Monday, September 12, 2011

தமிழன் - வரலாறு - வரலாற்றை அறியாதவன் இனம் நிச்சயம் அழியும்

ஒரு சமூக போராட்டமோ ஒரு இனத்தின் போராட்டமோ மழுங்கடிக்கப்படுவது அவ்வினத்தினரிடையே காணப்படும் அறியாமையால் . வரலாறு இதற்க்கான விடைகளை படைக்கிறது . தனது  சமூகத்தின்/இனத்தின்  வரலாற்றை அறியாதவன் சமூகம் நிச்சயம் சிதையும் . 

இதில் எந்த போராட்டம் சரி என்பதோ அல்லது எதையுமோ ஆதரித்து எழுதவில்லை . இருந்த வரலாற்றை ஆவணங்களுடன் சமர்ப்பிக்கிறேன் .

வீரம் விளைந்த மண்ணின் மன்னன் பண்டார வன்னியன் பற்றி விரிவாக அறிந்தால் தமிழர் பூமி , அவர்களுக்கு தனியொரு உரிமைகளுடனான இடம் இலங்கையில் இருந்தமைக்கான ஆவணங்கள்  கிடைக்கும் .


மன்னன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவில் இருந்து வற்றாப்பளை அம்மன் கோவில் வரை உள்ள 2000 சதுர மைல் நிலத்தை ஆட்சி செய்து வந்தான் . தனது சகோதரர்களை முக்கிய பதவிகளில் வைத்து ஆட்சி செய்து வந்தான் . தனது தம்பி கைலாய வன்னியனை அமைச்சராகவும் தனது இறுதி சகோதரன் பெரிய மன்னரை தளபதியாகவும் வைத்திருந்தான். அதே நேரம் காக்கை வன்னியன் எனும் மன்னன் வன்னியின் இன்னொரு நிலப்பரப்பை ஆண்டு வந்தான் .

ஒல்லாந்தர்  எமது நாட்டை கைப்பற்ற வந்த போதே தமிழர் ஆட்சி இங்கு இவ்வாறு நிலவியது என்பதை அவர்களின் சிலர் எழுதிய குறிப்பு  ஏடுகளில் காணலாம் . முக்கியமாக மேலைத்தேயர்கள் இலங்கையை கைப்பற்ற காரணம் கடல் வளங்களும் , வணிகமும் , மண் வளங்களையும் பார்த்து மோகம் கொண்டதே . முக்கியமாக இயற்க்கை வளம் கொண்ட திருகோணமலை துறைமுகம்(ஆசியக்கண்டத்தின் திறவுகோல் ) பிரச்சனைகளின்  அடிப்படை எனலாம் . இவற்றுள் மாதோட்டம் துறைமுகமும் ஒன்று .

புவியியலாளர் தொலமி (உலக  வரைபடத்தை முதன் முதலாக வரைந்தவர் ) இலங்கையில் தமிழர் பூமியை தனியாக காட்டி  தமிழர் என்ற ஒரு இனம் அப்போது அந்த பிரதேசத்தில் இருந்ததாக் குறிப்பிட்டு உள்ளார் . வேறு எந்த இனமுமோ இருந்ததமைக்கான சான்று  இல்லை . 



இது இவ்வாறு இருக்க மற்றைய பேரரசுகள் பல திருகோணமலைக்கு  ஆக  போரிட்டு மடிந்து போயின . கண்டிய மன்னனுக்கும் ஆங்கிலேயருக்கும்  இடையில்  சண்டை நடந்தது . அந்த நேரத்தில் மாபெரும் மன்னனாக இருந்த ஆங்கிலேயன் ராபர்ட் நொக்ஸ் கண்டிய மன்னனால் மூதூரில் (தற்ப்போது ) வைத்து சிறைப்பிடிக்கப்பட்டான் . பல வருடங்கள் சிறையில் கழித்த ராபர்ட் நொக்ஸ் ஒருவாறு சிறையில் இருந்து தப்பி அனுராதபுரப்பக்கமாக ஓடினான் . அனுராதபுரத்தை அடைந்தவுடன்  அங்குள்ள  மக்களையும்   ஆட்ச்சியையும் பார்த்து வியப்படைந்தான் . ஆட்சி  செய்த மன்னன் கைலாய வன்னியன் .  

மாவீரன் குலசேகரம் வைரமுத்து  பண்டார வன்னியனுக்கு நடந்தது என்ன ? 


கண்டிய அரசனுக்கு  கீழ்ப்படியாது  ஆங்கிலேயருக்கு திரை வரி செலுத்தாது ஆட்சி செலுத்தி   வந்தவன் தான் மாவீரன் பண்டாரவன்னியன் . வழமை போல தமிழன் இடம் ஊறியுள்ள துரோகத்தன்மையை காட்டிய வரலாறு . வீரபாண்டிய  கட்டபொம்மன் போல ஒரு வரலாறு இங்கும் உண்டு . 

பண்டாரவன்னியனுக்கு சகோதர்கள் ( கைலாய வன்னியன் , பெரிய மைனர் ) இருக்க சகோதரி நளாயினியும் இருந்தாள். நளாயினி தமது அவை புலவர் மீது காதல் கொண்டிருந்தாள் . மன்னன் காக்கை வன்னியன் ( இன்னொரு நிலப்பகுதி மன்னன் ) நளாயினி மீது காதல் கொண்டு எவளவோ கடிதங்களை பண்டாரவன்னியனுக்கு அனுப்பியிருந்தான் . பண்டாரவன்னியன் அதற்க்கு ஒன்றும் கூறவில்லை . இவ்வாறிருக்க புலவரும் நளாயினியும் காதல் கொண்டுள்ளதை கண்ட காக்கை வன்னியன் புலவருடன் போரிட்டான் . புலவர் மன்னனை வாளால் வென்று திருப்பி அனுப்பினான் . புலவனும் அரச குலத்தில் வந்ததை உணர்ந்த மன்னன் தனது சகோதரி காதலுக்கு சம்மதித்தான் .

இதை  மனதில் இருந்த்திக்கொண்டு இருந்த காக்கை வன்னியன் வெள்ளையர்கள் பண்டாரவன்னியன் மீது படை எடுத்து தோல்வி அடைவதை   உணர்ந்தான் . வெள்ளையர்களுடன்  சேர்ந்து சதி செய்து மன்னனை கொல்ல திட்டமிட்டான் . வழமை போல பாசாங்கு செய்து மன்னனிடம் மன்னிப்பு கேட்டு  தருணம் பார்த்து  ஆங்கிலேய படைகளிடம் சிக்க வைத்தான் 

ஒருவனுக்கு அவனுக்கு பிடித்தவர்கள் உறவினர்கள் யார் வேண்டுமென்றாலும் சிலை வைக்கலாம் ஆனால் எதிரியாலேயே வைக்கப்பட்ட சிலை பண்டாரவன்னியன் சிலை . 

பலமுறை படை எடுத்தும்  வெல்லப்படமுடியாத அவனை நிறைவில் ஆங்கிலேய தளபதி  ஆனையிறவு திருகோணமலை என மும்முனையிலும் இருந்து படை எடுத்து வந்து வென்றனர். இவ்வாறு வெல்லப்பட்ட அவனுக்கு ஆங்கிலேய தளபதியலேயே சிலை வைக்கப்பட்டது . 


1803/10/31 காலப் பகுதியில் அப்போது ஒட்டுசுட்டான் பகுதியாகவிருந்த  தற்போதைய கற்சிலைமடுப்பகுதியில் ஆங்கிலேயப் படைத்தளபதி கப்டன் "றிபேக்"என்பவனால் தோற்கடித்து கொலை செய்யப்பட்டார்.

இப்பொழுதும் கூட பண்டாரவன்னியனுக்காக அவரை கொலை செய்த ஆங்கிலேயராலேயே  வைக்கப்பட்ட நினைவு கல்  உள்ளது . சிலர் தற்ப்போது உடைத்து விட்டனர் . இலங்கை அரசே பண்டாரவன்னியனை தேசிய  வீரனாக அறிவித்துள்ள் நிலையில் சிலர்  செய்துள்ள வேலை ஆத்திரமூட்டுகிறது .


ராபர் நொக்ஸ்  குறிப்பேட்டில் தான் வடக்காக  தப்பிச்சென்ற போது வயல்வெளிகளையும் எருதுகள் உழுவதையும் அங்குள்ள மக்கள் சின்ஹல மொழியை பேசவில்லை என்றும் அவர்களுக்கு சின்ஹல மொழியே தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் . 

மேலும் அங்கு கயிலாய வன்னியன் ஆட்ச்சிசெய்த நாட்டை கயிலாய வன்னியன் நாடு என்றும் அவன் யாழ்ப்பாணத்தின் தெற்க்கு மற்றும் வன்னியின் கிழக்குப்பகுதியையும் ஆண்டு வந்ததாக அவரது  குறிப்பில் குறிப்பிட்டுள்ளார் .  
 
இதிலிருந்து காலம் காலமாக தமிழர் வாழ்ந்த பூமி. தமிழர் நாடு எதுவென தெளிவாக காணக்கூடியதாக  உள்ளது . இல்லாத ஒன்றை எவனும் கேட்கப்போவதில்லை .  

No comments:

Post a Comment