Monday, September 12, 2011

அர்த்தமுள்ள இந்துமதம் தொடர் 4 - காரணங்கள்


அர்த்தமுள்ள இந்துமதம் எனும் கண்ணதாசன் தலைப்பில் எனது பார்வையை செலுத்தி வருகிறேன் . இந்து மதம் அடிப்படையிலேயே வாழ்க்கையை நல்வழிப்படுத்தும், அனைவருக்கும்  பொதுவான ஆதி மதம் என்பது என்னுடைய கருத்து . சரியான பாதையில் வழி நடத்தி செல்ல இருந்த இந்து சமயம் சாதிகள் , சரியாக விளங்கி கொள்ளாமை போன்றவற்றால் பிழையாக செல்கிறது .

எனது பழைய பதிவுகள் ஒரு தொடராக - மூன்றாம்  பகுதி    அதில் முதல் இரண்டு பகுதிகளுக்கு லிங்க் உள்ளது . தொடரை வெற்றியாக்கும் உங்களுக்கு நன்றிகள் ...
=========================================================================
இந்து சமயத்தின் ஒவ்வொரு செயல்ப்பாட்டுக்கும் காரணங்கள்  உண்டு . சிலவை மிகைப்படுத்தப்பட்டவை . காரணம் பல ஆயிரம் வருடங்களுக்கு முதல் தோன்றிய சமயம் வெறும் வாய் வழியாகவே பரிமாறப்பட்டு வருகிறது . வாய் வழியாக வரும் போது திரிபுபடுத்தப்படுவது இயல்பு .

பாம்பை கொன்றால் பிழையா ? பாம்பு தெய்வமா ? பாம்புக்கு எதுக்கு முட்டையும் பாலும் அதை ஏழை குழந்தைகளுக்கு கொடுக்கலாமே ? பாம்பு கனவு ?என கிண்டல் அடிப்பதும் உண்டு .

முக்கியமாக பாம்பு கனவுகள் 
1 > ஒரு பாம்பு உங்கள் கனவில் அடிக்கடி வந்தால் என்ன என்பதை அறிவியல் அழகாக விளக்குகிறது . சாதாரண மனோதத்துவ நிலை தான் அது . உங்கள் குடும்பத்தில் அல்லது சுற்றத்தில் நீங்களா விரும்பிய ஒரு உயிர் இறக்க போகின்றதென்றால் அல்லது இறந்திருந்தால்  கட்டாயம் அந்த கனவு வரும் . ஒரு வித பயத்தின் இழப்பின் வெளிப்பாடு அது .

2 > சிலர் பாம்பு துரத்தி கடிப்பதும் ஆனால் எழுந்தவுடன் உயிருடன் இருப்பது போலவும் உணருவார்கள் . அப்படியானால் எங்கள் வாழ்க்கையில்  நாங்கள் எண்ணும் அளவுக்கு விடயம் ஒன்றும் சீரியஸாக இல்லை என்று அர்த்தம்.

வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகள் இந்த குறியீட்டில் தான் பிரதிப்பலிக்கப்பட்டன . காரணம் பாம்புக்கு மட்டுமே எல்லோரும் பயந்தது, பயப்படுவது .

முதலில் பாம்பை பற்றியும் கொஞ்சம் அறிவியல் தகவலை தந்து விட்டு மேலுள்ள காரணத்தை விளக்குகிறேன் . இதற்கும் இந்து சமயத்துக்கும் என்ன சம்மந்தம் என விளக்குகிறேன் .

ஒரு பாம்பு மனிதனையே விளங்கும் அளவுக்கு வாய் பகுதி பெரிதா என நினைக்கலாம் . ஆனால் அது 150 டிகிரி வரை வாயை நன்றாக விரிக்கும் . எங்களால் 90 டிகிரி கூட போக முடியாது .



ஐந்து  தலை நாகம் இந்து சமய கதைகளில் வந்ததே உண்மையா ?  கூர்ப்பு கொள்கை அதில் செயல்ப்பட்டிருக்கலாம் . 130 மில்லியன் வருடங்களுக்கு முதல் தோன்றிய உயிரினம் பாம்பு . பினைப்புகளாலேயே உயிரினங்கள் யதார்த்தமாக தோன்றியது உண்மை . அதில் ஐந்து தலைகளுடன் தோன்றி இருக்கலாம். மற்றைய தலைகளின் தேவை இருந்திருக்காது . அதனால் காலப்போக்கில் அழிந்திருக்கலாம் .

பாம்பின் அசைவுகள் (நகர்வுகள் )


பாம்பிற்கு காதுகள் இல்லை .பிறகெப்படி மகுடி ஊதும் சத்தம் கேட்க்கும் ?
பாம்பிற்கு காதுகள் இல்லாவிட்டாலும் அவற்றால் ஒலி அதிர்வுகளை செவி மடுக்க முடியும் . நாம் ஏற்ப்படுத்தும் ஒலி அதிர்வுகள் அவற்றில் உடலில் பட்டு தோலினூடாக ஊடுகடத்தப்பட்டு மூளைக்கு ஒலியையும் எச்சரிக்கையையும் விடுக்கிறது . காதின் தொழிலை செய்யும் உள்ளுறுப்பு (சென்சார் ) உண்டு . மகுடியிலிருந்து வரும் ஒலி அதிர்வுகள் வித்தியாசமானவை. அவை பாம்பிற்கு உண்மையில் மயக்கத்தை ஏற்ப்படுத்தும் . எப்படி தான் நம் முன்னோர்கள் கண்டு பிடித்தார்களோ ?

சரி பாம்பிற்கு பால் ஊத்துவதன் முட்டை வைப்பதன் காரணம் என்ன ? உண்மையும் விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது. அப்புறம் எதுக்கு புற்றுக்குள் ஊற்றினார்கள்  ?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம்  அடர்ந்த காடுகள்.  ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை . அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள் .ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை  கட்டுப்படுத்த முயன்றனர் .

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில்  இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு தேடி வரும் . 

பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது . அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது .

இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள் . அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது .

பாவம் அதால ருசியும் உணர முடியாது விட்டிருங்க. சிலர்  கட்டாயப்படுத்தி தான் பால் ஊற்றுகின்றனர். அவற்றிற்க்கு பால் பிடிப்பதில்லை . ஊர்வன வகை அவை . முளையூட்டிகள் பாலை குடிக்காது .


முக்கியமா இந்த ராமராஜன் படத்தில் எல்லாம் காட்டுவது போல பாம்பு பால் குடிக்காது . பக்தி படங்கள் எடுப்பவர்கள் காரணமும் சொன்னால் நன்றாக இருக்கும் . கிராபிக்ஸ் மட்டும்  காட்டாமல் .

நம்மவர்கள் செய்த பலவற்றிட்க்கும் காரணங்கள் உண்டு . அதை விளங்கினால் இந்துமதம் அர்த்தமுள்ளதாகும் .. தொடருவேன் .....

பிடித்திருந்தா மறக்காமல் ஓட்டு  போட்டு அனைவரையும் சென்றடைய செய்யவும்

No comments:

Post a Comment