Monday, September 12, 2011

12 B திரைப்படமும் பார்க்காத உலகமும்

குப்பைகளுக்குள் முத்து போல வந்த சில அருமையான தமிழ் திரைப்படங்கள் , கிட்டத்தட்ட நாம் வாழ்க்கையில் அன்றாடம் எதிர்கொள்ளும்  சில  தியரிகளை வைத்து வந்த படங்கள் சரியான விளக்கமின்மை காரணமாக பெரிதாக பேசப்படவில்லை .

அவ்வாறான படங்களில் தசாவதாரம்( வண்ணத்து பூச்சி விளைவு ) , அதாவது இந்த உலகில் நடக்கும் ஒவ்வொரு விடயங்களுக்கும் இடையில் ஒரு தொடர்புண்டு, ஒரு சிறிய மாற்றம் பெரியதொரு விளைவை கொண்டு வரும் என்கிறது அந்த தியரி .கயோஸ் தியரியை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது . ஒரு வண்ணத்து பூச்சியின் இறக்கையின் படபடப்பு ஒரு பெரிய சூறாவளியையே உருவாக்கலாம் என்கிறது கயோஸ்  தியரி . 

 இன்னொரு அருமையான பேசப்படாத படம் தான் 12 B . அநேகருக்கு படம் விளங்கியிருக்க வாய்ப்பில்லை . போதிய விளக்கமின்மை காரணமாக இருக்கலாம் . விளக்கம் போதாது என்றும் கூற முடியாது . ஒரு படத்தில் வெறுமனே தியரியை விளங்கப்படுத்திக்கொண்டு இருக்க முடியாது .ஒரு வேளை நம்மவர்கள் ( பெரும்பாலான சதவீதம் ) இன்னும் அந்த நிலையை அடையவில்லையோ என்னவோ . அநேகரின் கருத்து விமர்சனங்கள் கூட அந்த படம் நேரத்தின் முக்கியத்துவம் கூறுவதாக மாத்திரம் அமைகிறது என நினைக்கின்றனர் . நிச்சயமாக  இல்லை .முடிந்தவரை விளக்க முயற்ச்சிக்கிறேன். வாசித்து விட்டு படத்தை மீண்டும்  பார்த்தால் விளங்கும் .



12 B திரைப்படம் எடுத்துக்கொண்ட தியரி தான் ஐங்ஸ்டாயினின் ஸ்ட்ரிங் தியரி (String theory ), நேர பயணம்  அல்லது சமாந்தரமான உலகம் எனலாம் . மிக மிக ஆச்சரியமான தியரி தான் .

நாம் வாழும் உலகம் ஒன்றல்ல . முடிவிலி உலகங்கள் உண்டு .எமது வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நம் கண்ணுக்கு தெரியாமல் நம்முடனேயே நகர்கிறது . நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர் மாறு இருக்கிறது . நீங்கள் ஒரு பாதையால் செல்கிறீர்கள் என்றால் , அந்த பாதைக்கு  எதிராகவும் நீங்கள் செல்வது போல ஒரு நிகழ்வு உங்கள் கண்ணுக்கு தெரியாமல் நடக்கும் .உங்கள் காதலி காதலை ஏற்றுக்கொள்கிறாள் என்றால் , ஏற்க்காமல் இருப்பது போல இன்னொரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் . ஆனால் அது முடிவிலி .ஒரு காரியத்தை செய்யும் நிகழ்வு செய்யாத நிகழ்வு என எம்முடனேயே இந்த நிகழ்வுகளும் நகர்கிறது .
  

நாம் பிரதிகளாக , எமது நிகழ்வுகள் கிளைகளாக  உருமாறி எமக்கு சமாந்தரமாக எம்முடனேயே  எமது இன்னொரு(பல)  வாழ்க்கை நிகழ்கிறது .
சில உதாரணங்கள்  சொல்கிறேன் 

சில இடங்களால் நீங்கள் செல்லும் போது அந்த இடங்கள் எப்போதோ பார்த்த இடங்கள் போல இருக்கும் .ஏற்க்கனவே அந்த இடத்தில் இருந்த ஒரு உணர்வு . சில செயல்கள் நாம் ஏற்க்கனவே செய்து முடித்தவையாக இருக்கும் .சிலரை எங்கேயோ பார்த்த உணர்வும் தோன்றும் . காரணம் எல்லா நிகழ்வுகளுக்கும் உள்ள தொடர்பு . நான் கூறியது போல இன்னொரு கோணத்திலும் நீங்கள் நகர்கிறீர்கள் .

சில நேரங்களில் நீங்கள் சில பொருட்களை தொலைத்துவிட்டு தேடுவதுண்டு , ஆனால் அது கிடைக்காது . போட்ட இடமும் தெரியும் ,அங்கே தேடினாலும் கிடைக்காது . ஆனால் பல காலங்கள் கழித்து அதே பொருள்  கிடைக்கும் .

சிலர் உங்களை எங்கேயோ  பாத்திருக்கேன் என்று கூட கேட்டிருப்பார்கள் . அதற்க்கான விடைகள் தான் இந்த தியரியில் .


அந்த தியரியை பிரதிபலிக்கும் படம் தான் 12 B . சாதாரண இளைஞனின்(ஷியாம் ) வாழ்க்கை ஒரு பஸ்ஸை தவறவிடுவதால் எவ்வாறு போகிறது எனவும் , அதே நபர் பஸ்ஸில் ஏறி இருந்தால் அவரின் வாழ்க்கை எவ்வாறு அமையும் என காட்டுவது தான் அந்த படத்தின் கரு . அதாவது இதில் அனைவருக்கும் விளங்காத மறந்த விடயங்கள் என்னவென்றால் இருவரின் வாழ்க்கையும் சமாந்தரமாக தான் செல்கிறது . ஒரே இடத்தில் இருவர் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள் நடக்கும் .  

ஒரு ஷியாமுக்கு(இண்டர்வியூக்கு  பஸ்ஸை பிடித்த ) வேலை கிடைக்கிறது , ஜோதிகாவுடன் காதலில் தோற்கிறார் , வேலை  செய்யும் இடத்தில் சிம்ரனை சந்திக்கிறார் . மற்றைய ஷியாம்(பஸ்ஸை தவறவிட்ட ) வாழ்க்கையில் தோற்றாலும் ஜோதிகாவுடன் காதலில் ஜெயிக்கிறார் . ஆனால் ஜோதிக கண்ணுக்கோ அதே ஷியாமின் கண்ணுக்கோ மற்றைய ஷாம் தெரிய மாட்டார் , ஆனால் நிகழ்வுகளில் தொடர்பு இருக்கும் .

படத்தின் ஆரம்பத்தில் மருத்துவமனையில் சிம்ரனை(கவலையில் வந்து அழுகையில் ) சந்திக்கும் ஷியாம் . படத்தின் இறுதியில் அதே போல ஒரு நிகழ்வில் மீண்டும் அதே இடத்தில் சிம்ரனை பார்ப்பார் . ஆனால் சிம்ரன் முதல் அழுதமைக்கு காரணம் அதே ஷியாமின் இன்னொரு நிகழ்வு இறந்து கிடப்பது . அதாவது அதே ஷியாம் இறந்து கிடப்பார் . ஆனால் ஜோதிகா பின்னால் செல்லும் ஷியாமை கடந்து தான் சிம்ரன் செல்வார் . ஆனால் சிம்ரன் கண்ணுக்கு மற்றைய  ஷியாம் இருப்பது தெரியாது . கண்ணுக்கு தெரியாத இன்னொரு ஷியாம் உயிரோடு இருக்கிறார் .


பல இடங்களில் நடை பெறும் நிகழ்வு , உதாரணமாக சண்டை இடம் பெறும் இடங்கள் ,  இரு ஷாமும் மாறி மாறி ஜோதிகாவை சந்திக்கும் இடங்கள் என்பன பொதுவாகவே இருக்கும் . அது தான் அந்த தொடர்பு முறை . ஒவ்வொரு நிகழ்வுக்கும் பல பிரதிகள் இருக்கிறது .


இந்த தியரியை விளக்க தனிப்பதிவு தான் போட வேண்டும் . ஆனால் இதன் அடிப்படையாவது விளங்கியிருக்கும் .சுருக்கமாக விளக்கியுள்ளேன் . தவறவிட்டவர்கள் , விளங்காமல் விட்டவர்கள் இந்த படத்தை மீண்டும்  பாருங்கள்.  நிச்சயம் விளங்கும் . 

நல்ல படங்களை தந்த ஜீவா நம்முடன் இல்லை . உன்னாலே உன்னாலேயில்  ஆண் பெண் பிரச்சனைகளை சரியாக காட்டி இருப்பார் . இரண்டும் அருமையான படங்கள் . ஐங்ஸ்டாயினும் தியரிகளை முடிக்காமல் சென்றதும் கவலை தான் .

நல்ல படங்கள், வித்தியாசமான படங்கள்  நிச்சயம் மக்களை சென்றடைய வேண்டும் .

No comments:

Post a Comment