Monday, September 12, 2011

3 இடியட்ஸ் உம் இலங்கை இந்தியக்கல்வி முறையும்...



மாணவர்களின்  அறிவுப்பாதை மற்றும் எதிர்காலத்தை திறக்கும் ஒரு கூடமாக பாடசாலையானாலும் சரி, சுற்றுப்புற சூழல் , வறுமை , குடும்பம் மற்றும் உயர்கல்வி கற்கும் கூடமாக இருந்தாலும் சரி அனைத்தும்  மிக முக்கிய பங்கு  வகிக்கின்றன .இதில் முக்கியமானது மன அழுத்தம். இந்த மன அழுத்தம் சுற்றுப்புற சூழல்களால் ஏற்ப்படலாம் ஆனால் கல்வியாலேயே ஏற்ப்பட்டால்!! அதே நிலை தான் பெரும்பாலும்  ஆசிய நாடுகளை ஆட்டிப்படைக்கின்றன .

3 இடியட்ஸ் படம் மாபெரும் வெற்றி பெற்று அனைவரையும் சென்றடைந்தது உண்மை . ஆனால் அந்த திரைப்படம் சரியாக சென்றடைந்ததா என்றால் நிச்சயம் இல்லை என்றே   சொல்லலாம் .

அந்த திரைப்படம் சொல்ல வரும் விடயம் கல்வி முறை மாற்றமும் பெற்றோர்கள் பிள்ளைகள் மீது திணிக்கும் கட்டாய கல்வி முறை பற்றியுமே. ஆனால் அதன் பிரதான கரு இதுவாக இருந்தாலும் சில மாற்றுக்கருத்தாளர்கள் 3 இடியட்ஸ் திரைப்படம் ஒரே பாதையிலேயே பயணிக்கிறது என்ற வாதத்தை வைக்கின்றனர். அதில் வரும் விடயங்கள் தவறென்பது அவர்கள் கருத்து .


அதுவும் இதற்க்கு மிக முக்கிய எதிர்ப்பை தெரிவிப்பது பெரிய பதவியில் இருக்கும் கல்வித்துறை அதிகாரிகளே .  அந்த திரைப்படத்தில் வரும் விடயங்கள் அனைத்தும்  தவறு என்பதுடன் இந்த கருத்து மாணவர்களை அழிவுப்பாதையில் இட்டுச்செல்லுமாம் . ஒரு வேளை தாம் அனைவரும் கல்வி எனும்படியை முடித்து விட்டதால் இப்படி எண்ண தோன்றுகிறதோ  தெரியவில்லை .

ஆனால் மாணவர்கள் பார்வையில் அவர்களின் கருத்தை பார்த்தால் , பாடங்கள் மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தை மீட்டுவனவாகவும் முக்கியமாக தாம் என்ன படிக்கிறோம் எதற்க்காக படிக்கிறோம் என்பதை உணராமல் கேள்வி கேட்க்காமல் படிக்க வேண்டி  உள்ளதாக கூறுகின்றனர் .அதுவும் முக்கியமாக ஒரு பாடத்தில் விசேட சித்தி பெற வேண்டுமானால் அது மனப்பாடமாக்குபவனாலும் தூங்காமல்  இரவு முழுக்க கண் முழித்து வருத்தி படித்தால் மட்டுமே பெற முடியும் என்ற இன்னொரு கருத்தும்   நிலவுகிறது . கூடுதலாக பாடங்களை விளங்கி  கற்கும் மாணவர்களிடையே புள்ளிகள் குறைவாகவும் , மனப்பாடமாக்குபவர்களுக்கு புள்ளிகள் கூடுதலாகவும் பெறுபேறுகளில் கிடைப்பது உண்மையே .

  இதற்க்கு  கல்வித்துறை அதிகாரி நாராயணன்  கூறிய பதில் முக்கியமாக தாம் அனைவரும் இந்திய  கல்வித்திட்டத்தில் இருந்தே பயனை பெற்றதாகவும் அதை எதற்கு ஏளனம் செய்து திரைப்படத்தை அமைத்ததாகவும் குற்றம் சாட்டினார் .

ஆனால் இந்த திரைப்படம் கல்வியை குறை கூற முன் வரவில்லை . திரைப்படம் முழுக்க முழுக்க குறை கூறுவது கல்வி முறையையே .  கல்வி சரியாக இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் , மாணவர்களை  சென்றடைய வைக்கும் முறையிலேயே அடிப்படை தவறுகள் இடம் பெறுகின்றன .

தாய் தந்தையர் கட்டாயப்படுத்தி இந்த துறையில் தான் நீ செல்லவேண்டும் என வற்புறுத்தும் விடயமாக இருந்தாலும் சரி , மாணவர்கள் புள்ளிகளுக்காகவும் டிகிரி  எடுப்பதர்க்காக்கவுமே தமது உயர் கல்வியை தொடர்கின்றனர் என மாணவர்கள் சிந்தனையையும் வெளிப்படுத்தி இருப்பதிலும் சரி , ஏட்டு கல்வி முறையானாலும் சரி அனைத்தையும் கொண்டுள்ள படம் தான் 3 இடியட்ஸ் .

வெளிநாடுகளில் கூடுதல் கண்டு பிடிப்புகளும் தொழில் வளர்ச்சியும் இவளவு தூரம் வளர்ச்சி அடைய காரணம் அவர்கள் தாம் தமது கல்வியை டிகிரிக்காக அல்லாது விரும்பி படிப்பதுவே . இது அவர்களை மேலும் அந்த துறையில் வளர செய்யும் என்பது உறுதி . ஆனால் நமது கல்வித்திட்டம் புள்ளிகளை வைத்து தீர்மானிக்கப்பட்டு விடுவதால் ஒவ்வொரு துறையிலும் செல்பவர்கள் கூடுதலாக அலுவலகங்களில்(அரசாங்க ) உறங்குகின்றனர் . காரணம் அவர்கள் கற்கும் போது நிச்சயமாக அரசாங்க துறையில் வேலை பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே  அவர்களை சூழ்ந்திருக்கும். தாம் அந்த துறையை விரும்புகிறோமா  இல்லையா என்பது அவர்கள்  எண்ணத்தில் எழாது .

அத்திரைப்படத்தில் முக்கியமாக வரும் ஒரு காட்சி மாணவர்கள் நிலை பற்றிய முழு விளக்கத்தையும் கல்வித்திட்டம் பற்றியும் தெளிவாக்கும் . மெஷின் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன என்று  அமீர் கானிடம்  கேள்வி கேட்கப்படும். உடனே அமீர் கான் எளிய முறையில்  வேலையை இலகுவாக்க பயன்படுத்தப்படுவதே என கூறுவார். அதை தவறென்று கூறி இன்னொருவனிடம் கேள்வி கேட்க்க அதற்க்கு புத்தகத்தில் இருக்கும் ஒரு கட்டுரையை மனப்பாடமாக்கி வாசித்து காட்டுவார் மற்றையவர் . வெளியேற்றப்பட்ட அமீர் கான் உள்ளே வந்து  விட்டு விட்டு சென்ற புத்தகம் எனும் ஒரு வார்த்தைக்கு ஒரு பக்க விளக்கம் சொல்லுவார் .

உண்மையில் இந்த ஒரு சிறிய காட்சி முழுவதையும் உள்ளடக்கி இருக்கும் என நினைக்கிறேன் .

முக்கியமாக செயன்முறைக்கல்வி முறை முன்னைய காலத்தில் இருந்திருக்கவே இல்லை . காரணம் வசதியின்மை . ஆனால் 1960 1970  களில் வந்த அதே பாடத்திட்டத்தை மீண்டும் திணித்து வைத்திருக்கின்றனர். சில பாடங்கள் தேவையில்லை என ஓரங்கட்டப்பட்டவை.

கல்வி ஆய்வாளர் ஒருவர் தெருவித்திருக்கும் கருத்து முக்கியமாக கல்வித்துறையில் தவறில்லை , கற்பிக்கும் பாடங்களிலும் தவறில்லை ஆனால் நம்பர்கள் தான் மேலும் அழுத்தத்தை  பிரயோகிகின்றனவாம். சில குறிப்பிட்ட அளவிலேயே மாணவர்களை உள்ளே எடுக்க முடியும் என்பதால் எண்ணிக்கைகளை குறைக்கவே புள்ளிகள் முறை தெரிந்தேடுக்கப்படுகிறதாம் . ஆனால் புள்ளிகளை மட்டும் வைத்தே தீர்மானிக்கலாமா என்பதே முக்கிய கேள்வி ?

ஒரு மனிதனின் வாழ்க்கையை புள்ளிகள் தீர்மானிப்பதில்லை . அவனின் சொந்த முயற்சி  சொந்த முடிவுகள் எண்ணங்கள் அவனை பல படிகள் முன்னேற்றும். ஒருவனின் சுய யோசனையை ஒரு ஏட்டு கல்வியால் தூண்டி விட முடியாது . எத்தனையோ படித்தவர்கள் கூட வாழ்க்கையில் கூட முடிவெடுக்க  தெரியாமல் தவிப்பது யதார்த்தம். தேடல் என்பதே ஒரு மனிதனை மிகவும் முன்னேற்றும் ஒரு காரணி. தேடல்நிச்ச்சயம் கற்றவனை விட ஒரு படி உயர்த்தி வைக்கும் .



ஆனால் சிலருடைய கருத்து என்னவென்றால் கல்வி முறையை திடீரென வெறுத்து மாற்றம் கொண்டு வர முடியாது என்பதே . ஆனால் படிப்படியாக கொண்டு வரலாம் என்கின்றனர் .

எப்படியிருந்தாலும் உழைப்பதற்காகவே படிக்கிறோம் என்ற எண்ணம் ஊறி  விட்டதை யாரும் மறுக்க முடியாது . பிடித்திருக்கிறது படிக்கிறேன் எனும் வார்த்தை குறைவாக கேட்பதே உண்மை . அது தான் மருத்துவத்திலானாலும் சரி எந்த துறையிலானாலும் சரி லஞ்சமும் ஊழலும் தலை விரித்தாடுகிறது . விரும்பி படித்தவனுக்கு போய் சேவை செய் என அரசு கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை . நகரத்தில் இருந்தால் உழைக்கலாம் வசதியாக இருக்கலாம் என்ற எண்ணத்தை தவிர வேறு என்ன ஓடும் செயவைத்துரை கல்வியைதேர்ந்து எடுத்தவர்கள் மனதில் .

வெளிநாட்டில்(சில நாடுகளில் ) கல்வி கற்பிப்பதற்கு நிச்சயம் ஆசிரியரோ பேராசியரோ மனோதத்துவம் படித்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது . இங்கு அதிகாரிகளாக இருக்கும் எத்தனை அதிகாரிகள் மனோதத்துவம் படித்துள்ளனர் என்றால் இல்லை என்றே சொல்லலாம் . 

அனைவர் மீதும் குற்றம் அடுக்குவதில் பலன் இல்லை . ஆனால் நாம் எம்மை மாற்றலாம், அரசையே  மாற்றலாம்  . கல்விச்சேவை தான் நடக்கிறதே தவிர கல்வியை எப்படி இன்னும் மேம்ம்படுத்தலாம் என்பதற்கு எந்த குழுவும் இயங்குவதாக தெரியவில்லை ..

No comments:

Post a Comment