Monday, September 12, 2011

பெண் அடிமைத்தனமும் சமூக அடிமைத்தனமும்



பெண் அடிமைத்தனமும் அதன் காரணத்தையும் மற்றும் எம் சமூக தவறுகளையும் அடிப்படையில் இருந்து இனம் காணலாம் என்ற அடிப்படையில் எழுதும்  பதிவு . இந்த முயற்ச்சிக்கு உங்கள் வரவேற்ப்பு தேவை .
=========================================================================

மாதம் தோறும் ஏன் வாரம் தோறும் கூட பெண் விடுதலை பற்றிய ஆக்கங்கள் பெண்களாலும் பலராலும் எழுதப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது . அது ஏதாவது மாற்றத்தை ஏற்ப்படுத்தியதா  என்று பார்த்தால் பெரிதாக இல்லை என்றே சொல்ல வேண்டும் . காரணம் வெறும் பேச்சிலும் எழுத்திலும் மட்டுமே பெண் விடுதலை இருப்பது .

எந்த ஒரு விடயத்தையும் அடிப்படையில் இருந்து பார்க்கும் போது இந்த விடயத்தையும் அடிப்படையில் இருந்து பார்க்கத்தோன்றும் . பெண் விடுதலை எனப்படும் போது அது நிச்சயம் அவள் திருமணமாகிய பின்பு தான் போகிறது எனும் கருத்து அனைவரிடமும் காணப்படுகிறது . கணவரால் அடிமைப்படுத்தப்படுகிறாள் , துன்புறுத்தப்படுகிறாள் , சுதந்திரம் கொடுக்கப்படுவதில்லை என்றெல்லாம் ஒரு கருத்து உலாவுவதில் சந்தேகங்கள்  இல்லை .

இதன் ஆரம்பம் என்ன என்று பார்த்தால் ஒரு பெண்ணால் தான் முதன் முதலாக ஒரு பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள் . அது வேறு யாருமல்ல. அவளின் தாய் , அவளின் பாட்டியாக கூட இருக்கலாம் . பெண் பிள்ளை மாதிரி அடக்க ஒடுக்கமாக வீட்டில் இரு என முதல் அதட்டல் வீட்டில் இருந்தே ஆரம்பம் . பெண் பிள்ளைகள் கண் படும் படியே " நீ பெண்ணாக பிறந்து தொலைத்து விட்டாய்" என பேசுவது ,ஆண் பிள்ளைகளை உயர்த்தி வைப்பது என அடிப்படைகளே பிரச்சனையின் ஆரம்பம் . பெண் பிள்ளையானால் பொருள் கொடுக்க வேண்டும் , வீட்டிற்க்கு பாரம் என ஆரம்பத்திலேயே அவள் மீது ஒரு வித அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது .

ஏன் ஒரு தாய் பெண்ணாக இருந்து கொண்டு இப்படி செய்கிறாள் என பார்த்தால் இன்னொரு விடயம் தடுக்கிறது . அதாவது  எமது சமூகத்தில் இருந்து நாம் இன்னும்  விடுதலை பெறவில்லை என்பது அவளுக்கு புரிகிறது . அதென்ன சமூக விடுதலை என நீங்கள் கேட்கலாம் . ஒரு பெண்ணை  சுதந்திரமாக விட்டால் இன்னொரு பெண் அல்லது தாய் அல்லது சொந்தக்கார்களால்  எவ்வாறு பேசப்படுவாள் என்பது நம் சமூகத்துக்கு தெரியும் .

இவ்வாறான அடிப்படை பிரச்னைக்கு காரணமே சமூகம் இன்னும் விடுதலை பெறாமை . இப்போது கூட நாம் வேறு ஒருவர் ஏதேனும் சொல்லி விடுவாரோ சமூகம் எம்மை இழிவாக பார்க்குமோ என சமூகத்துக்காகவே வாழ்ந்து வருகிறோம் . ஆனால் அதே சமூகம் நமக்கு என்ன தந்தது என்று பார்த்தால் ஒன்றுமில்லை .

இதில் முக்கிய பங்கான ஆண் வர்க்கத்தை ஒத்துக்கி விட்டு பேசி விட முடியாது . இந்த சமூகம், உறவுகள் என்னவாக இருந்தாலும் ஆணின் தலைமைத்துவத்தில் இயங்குவதை புறம் தள்ள முடியாது . ஆண்களும் கூட எழுத்தில் , பேச்சில் மட்டுமே பெண் விடுதலையை சுமக்கின்றனர் . தனக்கென வரும் பொழுது அது இருப்பதில்லை , முக்கியமாக தன் மனைவி என வரும் போது தனக்கு கீழே இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியே நிற்க்கிறது .

எமது சமூகத்தில் வயது குறைந்த பெண் மற்றும் வயது கூடிய ஆண் திருமண முறை காரணம் என்னவென்றால் வயது கூடிய ஆண் எடுக்கும் முடிவை வயது குறைந்த பெண் தலை குனிந்து ஏறக்க வேண்டுமாம் . எம் சமூகத்தில் இப்போது தான் ஆண் பெண் நடப்பு வளருகிறது இருந்தாலும் சில நண்பர்கள் கூட , முக்கியமாக ஆண் நண்பர்கள் பெண்களின் உணர்வுகளை புரிந்து கொளவதில்லை . தவறான புரிந்து கொள்ளல் ஆண் பெண் நடப்பை பாதித்து அவளை வெறுக்கும் படி ஆகி விடுகிறது .

பெண் அடிமைத்தனத்தை ஆதி காலத்தில் இருந்து யாரோ பரப்பிய கட்டுக்கதைகள் கொண்டு மதங்கள் அவற்றை ஊதி  பெரிதாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது என்பது உறுதி . இந்து சமயத்தில் பெண்கள் சில காலங்களில் தீண்டத்தகாதவர்களாக நியதி இருக்கிறது . இருந்தாலும் பெண்ணுக்கு சக்தியாக சம உரிமை வழங்கிய மதம் பின்னர் வந்தவர்களால் திரிபுபடுத்தப்பட்டது .இஸ்லாமிய சமயத்தில் பெண் அடிமைத்தனம் முழுதாக தனது ஆதிக்கத்தை செலுத்தி உள்ளது .கிறிஸ்தவ மதமோ பெண் ஆணவள் ஆணுக்கு சேவகம் செய்ய வேண்டும் என்று இயேசு கிறிஸ்து கூறியதாக இயேசுவை காரணம் காட்டி கூறுகிறது . மதங்களும் ஆண்  ஆதிக்க வாதிகளால் பெண்களை அடிமைப்படுத்த ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது .

தற்ப்போதைய கல்வி அறிவும் , மனிதனின் பகுத்தறிவு வளர்ச்சியும் சமூகத்தில் இருந்து விடுதலையை பெற்று வருகிறது . ஆனாலும் எழுத்திலும் பேச்சிலும் மாத்திரம் பெண் அடிமை பேச்சு இல்லாமல் நாம் நம்மை சுற்றி  இருக்கும் சமூகத்தில் இருக்கும் பெண்களுக்கு எம்மால் முடிந்த சுதந்திரத்தை கொடுக்க வேண்டும் . ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் கொடுக்கும் சுதந்திரம் உலகையே மாற்றும் . நம் சமூகத்திடம் இருந்தும் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் இயங்குவதற்கு  சுதந்திரம் பெற்றால் பெண் அடிமைத்தனம் தானாக ஒழியும் .

பெண் அடிமைத்தனம் மற்றும் சமூக அடிமைத்தனத்தின்  மிக முக்கிய பங்காளி சினிமா. சமூக அடிமைத்தனம் என்று பார்த்தால் ஆண்களும் அடிமைகளே ... 

No comments:

Post a Comment