Tuesday, March 6, 2012


" திருவலங்காடு - செப்பேடுகள் " 

பலயனுர் கிராமத்தை திருவலங்காடு சிவன் கோயிலுக்கு " ராஜேந்திர சோழன் " பரிசாக வழங்கியதை விவரிக்கும் செப்பேடுகள் ! . முப்பத்தியொரு செப்பேடுகளை அடுக்காக கொண்டு, அதை பாதுகாக்கும் வகையில் பெரிய வட்டவடிவ சோழ அரச முத்திரையுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது . அந்த ராஜ முத்திரையில் " புகழும் - வளமும் பொழிக " என்ற வாசகம் சமஸ்க்ரிதத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த வாசகம் " பரகேசரிவர்மன் ராஜேந்திர சோழன் " ஜொலிக்கும் நகைகளுடன் வரிசையான ராஜ வம்சத்தில் பிறந்ததை குறிக்கின்றது ! .அந்த ராஜ முத்திரையே கலை அழகுடன் காணப்படுகின்றது,அதில் ஒரு புலி, ஒரு குடை,இரண்டு பறக்கும் விசிறிகள் ( ராஜா கம்பீரத்தை உணர்த்துவது ) , ஒரு ஸ்வஸ்திக குறி, இரண்டு விளக்குகள் மற்றும் இன்னும் சில குறியீடுகளை காணலாம் ! .அதன் அருகில் இரண்டு மீன்கள் ( பாண்டியர்களின் அரச முத்திரை ) , ஒரு வில் ( சேரர்களின் அரச முத்திரை ) ஒரு காட்டுப்பன்றி ( கிழக்கு சாளுக்கியர்களின் அரச முத்திரை ) காணப்படுகின்றது ! இவை அனைத்தும் ராஜேந்திர சோழன் அந்த மன்னர்களை வென்று தன் வெற்றிக்கொடியை நாட்டியதை குறிப்பவை . 

இந்த முப்பதோரு செப்பேட்டில், முதல் பத்து, சோழ வம்சாவளியை குறிக்கின்றது, மீதமுள் இருப்பத்தொரு செப்பேடுகளும் பலயனுர் கிராமத்தை கோயிலுக்கு பரிசளித்ததை விவரிக்கிறது .இது போன்ற அதிக அளவிலான செப்பேடுகள் அனைத்தும் ராஜ ராஜ சோழன் மகன், " ராஜேந்திர சோழன் " அளித்ததே. அதிலும் குறிப்பாக " திருவலங்காடு கரந்தை " ( தஞ்சை நகர் ) எசலம் ( திண்டிவனம் அருகில் ) செப்பேடுகள். இந்த செப்பேடுகலானது கிராம சுற்றுப்புறங்களின் நிர்வாகம், வரிவிதிப்பு முறை,பாசனம்,அரசாங்க நிர்வாகம் போன்ற பல தகவல்களை விவரிக்கின்றது. இது போன்ற செப்பேடுகள் நம் வரலாற்று புதையல்கலாகவே நாம் கருதவேண்டும் !.

No comments:

Post a Comment