Monday, September 12, 2011

பிரபஞ்ச தேடல்(Cosmic ocean) - முடிவிலி- ஏலியன்ஸ்


சுற்றி சுற்றி பார்த்தா எப்பிடியும் ஏலியன்ஸ் க்கும்  எல்லாத்துக்கும் தொடர்பு எப்படியோ வருகிறது .  படித்தவற்றை தொகுத்தவற்றை இங்கே தொகுக்கிறேன் .

ஏலியன்ஸ் இருக்கிறதா இல்லையா என்பது பற்றிய வாதங்கள் நடந்துகொண்டிருக்கிறது . ஏலியன்ஸ் யாரும் நேரே பார்க்கவில்லை ஆனால் பறக்கும் தட்டு ? வீடியோக்களில் கூட கண்டு விட்டோம் .  ((UFO ) Unidentified flying object ) என அழைக்கப்படுகிறது. அதாவது கண்டுகொள்ளப்படாத பறக்கும் பொருள் . அது எங்கிருந்து வருகிறது ? உண்மையில் ஏலியன்ஸ் எனும்வேற்றுக்கிரக வாசிகளுடையதா ?

கற்பனைக்கு  எட்ட முடியாத உலகின் தொழில்நுட்பம் நிறைந்த மிக மிக ரகசியமான ஒருவரும் போக முடியாத இடம் தான் ஏரியா 51 . 1990 வரை அமெரிக்க அரசு இப்படியொரு இடம் இருப்பதையே மறைத்து வந்தது .  மிக பெரிய ரகசிய இராணுவத்தளம் . இது லெஸ் வேகஸ்( அமெரிக்காவின் லொஸ் என்ஜெல்சில் இருந்து 250 மயில்கள்  ) நகரத்திலிருந்து சுமார் 100 மயில்களுக்குள் அமைந்துள்ளது . இந்த இடத்தின் மேலே ஒரு விமானம் கூட பறக்க முடியாது . இன்று வரை யாரும் அங்கு சென்றது கிடையாது .  




1955 ,1960  களில் உருவாக்கப்பட்ட இந்த தளம் முன்னர் (NTC ) என அழைக்கப்பட்டது . இதில் 1 -30 வரையான பிரிவுகள் காணப்பட்டது . இந்த பெயர் பெற காரணம் சில வேளைகளில் 15 ஆவது தளத்துக்கு அருகில் அமைந்திருப்பதாக இருக்கலாம் . சகோதர தளமாகையால் 1 ஐயும் 5 ஐயும் ( 51 ) மாற்றி மாற்றி வைத்திருக்கலாம் . 

அப்பிடி என்ன தான் இங்கிருக்கிறது? மிக மிக நவீன தொழில்நுட்பப விமானங்கள் நவீன ஆயுதங்கள் , மிக மிக நவீன நமக்கு தெரியாத பல கண்டுபிடிப்புகள் இருக்கலாம் . ஏன் அனைவரையும் ஆச்சரியத்தில் வியக்க வைக்கும் பறக்கும் தட்டு இங்கிருந்தும் வரலாம்!! . வெளிவராத எவளவோ தொழில்நுட்பங்கள் அரசால் மறைத்து வைக்கப்பட்டுள்ளது .இவளவு ரகசிய தன்மைக்கு  காரணம் அது தான் . ஒரு வேளை  ஒளிக்கு இணையான வேகத்தில் அல்லது மிக வேகத்தில்  செல்லும் பொருட்களை கண்டு பிடிக்கும் முயற்ச்சி அங்கு நடைபெறுவதாக சில தகவல்கள் உத்தியோகபூர்வம் இல்லாது  கிடைத்துள்ளது . 


முக்கியமாக பல ஏக்கர்கள் பரப்பு கொண்ட பாரிய தளம் . அனேகமாக நிலத்துக்கு அடியில்  மிகப்பெரிய பல தளங்கள் இருக்கலாம் என சொல்லப்படுகிறது . இதுவரை யாரும்  செல்லமுடியாத இடத்து செய்மதி புகைப்படங்கள் தான் கிடைத்துள்ளது . இங்கு பணியாற்றுபவர்கள் சத்திய வாக்குறுதி(வெளியில் எவருக்கும் சொல்ல மாட்டோம் ) எடுத்து தான் கடமையாற்றுகின்றனர் .

முக்கியமாக ஏலியன்ஸ் வந்த பறக்கும் தட்டு கண்டெடுக்கப்பட்டு அதை பற்றிய பரிசோதனைகள் இடம் பெறுவதாக ஊகிக்கப்படுகிறது . சில வேளை இவர்களுடைய கண்டுபிடிப்பாகவும் இருக்கலாம் . ஆளில்லாத விமான கண்டுபிடிப்பில் மிகவும் மும்முரம்  காட்டி வருகிறது ஏரியா 51 .     இஸ்ற்றேல்த்(strealth )  ஜெட்டின் இன் ஆரம்ப கட்ட வடிமைப்பு 1977 இலேயே வடிவமைக்கப்பட்டிருந்தாலும் 1990 இல் அமெரிக்க அரசு உத்தியோகபூர்வமாக அறிவுக்கும் 
வரை  யாருக்கும் இப்படியொரு விமானம் தயாராவது தெரியாது .

 F117-A 



பின்னர்  தெரிய வந்த SR-71 Blackbird என்ற ஜெட் ஒரு மணித்தியாலத்தில் 2300 மயில்களை கடக்கும் . 90 ,௦௦௦ அடி உயரம் வரை செல்லக்கூடியது .

SR-71 Blackbird


TR3A Black Manta எனும் ஆளில்லாத விமானம் தாக்குதல் நடத்த ( இது வரை வேவு மட்டுமே செய்யப்பட்டது ) ஏரியா 51 இல் தயாராகுவதாக செய்தி . அதன் வேகம் ஒரு  மணித்தியாலத்துக்கு 3100 மயில்கள். தயாரிக்க திட்டமிட்டிருக்கும் விமானம் ஹைபெர்சொனிக் (சுமார் 4600 மயில் வேகம் ).   

அதி தொழில்நுட்பப  விமானங்கள்  அனைத்தும் உருவாக்கப்பட்டு பரீட்ச்சிக்கப்படும் இந்த ஏரியா  51 இன்னொரு அதி உச்ச தொழில்நுட்ப்பத்திட்க்கு தயாராவது தெரியவருகிறது . அது தான் பறக்கும் தட்டு . சிலர் பறக்கும் தட்டு இரவு வேளையில் அங்கிருந்து புறப்படுவதை அவதானித்து உள்ளனர் .


ஏலியன்ஸ் க்கும்  இந்த ஏரியா 51 க்கும் தொடர்புண்டா ? ஏலியன்ஸ் உலகம் ஒன்று அடித்தளத்தில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. அது முழுவதும் ஏலியன்ஸ் தொழில் நுட்பம் நிறைந்ததாக கூறப்படுகிறது . 


வழமையாக பறக்கும் தட்டுகள் செய்தி வரும் போது அதை நாசா மறுப்பதும் , வழமை போல அமெரிக்க அதை பூசி மறைப்பதுமே  வழமை . வழமை போல பலூன் என கூறுகிறது அமேரிக்கா .ஆனால் இது வரை ஏரியா 51 பற்றிய எந்த அறிவிப்பும் அமெரிக்க அரசால் வெளியிடப்படவ்வில்லை . 

இந்த ஏரியா 51 பற்றியும் ஏலியன்ஸ் க்கும் அதட்க்குமான தொடர்பு பற்றியும் அடுத்த பதிவில் இடுகிறேன் . மேலும் பல நவீன தொழில் நுட்பங்களும் காணப்படும் அடித்தள ஏலியன்ஸ் தொழில் நுட்பம் பற்றியதாகவும் அமையும்

இசை சுனாமி சாருவுக்கு

ஒருவரை குறை சொல்வது வழமையாக இன்னொருவருக்கு அல்வா சாப்பிடுவது போல . மாற்றுக்கருத்துக்கு எப்போதும் பிரபலம் உண்டு என தெரிந்த சிலர் செய்யும் வேலைகள் , அதுவும் பிரபல எழுத்தாளர்கள் செய்வது தாங்க முடியல்ல . இப்பிடி தான் பிரபலம் ஆகி இருப்பாங்க போல இருக்கு !! . இது வரை சிலருடைய கேவலமான கருத்துக்கு( மன்னிக்கவும் சாடலுக்கு ) மீள் பதிவு போட்டாலே பிடிக்காது காரணம் அது மேலும் அவர்களது கருத்தையும் அவர்களையும் பிரபலமாக்கும் என்பது எனது கருத்து .  ஆனாலும் இந்த எழுத்தாளர்(தனிப்பட்ட கருத்து எழுதுபவர் ) ஏற்க்கனவே பிரபலம் . தவறான கருத்தும் ரசனையாளர்களை சென்றடையலாம் . நிச்சயமாக இதற்க்கு பதில் எழுதியே ஆக வேண்டும் என்று எழுதும் பதிவு .


இது அவரை சாடும் பதிவல்ல .அவர் பதிவை பற்றியே பதில் எழுதியிருக்கிறேன் .
அதுவும் இசையை பற்றி கதைச்சிட்டார் . இதுக்கு மேலயும் பொறுமையா இருக்க முடியேல்ல . மனுஷன் விட்டா ஒபாமா , அப்துல் கலாமுக்கே கடிதம் எழுதுவார் போல .

கீழே உள்ள பதிவை வாசித்துவிட்டு எனது பதிவை தொடருங்கள் . முதலில் இதை வாசிக்கவும் .
சாரு  நிவேதிதாவின்  பதிவு 




ஒரு கால கட்டத்தில் இளையராஜாவின் இசை அதன் சத்தை  இழந்து வெறும் சத்தமாக மாறிய போது
 நீங்களும் இளையராஜாவைப் போல் பென்ஷன் வாங்குவோர் பட்டியலில் சேர்ந்து விடுவீர்களோ என்று நினைத்தேன்.  


இளையராஜா இசை பற்றி என்ன சேர் தெரியும். அவருடைய பாட்டில் நவீன காலத்துக்கு ஏற்றது போல பேஸ் கூடியது . அதை தான் சத்தம் என்கிறீர்களோ   ? ஏன் காதலுக்கு மரியாதை , கண்ணுக்குள் நிலவு, ஹேராம்  பாட்டெல்லாம் கேட்கவில்லையோ ? ரகுமானுக்கு பிந்திய காலத்தில் வந்தவையே அவை . இளையராஜா நவீன காலத்துக்கு மாற முயற்ச்சி செய்திருப்பது இந்த பாடல்கள் கேட்டால் தெரியும் . 


வேணாம் இளையராஜா பற்றி போனால் எழுதி  கொண்டே போவேன் . ரகுமான் விஷயத்துக்கு வருவோம் .


உங்களிடமிருந்துதான் தன்னடக்கம் என்ற பண்பைக் கற்றேன்.
உண்மையாவா சார் ? ரகுமான் தன்னை பற்றி தானே புகழுவதில்லை. தெரியும் தானே  சார் ?


நான் கடப்பா சென்று பெட்டா தர்காவில் அடங்கியிருக்கும் ஔலியாவை தரிசித்து வந்தேன்


யாராவது கேட்டாங்களா இப்ப. அப்போ நித்தியானந்தா நிலைமை ? 


இரண்டு ஆண்டுகள் கழித்து  தமிழில் முதல்முதலாக வந்த ’விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் உங்கள் இசை மிகவும் பலவீனமாக இருந்தது.  ரோஸானா என்ற பாடலைத் தவிர மற்ற பாடல்கள் கேட்கும்படியாகவே இல்லை.


ஹோசானா பாடல் சாதாரண ரசனையாலர்களுக்கும் பிடிக்கும் பாடல் தான் .
நீங்கள் ஷாஜியின் பதிவில் இருக்கும் கருத்தை அப்பிடியே பிரதி பலித்திருப்பது போல தெரிகிறதே ? உங்களுக்கு பிடித்தவர் தான் . முதல்ல நீங்க போய் பாட்டை கேட்டு விட்டு வந்து எழுதுங்கள் .


விண்ணை தாண்டி வருவாயா பாடல்கள் கொஞ்சம் உயர்தரம் . ரசனையுடன் கேட்டாலே அனைத்து பாடல்களும் தரம் . கொஞ்சம்  உயர் தரத்தில் கொடுக்கப்பட்ட பாடல்களே உங்களுக்கு விளங்கவில்லையே !! இதிலை உலகத்தரம் வேணுமாம் .. (லொள்ள பாரு )


அனைத்தும் பல்லவி சரணம்  என்ற சாதாரண தமிழ் இசை முறையை மாற்றி அமைத்த பாடல்கள் .


விண்ணைத்தாண்டி வருவாயா என்ற கார்த்திக் பாடிய பாடல் தனியே கிட்டாரின் திறமை . ரகுமான் இசையை இம்ப்ரோவயிஸ் பண்ணுவதில் வல்லவர் .  கோட்ஸ் மாற்றம் அருமை . ஜாய்ஸ் வகை .


அன்பில் அவன் என்ற பாடல் டெக்னோ இசையை கொண்டது . டெக்னோ இசை ரசிகர்களுக்கு பிடிக்கும் .அதுவும் கோரசுடன் அருமையாக இருக்கும் . ரகுமானின் சவுண்ட் இஞ்சினியர் புகுந்து விளையாடி இருப்பார் .


கண்ணுக்குள் கண்ணை  கீஸ் , கிடார் , வயலினின் பயன்பாடு . என தனியே வேண்டும் என்றாலும் பதிவு போடலாம் .


ஆரோமலே  என்ற பாடல் ரொக்கும் நமது இசையும் கலந்த பாடல். இவ்வாறான பாடலை மலயாள இசை அமைப்பாளர்கள் உருவாக்குவதே கடினம் . உயர்ச்தாயியில் பாட வைத்து கிடார் இசையையும் எமது இசையையும் கலந்திருப்பார் . 


விண்ணைத்தாண்டி வருவாயா பாடல் விமர்சனமாக இந்த பதிவு அமையக்கூடாது  என்பதால் சுருக்கமாக  வழங்கியுள்ளேன் . 


பாடல் விமர்சனப்பதிவு(பழைய பதிவு  ) கிளிக் 






ரகுமானுக்கெண்டு ஒரு தனி பாணி உண்டு . அவரை அவர் பாதையில் செல்ல விடுங்கள் . மற்றயவர்களால் ரகுமானை போலவோ அல்லது ரகுமானால் மற்றவர்கள் போலவோ இசை அமைக்க முடியாது . 
உலக அரங்கில் நமது இசையை அரங்கேற்ற முயற்ச்சிக்கும் அவர்களிடம் நீங்கள் புத்தகத்தில் மட்டுமே  படித்த உலக இசை அமைப்பாளர்களை உதாரணம் காட்டுவது என்ன நியாயம். 


ரகுமான் திருக்குறளை அறிமுகப்படுத்தி இருப்பார் மன்னிப்பாயாவில் , இளையராஜா தேவாரத்தை அறிமுகப்படுத்தி இருப்பார் தளபதி பட பாடலில் . இருவரும்  எமது இசையையும் மேலைத்தேய இசையையும் கலந்து கொடுப்பதில் வல்லவர்கள் . அவர்கள் நோக்கமும் வேறு .


   ’பெஹனே தே’ பாடலின் கடைசியில் வரும் கோரஸ் சகிக்க முடியாததாக இருந்தது.  இதே போன்ற ஒரு கோரஸை ’குலால்’ படத்தின் ’ஆரம்ப்’ என்ற பாடலில் நீங்கள் கேட்கலாம்.


குலால் திரைப்பட ஆரப் பாட்டில் இதே போல கோரஸ் கேக்கவில்லையே. தேவையிலாமல் ஒப்பிட வேண்டாம் . அத்தகைய இசை குலால் படத்திற்க்கு தேவைப்பட்டிருக்கலாம் . ராவணா கதைக்கு இப்படியான இசை தேவைப்பட்டிருக்கலாம் . குழல் இசையில் அரச கால வாத்திய பயன்பாடு இருக்கும் . இது நவீன கால ராவணன் ,இதற்க்கு தேவைப்பட்டிருக்காது .


பியுஷ் மிஸ்ரா , விஷால் பரத்வாஜ் போன்றோரின் பாணி வேறு , தயவு செய்து ஒப்பீட்டை நிறுத்துங்கள் . 
ரகுமானுக்கு தெரியாத இசையோ அல்லது இசை அமைப்பாளர்களோ உங்களுக்கு தெரியும்  என்று எண்ணம் போல. என்ன கொடுமை ? 


 ராவணில் நீங்கள் மிக பலவீனமான ஆட்டத்தை ஆடியிருக்கிறீர்கள்.
ஆகா .இவருக்கு யாராவது வூபர் செட் வாங்கி குடுங்கப்பா . ஏதோ ரேடியோவிலை கேட்டிட்டு  வந்து 
எழுதிறார் போல . ரகுமானின் சவுண்ட் என்ஜினியரை  மறந்திட்டீங்க  போல . போய் ஹோம் தியேட்டர் இல்லாட்டி தரமான சத்தத்தில் கேளுங்க . நீங்க எந்த வகை பாட்டுகளை நல்ல பாடல்கள் என்கிறீர்கள் என்று தெரியவில்லை . பேஸ் கூடிய பாடல்கள் சரியில்லை என்கிறீர்கள் போல .
கூடுதலாக ரகுமானின்  திறன் பாடகர்களை சரியாக பயன்படுத்துவார் . இசையை விடுத்து . கட்டா கட்ட வும் பீரா பிராவும் கேட்டதில்லையோ ? டிம்பெர்லான் போன்றோரின் இசையில் வித்தியாசமான சத்தங்கள் பின்னணியில் இருக்கும் . பின்னியில் ஒலிக்கும் சிறு சிறு சத்தங்கள் தான் ரகுமானின் பலமும் .


பியுஷ் மித்ரா புகழ் பாடும் நீங்கள் லகான் பாடல்கள் கேட்டதில்லையோ ? லகான் பாடல்களில் புரட்ச்சியுடன் கண்ணீரும் வரும் .


உங்களுடைய திறமை வெளிப்பட தமிழை விட இந்தி சினிமா அதிக இடம் கொடுத்தது


இவாறு தரம் குறைந்த விமர்சனங்களை பண்ணினால் எப்படி வரவேற்ப்பு கிடைக்கும் . விண்ணை தாண்டி வருவாயா அனைத்து பாடல்களும் ரகுமான் தமிழுக்கு வழங்கியது . இப்போது என்ன செய்கிறீர்கள் சேர் . ஒரு வேளை  இப்படியான எழுத்தாளர்கள் ஹிந்தியில் இல்லை போல .


 ஷாப் ஹாஸ்னி (அல்ஜீரியா), நான்ஸி அஜ்ரம் (லெபனான்), ரிக்கார்தோ மொந்தனர் (அர்ஜெண்டினா), பின் நவீனத்துவ இசைக்கு ஐயானிஸ் ஸெனகிஸ் (க்ரீஸ்) 


இவங்கட  பாடல் எல்லாம் உண்மையிலேயே நீங்கள் கேட்டிருக்கிறேர்களா ? ஏதாவது புத்தகத்தில் இருந்து  சுட்டதா ? அவர்கள் டிராக் வேறு . ரகுமான் ரகுமான் தான் .ரகுமானாகவே  இருக்க விடுங்கள் .


படிப்படியாக தனக்கென்று ஒரு பாணியை உருவாக்க ரகுமானுக்கு தெரியும் . 
சாதரணமாக கோட்ஸ்  மாற்றி இம்ப்ரோவிசிங் பாடல்களே விளங்கவில்லை . இதிலை எங்கிருந்து இவங்க இசை உங்களுக்கு விளங்க போகுது எண்டு தெரியேல்ல.


ரகுமான் அடிக்கடி சொல்லும் ஒன்று இசைக்குள் இறங்குங்கள் அப்போது தான் எவளவு பெரிய கடல் என்று தெரியும். நான் இன்னும் படித்துக்கொண்டிருக்கிறேன் என்றார் . மற்றும் மேலைத்தேய படங்களில் பின்னணி இசை வேறு பாடல்கள் இசைக்கு வேறு இசையமைப்பாளர் . ஒரு படத்துக்கு பின்னணி இசை போடும் நேரத்துக்கு 4 பட பாடல்கள் போடலாம் என்பார் . அவளத்துக்கு பின்னணி இசை முக்கியத்துவம் பற்றி கூறியிருப்பார் . தமிழ்  சினிமா அப்படியா ??

12 B திரைப்படமும் பார்க்காத உலகமும்

குப்பைகளுக்குள் முத்து போல வந்த சில அருமையான தமிழ் திரைப்படங்கள் , கிட்டத்தட்ட நாம் வாழ்க்கையில் அன்றாடம் எதிர்கொள்ளும்  சில  தியரிகளை வைத்து வந்த படங்கள் சரியான விளக்கமின்மை காரணமாக பெரிதாக பேசப்படவில்லை .

அவ்வாறான படங்களில் தசாவதாரம்( வண்ணத்து பூச்சி விளைவு ) , அதாவது இந்த உலகில் நடக்கும் ஒவ்வொரு விடயங்களுக்கும் இடையில் ஒரு தொடர்புண்டு, ஒரு சிறிய மாற்றம் பெரியதொரு விளைவை கொண்டு வரும் என்கிறது அந்த தியரி .கயோஸ் தியரியை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது . ஒரு வண்ணத்து பூச்சியின் இறக்கையின் படபடப்பு ஒரு பெரிய சூறாவளியையே உருவாக்கலாம் என்கிறது கயோஸ்  தியரி . 

 இன்னொரு அருமையான பேசப்படாத படம் தான் 12 B . அநேகருக்கு படம் விளங்கியிருக்க வாய்ப்பில்லை . போதிய விளக்கமின்மை காரணமாக இருக்கலாம் . விளக்கம் போதாது என்றும் கூற முடியாது . ஒரு படத்தில் வெறுமனே தியரியை விளங்கப்படுத்திக்கொண்டு இருக்க முடியாது .ஒரு வேளை நம்மவர்கள் ( பெரும்பாலான சதவீதம் ) இன்னும் அந்த நிலையை அடையவில்லையோ என்னவோ . அநேகரின் கருத்து விமர்சனங்கள் கூட அந்த படம் நேரத்தின் முக்கியத்துவம் கூறுவதாக மாத்திரம் அமைகிறது என நினைக்கின்றனர் . நிச்சயமாக  இல்லை .முடிந்தவரை விளக்க முயற்ச்சிக்கிறேன். வாசித்து விட்டு படத்தை மீண்டும்  பார்த்தால் விளங்கும் .



12 B திரைப்படம் எடுத்துக்கொண்ட தியரி தான் ஐங்ஸ்டாயினின் ஸ்ட்ரிங் தியரி (String theory ), நேர பயணம்  அல்லது சமாந்தரமான உலகம் எனலாம் . மிக மிக ஆச்சரியமான தியரி தான் .

நாம் வாழும் உலகம் ஒன்றல்ல . முடிவிலி உலகங்கள் உண்டு .எமது வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நம் கண்ணுக்கு தெரியாமல் நம்முடனேயே நகர்கிறது . நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர் மாறு இருக்கிறது . நீங்கள் ஒரு பாதையால் செல்கிறீர்கள் என்றால் , அந்த பாதைக்கு  எதிராகவும் நீங்கள் செல்வது போல ஒரு நிகழ்வு உங்கள் கண்ணுக்கு தெரியாமல் நடக்கும் .உங்கள் காதலி காதலை ஏற்றுக்கொள்கிறாள் என்றால் , ஏற்க்காமல் இருப்பது போல இன்னொரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் . ஆனால் அது முடிவிலி .ஒரு காரியத்தை செய்யும் நிகழ்வு செய்யாத நிகழ்வு என எம்முடனேயே இந்த நிகழ்வுகளும் நகர்கிறது .
  

நாம் பிரதிகளாக , எமது நிகழ்வுகள் கிளைகளாக  உருமாறி எமக்கு சமாந்தரமாக எம்முடனேயே  எமது இன்னொரு(பல)  வாழ்க்கை நிகழ்கிறது .
சில உதாரணங்கள்  சொல்கிறேன் 

சில இடங்களால் நீங்கள் செல்லும் போது அந்த இடங்கள் எப்போதோ பார்த்த இடங்கள் போல இருக்கும் .ஏற்க்கனவே அந்த இடத்தில் இருந்த ஒரு உணர்வு . சில செயல்கள் நாம் ஏற்க்கனவே செய்து முடித்தவையாக இருக்கும் .சிலரை எங்கேயோ பார்த்த உணர்வும் தோன்றும் . காரணம் எல்லா நிகழ்வுகளுக்கும் உள்ள தொடர்பு . நான் கூறியது போல இன்னொரு கோணத்திலும் நீங்கள் நகர்கிறீர்கள் .

சில நேரங்களில் நீங்கள் சில பொருட்களை தொலைத்துவிட்டு தேடுவதுண்டு , ஆனால் அது கிடைக்காது . போட்ட இடமும் தெரியும் ,அங்கே தேடினாலும் கிடைக்காது . ஆனால் பல காலங்கள் கழித்து அதே பொருள்  கிடைக்கும் .

சிலர் உங்களை எங்கேயோ  பாத்திருக்கேன் என்று கூட கேட்டிருப்பார்கள் . அதற்க்கான விடைகள் தான் இந்த தியரியில் .


அந்த தியரியை பிரதிபலிக்கும் படம் தான் 12 B . சாதாரண இளைஞனின்(ஷியாம் ) வாழ்க்கை ஒரு பஸ்ஸை தவறவிடுவதால் எவ்வாறு போகிறது எனவும் , அதே நபர் பஸ்ஸில் ஏறி இருந்தால் அவரின் வாழ்க்கை எவ்வாறு அமையும் என காட்டுவது தான் அந்த படத்தின் கரு . அதாவது இதில் அனைவருக்கும் விளங்காத மறந்த விடயங்கள் என்னவென்றால் இருவரின் வாழ்க்கையும் சமாந்தரமாக தான் செல்கிறது . ஒரே இடத்தில் இருவர் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள் நடக்கும் .  

ஒரு ஷியாமுக்கு(இண்டர்வியூக்கு  பஸ்ஸை பிடித்த ) வேலை கிடைக்கிறது , ஜோதிகாவுடன் காதலில் தோற்கிறார் , வேலை  செய்யும் இடத்தில் சிம்ரனை சந்திக்கிறார் . மற்றைய ஷியாம்(பஸ்ஸை தவறவிட்ட ) வாழ்க்கையில் தோற்றாலும் ஜோதிகாவுடன் காதலில் ஜெயிக்கிறார் . ஆனால் ஜோதிக கண்ணுக்கோ அதே ஷியாமின் கண்ணுக்கோ மற்றைய ஷாம் தெரிய மாட்டார் , ஆனால் நிகழ்வுகளில் தொடர்பு இருக்கும் .

படத்தின் ஆரம்பத்தில் மருத்துவமனையில் சிம்ரனை(கவலையில் வந்து அழுகையில் ) சந்திக்கும் ஷியாம் . படத்தின் இறுதியில் அதே போல ஒரு நிகழ்வில் மீண்டும் அதே இடத்தில் சிம்ரனை பார்ப்பார் . ஆனால் சிம்ரன் முதல் அழுதமைக்கு காரணம் அதே ஷியாமின் இன்னொரு நிகழ்வு இறந்து கிடப்பது . அதாவது அதே ஷியாம் இறந்து கிடப்பார் . ஆனால் ஜோதிகா பின்னால் செல்லும் ஷியாமை கடந்து தான் சிம்ரன் செல்வார் . ஆனால் சிம்ரன் கண்ணுக்கு மற்றைய  ஷியாம் இருப்பது தெரியாது . கண்ணுக்கு தெரியாத இன்னொரு ஷியாம் உயிரோடு இருக்கிறார் .


பல இடங்களில் நடை பெறும் நிகழ்வு , உதாரணமாக சண்டை இடம் பெறும் இடங்கள் ,  இரு ஷாமும் மாறி மாறி ஜோதிகாவை சந்திக்கும் இடங்கள் என்பன பொதுவாகவே இருக்கும் . அது தான் அந்த தொடர்பு முறை . ஒவ்வொரு நிகழ்வுக்கும் பல பிரதிகள் இருக்கிறது .


இந்த தியரியை விளக்க தனிப்பதிவு தான் போட வேண்டும் . ஆனால் இதன் அடிப்படையாவது விளங்கியிருக்கும் .சுருக்கமாக விளக்கியுள்ளேன் . தவறவிட்டவர்கள் , விளங்காமல் விட்டவர்கள் இந்த படத்தை மீண்டும்  பாருங்கள்.  நிச்சயம் விளங்கும் . 

நல்ல படங்களை தந்த ஜீவா நம்முடன் இல்லை . உன்னாலே உன்னாலேயில்  ஆண் பெண் பிரச்சனைகளை சரியாக காட்டி இருப்பார் . இரண்டும் அருமையான படங்கள் . ஐங்ஸ்டாயினும் தியரிகளை முடிக்காமல் சென்றதும் கவலை தான் .

நல்ல படங்கள், வித்தியாசமான படங்கள்  நிச்சயம் மக்களை சென்றடைய வேண்டும் .

கடவுள் (மிஸ்)- மிக்ஸ் ஜோக்ஸ்

தொடர்ந்து சீரியஸா எழுதினா சில வேளை உங்களுக்கே போர் அடிச்சிடும் . அதனால கொஞ்சம் நகைச்சுவையோட .. ஆனா சிந்திக்கவும் தான் .




பெருசு :-இப்ப எல்லாம் இந்த பசங்க கடவுளை கும்பிட போய் பண்ணுற கொடுமை இருக்கே . 
அன்னைக்கு ஒரு நாள் நான்  சர்ச் ல இருக்கும் போது ஒரு பய பாதேருக்கு முன்னாலேயே சிகரட் குடிச்சிட்டு இருந்தான் . நான் அப்பிடியே ஷாக் அஹீட்டேன் .எனக்கு வந்த அதிர்ச்சீல என் கைல இருந்த பியர் பாட்டில் விழுந்தது கூட எனக்கு தெரியேல்லன்னா பாருங்களன் . 
==================================================================================
இதெல்லாமா கடவுளால நடக்குது !!!


வயது போன ஒரு ஐயா மருத்துவரிடம் உடலை மாதமொரு முறை தொடர்ந்து போய் பரிசோதித்து இருக்கிறார் . அவரை பரிசோத்தித்த மருத்துவர்: - " உங்களுக்கு உடலில் ஒரு குறையும் இல்லையே , நீங்க மனதளவில் நன்றாக சந்தோஷமாக  இருக்கிறீர்கள் போல ? "
அதற்க்கு பதில் அளித்த ஐயா :-  "ஆம் கடவுளும் நானும் மிகவும் நெருக்கம் . கதவுக்கும் எனக்கும் இடையில் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு . நிறைய ஆச்சரியங்கள் எனது வாழ்வில் . நான் இரவு வேளையில் எழும்பி கதவை திறந்து பாத்ரூம் போகும்  போது  தானவே லயிட் வருது . அப்புறம் தானாவே ஆப் ஆகுது ." 


வாவ் என்று மருத்துவர் கூறிவிட்டு அனுப்பிவிட்டார் . 
ஒரு நாள் மருத்துவர் பொறுக்க முடியாமால் ஐயாவின் வீட்டுக்கு கால் எடுத்து அவர் மனைவியிடம் " உங்கள் கணவர் கடவுளுடன்  நெருங்கிய தொடர்புடையவர். இரவில் பாத்ரூம் செல்லும் போது தானாகவே லயிட் ஆண் ஆகுதாம் அப்புறம் ஆப் ஆகுதாம் . நான் அவருடன் பழகி ஆன்மீக வழியில் செல்ல வேண்டும் . அவர் இருக்கிறாரா ? "


அதற்க்கு அவர் மனைவி " ஏன் டாக்டர் உங்களுக்குமா அறிவில்லை . அந்த மனுஷன் இரவிலை பிரிட்ஜ்  ஐ திறந்து ஒவ்வொரு நாளும் பாத்ரூம்  மாதிரி நாசம் பண்ணி வைக்கிது எண்டு நானே கவலேல இருக்கன். 




==============================================================================================
கடவுளாவே இருந்தாலும் எங்க இதுக்கு தீர்ப்பு சொல்லுங்க 


மூன்று பேர் இறந்து போய் மேல் உலோக வாசலில் அனுமதி எடுக்கும் இடத்தில் போய் ஒரே நேரத்தில் நின்றனர் . அன்றைய தினம் மேல் உலோகம் ஹவுஸ் புல் . அதனால் ஒருவரை தான் எடுக்க முடியும் எனவும் யார் கொடூரமாக  கொலை செய்யப்பட்டாரோ அவருக்கே இடம் உண்டு எனவும் கடவுள் கூறிவிட்டார் .


முதல் மனிதன் :- எனது  மனைவிக்கும் இன்னொருவனுக்கும் நிறைய நாள் தொடர்பு இருக்கும்னு  எனக்கு நிறைய காலமாக சந்தேகம் அதனால திடீரெண்டு ஒரு நாள் எண்ட அபார்ட்மென்ட்டுக்கு(25 ஆவது மாடி )  போய் , வீட்டுக்குள்ள நுழைந்தேன் . மனைவி தனியாக இருந்தாள் . இருந்தாலும் மற்றையவன் ஒளிஞ்சிருக்கலாமோ என்ற சந்தேகத்திலை போய் பெல்கனியை எட்டி பார்த்தா அங்க ஒருத்தன் தொங்கிக்கொண்டு இருந்தான் . கோபத்தில்  அவனை அடித்தேன் உதைத்தேன். அசையல்ல. ஓடி வந்து சுத்தியலால கைக்கு அடிச்சன் அப்ப முடியாம 25 ஆவது மாடீல இருந்து கீழ விழுந்திட்டான். இருந்தாலும் பயபுள்ள எஸ்கேப். குப்பைக்கு மேல விழுந்திட்டான் . விடுவனா !!  ஓடி போய் கிட்ச்சென்ல இருக்கிற பிரிட்ஜ் ஐ தூக்கி கொண்டு வந்து அவன் மேல போட்டு கொன்னுட்டன். அந்த ஆத்திரமும் கோபமும்  எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஸ்பாட்லயே அவுட் .





இராண்டவதா ஒருத்தன் வந்தான் :-  கடவுளே நான் இவர் இருக்கும் வீட்டின் இருபத்தியாறாவது மாடியில் குடியிருப்பவன் . நான் தினமும் காலையில் பல்கனியில் உடல் பயிற்சி செய்வேன். அப்படி செய்யேக்க  தவறி  மாடீல இருந்து கீழ விழுந்திட்டன். இருந்தாலும் அதிஷ்டத்தால 25 ஆவது மாடிய கெட்டியா பிடிச்சிட்டன்.  இருந்தாலும் நீண்ட நேரம்  நிக்க முடியாது எப்படியும் கீழே  விழுவேன்  எண்டு தெரியும் . அப்ப தான் இந்த மனுஷன் வந்தார் . சரி நம்மளை காப்பாத்த தான் வாறானோ எண்டு நம்பி இருந்தா , என்னை அடிச்சு விழுத்த பாத்தான் . அதுவும் முடியேல்லன்னு சுத்தியலால கைக்கு அடிச்சு விழுத்த  பாத்தான் . அப்போ வலி தாங்கமா கீழ விழுந்து எஸ்கேப்  ஆகீடன் . சரின்னு இருந்தா மேல இருந்து திடீர்ன்னு ஒரு பிரிட்ஜ் என்ற தலை மேல வந்து விழுந்து நான் அவுட் .




மூன்றாவதா வந்தவன் இதே விஷயத்தை சொல்லி . அந்த பிரிட்ஜுக்குள்ள டிரெஸ் இல்லாம ஒழிஞ்சு இருந்தது நான் தான்யா !!!! .. 
==============================================================================================
ஆசிரியர் :- " பொய் சொல்பவர்களை பற்றிய பாடம் நாளைக்கு எல்லோரு 14 ஆவது பாடத்தை பார்த்து தயார் செய்து கொண்டு வரணும் " என்று சொல்லி விட்டார் . 
அடுத்த நாள் வந்து யார் யார் பாடத்தை முதலே பார்த்து கொண்டு வந்தது என்று கேட்க்க , அரைவாசி பேர் கையை உயர்த்தினர் .


ஆசிரியர் கையை உயர்த்தாதவர்களை வெளியே போக சொல்லி விட்டு , கை உயர்த்தியவர்களுக்கு தான் பாடம் தேவை , ஏன் ஏன்னா 14 ஆவது பாடமே புத்தகத்திலை இல்லை ..!! ஓஓஒ 

பெண் அடிமைத்தனமும் சமூக அடிமைத்தனமும்



பெண் அடிமைத்தனமும் அதன் காரணத்தையும் மற்றும் எம் சமூக தவறுகளையும் அடிப்படையில் இருந்து இனம் காணலாம் என்ற அடிப்படையில் எழுதும்  பதிவு . இந்த முயற்ச்சிக்கு உங்கள் வரவேற்ப்பு தேவை .
=========================================================================

மாதம் தோறும் ஏன் வாரம் தோறும் கூட பெண் விடுதலை பற்றிய ஆக்கங்கள் பெண்களாலும் பலராலும் எழுதப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது . அது ஏதாவது மாற்றத்தை ஏற்ப்படுத்தியதா  என்று பார்த்தால் பெரிதாக இல்லை என்றே சொல்ல வேண்டும் . காரணம் வெறும் பேச்சிலும் எழுத்திலும் மட்டுமே பெண் விடுதலை இருப்பது .

எந்த ஒரு விடயத்தையும் அடிப்படையில் இருந்து பார்க்கும் போது இந்த விடயத்தையும் அடிப்படையில் இருந்து பார்க்கத்தோன்றும் . பெண் விடுதலை எனப்படும் போது அது நிச்சயம் அவள் திருமணமாகிய பின்பு தான் போகிறது எனும் கருத்து அனைவரிடமும் காணப்படுகிறது . கணவரால் அடிமைப்படுத்தப்படுகிறாள் , துன்புறுத்தப்படுகிறாள் , சுதந்திரம் கொடுக்கப்படுவதில்லை என்றெல்லாம் ஒரு கருத்து உலாவுவதில் சந்தேகங்கள்  இல்லை .

இதன் ஆரம்பம் என்ன என்று பார்த்தால் ஒரு பெண்ணால் தான் முதன் முதலாக ஒரு பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள் . அது வேறு யாருமல்ல. அவளின் தாய் , அவளின் பாட்டியாக கூட இருக்கலாம் . பெண் பிள்ளை மாதிரி அடக்க ஒடுக்கமாக வீட்டில் இரு என முதல் அதட்டல் வீட்டில் இருந்தே ஆரம்பம் . பெண் பிள்ளைகள் கண் படும் படியே " நீ பெண்ணாக பிறந்து தொலைத்து விட்டாய்" என பேசுவது ,ஆண் பிள்ளைகளை உயர்த்தி வைப்பது என அடிப்படைகளே பிரச்சனையின் ஆரம்பம் . பெண் பிள்ளையானால் பொருள் கொடுக்க வேண்டும் , வீட்டிற்க்கு பாரம் என ஆரம்பத்திலேயே அவள் மீது ஒரு வித அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது .

ஏன் ஒரு தாய் பெண்ணாக இருந்து கொண்டு இப்படி செய்கிறாள் என பார்த்தால் இன்னொரு விடயம் தடுக்கிறது . அதாவது  எமது சமூகத்தில் இருந்து நாம் இன்னும்  விடுதலை பெறவில்லை என்பது அவளுக்கு புரிகிறது . அதென்ன சமூக விடுதலை என நீங்கள் கேட்கலாம் . ஒரு பெண்ணை  சுதந்திரமாக விட்டால் இன்னொரு பெண் அல்லது தாய் அல்லது சொந்தக்கார்களால்  எவ்வாறு பேசப்படுவாள் என்பது நம் சமூகத்துக்கு தெரியும் .

இவ்வாறான அடிப்படை பிரச்னைக்கு காரணமே சமூகம் இன்னும் விடுதலை பெறாமை . இப்போது கூட நாம் வேறு ஒருவர் ஏதேனும் சொல்லி விடுவாரோ சமூகம் எம்மை இழிவாக பார்க்குமோ என சமூகத்துக்காகவே வாழ்ந்து வருகிறோம் . ஆனால் அதே சமூகம் நமக்கு என்ன தந்தது என்று பார்த்தால் ஒன்றுமில்லை .

இதில் முக்கிய பங்கான ஆண் வர்க்கத்தை ஒத்துக்கி விட்டு பேசி விட முடியாது . இந்த சமூகம், உறவுகள் என்னவாக இருந்தாலும் ஆணின் தலைமைத்துவத்தில் இயங்குவதை புறம் தள்ள முடியாது . ஆண்களும் கூட எழுத்தில் , பேச்சில் மட்டுமே பெண் விடுதலையை சுமக்கின்றனர் . தனக்கென வரும் பொழுது அது இருப்பதில்லை , முக்கியமாக தன் மனைவி என வரும் போது தனக்கு கீழே இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியே நிற்க்கிறது .

எமது சமூகத்தில் வயது குறைந்த பெண் மற்றும் வயது கூடிய ஆண் திருமண முறை காரணம் என்னவென்றால் வயது கூடிய ஆண் எடுக்கும் முடிவை வயது குறைந்த பெண் தலை குனிந்து ஏறக்க வேண்டுமாம் . எம் சமூகத்தில் இப்போது தான் ஆண் பெண் நடப்பு வளருகிறது இருந்தாலும் சில நண்பர்கள் கூட , முக்கியமாக ஆண் நண்பர்கள் பெண்களின் உணர்வுகளை புரிந்து கொளவதில்லை . தவறான புரிந்து கொள்ளல் ஆண் பெண் நடப்பை பாதித்து அவளை வெறுக்கும் படி ஆகி விடுகிறது .

பெண் அடிமைத்தனத்தை ஆதி காலத்தில் இருந்து யாரோ பரப்பிய கட்டுக்கதைகள் கொண்டு மதங்கள் அவற்றை ஊதி  பெரிதாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது என்பது உறுதி . இந்து சமயத்தில் பெண்கள் சில காலங்களில் தீண்டத்தகாதவர்களாக நியதி இருக்கிறது . இருந்தாலும் பெண்ணுக்கு சக்தியாக சம உரிமை வழங்கிய மதம் பின்னர் வந்தவர்களால் திரிபுபடுத்தப்பட்டது .இஸ்லாமிய சமயத்தில் பெண் அடிமைத்தனம் முழுதாக தனது ஆதிக்கத்தை செலுத்தி உள்ளது .கிறிஸ்தவ மதமோ பெண் ஆணவள் ஆணுக்கு சேவகம் செய்ய வேண்டும் என்று இயேசு கிறிஸ்து கூறியதாக இயேசுவை காரணம் காட்டி கூறுகிறது . மதங்களும் ஆண்  ஆதிக்க வாதிகளால் பெண்களை அடிமைப்படுத்த ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது .

தற்ப்போதைய கல்வி அறிவும் , மனிதனின் பகுத்தறிவு வளர்ச்சியும் சமூகத்தில் இருந்து விடுதலையை பெற்று வருகிறது . ஆனாலும் எழுத்திலும் பேச்சிலும் மாத்திரம் பெண் அடிமை பேச்சு இல்லாமல் நாம் நம்மை சுற்றி  இருக்கும் சமூகத்தில் இருக்கும் பெண்களுக்கு எம்மால் முடிந்த சுதந்திரத்தை கொடுக்க வேண்டும் . ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் கொடுக்கும் சுதந்திரம் உலகையே மாற்றும் . நம் சமூகத்திடம் இருந்தும் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் இயங்குவதற்கு  சுதந்திரம் பெற்றால் பெண் அடிமைத்தனம் தானாக ஒழியும் .

பெண் அடிமைத்தனம் மற்றும் சமூக அடிமைத்தனத்தின்  மிக முக்கிய பங்காளி சினிமா. சமூக அடிமைத்தனம் என்று பார்த்தால் ஆண்களும் அடிமைகளே ...