இருக்கீங்க ஆனா உங்க உடம்புல மட்டும் அப்படி ஒரு வாசம் ஆள தூக்குது... எப்படி சாமி?

உடனே சித்தர், வாசனை, துர்நாற்றம் இரண்டும் என்ன? என்று திருப்பி கேட்டாராம்.இதென்ன சாமி கேள்வி, “துர்நாற்றம்னா யாருக்கும் பிடிக்காம போகும், வாசனை எல்லோருக்கும் பிடிக்கும்.”

பரிமளசாமி சிரித்துவிட்டார், அப்படியே துர்நாற்றமோ, வாசனையோ ஒரு “குணம்கற” ஒரு வார்த்தையில சொல்ல உனக்கு தெரியலை என்றவர் –
“குணம்கறது ஒரு உணர்வு சார்ந்தது மட்டுமல்ல - உடல் சார்ந்ததும் கூட..! உணர்வு மணக்குனும்னா புத்தி தெளிவாகனும்.. உடம்பு மணக்குனும்னா வயிறு தெளிவாகனும்.வயிறு உன் வரையில குப்பை தொட்டி போல இருந்தா வியர்வை, மூத்திரம், மலம்னு எல்லாமே நாறும். அதே வயிறு பால் பாத்திரமா மாறிட்டா எல்லாமே மணக்கும்!”

இந்த வயித்தை எப்படி அப்படி வச்சிகிறது? என்று கேட்கும் போது, “தினசரி காலைல கோயிலுக்கு போ, அதுவும் பெருமாள் கோயிலுக்கு போ... தீர்த்தம், துளசி, சடாரி, பொங்கல்,சுண்டல்னு அஞ்சும் அங்க தான் கிடைக்கும். தாயார் சன்னதில மஞ்சள், குங்குமம் கொடுப்பாங்க. அதுவே உன்னை ஆரோக்கியமா வச்சுக்க போதுமானது என்றாராம்! எப்படி என்ற கேள்விக்கு அவரின் பதில்..

சித்தன் ரகசியம் (4)





மனதை அடக்க அடக்க அதற்கு எப்படிப்பட்ட சக்தியெல்லாம் வரும் என்பதை, மனதை அடக்கிப் பார்க்காமல் உணரவே முடியாது. இந்த உலகில் ஆயிரக்கணக்கான மொழிகளும், அதில் இலட்சோபலட்சம் வார்த்தைகளும் உள்ளன. இவற்றை பயன்படுத்தியே மனித சமுதாயம் மனதில் உள்ளதை பேசியும் எழுதியும் வருகின்றனர்.

இத்தனை வார்த்தைகள் இருந்தும், சில அனுபவங்களையும், அதன் உணர்வு நிலைகளையும் மிகச் சரியாக நம்மால் விவரிக்க முடிவதில்லை. “அதைப்போல், இதைப்போல்” என்று நமக்கு தெரிந்த உதாரணங்களை கொண்டு புரிய வைக்க முயற்சிக்கிறோம். ஆகாயத்தில் பறந்தது போல் இருந்தது, தேன் போல தித்தித்தது என்றே உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறோம்.காரணம்....சில உணர்வு நிலைகளை விளக்க வார்த்தைகளே இல்லை. அதிலும், சித்த யோகத்தில் அதன் அனுபவங்களை விவரிப்பது என்பது ஆகாத காரியம். ஒரு குறிப்பிட்ட யோகசனமோ, இல்லை மூலிகையோ அல்லது சித்த புருஷர் ஒருவரின் பார்வைத் தீண்டலோ நம்முள் ஏற்படுத்தும் தாக்கத்தை நாம் விவரிக்கவே முடியாது.

மனதைத் துளியும் எண்ணங்களின்றி வெறுமைக்கு ஆளாக்க வேண்டும். சிலருக்கு தலையில் அடிபட்டு மூளைச் செல்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது விபத்தில் கோமா நிலைக்கு சென்றவர்கள், எந்தவித எண்ணங்களும் இன்றி இருப்பார்கள்.
இது சித்த யோக நிலையல்ல..! மனதின் மீது பிரக்ஞையோடு ஆதிக்கம் செலுத்தி எண்ணங்களை அப்படியே அடக்கியும், கட்டிப்போட்டும் எண்ணங்கள் அற்று இருப்பதே சித்த யோக நிலை. இப்படி ஒரு நிலையின் போது உடலில் நிலவும் மின்சாரகதியில் இருந்து உடம்பை சுற்றி தவழும் ஆரா அலை வெளிப்பாடு வரை சகலத்திலும் மாற்றம் ஏற்படும். ரத்த ஓட்டத்திலும், இதய துடிப்பிலும் கூட மாறுபட்ட தன்மை இருக்கும்.

இப்படி ஒரு நிலையில் தான் ஒரு பூ பூக்கும் ஓசையில் இருந்து குண்டூசி விழும் சப்தம் வரை அனைத்தையும் துல்லியமாக கேட்க முடியும். இங்கே தான் நம் எதிரில் இருப்பவர்களின் மனதில் உள்ள எண்ண ஓட்டங்களையும், அவர்கள் கூறாமலே கேட்கும் ஆற்றல் நமக்கு ஆரம்பமாகிறது.

சித்தன் ரகசியம் (3)


ஒருவரிடம் சித்தம் விழித்துக் கொள்ள ஏராளமான தாக்கங்கள் தேவைப்படுகின்றன. எவ்வளவு தாக்கங்கள் ஏற்பட்ட போதிலும் நம்மில் பலர் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வியை கேட்டுக் கொள்வதேயில்லை.
பசிக்கிறது சாப்பிடுகிறோம், திரும்பவும் பசிக்கிறது – திரும்பவும் சாப்பிடுகிறோம். தொடர்ந்து விடாமல் பசிக்கிறது. பசிக்கும் போதெல்லாம் நாமெல்லோருமே சாப்பிடத்தான் செய்கிறோம் – சொல்லப்போனால் சாப்பிடத்தான் வாழ்க்கை என்றும் கருதுகின்றோம்.
ஏன் பசிக்கிறது? இந்த பசியை வெல்ல முடியாதா? அதற்கு என்ன வழி என்றெல்லாம் நாம் கேட்டுக் கொள்வதேயில்லை. சித்தம் விழித்துக் கொண்டவர்களுக்கோ இதுதான் பிரதான கேள்வி.
அன்றாடம் உண்ணவும் உறங்கவும் தானா வாழ்க்கை? இல்லை...அளப்பரிய ஆற்றல் கொண்டது மனித மனம். அதனால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.
ஆனால், நம் மனதை நாம் அற்ப சோகங்கள், மகிழ்ச்சிகளில் மட்டுமே வைத்திருக்கிறோம். இவைகளுக்கு நடுவே முடிந்த மட்டும் கனவு காண்கிறோம். இவைகளை கடந்து மனதை இயக்க வேண்டும், அதற்கு மனமானது நமக்கு புரியவேண்டும். எனவே, மனம் அடக்கி மனதை புரிந்துகொள்ள முயன்றனர்.
அது பாய்ந்து பாய்ந்து ஓட முற்பட்ட போதெல்லாம், கட்டுப்பாடு என்னும் உறுதியான சங்கிலியால் இழுத்துக் கட்டினர். மனதை அடக்க அடக்க அதன் ஆற்றலும் அதிகரித்தது.
புரியாததெல்லாம் புரிய தொடங்கியது.. என்ன அது?