இளையராஜா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு புகழ் . பத்மபூஷன விருது கிடைக்கப்பெற்றது . ஒஸ்கார் விருது ரகுமானுக்கு கிடைக்கப்பெற்றதும் தெரிந்ததே . இருவரும் தமிழ் சினிமா இசையின் ராஜாக்கள் . நவீன இளையராஜா தான் ரகுமான் எனலாம் . இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் கையால் கிடைக்கப்பெற்றது .
இளையராஜா மீதான பார்வையை தொடர்ந்து பார்க்கலாம் என இடும் பதிவு . இளையராஜா பற்றிய 5 ஆவது பதிவு .முன்னைய பதிவுகளை வாசிக்க :-
Click here
வழமையை போலவே இளையராஜாவின் சிறப்பான பாடல்களை ரசனைகளுடன் தகவல்களுடன் பகிரலாம் என நினைக்கிறேன் .
இளையராஜா மேலைத்தேய இசையை கலந்து கொடுத்ததால் அவருடைய மெலடியில் ரசனையோ இனிமையோ குன்றவில்லை . அவ்வாறான ஒரு பாடல் தான் இது . "ரோஜாவை தாலாட்டும் தென்றல்" அருமையான மெலடி. மிக மிக பிடித்த பாடலும் கூட .
Click here to listen
பந்துவராளி ராகத்தில் அமைந்த பாடல்( waltz பீட்) . நினைவெல்லாம் நித்தியா படப்பாடல் . வயலின் இசையால் பின்னணியில் அமைந்திருக்கும் . பாலசுப்ரமணித்தையும் ஜானகியையும் அருமையாக பாவித்திருப்பார் இளையராஜா .
"இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை!
இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை!"
தொடக்கம் முதல் இறுதி வரை உணர்வால் தொடும் பாடல் .
இந்த வரிகள் பாடிய விதமும் வைரமுத்துவின் வைர வரிகளும் அருமையிலும் அருமை . பின்னணியில் தனியான ஹம்மிங் சேர்த்திருப்பார் . இளையராஜாக்கு முக்கிய மயில் கல்லாக அமைந்த பாடல் .
=====================================================================
முன்னர் இளையராஜாவால் ஓடிய படங்கள் எத்தனையோ . இளையராஜாவை தமது படத்தில் சென்டிமெண்டாக முதல் பாடல் பாட வைத்தவர்கள் பலர் . இளையராஜா முதல் பாடல் பாடினால் படம் ஹிட் .
மற்றுமொரு அருமையானா வயலின் கையாளல் கமலின் ராஜபார்வை படத்தில் பின்னணி இசையில் பண்ணியிருப்பார் இளையராஜா . வயலினுடன் பல இசைக்கருவிகளையும் துணைக்கு அழைத்திருப்பார் . புல்லாங்குழல் , தபேல இசைகள் வயலினுடன் இணையும் இடங்கள் அருமை .
Click here to listen
இளயராஜாவின் சில பாடல்கள் சோலோவாகா இசை இல்லாமலும் பாடினால் இனிமையாக இருக்கும் . "இளமை எனும் பூங்காற்றை" குறிப்பிடலாம் . இந்த பாட்டில் வரிகள் கண்ணதாசனின் வரிகள் . ஆனால் கூடுதலாக கண்ணதாசன் இளையராஜாவுக்கு எழுதவில்லை . ஆனால் எழுதிய அனைத்தும் ஹிட் .
இளையராஜா எந்த வெளி நாட்டு நிகழ்ச்சிக்கு சென்றாலும் பாடும் பாட்டு " சொர்க்கமே என்றாலும் அது நம் நாட்டை போல வருமா " . இந்த பாட்டை கேட்டாலே தாய் மண்ணின் பெருமை விளங்கும் . வரிகளுக்காக கேக்கலாம் .
இளையராஜாவுக்கு வைரமுத்துவின் வைர வரிகள் உதவியாக இருந்தது . வைரமுத்து பாடலை கவிதை என்ற முறையில் இருந்து விலக்கி கொண்டு சென்றார் . அதுவரை இருந்து பாடல்கள் ட்ரெண்டை வைரமுத்து மாற்றினார் .
=========================================================================
நினைவுகளையும் எண்ணங்களையும் வருடும் இளையராஜாவின் இன்னொரு பாடல் தான் தென்றலே என்னை தொடு படத்தில் இடம் பெற்ற "தென்றல் வந்து என்னை தொடும் ஆகா சத்தம் இன்றி முத்தம் இடும் " பாடல் . இந்த பாடலை கேட்டு விட்டு பாருங்கள் மனதில் ஒரு தாக்கம் இருக்கும் . ஒரு நிறைவை காணலாம் . ஜேசுதாசின் காந்த குரல் , ஜானகியும் குரலுடன் இணைந்த பாடல் . இயற்க்கையுடன் காதலை இணைத்த பாடல் வரிகள் .
Click here to listen
2 .40 நிமிடங்களில் புல்லாங்குழல் உடன் ஹம்மிங் அருமை . "தூறல் போடும் இந்நேரம் தொழில் சாய்ந்தால் போதும் சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும் ", தெரிந்த பிறகு திரைகள் எதற்க்கு வரிகள் ஜேசுதாசின் குரலில் கணீரென ஒலிக்கும் .
இளையராஜா மெலடிக்கு மட்டும் அல்ல , வெறும் வார்த்தைகளை வைத்தேஓரம் போ, ஓரம் போ பாடலை அமைத்திருப்பார் . நகைச்சுவையை அறியாமலேயே மனதில் கொண்டு வரும் இசையை அமைத்திருப்பார் .
மேலும் பல எளிமையான சந்தோஷமான பாடல்களையும் நகைச்சுவையான பாடல்களும் இளையராஜாவின் வண்ணத்தால் உருவானது . ராப் இசை முறையையும் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது . அடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம் .