"சிவம் என்றால் மங்களம்" என்பது பொதுவான பொருள், ஆனால், உண்மையில் சிவன் என்றால் "உயிர்" என்பதே சூட்சும பொருள். சிவன் கோயிலுக்குப் போகிறேன், சிவனை வழிபடப் போகிறேன் என்றால், உயிரின் மூலத்தை தேடிப்போகிறேன், உயிரை உணரப்போகிறேன் என்பதே பொருளாகும்.
அந்த உயிரை உணரத் தொடங்கி விட்டால், பிறகு உடம்பு ஒரு பொருட்டே அல்ல. உடம்பை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு குரங்காட்டி தன் குரங்கை ஆட்டி வைப்பது போல ஆட்டிவைக்கலாம்.
உயிர் மூலத்தை உணர முடிந்தவரை சித்தன் என்கிறோம். அதனால் தான் ஒரு சித்தனுக்கு நீரில் நடப்பதும், காற்றில் மிதப்பதும், கூடுவிட்டு கூடு பாய்வதும் சாதாரண ஒரு சாகசமாகிறது!
No comments:
Post a Comment