Sunday, March 10, 2013

மகனாய்ப் பிறந்த மாமனார்


1949 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் நடந்த சம்பவம் இது. அந்தக் குடும்பத்தின் வயதான மனிதர் ஜார்ஜ். அறுபது வயதைக் கடந்த அவர் அந்தக் குடும்பத்து மனிதர்கள் மீது குறிப்பாக தனது மகன், மருமகள் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார். ’நான் இறந்தாலும் இங்கேயே மீண்டும் குழந்தையாகப் பிறப்பேன்’ இது ஜார்ஜ் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கும் வாசகம்.
இயான் ஸ்டீவன்சன் எழுதிய நூல்
ஜார்ஜ் எப்போதும் தங்கச் செயின் பூட்டிய ஒரு கடிகாரத்தை விரும்பி அணிவார். ஒருநாள் மீன் பிடிப்பதற்காகச் செல்ல முற்பட்ட ஜார்ஜ் அதனை தனது மகனிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கும்படிச் சொல்லிவிட்டு கடலுக்குள் சென்றார். சென்றவர் சென்றவர் தான், அவர் படகையும் காணவில்லை. ஆளும் கிடைக்கவில்லை. நாட்கள், மாதங்கள் கடந்தன. அவரைப் பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இறுதியில் அவர் விபத்தில் இறந்து போயிருப்பார் என நினைத்து குடும்பத்தினர் மனதைத் தேற்றிக் கொண்டனர்.
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழிந்தது. மூத்த மகனுக்குக் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை அப்படியே ஜார்ஜின் சாயலில், அவருடைய உடல் அமைப்புடன், அவருக்கு எங்கெல்லாம் மச்சம் இருக்குமோ அந்த அமைப்புடன் பிறந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் அது வளர வளர, பெற்றோர்களை அம்மா, அப்பா என்று அழைப்பதற்கு பதிலாக மருமகளே, மகனே என்றும் அழைக்க ஆரம்பித்தது.
ஒருமுறை மூத்த மகன் தனது தந்தையின் நினைவாக, அவர் கொடுத்த தங்க கடிகாரத்தை அணிந்து கொள்ள முற்பட்ட போது ‘அது என் வாட்ச், என் வாட்ச்’  எனக்கு வேண்டும் என்று சத்தமிட்டு அழுதது குழந்தை. மேலும் சிறுவயதிலேயே மீன் பிடி படகுகள் பற்றி, படகுத் துறை பற்றி தௌ;ளத் தெளிவாகக் கூற ஆரம்பித்தது. இதில் விசே‘ம் என்னவென்றால் மீன்பிடி படகுத் துறைப் பக்கமே அந்தக் குழந்தை போனதில்லை என்பதுதான்.  அதுமட்டுமல்லாமல் ஜார்ஜிற்கு எதில் எதிலெல்லாம் ஆர்வம் மிகுந்திருந்ததோ அதிலெல்லாம் சிறுவனும் வளர வளர ஆர்வம் மிகுந்தவனாக இருந்தான்.
டாக்டர் இயான் ஸ்டீவன்சன்
அவனுடைய குறிப்புகளையும், ஜார்ஜின் வாழ்க்கை முறையையும் பற்றி ஆராய்ந்த ஸ்டீவன்சன் ஜார்ஜின் மறுபிறவியே அந்தச் சிறுவன் என்பதும் குடும்பத்து உறுப்பினர்கள் மீது கொண்ட அன்பால் அவர் மீண்டும் வந்து அவர்களிடையே பிறந்திருக்கிறார் என்றும் உறுதிப்படுத்தினார்.

No comments:

Post a Comment