சித்த ரகசியங்களுக்கு ஒரு அளவில்லை..
ரகசியம் என்றாலே அது எழுத்தில் வராது. எனவே, அவர்கள் ரகசியங்களை எழுதி வைக்க விரும்பியதில்லை. மாறாக, பாடல்களில் ஒளித்து வைத்துவிட்டு போயிருக்கிறார்கள். அதுவும் சில பாடல்களில் மட்டும்...
அந்த பாடல்களை நாம் விளங்கிக்கொள்ளத் தனி அறிவு வேண்டும். எது சித்தம் என்பது நமக்குத் தெரியாத வரையில், அதுவும் நமக்குத் தெரியாமலே போகும். நமக்கு தெரியாது என்பதால் அது "உண்மையில்லை" என்று வாதிடுவது முட்டாள்தனம்.
உதாரணமாக "ஆதி" என்கிற சொல்லுக்கு ஆரம்பம், தொடக்கம், மிகமிக முதன்மைப்பட்டது என்று தான் பொருள் சொல்வோம்.
ஆனால், "பெரும் நெருப்பு" என்றும் இதைப் பொருள் கொள்ளலாம். அதற்கு சொல்லைப் பிரித்துப்பார்க்கத் தெரிய வேண்டும்.
"ஆ + தீ" என்பதே ஆதி என்பர்.
"தீ" யாகிய நெருப்பு "ஆ" வுடன் கூடும் போது தன் நீட்சியை இழந்து "தி" யாக மட்டும் ஆகிறது. அது எப்படி என்று கேட்கலாம், இலக்கணப்படி பார்க்கும் போது இதில் பிழை தெரியலாம். ஆனால், ரகசியத்தை ஒளித்து வைப்பது தான் சித்தர்களின் நோக்கம்.
நமக்கு சித்த அறிவு வசப்படும் பட்சத்தில், இதை சரியாக புரிந்து சித்த ரகசியத்தையும் புரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment