உலகத்தை எது ஆளுதோ இல்லையோ இந்த நம்பர்கள் மட்டும் ஆள்வது உண்மை தான் . இந்த மூன்று ஆறு சேர்ந்தா சாத்தான் நம்பறாம். ஏழாம் நம்பர் காரன் ராசிக்காரனாம் ஆறாம் நம்பர்காரன் கெட்டிக்காரன் எண்டு காதிலை எத்தனையோ தடவை எத்தனையோ விடயம் அடிபட்டிருக்கு . அதுவும் முக்கியமா எல்லாம் இலக்கங்களை வைத்து தான் தீர்மானிக்கப்படுது . அது தான் இலக்கத்தை வைச்சு ஒரு பதிவு போடலாம் என எண்ணினேன் .
அதுவும் இந்த பணத்தினுடைய பெறுமதியே பின்னால இருக்கிற பூச்சியத்தை வைத்து தானே தீர்மானிக்கப்படுகிறது . அதுவும் என் நண்பன் அனுப்பிய ஒரு மின்னஞ்சலையும் பகிர்கிறேன் . நம்பர்கள் இது தானா எண்ட முடிவுக்கு வந்த உடன அட போங்கடா நீங்களும் உங்கட என்றுஎண்ண தோணுது . ஒன்று ஏன் ஒன்று ? இரண்டு ஏன் இரண்டு ? எனபதற்கு அருமையான விளக்கம் பாருங்கள் . அட இவளவு தானா மேட்டர் என எண்ணத்தோன்றும் .
எகிப்தியர்கள் அறிமுகப்படுத்தியது தான் எண்கள் . ரோமானியர்கள் ரோமன் இலக்கத்தில் எளிய வடிவில் எழுதினார்கள் . எகிப்தியர்கள் அறிமுகப்படுத்திய இலக்கம் நம் பாவனையில் இருக்கிறது .
ஒவ்வொரு இலக்கங்களும் கவனித்து பார்த்தால் ஒவ்வொரு கோணங்களின் எண்ணிக்கை .
இந்த பூச்சியத்திட்க்கு என்ன அர்த்தம் என தேடிய போது இந்த பூச்சியம் எகிப்த்தியர்களால் கண்டு பிடிக்கப்படவில்லை. இந்த பூச்சியம் கண்டு பிடிக்கப்பட்டது ஆர்யபட்டா (Aryabhata ) எனும் இந்தியரால் . இவளத்தையும் யோசிச்சவங்க ஆங்கிலே இல்லாட்டி என்ன பண்ணுறதெண்டு யோசிக்கேல்ல போல .
பூச்சியத்தை தேட போய் ஆர்யபட்டா எனு மாபெரும் இந்திய கணித மாமேதையை பற்றி அறிந்து கொண்டேன். உங்களோடு பகிர்கிறேன் .
ஆர்யபட்டா ஒரு சிறந்த கணிதவியலாளரும் , சிறந்த வானியலாளரும் கூட . கி மு 476 தொடக்கம் 550 காலம் வரை வாழ்ந்தவர் அவர் . மூன்றாம் நூற்றாண்டில் பாக்ஷாலி எனப்படும் ஓலைகளில் எழுதிவைக்க்ப்படிருக்கும் விடயம் வெளியில் வந்தது . ஆர்யபட்ட அதனை உபயோகிக்கவில்லை . அது முன்னைய இந்தியாவின் பஷாளி எனும் இடத்தில் பழைய ஓலை சுவடிகள் கண்டெடுக்கப்பட்டன. முன்னைய இந்தியா என்றால் பாகிஸ்தானும் இந்தியாவும் ஒன்றாக இருந்த காலம் . தற்ப்போது அந்த இடம் பாகிஸ்தானுக்குள் சென்று விட்டது . இப்போது எஞ்சி இருக்கும் ஏனைய கணித மற்றும் அறிவியல் நில கீழ் தகவல்களையும் இழந்து விட்டு நிக்கிறது இந்தியா .
பின்னர் பிரெஞ்சு கணிதவியலாளர் வாதாடி பெற்றுக்கொடுத்தது தான் பூச்சியம் . அது தான் பத்து போன்ற இலக்கங்களுக்கான பெறுமதியை கொடுக்கும் இலக்கமாக அமையும் என வாதாடினார் .
ஆர்யபட்டா தான் பை(22 /7 ) பெறுமானத்தையும் கண்டறிந்ததாக கூறப்படுகிறது . அவரது எழுத்துகளில் நூறுடன் நான்கை கூட்டி எட்டால்பெருக்கி இருபதினாயிரத்தால் பிரித்தால் 3 .1416 ( ((4+100)×8+62000)/20000 = 3.1416) என 5 தசமதானகளில் குறிப்பிட்டிருந்தார் .
ஆனாலும் அது āsanna என்று அவரது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார் . என்றால் கிட்டத்தட்ட என்று அர்த்தமாம் . இது பின்னரே 1761 இல் ஐரோப்பிய கணிதவியளாலரால் கண்டறியப்பட்டது .
எத்தனையோ இந்திய இந்துக்களின் கண்டு பிடிப்புகள் காணாமல் போய் உள்ளது உண்மை . அவற்றில் பெறும் பாலான தொல் பொருட்கள் பாகிஸ்தான் நிலத்தினில் . என்ன தான் செய்யமுடியும் . இந்து நாகரிக பள்ளத்தாக்கும் தாரை வார்த்து கொடுக்கப்பட்டு விட்டது .
முடிந்தால் இவரை பற்றி தனிப்பதிவு போட முயற்ச்சிக்கிறேன் ..
ஒரு நாள் பூச்சியத்துக்கும் ஒரே கவலை . தன்னால் ஒரு உபயோகமும் இல்லை என்று . கொஞ்சம் நகைச்சுவையா இதை பாருங்களன் .
No comments:
Post a Comment