Sunday, May 11, 2014

விகடன் மேடை - கமல்ஹாசன் பதில்கள்









பொன்விழி, அன்னூர்.


''பெரியாரை உங்களுக்கு அறிமுகம் செய்தவர் யார்?''


''முதலில் என் தந்தையார்... கடுமையான வாய்மொழி விமர்சனத்தின் மூலம். பின்பு, என் மூத்த சகோதரர் சாருஹாசன்... பகுத்தறிந்த பாராட்டுக்களின் மூலம்.


பெரியார் என்ன சொல்கிறார், ஏன் அப்படிப் பேசுகிறார் என்று எடுத்துச் சொல்ல யாரும் இன்றி நானாக உணர ஆரம்பித்தபோதுதான், உண்மையான முதல் அறிமுகம் அவருடன் ஏற்பட்டதாகவும் கொள்ளலாம்!''





புதூர் பாலா, நாமக்கல்.


'' 'எந்திரன்’ படத்தில் நாம் நடிக்கவில்லையே என்று எப்போதாவது நினைத்தீர்களா..?'' (ஹானஸ்ட்டாகப் பதில் கூறுபவராச்சே கமல்.)


''நினைத்திருந்தால், நடிக்கும் வாய்ப்பு இருந்தது. நடிக்கவில்லை விடுங்கள்!''


ந.வந்தியக்குமாரன், சென்னை-41.


''பரமக்குடியில் பிறந்தீர்கள் அவ்வளவுதான். ஆனால் வளர்ந்தது, வாழ்வது சென்னையில். ஆனால், நீங்கள் ஒருபோதும் சென்னையைப்பற்றிக் குறிப்பிடுவது இல்லை. 'நான் இன்னும் பரமக்குடிக்காரன்தான்’ என்று அழுத்திச் சொல்கிறீர்கள். ஒரு சென்னைக்காரனாக மிகுந்த கோபத்தோடு இந்தக் கேள்வி?''


''நான் வாழ்ந்து அனுபவித்த எல்லா மண்ணிலும் என்னை ஊன்ற விரும்பாது, நாடோடிக்கொண்டு இருக்கும் கலைஞன் நான். நான் பரமக்குடிக்காரன் என்பதோடு, சென்னை வாழ் தெலுங்கு மலையாளி எனவும் கொள்ளலாம். To put it succinctly... INDIAN..''


மலைஅரசன், அருகந்தம்பூண்டி.


''அக்பருக்கு பீர்பால்... கிருஷ்ண தேவராயருக்கு தெனாலிராமன். கமல்ஹாசனுக்கு..?''


''மனசாட்சி!''


பிரசன்னா, சேகரை.


''உங்களின் முதல் முத்த அனுபவம் எப்போது?''


''நான் என் குடும்பத்தில் கடைக்குட்டி. அதனால், நினைவு தெரிந்த நாள் முதல் முத்த மழைதான். முதலே நினைவில்லாத அளவுக்கு!''





ந.வந்தியக்குமாரன், சென்னை-41.


''சமீபகாலமாக தமிழக முதல்வரை மேடைகளில் ஏகமாகப் புகழ்கிறீர்களே? கொச்சையாகச் சொன்னால், 'ரொம்ப ஜால்ரா’ அடிக்கிறீர்களே... ஏங்க?''


''அது சமீப கால நிகழ்வல்ல. குழந்தைப் பருவம் முதல் பழக்கம். அவர் முதலமைச்சர் ஆனதற்கு நான் மட்டும் பொறுப்பல்லவே. தவிர, சமீப கால மேடை ஒன்றில் கலைஞரின் பெருமகனாரின் வாழ்க்கைக் குறிப்பு புத்தகமாக வெளிவந்தபோது, பெரும் பத்திரிகைகளின் ஆசிரியர், உரிமையாளர் பலரும் என்னுடன் மேடையில் இருந்து பாராட்டினார்கள். சிலர் அதிகமாகவே பாராட்டினார்கள். நான் கலைஞரின் ரசிகனாக அவர் ஆட்சியில் இல்லாதபோதும் இருந்திருக்கிறேன். அதைக் கொச்சைப்படுத்துவது உங்கள் குணாதிசயம். நான் எதை அடித்தாலும் தாளம் தப்பாது!''


இ.பு.ஞானப்பிரகாசம், சென்னை-91.


''அடுத்த பிறவி என்று ஒன்று இருப்பதாக (சும்மா ஒரு பேச்சுக்குத்தான்)வைத்துக்கொள்வோம். தாங்கள் எங்கே, எப்படி, என்னவாகப் பிறக்க விருப்பம்?''


''இதுவும் சும்மா ஒரு பேச்சுக்குத்தான்.


இந்த அடுத்த பிறவியை யார் மனதிலும் இல்லாத புனைகதையாக நிரூபிக்கும் நல்லறிவாளியாக, மறுபிறவி அறுக்கும் பகுத்தறிவாளனாக!''


ந.வந்தியக்குமாரன், சென்னை-41.


''என்னதான் விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட கலைஞர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று நாம் கர்வத்தோடு மார் தட்டிக்கொண்டாலும், அவருக்குத் தேசிய விருது கிடைக்காததற்குக் காரணம், அவரின் மிகைப்பட்ட நடிப்புதானே?''


''இல்லை, அன்று நிலவிய அரசியல்!''


பி.விஜயலட்சுமி, வேலூர்.


''நமது தேசியப் பறவை மயில், தேசிய விலங்கு புலி, தேசிய மலர் தாமரை, தேசிய குணம்..?''


''சமரசம்!''


பி.எஸ்.ஜனார்தன், மதுரை.


''தமிழ் நடிகர்களில் மிகவும் துணிச்சலானவர் விஜயகாந்த்தான் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?''


''அதற்கென்ன? ஒப்புக்கொண்டால் போச்சு!''


சுகந்தி, சிவகங்கை.

''சமீபத்தில் பாதித்த புத்தகம்?''


''பல!


அதில் குறிப்பிடக் கடமைப்பட்டது 'The Last Lecture’ என்ற ஆங்கிலப் புத்தகமும், 'இன்றைய காந்தி’ என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதிய கட்டுரைகளும், நண்பர் அய்யனார் தந்த தமிழாக்கப்பட்ட சாதத் ஹசன் மன்ட்டோ (Sadat Hassan Munto) கதைகளும்!''


ந.வந்தியக்குமாரன், சென்னை-41.

''ஒரு நடிகனின் தனிப்பட்ட வாழ்க்கையை எழுத அவனுடைய அந்தரங்கத்தை அறிந்துகொள்ள ஏன் பத்திரிகைகள் (உலகமெங்கும்) ஆவல்கொள்கின்றன? அதைவிட, அவற்றைப் படிக்க வாசகன் ஏன் பெரிதும் ஆர்வம்கொள்கிறான் என்று நினைக்கிறீர்கள்? ஒரு நடிகனாக உங்களை மிகவும் பாதித்த... உங்களைப்பற்றிய செய்தி என்று எதைச் சொல்வீர்கள்?''


''அது திரைச் சீலையாக இருந்தாலும், வெறுஞ்சீலையாக இருந்தாலும் விலக்கிப் பார்க்கும் ஆதார குணம் உள்ளவர் அதிகம் இருப்பதும் ஒரு காரணம்.


ஒரு திருடன் பிடிபடும்போது, பிடிபடாத திருடன் பரிகசிப்பதுபோன்ற குணாதிசயமும் காரணம்.


நீங்கள் கேட்ட கேள்வியும் அந்தரங்கம் ஆராயும் ஒரு கேள்விதான். நானா நேரடி பதில் சொல்வேன்? இஸ்கு... இஸ்கு!''


முகமது அலி, மதுரை.


''திருமணத்துக்குப் பிறகுதான் நாம் திருமணம் செய்துகொள்ள வேண்டிய பெண்ணைச் சந்திக்கிறோம் என்பது சரியா?''


''இந்த வம்புனாலதான், நான் இனி மணம் முடிப்பதாக இல்லை - போதுமா?''


எஸ்.சுவாமிநாதன், மன்னார்குடி.

''வறுமையின் நிறம் என்ன?''


'' 'பஞ்ச’வர்ணம்!''


கி.சித்ரா, மதுரை.


''ஸ்ரீவித்யாவின் அந்திமக் காலத்தில், உங்களை மட்டும் சந்திக்க வேண்டும் என அவர் விரும்பியதாகவும், நீங்கள் சந்தித்ததாகவும் கேள்விப்பட்டேன். அந்த நட்புபற்றி..?''


''அவள் இறந்தாலும் இறவா நட்பு!''


ந.வந்தியக்குமாரன், சென்னை-41.

'' 'உலக நாயகன்’ என்று உங்களை அழைக்கும்போது நீங்கள் அடைவது ஆனந்தமா, பரவசமா, கர்வமா, அருவருப்பா, கூச்சமா அல்லது அவமானமா?''


''உலகளவு புரிந்த யாருக்கும் கூச்சம்தான். ஆனால், ஒருவகையில் நாம் எல்லோருமே உலக நாயகர்கள்தான். அவரவர் உலகுக்கு அவரே நாயகர்!''




எம்.பாரதி, ஆழிவாய்க்கால்.

'' 'கலவி முடிந்த பின் கிடந்து பேசினாளாயின் காதலாய் மாறலாம் எச்சரிக்கை!’ - அனுபவம் பேசுகிறதா கமல்?''


''சும்மா கிடந்து அலையாதீங்க. அனுபவம் இல்லாமலா ரெண்டு பிள்ளைகளும்... காதலிகளும்?''


எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

''நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்... இப்போது கலைஞர் குடும்பம் சினிமா வைத்தத்தெடுத்து இருப்பது ஆரோக்கியமான விஷயம்தானா?''


''யார் நெஞ்சைத் தொட்டு என்று முதலில் சொல்லுங்கள்!''


அனுசூயா, தூத்துக்குடி.

''உங்கள் ரசிகர்கள் உங்கள் தனிப் பட்ட வாழ்க்கையைப் பார்த்து, அவர்களும் பின்பற்ற மாட்டார்களா?''


''காந்தி, கோட்ஸே, ஹிட்லர், புத்தர், இயேசு போன்றோரைப் பார்த்துக் கற்காத அவர்களின் ரசிகர்கள் போல்தான் என் ரசிகர்களும். நல்லது கெட்டது தெரிந்தவர்கள்!''





இரா.தியாகராஜன், நாகப்பட்டினம்.

''சமீப காலமாக நிறையப் புதிய இயக்குநர்கள், நல்ல கதை அம்சம் உள்ள அதே சமயம், வியாபாரரீதியாக நன்றாக வசூலாகக்கூடிய படங்களைக் கொடுத்து வருகிறார்கள். அவர்களின் படங்களில் நடிக்காமல், சீனியர் இயக்குநர்களின் படங்களிலேயே ஏன் நடிக்கிறீர்கள்?''


''நடிக்கவைக்கிறார்கள், வியாபாரம் தெரிந்தவர்கள். இன்னும் சில வருடங்கள் கடந்தால், எனக்கும் சீனியரான இயக்குநர்கள் கிடைப்பது கடினம் என்ற ஒரு காரணமும்கூட!''


பெ.பச்சையப்பன், கம்பம்.

''உங்களின் பேச்சு, கவிதை, திறமையை வெளிப்படுத்தும் விதம், எல்லாமே ஒரு முறைக்குப் பல முறை உன்னிப்பாகக் கவனித்தால்தான் புரிகிறது. இது உங்களுக்குத் தெரியுமா? ஏன், எதையுமே 'சட்’டென்று மற்றவர்கள் புரியும்படி செய்யக் கூடாதா சார்?''


''பல முறை கவனிக்கப்படுவதே வெற்றி தானே. உங்களுக்குப் புரியாமல் போனதற்கு வருந்துகிறேன். நன்றி, மீண்டு வருக!''


கே.ஜியாவுதின், நாகப்பட்டினம்.

''உங்களைக் கவர்ந்த பெண் யார்?''


''என் தாயில் துவங்கிப் பலர்!''


சி.ராணி, தஞ்சாவூர்.

''கட்டிப்பிடி வைத்தியத்தில் தங்களுக்கு உண்மையிலேயே நம்பிக்கை உண்டா? அது ரீலா... ரியலா?''


''ரீலைப் பொறுத்தவரை ரியல். பொது இடங் களில் ட்ரை பண்ணால்... வேலைக்கு ஆவாது!''


எம்.கே.ராஜ், திருப்பூர்.


'' 'லேட்-சைல்டு’ என்கிற வருத்தம் இப்பவும் தங்களிடம் இருக்கிறதா?''


'' 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா இருக்கறதுனால... இல்ல!’ பஞ்ச் வசன உபயம்: நண்பர் ரஜினி!''


கே.அன்பு, சென்னை91.

'' 'சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் செய்பவர்’ என்ற அவர் மீதான விமர்சனம்பற்றி உங்கள் கருத்து?''


''ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப நடித்ததால்தான் அவர் நடிகர் திலகமானார். ஒருவேளை, அந்தக் காலத்து ரசனை கொஞ்சம் ஓவரோ என்னவோ!''


மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி.

'' 'விருமாண்டி’ திரைப்படத்தில் தூக்குத் தண்டனை வேண்டாம் என்ற கருத்தைச் சொன் னீர்கள். உயிர்களைக் கொல்பவனுக்கு வேறு என்ன தண்டனைதான் உச்சபட்சமாகத் தர முடியும்?''


''இது நான் தானம் பெற்ற கருத்து. இதை எனதாகவும் ஏற்கிறேன். பிழையாப் பெருமை சட்டத்துக்கு இல்லாதபோது, திருத்த முடியாத தீர்ப்பை வழங்கும் அருகதை அதற்கு இல்லை. காந்தியார் வாக்கில் சொன்னால், 'கண்ணுக்குக் கண்’ என்று வெகுளும் சட்டங்கள், ஒரு நாள் உலகையே குருடாக்கும்!''


என்.ரத்னகுமார், தஞ்சாவூர்.

''நீங்கள் ஒரு சிறந்த நடிகர், நல்ல சமூக அக்கறையாளர், உண்மையான பகுத்தறிவுவாதி, இதில் எதிர்கால சமுதாயம் உங்களை எப்படி நினைவுகொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?''


''சமூக அக்கறைதான் என்னைப் பகுத்தறிவுவாதி ஆக்குகிறது. எதிர்காலத்துக்கு என்னைப்பற்றி நினைவுகொள்ள நேரம் இருந்தால், சமூக அக்கறைகொண்ட பலரில் ஒருவனாக, தனிப் பெயர் இல்லாத கூட்டமாக நினைத்தால்கூடப் போதுமானது!''


வி.புபேஷ், கானாடுகாத்தான்.

''நீங்கள் ஏன் இன்னும் ரகசியக் கவிஞராகவே இருக்கிறீர்கள்? உங்கள் கவிதைத் தொகுப்பு எப்போது வரும்?''


''இந்துக்களின் அனுமதியுடன் விரைவில்!''


ஹரிநாராயணன், செம்மஞ்சேரி
.


''ஸ்டாண்ட் அப் காமெடி ஷோக்களில் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுகள் உங்களை இமிடேட் செய்வதை எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?''


''நானே ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுதானே. ஒரு கதை நினைவு வருகிறது. ஆர்வத்துடன் திரு.ராஜாஜியைப் படம் வரைந்த ஒரு சிறுவன், தான் அவரைத் தத்ரூபமாக வரைந்ததாய் நினைத்துக்கொண்டு, அதில் அவர் கையெழுத்து வாங்க முண்டியடித்து அவரிடம் நீட்ட. அதில் ராதாகிருஷ்ணன் என்று கையெழுத்திட்டாராம் ராஜாஜி. 'இது உங்க கையெழுத்து இல்லையே’ என்ற சிறுவனிடம், 'படமும் என்னுதில்லயே’ என்றாராம் ராஜாஜி. சில சமயம் மிமிக்ரிக்களும் அப்படி ஆவது உண்டு.''


பி.மாணிக்கவாசகம், கும்பகோணம்.


'' 'மருதநாயகம்’ என்கிற மாமனிதரைச் சந்திக்கவே முடியாதா?''


''சினிமாவில் முடியும்!''


பி.மாணிக்கவாசகம், கும்பகோணம்.


''ஓட்டு போட விருப்பமா... வாங்க விருப்பமா?''


''எதுவுமே வாங்காமல் ஓட்டுப் போடவே எப்போதும் விருப்பம்!''


'அலொபஸ்’ கணேசன், மந்தைவெளி.


''நீங்கள் கண்ட கனவு நிஜமானது உண்டா... அந்தக் கனவு என்ன?''


''நான் நடிகனானது, இயக்குநரானது, சினிமாவுக்குப் பாட்டு எழுதியது, திரைக்கதை எழுதியது, உங்கள் பாராட்டுக்கள் கிடைத்தது எல்லாமே நான் கண்ட கனவுகளே!''


எம்.வினோதினி, கோயம்புத்தூர்.


''உங்களை எப்போதாவது ஸ்ருதியிடம் கண்டிருக்கிறீர்களா?''


''பலமுறை. என் மழலையை, என் கோபத்தை, என் அன்பை அவள் உருவில் பிம்பமாய்!''


இரா.தியாகராஜன், நாகப்பட்டினம்.


''நீங்கள் நடிக்காத படங்களில் பிடித்த படம்... சந்திக்காத நபர்களில் பிடித்த நபர்... உங்களை இயக்காத இயக்குநர்களில் பிடிக்காதவர்..?''


''நான் நடிக்க வாய்ப்பு இல்லாமல் போன பல நூறு படங்களின் பட்டியல் கைவசம்.


சந்திக்காத நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் திரு ரங்கா ராவும் அடக்கம்.


என்னை இயக்க மறந்த பல நல்ல இயக்குநர்கள் உள்ளனர். அந்தக் காரணத்துக்காகவே அவர்கள் அனைவரையும் பிடிக்காது!''





ச.வினோத், சென்னை84


''நண்பர்கள்போல நட்புடன் ஓர் இயக்குநரிடம் சினிமாவைக் கற்றுக்கொள்ள முடியாதா? உதவி இயக்குநர்கள் அடிமைகளைப்போல நடத்தப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறதே?''


''அடிமைகளாக யாரும் இருக்கக் கூடாது. சினிமா கற்றுக்கொள்ள பள்ளிகள் இருக்கின்றன. டாக்டரிடம் கம்பவுண்டராக இருந்து, நட்புடன் மருத்துவம் கற்பது அபாயம். உங்களுக்கும் நோயாளிக்கும்!''


சா.கணேஷ், வேலூர்.


''பெரியார், காந்தி... உங்களுக்கு நெருக்கமானவர் யார்?''


''குஜராத்... கொஞ்சம் தூரம். ஈரோடு... பக்கம். தவிர, என் மொழியில் பேசுபவர் பெரியார். நான் பெரியாருடன் காந்திக்கு மிக நெருங்கியவன்!''


கே.வெங்கடேசன், தோட்டப்பாளையம்.

''சந்தர்ப்பம் கிடைக்காதவரைதான் எல்லோரும் நல்லவர்கள் என்கிற வாதத்தில் நீங்கள் நியாயம் காண் கிறீர்களா?''


''அது எல்லோருக்கும் பொருந்தாது. சந்தர்ப்பத்தை மறுத்தவர்கள் பலர் உண்டு... நான் உள்பட!''


ந.வந்தியக்குமாரன், சென்னை41


''இப்போதுதான் 200 கோடி செலவழித்து, தமிழ்ப் படம் எடுக்கிறார்களே? 'மருதநாயகம்’ எடுக்க முடியாததற்குக் காரணம் பணமா, அல்லது வேறு எதுவும் சொல்ல முடியாத காரணமா? 12 வருட தமிழ்நாட்டின் கேள்வி இது?''


'' 'மருதநாயகம்’ - ஒரு தமிழ்ப் படம் மட்டும் அல்ல; அது ஒரு ஃபிரெஞ்ச் - ஆங்கிலப் படமும்கூட. உலக அரங்கில் அதை ஒளிரவிட இயலும் பங்காளி தேவை. அது எல்லைகள் தாண்டும் படம். வேலிக்கு உள்ளே சஞ்சரிப்பவர்களுக்கு, அதன் வியாபார மகிமை தெரியாமல் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை!''


ஆர்.சுஜாதா, சென்னை.


''வலைப்பதிவுகளில் உங்கள் மீதான விமர்சனம் அதிகமாக இருக்கிறதே! 'கமல் தனது படங்களுக்கான கருவை வெளிநாட்டுப் படங்களில் இருந்து எடுத்துக்கொள்கிறார்’ என்றெல்லாம் விமர்சனக் கண்டனங்கள். எனக்கு அதைப்பற்றி எல்லாம் தெரியாது. உங்கள் படங்கள் பிடிக்கும் அவ்வளவுதான்! ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் என் நண்பர்களிடம் நான் வாதாடுவதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?''


''நான் எழுதிய படங்களில் அந்தக் குற்றச்சாட்டு பொருந்தாது. மற்றபடி கோடம்பாக்கத்துக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை மணந்தால் பறித்துச் சூடிக்கொள்வது பழக்கம்!''


எம்.பாஸ்கரன், மயிலாடுதுறை.


''நாகேஷ் தனது வாரிசை அறிவிக்காமலேயே சென்றுவிட்டார் என்று ஒரு முறை நீங்கள் சொன்னதாக நினைவு. நீங்கள் இப்போது சொல்லுங்கள்... தமிழ்த் திரையுலகில் உங்கள் வாரிசு யார்?''


''நான் அப்படிச் சொல்லவில்லை. என் வாரிசுகளே என் கண்ணுக்குத் தெரியும் அவர்களையும் விஞ்சும் திறமையை உணர நேர்ந்தால் உடனே சொல்லிவிடுவேன்!''





எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.


''உண்மையைச் சொல்லுங்க கமல் சார், நீங்க நல்லவரா... கெட்டவரா?''


('தெரியலப்பா’னு சொல்லக் கூடாது!)


''எல்லோரையும் மாதிரி ரெண்டும்தான்!''


ஆர்,ஜேஸ்மின் ரமேஷ், மதுரை.


''முதல் துரோகம் ஞாபகத்தில் உள்ளதா... என்ன என்று பகிர்ந்துகொள்ள முடியுமா?''


''பகிர்ந்துகொள்ள முடியாத பல துரோகங்கள் உள்ளன. பகிர்வதாக இல்லை!''


எம்.மோகன், வேலூர்-2.


''உங்களால் மறக்க முடியாத ரசிகர் யார்?''


''திருமதி ராஜலட்சுமி, திரு சீனிவாசன். இருவரும் தம்பதியினர். என் தாய், தந்தையரும்கூட!''


அ.யாழினி பர்வதம், சென்னை-78.


''அந்த மெக்ஸிகன் சலவைக்காரி ஜோக்கை சுஜாதா உங்களிடமாவது சொன்னாரா?''


''சொன்னாரே... ஆனா, யார்கிட்டேயும் சொல்லாதேனு சத்தியம் வாங்கிட்டுப் போயிட்டார்!''


ஆர்.ராமகிருஷ்ணன், போடிநாயக்கனூர்.


''சுஜாதா இருந்திருந்தால்...''


''இன்னும் நிறையக் கதைகளும் கதைப்பதும் தொடர்ந்திருக்கும்!''


ந.சின்னசாமி, அன்னதானபட்டி.


''சப்பாணிக்கும் ராஜ மன்னாருக்கும் உள்ள உறவு?''


''இரண்டு பேருமே என் தூரத்து உறவுகள்!''


எஸ்.பி.சுப்பராகவன், திருப்பூர்.


'' 'என்னைப்போல் ஒருவன்’ என்று யாரையாவது நினைத்திருக்கிறீர்களா?''


''எஸ்.பி.சுப்பு உள்பட எல்லோரையும்!''


''நீங்கள் சிறந்த நடிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். உங்களைச் சிறந்த நடிகராக நீங்கள் உணர்ந்த தருணம் எது?''


''இன்னும் உணரவில்லை. நான் வெறும் வதந்திகளை நம்புவது இல்லை!''


ஜி.சிவக்குமார், பழனி.


''சுயசரிதை எழுதும் எண்ணம் உண்டா?''


''இல்லை. பிறர் சரிதைதான் சந்தோஷம்!''


சா.பிரேமா, செங்கல்பட்டு.


''தாயின் அன்பு - மனைவியின் அன்பு... எது பெரிது?''


''ஒன்று, Unconditional. மற்றொன்று, Conditional. ஆனால், சில சமயம் தாயுள்ளம் கொண்ட மனைவியரும் அமையப் பெற்றவர் உண்டு!''


எம்.சங்கர், செய்யாறு.



''அடுத்த 10 வருடங்களில் தமிழ் சினிமாவில் உங்களுக்கு நம்பிக்கை தரும் நபர்களைக் குறிப்பிடவும்?''


''என் பெயர் உட்பட, யாருக்கும் அடித்து ஆரூடம் சொல்ல முடியாத தொழில் இது. எங்களில் யாரெல்லாம் விபத்து, வியாதி இல்லாமல் உயிர்த்து இருக்கிறார்களோ, 'அனைவரும் முயல்வோம்... சிலர் வெல்வோம்’. survival of the fittest!


சு.அருளாளன், ஆரணி.


''உங்கள் வாழ்க்கையில் நடந்த எந்தச் சம்பவத்தை நினைத்தால், அடக்க முடியாத சிரிப்பு வரும்?''


''பத்துப் பதினைந்து நிகழ்வுகள் இருக்கின்றன. நான் நடிகனானது உட்பட!''


கே.பாபு, சென்னை-75.


''தமிழ் சினிமா அடுத்த பரிணாமத்துக்குச் சென்றுவிட்டதாகக் கருதுகிறீர்களா? ஏனென்றால், இன்னும் ஐந்து பாட்டு, குத்துப் பாட்டு, ஹீரோ - ஹீரோயின் டூயட் டிரெண்ட் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆங்கிலப் படத்தைப் பார்த்தால் 90 நிமிடங்கள்தான். ஏன் இன்னும் நாம் அந்த அளவுக்கு முயற்சிக்கவில்லை. 'உலக நாயகன்’ படங்களிலும் குத்துப் பாட்டு, தேவையற்ற சண்டைக் காட்சிகள் இருக்கத்தானே செய்கின்றன?''


''இல்லை. விரிவான பதில் உங்கள் கேள்விக்குள் அடக்கம்!''


க.ராஜன், தஞ்சாவூர்.


''உங்களுக்குப் பிடித்த டி.வி நிகழ்ச்சி?''


''செய்திகள், National geographic, Discovery channel, பழைய படங்கள். மற்றவற்றை எல்லோரையும்போல் பரிவுடன் பொறுத்துக்கொள்கிறேன்!''


ஆ.சசிக்குமார், உடுமலைப்பேட்டை.


''பாரதியின் கவிதைகளில் உங்களுக்குப் பிடித்தது எது... ஏன்?''


'' 'தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?’ எனக் கேட்டு வீரத்துக்கு வயது இல்லை என்ற நம்பிக்கையைச் சிந்திப்பவர்க்கு ஊட்டிடும் வரிகள்!''


ராஜலக்ஷ்மி பாலாஜி, சென்னை-33.


''ஒரு கமல் ரசிகனுக்கு நீங்கள் தரும் அதிகபட்ச மரியாதையாக எதைக் கருதுகிறீர்கள்?''


''அவர் ரசனையுடன் அவரையும் உயர்த்தும் கலையை அவருக்கு ஊட்டும் தாய்மையையே!''


ச.சிவா, வந்தவாசி.


''புது வருடத்தில் இருந்து ஒரு கெட்ட பழக்கத்தை விட வேண்டும் என்றால், எந்தப் பழக்கத்தை விட்டுக்கொடுப்பீர்கள்?''


''கேள்விக்குப் பதில் அளிப்பதை. கேட்பது நானாக இருக்கும்பட்சத்தில், என் அறிவும் வளரும் அல்லவா?''


சுந்தர் சுந்தரி, கோயம்புத்தூர்.


''தொண்டன், பக்தன், ரசிகன் யார் முதல் ஏமாளி?''


''ரசிகன் ஏமாறத் தேவை இல்லை... ரசனையை மேம்படுத்திக்கொள்ளும் வரை!''


என்.ரகு, காஞ்சிபுரம்.


''தமிழ்ப் பட உலகத்தைப் பிடித்து ஆட்டுகிற நோய் என்ன... அதைப் போக்குவது எப்படி?''


''ரசனைக் குறைவுதான். அதைப் போக்குகிறேன் பேர்வழி என்று ரசிகர்களையே தொலைத்துவிடக் கூடாதே என்ற பயமும் உண்டு. பயம்கூட ஒரு வகை நோய்தான்!''


சி.ரவி, அரக்கோணம்.


''கமல் - ஸ்ரீதேவி, கமல் - ஸ்ரீபிரியா, கமல் - த்ரிஷா... ஜோடிப் பொருத்தம் ஒப்பிடுக?''


''காலம் தந்த கோலம் இது. ஒப்பிடல் சரியாகாது. எனக்கு மூவரும் வேண்டியவர்கள்!''


பி.கமல் செல்லப்பா, திருநெல்வேலி.


''உங்களுடைய இயக்கத்தில் வேறு ஒருவர் நடிக்கும் படத்தை எப்போது இயக்குவீர்கள்? யாரை இயக்க விருப்பம்?''


''வேறு நடிகர்கள் பலரும் நடிக்க... இயக்கி உள்ளேன். இன்னும் பலரை இயக்கவும் விருப்பம். கதைக்குத்தான் நடிகர் என்ற நிலை வர விருப்பம்!''


கே.ஆதி, சென்னை-74.


''சினிமாவால் நீங்கள் பெற்றது என்ன... இழந்தது என்ன?''


''பெற்றது உம்மை. இழந்தது (கொஞ்சம்) என்னை.''


எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.


'' 'மன்மதன் அம்பு’ படத்தில் நீங்கள் எழுதிய, 'கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்’ பாடலுக்கு 'தெய்வ நிந்தனைப் பாடல்’ என எதிர்ப்புக் கிளம்பி உள்ளதே?''


''அவர்களுக்கு நிந்தனை புரியாததால் ஏற்பட்ட குழப்பமே. இதைவிட நிந்தனைகள் நிறைந்த வரிகள் வந்துள்ளன. இனியும் வரும். அது நான் எழுதிய வரிகளாக இருக்காது, பாருங்களேன்!''


சி.சரஸ்வதி, திண்டிவனம்.


'' 'சர்ச்சை’க்கு உங்கள் அகராதியில் என்ன அர்த்தம்?''


''சர்ச்சைதான்!''


கே.ராமஜெயம், சென்னை24


'' 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கமல்ஹாசா!’ என்று எப்போதாவது நினைத்து இருக்கிறீர்களா?''


''அப்படி நினைப்பதற்குள் அடுத்த ஆசை வந்துவிடுவதால்...''


என்.ராகவன், கோயம்புத்தூர்.

''கற்பு பற்றி உங்கள் கருத்து என்ன?''


''கடவுள் பற்றிய கருத்து போலதான்!''


ஸ்ரீதர்ஸ்ரீனிவாசன், கோயம்புத்தூர்.

'' 'சத்தியாகிரகம் என்ற ஆயுதம் மூலம், காந்தி தனது சர்வாதிகாரத்தை நிலைநாட்டினார்’ என்கிறேன் நான். உங்கள் கருத்து...''


''அவர் நாட்டிய நிலையை அகற்றும் உரிமை உள்ளபோது... சர்வம் ஏது? அதிகாரம் ஏது? அவர் செத்துட்டாரு. விடுங்க, சுட்டுக்கிட்டே இருக்காதீங்க!''


வே.கல்பனா, அரவக்குறிச்சி.



'' 'மய்யம்’ என்ற பெயரில் நீங்கள் நடத்தி வந்த இதழ் பாதியில் நின்று, பிறகு மீண்டும் ஆன்லைனில் வருவதாகச் செய்தி வந்தது. 'மய்யம்’ மீண்டும் வருமா?''


''கண்டிப்பாக - விரைவில்!''


'சின்ன சேலம்’ ரா.ரவி, நாமக்கல்.


''நேற்றைய நண்பர்களைத் திடீரெனச் சந்தித்தால் என்ன செய்வீர்கள்?''


''நட்பைப் பாராட்டுவோம். இந்த ஒரு விஷயத்தைத் தனியாகச் செய்ய முடியாது!''


பொன்விழி, அன்னூர்.

''ரீ-மேக் படம் எடுப்பதாக இருந்தால், எந்தப் படத்தை தற்போது எடுப்பீர்கள்?''

''திரு. ஆர்.எஸ்.மனோகரின் 'இலங்கேஸ்வரன்’ என்ற நாடகத்தை, சிறிய மாற்றங்களுடன்!''

எஸ்.சுவாமிநாதன், மன்னார்குடி.

''ஒரு மனிதனின் பலம் பலவீனமாவது எப்போது?''

'' 'சரிவில் யானை’ ஓர் உதாரணம். நமக்குச் சரிவுகள் பல உண்டு. பீடு நடைஎல்லாம் அக்கம் பக்கம் பார்த்துத்தான் போட வேண்டும்!''

அ.யாழினி பர்வதம், சென்னை-78.

''உண்மையைச் சொல்லுங்கள்... கம'ல’ஹாசன் - கம'ல்’ஹாசன் ஆனது நியூமராலஜியினால்தானே?''
''இல்லை. சரியான உச்சரிப்பு அதுதான் என்று வடமொழி வல்லுநர் சொல்ல... செய்யப்பெற்ற மாற்றம்!''

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.

''நீங்களும் ரஜினிகாந்த்தும் சேர்ந்து நடிப்பது இல்லை என்ற ஒப்பந்தம் இனியும் நீடிக்கத்தான் வேண்டுமா?''

''நடிக்காமல் இருந்தது, முதலில் நடித்தது எல்லாமே தற்காப்பு வியாபாரம்தான். அதே காரணத்துக்காக, மீண்டும் நடித்தால் தப்பில்லைதானே.

இருவருக்குமே அந்தத் தற்காப்பு தற்போது தேவை இல்லாமல் செய்த தங்களைப்போன்றவர்களுக்கு என்றென்றும் நன்றியுடன் கமல், ரஜினி!''

பொன்.சீனிவாசன், வெண்ணந்தூர்.

'' 'தேவர் மகன்’ஆக நடித்த நீங்கள், 'அருந்ததியர் மகன்’ஆக 'ஆதி திராவிடர் மகன்’ஆக நடிக்காதது ஏன்?''

''ஒரே படத்தில் பலரின் பிள்ளையாக 'தசாவதாரம்’ படத்தில் நடித்தேன். வின்சென்ட் பூவராகனைத் தன் மடியில் தூக்கிவைத்துக்கொண்டு அழும் அந்தத் தாய்மை எனக்குள்ளும் உண்டு. நான் உலகத்தின் பிள்ளை. யார் மகனாகவும் நடிப்பேன், இனியும்!''

ஞான.தாவீதுராஜா, பழவேற்காடு.

''உங்கள் மகள்களைப் பள்ளியில் சேர்க்கும்போது - சாதியைச் சொல்லிச் சேர்க்கவில்லையாமே நீங்கள்... உண்மையா?''
''உண்மைதான். பள்ளி சேர்க்கையில் மட்டுமல்ல... பிறப்புச் சான்றிதழ் நிரப்பும்போதும், சாதி - மதம் என்ற இடங்களில் -NIL-என்று எழுதிவைத்தேன். இன்னும் நின்றபாடில்லை!''

எம்.எஸ்.கோவிந்தராஜன், சுப்ரமணியபுரம்.

''தங்களின் கவிதைத் தொகுப்பு எப்போது வெளிவரும்? அதில் இடம் பெறவிருக்கும் ஒரே ஒரு கவிதை சொல்லுங்களேன்... இங்கே எங்களுக்காக!''

'' 'ஞானமெனும் பெருஞ்சிங்கம்
எறும்புகளை உண்பதில்லை
இறந்த பின், சிங்கத்தை
எறும்புகள் உண்பதுண்டு!’ ''

சியாமளா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

''கடவுளைத் துதி பாடி, கலையுலகத்தில் அடிவைத்த தங்களுக்கு (களத்தூர் கண்ணம்மா) கடவுள் மீது பற்றில்லாமல் போனது ஏன்?''
''மழலை மாறியதுபோல, உயரம் கூடியதுபோல, உருவம் மாறியதுபோல, பகுத்தறிய பற்று வேறு பக்கம் திரும்பியது. என்னைப் பயிற்றுவித்தவர்களுக்கு நன்றி!''

என்.குமார், தஞ்சாவூர்-8.

''விஜய் அரசியலுக்கு வருவது பற்றி உங்களின் கருத்து என்ன?''

''அது அவரவர் தீர்வு. இதில் என் கருத்துக்கு ஏது இடம்?''

லீலா ராம், தக்கலை.

''ஒபாமாவைச் சந்தித்தால் என்ன கேட்பீர்கள்?''

''வெள்ளை மாளிகையின் விக்கிரமாதித்ய சிம்மாசனம் என்ன என்ன பாடுபடுத்துகிறது என்று பரிவுடன் விசாரிப்பேன்!''

ப.தங்கமணி, சூசைபாளையம்.

''நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை?''

''எனினும்.''

பொன்விழி, அன்னூர்.

''பாலசந்தர் - பாரதிராஜா ஒப்பிட முடியுமா?''

''அப்பா - அண்ணன்!''

சுந்தர் சுந்தரி, கோயம்புத்தூர்.

''ரஜினியிடம் நீங்கள் கண்டு வியக்கும் குணம் என்ன?''

''நட்புதான்!''

சிவக்குமார், திண்டுக்கல்.

''தற்போது தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்?''

''எப்போதும் நாகேஷ். அதற்குப் பிறகுதான் நாங்கள் எல்லோரும்!''

பாரதி, சேலம்-9.

''உங்கள் நண்பர் ரஜினிகாந்த் அவர்களிடம் முரண்படும் ஒரு விஷயம்? அவரைப் பாராட்டும் ஒரு விஷயம்?''

''முரண்பாடுகள் உள்ளதாலேயே, எல்லோரையும் போன்றவர். உச்ச நட்சத்திர அந்தஸ்தை ஓரங்கட்டிவிட்டு, சாதாரணமாக இருக்க முயல்வதால்...உன்னதமானவர்!''

எஸ்.சந்தோஷ், சென்னை-75.

''பழம்பெரும் திறமையான நடிகர் நடிகைகளுடன் (காகா ராதாகிருஷ்ணன், எஸ்.வரலட்சுமி) சேர்ந்து நடித்தவர் நீங்கள். ஆனால், ஏன் மறைந்த கலைத் திறன் மிகுந்த நடிகர் ரகுவரனுடன் இணைந்து நடிக்கவில்லை? தனிப்பட்ட காரணம் ஏதேனும் இருந்தால், மறுக்காமல் பதில் கூறவும்!'

''இன்னும் நேரம் இருக்கிறது. பாத்திரம் கூடி வரும்போது செய்யலாம் என்று எண்ணித் தவறவிட்டது தவிர, வேறு காரணம் இல்லை!''

ப.தங்கமணி, சூசைபாளையம்.

''சுபாஷ் சந்திரபோஸ் - பிரபாகரன் ஒப்பிடுக?''

''தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!

வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு காரணங்கள்! ''

எம்.மாலதி, நன்னிலம்.

''எப்போதும் உங்களைச் சுற்றி வதந்திகளும் செய்திகளும் வந்துகொண்டே இருந்தன. கேள்விகள் உங்களைத் துரத்திக்கொண்டே இருந்த காலம் ஒன்று இருந்தது. இப்போது எல்லோரும் அமைதியான முறையில் உங்களை எதிர்கொள்வதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''எம்மில் யாரோ ஒருவருக்குப் பக்குவம் வந்துவிட்டதாகச் சந்தேகிப்பேன்!''

சூரியகுமார், திருப்பூர்-4.

''உங்கள் தமிழ் அற்புதமாக இருக்கிறது. ஆனால், உங்கள் மகள்கள் தமிழ் பேசத் தடுமாறுகிறார்களே! அதோடு, உங்கள் மகள்களைப்பற்றிப் பேசும்போது, நீங்கள் ஸ்ருதியைப்பற்றி மட்டுமே குறிப்பிடுகிறீர்கள். அக்ஷராவும் அதீதத் திறமைகள் நிரம்பியவராகத் தெரிகிறார். அவரைப்பற்றியும் இனி பேசலாமே?''

''பேசினால் போச்சு. அக்ஷராவும் ஸ்ருதி அளவு தமிழ் பேசுவார். துணை இயக்குநராகப் பணி புரிகிறார் மும்பையில். அற்புதமான நடனக் கலைஞர்!''

சா.தேவதாஸ், திருச்சி-2.

''உங்கள் திரைக்கதைகள் எங்களைப்போன்ற கமல் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இனிமேலாவது, வருடத்துக்குக் குறைந்தது இரண்டு அல்லது மூன்று படங்களில் நடிக்க முற்படுவீர்களா?''

''இரண்டு கண்டிப்பாக நடக்கக்கூடியது.''

வி.பவானி, திருவாரூர்.

'' 'அன்பே சிவம்’ எனும் ஒரு கோல்டன் சினிமா கொடுத்த தங்களின் அன்பு ஏன் பொய்த்தது, நெருங்கிய உறவுகளுடன்?''

''பொய்த்தது அன்பல்ல, மனிதர்களே!''

ஆர்.பார்த்திபன், சென்னை-91.

''சமீபத்தில் 'ஆளவந்தான்’, 'உன்னைப்போல் ஒருவன்’ படங்களை அடுத்தடுத்து பார்க்க நேர்ந்தது. 'ஆளவந்தான்’ படத்தில் 'ஞாபகம்... அதுதானே உன்னுடைய வியாதி!’ என்று ஒரு வசனம். 'உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் 'மறதி... ஒரு தேசிய வியாதி!’ என்று ஒரு வசனம். என்ன சொல்ல வருகிறீர்கள் கமல் சார்?''

''அது 'கல் பேசாது!’ என்று வெகுண்ட அதே நடிகர் திலகம், பக்திப் பரவசத்தில் மிதக்கும் வசனங்கள் பேசவில்லையா? அதேபோல்தான்! ஒரு பாத்திரத்தின் மனோபாவம் வாக்கியமாகிறது. நான் சொல்ல வருவது குணாதிசயங்கள்!''

வி.மலர், செங்கல்பட்டு.

''நான், சிவாஜி ரசிகன். எனது மகனோ, கமல்ஹாசன் வெறியன். எங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை. நீங்கள் யார் பக்கம் கமல்?''
''பாவம்... சின்னப் பையன் மனதை உடைக்காதீர்கள். உங்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்... நான் பெரியவர் பக்கம்தான். உங்கள் மகனுக்கு மகன் பிறக்கையில், அவர் விரும்பும் நடிகரும் என் மாதிரி பதில் சொன்னால் சந்தோஷம்!''

ப.ராகவன், சேலம்-4.

''உங்கள் படங்களில் புற்று நோய் வந்ததாக ஒரு பாத்திரம் வந்துகொண்டே இருக்கிறது. நண்பர்களின் பாதிப்பா?'' (மகேஷ், ஸ்ரீவித்யா, கௌதமி.)

''இருக்கலாம்!''

கிருத்திகா அரசு, தஞ்சாவூர்.

''மாஸ் ஹீரோ என்பதற்கு விளக்கம் என்ன? நீங்கள் நடித்த படங்களில் எதை மாஸ் ஹீரோ படம் என்று சொல்வீர்கள்?''

''மக்கள் நாயகன் எனவும்கொள்ளலாம். நிறைய டிக்கெட்டுகள் வசூல் என்றுதான் வர்த்தகம் பொழிப்புரை சொல்கிறது. அப்படிப் பார்த்தால், 'சகலகலா வல்லவன்’, 'அபூர்வ சகோதரர்கள்’, 'தேவர் மகன்’, 'அவ்வை சண்முகி’, 'இந்தியன்’, 'தசாவதாரம்’ இவை எல்லாம் அந்தந்தக் காலகட்டத்தின் மாஸ் ஹீரோக்கள். அடுத்து வரும் சிறந்த கலெக்ஷன் ஆளை மாற்றிச் சொல்லும்!''

கி.சம்பத், வேதாரண்யம்.

''சார், நீங்கள் ஏன் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இயங்குவது இல்லை. உங்களின் அதிதீவிர ரசிகனாக அங்கு உங்களை ஃபாலோ செய்ய விருப்பம்... சாத்தியமா?''

''உங்கள் விருப்பம் நிறைவேற வேறு ஒரு திட்டம் இருக்கிறது. விரைவில் சொல்கிறேன்!''

எம்.கே.ராஜா, மன்னார்குடி.

''காமம் இல்லா காதல் சாத்தியமா?''

''எதுக்கு கஷ்டப்படுறீர்கள்.Try அன்பு!''

எஸ்.ராதாமணி, ராமநாதபுரம்.

''நரை கூடிக் கிழப் பருவமெய்திய பின் என்ன செய்வதாக உத்தேசம்?''

''எல்லோரும் செய்வதை சற்று வித்யாசமாக. ஒத்திகையெல்லாம் பார்த்தாகிவிட்டது பல வேடங்களில்!''

செட்டிநாட்டு சிக்கனம்! - கிராமத்துப் பக்கம்


அந்தக் கிராமங்களின் பிரமாண்ட வீடுகள் மட்டுமல்ல, வீட்டைக் காப்பாற்றும் பெண்களின் நிர்வாகத் திறனும்கூட 'அடேயப்பா’ என்று மற்றவர்களை மலைக்க வைப்பவை! செட்டிநாட்டுக் கிராமங்களான கண்டனூர், கானாடுகாத்தான், கோட்டையூர், பள்ளத்தூர் போன்ற கிராமங்களைப் பற்றித்தான் சொல்கிறோம்.


ஆச்சிகளின் ஆட்சி நடக்கும் செட்டிநாட்டுக் கிராமங்களில் ஒரு சுற்று வந்தபோதுதான், அந்தப் பெண்களின் நிர்வாகத் திறமைகளை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது.


நீள அகலமாக இரண்டு வீதிகளைத் தொட்டுக் கொண்டிருக்கும் அந்தப் பிரமாண்ட வீடுகளில் இன்றும்கூட அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரேயொரு வயதான பெண்மணிதான் குடியிருக்கிறார். மகன், மகள், மருமகள், பேரன், பேத்தி என்று இளைய தலைமுறையினர் அந்தக் கிராமங்களைவிட்டு வேலைக்காகவும் பிஸினஸுக்காகவும் வெவ்வேறு ஊர்களுக்குப் போய்விட்டாலும் இந்தப் பெண்கள்தான் ஆள்வைத்து, அந்த வீடுகளை அவ்வப்போது சுத்தம் செய்வதில் ஆரம்பித்து, எப்போதாவது அங்கே ஒன்று சேரும் குடும்பத்தினரை வரவேற்க வீட்டையும் ரெடி செய்து வைக்கிறார்கள்!





''என்ன பெரிய விஷயம்..? பொம்பளைங்க எப்பவும் தைரியசாலிங்கதான். 'சக்தி’ங்கிற வார்த்தைக்கே பொண்ணுன்னுதானே அர்த்தம்..?'' - ஊஞ்சலில் ஆடியபடியே பேசும் நாச்சாள் ஆச்சிக்கு எழுபத்தெட்டு வயதாகிறது! இன்னும் ஜிங்ஜிங்கென்று வீட்டுவேலைகள் முழுசையும் செய்கிறார்! சாதாரணமாக நாம் ஒரு கையால் தூக்கவே சிரமப்படும் பெரிய சாவியைக் கொண்டு வீட்டை காஷுவலாகப் பூட்டித் திறக்கிறார்!


''பொண்ணுங்க நல்லா ஊட்டமா தின்னாலே எந்த நோய் நொடியும் வராது. நான் இந்த வயசிலேயும்கூடச் சாப்பாட்டுல குறை வைக்கிறதில்லே... எந்த சாமி எந்தப் பட்டணம் போனாலும் காலைல ஒன்பது மணிக்கு இட்லி பலகாரம். ஒன்றரைக்கு ரெண்டு காயோட சாப்பாடு, அப்புறம்... எட்டு மணிக்குத் திரும்பப் பலகாரம்னு திருப்தியா இருக்கணும். நானே சமைப்பேன். சமயத்துல, பக்கத்துல குடியிருக்கிற என் பொண்ணு வந்தும் சமைச்சுத் தரும். இந்த வயசிலேயும் காலைல அஞ்சரை மணிக்கே எழுந்திருச்சுடுவேன்னா பார்த்துக்குங்களேன்!'' என்கிறார்.





தனது பத்து வயதில், ஆறு நாட்கள் விமரிசையாக நடந்த கல்யாணம்... அதற்கடுத்த சில வருடங்களில் வயசுக்கு வந்தது... அப்புறம் நான்கு ஆண், ஏழு பெண், பதினோரு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டது என்று மலரும் நினைவுகளில் சுவாரஸ்யமாக மூழ்குகிறார்!


''எங்க வீட்டு செட்டியாரு அப்போ மயிலாடுதுறையில் ஏவாரம் பண்ணிட்டு இருந்தாரு... அப்பப்போ இங்க வந்துட்டுப் போவாரு.. குடும்ப நிர்வாகம் எல்லாம் நான்தான்.. இத்தனைக்கும் எனக்கு எழுத்துக் கூட்டிப் படிக்கவோ, கணக்கு எழுதிப் பார்க்கவோ தெரியாது. எல்லாம் வாயாலேயே மனக்கணக்கா போடறதுதான். நான் சொல்லச் சொல்ல, கணக்குப்பிள்ளை எழுதிடுவாரு...'' என்று சொல்லும் நாச்சாள் ஆச்சி, தியேட்டரில் கடைசியாகப் பார்த்த படம் 'திருவிளையாடல்’ - அதுவும் ரிலீஸின்போது.





அதிகம் வெளியே வராத இந்தப் பெண்கள், ஒருவரையொருவர் பார்த்துப் பேசிக்கொள்வது கோயில்களில்தான்! பெரும்பாலும் இந்தக் கிராமங்களில் ஊருக்கு ஒரு கோயில் இருக்கிறது. மாலைப்பொழுதானால் அங்கே போய்விடுகிறார்கள்.


'சிக்கனம்’ என்ற வார்த்தையை செட்டிநாட்டுப் பெண்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்பார்கள்.


''சிக்கனமாக இருக்கிறதோட ரகசியமே, கணக்கு எழுதிப் பார்க்கிறதுதான். ஒவ்வொரு பைசான்னாலும் அதுக்கு என்ன செலவழிச்சோம்னு கணக்கு எழுதிப் பார்க்கிறப்போதான், அந்தச் செலவுகளை எப்படி மிச்சம் பிடிக்க முடியும்னு திட்டம் போட முடியும்!'' என்று சொல்லும் எண்பது வயது காவேரி ஆச்சி... மகன், மருமகளுடன் வசித்தாலும் இன்னமும்கூட அவர்தான் கணக்கு எழுதுகிறார்!


பெண்கள் தனியே இருக்கும் செட்டிநாடு வீடுகளில், வேலைக்கு வருபவர்களை எவ்வளவு ஜாக்கிரதையாகத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது பற்றி சொன்னார் சீதை ஆச்சி.


''வேலைதேடி வர்றவங்களோட நாணயத்தையும் நேர்மையையும் சோதிக்கிர மாதிரி சில பரீச்சைங்களை வைப்போம்! அவங்க கண்ணுல படுறமாதிரி சில்லறைக் காசுகளை வைப்போம். அவங்க அதை எடுக்குறாங்களா, கண்டுக்காமப் போறாங்களாங்குறதுதான் பரீச்சையே... அதுமாதிரி, சமையக்கட்டுக்கு வேலைக்கு வர்றவங்களைச் சோதிக்குறதுக்காக அரிசி, பருப்பு அத்தனையும் கரெக்டா அளந்து கொட்டி வெச்சுப்போம். இதனால கிராம் கணக்குல கொறைஞ்சாகூட தெரிஞ்சு போயிடும். தப்பான ஆள்னு தெரிஞ்சா, உடனே நாலு பேரைக் கூட்டிவெச்சு, அந்த வேலைக்காரங்க செஞ்சதைச் சொல்லி வெளியே அனுப்பிடுவோம். அப்புறம், அவங்க வேற எந்த செட்டியார் வீட்டுலயும் வேலைக்குப் போக முடியாதபடிக்கு ஆயிடும். ஆனா நாங்க வைக்கிற பரீச்சையில் பாஸாகி, எங்களுக்கு நம்பிக்கையா நடந்துக்கிறவங்களை நாங்க உன்னதமா வெச்சுருப்போம். அவங்க பரம்பரைக்கே நாங்க சோறு போடுவோம்...''


''ஆச்சிகள்கிட்டே புள்ளைங்க வளர்ந்தா கட்டு செட்டா குடும்பம் நடத்தக் கத்துக்கும்” என்ற எண்ணத்தில் முன்பெல்லாம் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த குடியானவர்களே கொண்டுவந்து ஆச்சிகளிடம் 'குருகுல வாசம்’ போல விட்டுவிடுவார்களாம்.


தற்போது பெரும்பாலான அந்த பிரமாண்ட வீடுகள் பூட்டியே கிடக்க, ஆச்சிகள் அவுட்ஹவுஸில் அல்லது வீட்டின் ஒரு மூலையில்தான் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்! இதனால் திருட்டும்கூட அந்தப் பகுதியில் அதிகமாக நடக்க ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள். வேடிக்கை என்னவென்றால், கோட்டை போன்ற வீட்டுக்குள் நுழையும் திருடர்கள், அந்த வீடுகளுக்குள் நாள்கணக்கில்.. சமயத்தில் மாதக்கணக்கில் கூட தங்கியிருந்து, சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டே... வீட்டின் ஒவ்வொரு மூலையாக ஆராய்ந்து, கிடைத்ததை நிதானமாகச் சுருட்டிக்கொண்டு வெளியேறுகிறார்கள்! 'இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் அசிங்கம்’ என்று நினைத்துப் பெரும்பாலானவர்கள் இதை வெளியில்கூடச் சொல்வதில்லை!


உமையாள் ஆச்சி - அறுபது வயதைக் கடந்துவிட்டாலும் குடும்ப நிர்வாகத்தை ஒரு பக்கமும் பள்ளத்தூர் பஞ்சாயத்து போர்டு தலைவியாக அதன்
நிர்வாகத்தை மற்றொரு பக்கமுமாகச்
சளைக்காமல் கவனித்து வருகிறார்! செட்டிநாட்டு வீடுகள், கோட்டை போல் பெரிது பெரிதாகக் கட்டப்பட்டதற்கு சுவாரஸ்யமாக ஒரு விளக்கம் கொடுக்கிறார் உமையாள் ஆச்சி.


''காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து உப்பு கொண்டு விற்க பர்மாவுக்குப் போனவர்கள்தான் எங்க செட்டியார்கள். எங்கள் சமூகத்து ஆண்களெல்லாம் பர்மாவில் இருந்தப்போ காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல் தாக்கி அழிச்சுட்டது. அப்போ, ஆச்சிமார்கள் எல்லாம் பெரும் அவஸ்தைப்பட்டுப் போயிருக்காங்க. இந்த விஷயத்தை கேள்விப்பட்டுத் துடிச்சுப்போன செட்டியார்கள், பர்மாவில் வியாபாரம் பண்ணிச் சம்பாதிச்ச பணத்துக்கு, அங்கேயே தேக்கு மரங்களை வாங்கிக்கொண்டு வந்து, கடல் தாக்காத இந்த மேட்டுப் பகுதியில் கோட்டை மாதிரி இப்படி உசரமான வீடுகளைக் கட்டிப் போட்டுட்டாங்க... குடும்பம் கலையாமல் இருக்கணும்னு வீடுகள்ல ஏகப்பட்ட அறைகளை வெச்சுக் கட்டியிருக்காங்க. அவர்கள் அப்படித் திட்டமிட்டுக் கட்டினதால்தான் இன்றைக்கு சில இடங்கள்ல ஒரே வீட்டுக்குள் முப்பத்திரண்டு குடும்பங்கள் பிரியாம வாழ்ந்துட்டிருக்காங்க!'' என்று பெருமையாகச் சொன்னாலும் உமையாள் ஆச்சிக்குச் சில வேதனைகளும் இருக்கின்றன.


''அன்றைக்கு பர்மாவில் செழிப்பாக பிஸினஸ் செஞ்சு, பெரிய பெரிய வீடுகள் கட்டிய குடும்பங்களில் பல... இன்றைக்கு குடிக்கக் கஞ்சிக்குக்கூடக் கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க. இருந்தாலும், அந்தக் கஷ்டம் வெளியே தெரியறதில்லை. பிரமாண்டமா நின்னுட்டிருக்க வீடுகளை இடிச்சு, பர்மா தேக்கு மரங்களை வித்துக் கஞ்சி குடிச்சிட்டிருக்கு பல செட்டியார் குடும்பங்கள். ஆனா, செட்டியார் சமூகத்தில் ஒருசிலர் வசதியா இருக்கிறதை மட்டும் சிலர் கணக்கிலெடுத்துட்டு ''அது பணக்கார சமூகம்’னு ஈஸியா சொல்லிடறாங்க. அரசாங்கமும் அப்பிடித்தான் நினைக்குதுங்கிறது இன்னும் ரொம்ப வேதனை...'' என்கிறார் பெருமூச்சுடன்.

Friday, December 13, 2013

கோவா திரைப்பட விழா! ஒரு ரசிகனின் டைரி

கோவாவில் சர்வதேசத் திரைப்பட விழா. சில ஆண்டுகளாகப் போக நினைத்து இந்த ஆண்டுதான் நண்பர்களுடன் சேர்ந்து போக வாய்த்தது. 'கோவா’, ஏற்கெனவே ஓரளவு பரிச்சயமான ஊர்தான். 'வெற்றி விழா’, 'புதுப்புது அர்த்தங்கள்’ திரைப்படங்களில் தலா இரண்டு முறையும், 'கோவா’ படத்தில் ஒரு முறையும் பார்த்திருக்கிறேன்.



ஒயிலான பெண், இடுப்பை வளைத்து நிற்பதுபோல் தென்னை மரங்கள் ஓரத்தில் வளைந்து நிற்கும் கோவாவின் கடற்கரைகளை அந்தத் திரைப்படங்கள் மனதில் பதித்தன. கற்பனையில் அந்த மாதிரி காட்சிகளுடன் வாஸ்கோடகாமா ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறுகையில், அழுக்காக சோகையாக இருந்த கோவாவைப் பார்த்ததும் ஏமாற்றம். ஆனால், ஊருக்குள் கடற்கரையை ஊடறுத்துப் புகுந்திருக்கும் கடல், கோவாவின் பிரதேசங்களை அழகாக்கி வைத்திருக்கிறது.

திரைப்பட விழா நடைபெறும் கலா அகாடமியும் ஐநாக்ஸும் அமைந்திருக்கும் சாலை, திரைப்பட விழா நடந்த தினங்களில் முழுதும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பெரும் திருவிழாவாக இருந்தது. தமிழகத்தில் இருந்து வந்திருந்தவர்கள் கணிசம். காலையில் எழுந்து அவசரமாகக் கிளம்பி வந்து க்யூவில் நின்று முண்டியடித்து, அன்றாடத் திரையிடல்களுக்கு டிக்கெட் பெற வேண்டும். எல்லாவற்றையும் ஆர்வத்துடன் கடந்து, அரங்கினுள் நுழைந்து, அமர்ந்து, மயில்பாட்டெல்லாம் போட்ட பிறகு (திரைவிழாவின் பிரத்தியேகப் பாடல்) தொடங்கும் படம் சுவாரஸ்யமாகச் சென்றால், பிரச்னை இல்லை. கொஞ்சம் மெதுவாக நகர்ந்தால் அவ்வளவுதான். ஆங்காங்கே குறட்டையும், பலர் கொத்துக் கொத்தாக எழுந்து செல்வதும் அரங்கேறுகின்றன!
விழாவின் தொடக்கத் திரைப்படம் 'டான் ஜூவான்’. செக் தேசத்துப் படம். வெகு சுவாரஸ்யம்!

'சால்வோ’ எனும் இத்தாலிய ஃப்ரெஞ்சுக் கூட்டுத் தயாரிப்புப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, 'இது 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’டா!’ எனும் தமிழ்க் குரல் கேட்டது. அதில் ஆச்சர்யம் இல்லைதான். கதாநாயகன் ஒரு கொலையாளி. இத்தாலிய மாஃபியாவின் ஆள். ஒருவனைக் கொல்லச் சென்று, அவன் வீட்டினுள் பதுங்கியிருக்கிறான். அங்கே கொல்லப்பட வேண்டியவனுக்கு, பார்வையற்ற தங்கை ஒருத்தி இருக்கிறாள். அண்ணன் வரும் வரை ஒளிந்திருந்து அவள் நடவடிக்கைகளைக் கவனிக்கிறான். அண்ணன் வந்ததும் அவனைக் கொல்கிறான். கொன்றவன் வேலை முடிந்தது என்று கிளம்பாமல், அந்தப் பார்வையற்ற பெண்ணைப் பாதுகாக்கும் பொருட்டு தனியே கொண்டுபோய் ஒரு மறைவிடத்தில் வைத்துப் பராமரிக்கிறான். மாஃபியா தலைவனுக்கு விஷயம் தெரிந்து, 'அவளையும் கொல்’ என்று கட்டளையிடுகிறான். ஹீரோ மறுத்து, அவளைக் காப்பாற்றும் முயற்சியில் தன் உயிரை விடுகிறான். இதுதான் கதை. ஆனால், கதையில் நடைபெறும் சம்பவங்களின் நடுவே மெதுமெதுவாக ஹீரோயினுக்குப் பார்வை திரும்பி கடைசியில் அவளுக்கு முழுசாகப் பார்வை வந்து விடுகிறது.

         திரையிடல் முடிந்ததும் இயக்குநர்களிடம் (இந்தப் படத்துக்கு இரண்டு இயக்குநர்கள்) 'அதெப்படி சார்... அந்தப் பொண்ணுக்குப் பார்வை வந்துச்சு? யாராச்சும் கண் டாக்டர்கிட்டே இது பத்தி டீடெய்ல்ஸ் கேட்டீங்களா?’ என்று 'பார்வை திரும்புதல்’ குறித்த கேள்விகள் விழுந்தன. இயக்குநர் பொறுமையாக, ''சில சமயங்களில் வாழ்க்கையில் அபூர்வமாக, தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டு ஒன்று நிகழலாம். அது ஹீரோயினுக்கு நிகழ்வதாக அமைத்திருக்கிறோம்'' என்றார். பார்வையாளர்கள் அதில் திருப்தி அடையவில்லை.




இயக்குநர்களில் ஒருவரான ஃபேபியோ க்ரஸடோனியா, எல்லா சலசலப்புகளும் ஓய்ந்த பின்னர் பேசினார். ''இந்தப் படத்தை ஃப்ரான்ஸில் திரையிடும்போது 'நீங்கள் இந்தப் பார்வை திரும்புதல் சம்பந்தமாக நிறையக் கேள்விகளை எதிர்கொள்ளவேண்டி வரும். ஏனெனில், ஃப்ரான்ஸில் இருப்பவர்கள் ரேஷனலிஸ்ட்டுகள். எல்லாவற்றையும் தர்க்கபூர்வமாக அவர் களிடம் நிரூபிக்க வேண்டும்’ என்றார்கள். நானும் அதை எதிர்பார்த்தேன். ஆனால், ஃப்ரான்ஸில் இதுபற்றி ஒருவர்கூட கேள்வி கேட்கவில்லை. இந்தியா, நம்பிக்கைகள் நிறைந்த நாடு; ஸ்பிரீச்சுவல் தேசம். இங்கு இந்தக் கேள்வியே வராது என்று நினைத்தேன். ஆனால், இங்கு இத்தனைக் கேள்விகள் முளைப்பது ஆச்சர்யம்!'' என்று வியந்தார். பாவம்... அவர் நம் ஊர் ஃபேஸ்புக் நண்பர்கள் பற்றி தெரியாத அப்பாவி!

விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் நிறுவனம்தான் திரைப்பட விழாவின் முக்கிய ஸ்பான்ஸர். வளாகத்துக்கு உள்ளேயே ஸ்டால் போட்டிருந்தார்கள். அதில் கனவான்களும், சீமாட்டிகளும், சாமான்யர்களும் அவ்வப்போது பீர் அருந்தும் காட்சி சகஜமான ஒன்று. க்யூ வரிசையில் அன்றைக்கு ஒருவர், ''ஏன் இவ்வளவு நேரம்?'' என்று கத்த, அமைப்பாளர்களில் ஒருவர், ''ஏன் குடிச்சிட்டு வந்து சத்தம் போடுறீங்க?'' என்று கேட்டுவிட்டார். உடனே கோபம் வந்துவிட்டது சம்பந்தப்பட்டவருக்கு. ''கேம்பஸுக்கு உள்ளேயே குடிக்கிறதுக்கு ஸ்டால் போட்டுட்டு, நீ எப்படி என்னைக் 'குடிகாரன்’னு சொல்லலாம். மன்னிப்புக் கேளு'' என்று போதையேறிய ஆங்கிலத்தில் கத்த, அமைப்பாளர் மன்னிப்புக் கேட்டதும் க்யூ முழுவதும் கைதட்டல்!

'தங்கமீன்கள்’ திரையிடல் ஹவுஸ்ஃபுல். மலையாளத்தின் 'ஷட்டர்’, 'செலுலாய்டு’ படங்களும் பரவலாக எல்லோராலும் சிலாகிக்கப்பட்டன. எடிட்டர் லெனின், 'உலகத் திரைப்படங்களைவிட, இந்த முறை இந்தியத் திரைப்படங்கள் நன்றாக இருக்கின்றன’ என்று அபிப்பிராயப்பட்டார். அது உண்மைதான். 'ஷிப் ஆஃப் தீஷியஸ்’ மற்றும் மராத்தியப் படமான 'ஃபேண்ட்ரி’, வங்காள இயக்குநர் ரித்விக் கடக்கின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான 'மேக தக்க தாரா’ ஆகியவை பெரிதும் ரசிக்கப்பட்டன.





விழாவில் திரையிடப்பட்ட திரைப்படங்களில் கவனிக்கத்தக்க அம்சம், கதைகளின் வெரைட்டி! நான்கு பசுக்கள் தப்பிப் போய் காட்டுக்குள் புகுந்துகொள்வதைப் பற்றி ஒரு படம். இரண்டு கார்கள் எதிரெதிரே நின்று ஒருவருக்கொருவர் வழி தர மறுக்க, அதையட்டி விரியும் சம்பவங்களை வைத்து ஒரு படம். சினிமாவில் சின்னச் சின்ன வேடங்களில் நடிக்கும் எக்ஸ்ட்ரா நடிகை ஒருவரின் வாழ்க்கையைச் சொல்லும் படம்... என விதவிதமான கதைக்களங்கள் வியக்கவைக்கின்றன.

எப்போதும் நம்மை நெகிழ்த்தும் தன்மை ஈரானியப் படங்களுக்கு உண்டு. அது இந்த முறையும் நிரூபிக்கப்பட்டது. 'ஹுஷ்... கேர்ள்ஸ் டோன்ட் ஸ்க்ரீம்’ எனும் திரைப்படம் பார்வையாளர்களை உலுக்கி அழவைத்தது. பெண் குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமைகளை, அழுத்தமாக முகத்தில் அறைந்தது போல் சொல்லிக் கலங்கடித்த படம்.

திருமணத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறான் மணமகன். மணமகள் ஷிரின் ஒரு கொலை செய்துவிட்டு முகம், உடலெங்கும் ரத்தக்கறையுடன் வருகிறாள். அனைவரும் அதிர்ந்துபோகின்றனர். என்ன நடந்தது என்று யாரிடமும் வாய் திறந்து பேச மறுக்கும் ஷிரினை, பேசவைக்க வெகு பிரயத்தனப்படுகிறார் அவளது பெண் வழக்கறிஞர். ஒரு வழியாக அவள் பேசுகிறாள். தனது எட்டாவது வயதில் பள்ளிக்குக் கூட்டிச் செல்லும் டிரைவரால் தான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதையும், அந்தச் சமயத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்வதற்கு ஆள் இல்லாமல் தவித்த அவலத்தையும், தன்னைக் கொடுமைக்கு ஆளாக்கியவன் உதட்டில் விரல்வைத்து, 'உஷ், பொண்ணுங்க கத்தக் கூடாது’ என்று சொன்ன சொற்கள், அவை விளைவித்த பயம் தன் மனதில் ஆறாத ரணமாகப் பதிந்து வாழ்க்கை முழுவதும் தொடர்ந்தது பற்றியும் அவள் சொல்கிறாள். திருமணத்துக்குத் தயாராகி கிளம்பி வருகையில் தனக்கு நேர்ந்தது போன்றே இன்னொரு சிறுமிக்கும் கொடுமை நேர்வதைப் பார்த்துவிட்டுப் பொறுக்கமுடியாமல் சம்பந்தப்பட்ட மிருகத்தைக் கொலை செய்துவிட்டதைச் சொல்கிறாள் ஷிரின்.

ஈரானியச் சட்டப்படி அவளுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. அதில் இருந்து அவள் தப்ப வேண்டுமானால், அவளால் காப்பாற்றப்பட்ட அந்தச் சிறுமியும், அவளது பெற்றோரும் கொலைக்கான காரணத்தை நீதிமன்றத்தில் சொல்ல வேண்டும். சிறுமியின் தந்தை தனது குடும்பக் கௌரவத்தைக் காரணம்காட்டி உண்மையைப் பேச மறுக்கிறார். தூக்கிலிடப்படும் நாள் நெருங்குகிறது. ஏதாவது செய்து ஷிரினைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று பெண் வழக்கறிஞரும் ஷிரினின் காதலனும் போராடுகின்றனர். எந்த முயற்சியும் கை கொடுக்காத நிலையில், ஷிரினுக்கு என்ன நடக்கிறது என்பதே க்ளைமாக்ஸ்!

படம் பார்த்த அத்தனை பேர் மனதிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய இந்தப் படத்தை இயக்கியவர் பௌரன் தெரக்‌ஷந்தே (Pouran Derakhshandeh) எனும் ஈரானியப் பெண் இயக்குநர். பெண்களின் வலி, வேதனையை ஓர் ஆண் இயக்குநரால் இந்த அளவுத் தாக்கத்துடன் சொல்லியிருக்க முடியாதோ என்று எண்ணவைத்தது பௌரனின் இயக்கம்!

திரைப்பட விழாவில் கலந்துகொண்ட பின் நிதானமாக யோசிக்கையில் நமது தமிழ் திரையுலகை முன்வைத்து இரண்டு விஷயங்கள் மனதில் தோன்றின. ஒன்று, விழாவுக்கு வந்த படங்களில் கணிசமானவை பெண் இயக்குநர்கள் இயக்கியவை. நம் ஊரிலிருந்து ஏன் பெண் இயக்குநர்கள் இந்த மாதிரி உருவாவது இல்லை? இரண்டு, விதவிதமான கதைக் களங்கள். இது போன்ற களங்களையும் கதைகளையும் ஏன் நாம் டிஸ்கஷன் லெவலில்கூடச் சிந்திப்பது இல்லை?













Wednesday, November 6, 2013

ஒதுக்குவதும் மறுப்பதுமா வளர்ச்சி?


ஒதுக்குவதும் மறுப்பதுமா வளர்ச்சி?

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அறிவியல் வசதி இல்லாத அந்தக் காலத்தில், 'செப்பியதினம் ஒன்றில் கடுகு போலாம்’ என 23 மி.மீ. அளவிலான கர்ப்பப்பையையும் 'பூவிலே இரண்டு திங்கள் கழுத்துண்டாம், புகழ் சிரசு முறுப்பாகும்’ என்று, ஐந்தாம் மாதம் காது, மூக்கு உதடும், ஏழாம் மாதம் தலைமுடியும் தெரியும் என, கருவின் வளர்ச்சியை ஒவ்வொரு நாளும் கணக்கிட்டு அகத்தியர் வல்லாதியிலும், பரராச சேகரத்திலும், யூகி சிந்தாமணியிலும் சொன்னவர்கள் நம் சித்தர்கள்.
1700-களில் வெறும் கால்நடையாகவும் குதிரையிலும் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று ஏராளமான தாவரங்களைப் பதிவுசெய்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 'நவீனத் தாவரவியலின் தந்தை’ கார்ல் லின்னேயஸுக்கு வரலாறு கொடுத்த மரியாதையை, நம் தமிழ் சித்தர்களுக்குக் கொடுக்கத் தவறிவிட்டோம்.

இயற்கையைப் பார்த்து மற்ற மரபுகள் பயந்து கொண்டிருந்தபோதே, அதனை ஆராய்ந்து புரிந்துகொள்ளும் ஒரு நீண்ட அறிவியல் தேடல் நம்மிடையே இருந்தது. அந்த அறிவியலை அப்படியே ஒதுக்குவதும் மறுப்பதுமா வளர்ச்சி?


Friday, October 4, 2013

கல்லணை

உலகின் பல இனங்கள் காட்டில் வேட்டையாடி உண்ட போது இங்கே நாம் கல்லணையை கட்டி கொண்டு இருந்தோம்!






அங்கே மக்கள் பேச மொழியே தோன்றாத போது இங்கே நாம் இலக்கியங்கள் படைத்தோம்!

பலருக்கு நிலத்தில் மட்டுமே போர் புரிய தெரிந்த காலத்தில், இங்கே நிகரற்ற ஒரு கப்பற்படையை வைத்திருந்தோம்!

பல மன்னர்கள் அடுத்த பகுதியை வெற்றி கொண்டு சாதனை என கூறிய போது, தெற்காசியா முழுவதும் ஒரே ஆட்சியின் கீழ் வைத்து ஆண்ட தமிழர்கள் நாம்!


இவ்வளவு சாதித்த நம் இனத்தின் வாழ்வாதாரமே இன்று பல இன்னல்களோடு உள்ளது! இது சதியா?? அல்லது விதியா?

Wednesday, October 2, 2013

ஜோதிட சூட்சுமங்கள்

கணபதி வழிபாடு

ஓம் ஏக தத்புருஷாய வித்மஹே ; வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்.

ஓம் என்கிற பிரணவப் பொருளினுள் உள் அடங்கிய , எல்லாம் வல்ல இறைவனை வணங்கி , சித்தர்களின் தலைவனாம் அகத்திய மக ரிஷியை , மனதில் தியானித்து ... ஜோதிடப் பாடத்தை தொடங்குகிறேன்.


ஜோதிடக் கலையை எப்பாடு பட்டேனும் காப்பாற்றுவேன் , என்று சூளுரை செய்து தொடங்கப்படும் முயற்சி அல்ல இது. ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்களை திருத்தி , அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதும் என் நோக்கமல்ல. யாரும் யாரையும் மாற்ற முடியாது. தானே உணர்ந்து , தன்னை மாற்றிக் கொண்டால் தவிர எந்த மாற்றமும் நிரந்தரம் ஆகாது.

எனக்கு தெரிந்த ஜோதிட ஞானத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் முயற்சியே இனி வரவிருக்கும் தொடர் கட்டுரைகள். இதில் உங்களுக்கு ஏற்படும் நிறைகள் அனைத்திற்கும் காரணம் என் குருவருள். ஏதேனும் பிழைகள் இருப்பின், அவை முழுக்க முழுக்க அடியேனுடையது. பொறுத்துக் கொள்ளவும். திருத்திக் கொள்கிறேன். .

எந்த கலையிலும் யாரும் பெரிய கொம்பன் கிடையாது. மனிதர்களாய் பிறந்த ஒவ்வொருவரும் , இன்னும் கற்க, கற்றுத் தெளிய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. அந்த அருணாச்சலமும் , என் குருவின் அருளும் எனக்கு தேவையான ஞானம் தந்து, தவறான கருத்துக்களை கூறாமல் இருந்து காக்கும் என்று நம்புகிறேன்.

ஜோதிடம் பற்றி ஒன்றுமே தெரியாத பாமரருக்கும் புரியும் வகையில் , முடிந்தவரை எளிமையான நடையில் தர முயற்ச்சிக்கிறேன். சரி.... இனி நேரடியாக பாடத்திற்கு செல்வோமா..?

ஜாதகம் :

பூமியில் பிறக்கும் எந்த ஒரு ஜாதகருக்கும், அவரவர் பூர்வ ஜென்ம வினைகளே , 9 கிரகங்களாகவும், அவை அமரும் வீடுகளையும் தீர்மானிக்கிறது.

மொத்தம் ஒன்பது நவக்கிரகங்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய் , புதன், குரு, சுக்கிரன் , சனி, ராகு , கேது


எந்த ஒரு ஜாதக கட்டத்திலும் - 12 கட்டங்கள் இருக்கும். இவை 12 வீடுகள் என்பர். 12 ராசிகள்என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

மேலிருந்து இடதுகைப் பக்கத்திலிருந்து - இரண்டாம் கட்டத்தை பாருங்கள். அதை முதல் வீடு என்று கொள்ளுங்கள். இப்போது கடிகாரச் சுற்றுப்படி 1 , 2 , 3 என்று குறியுங்கள். மொத்தம் 12 வீடுகள் வரும். ஒவ்வொரு வீட்டிற்கும் 30 டிகிரி . மொத்தம் 360 டிகிரி. இதனுடன் ஒரு சுற்று முடியும்.


மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் - 4 பாதங்கள் உள்ளன. ஆக மொத்தம் 27 x 4 = 108 நட்சத்திர பாதங்கள் . ஒவ்வொரு வீட்டிற்க்கும் 9 பாதங்கள் என , 108 நட்சத்திரக் கால்கள் - 12 வீட்டில் அமர்ந்திருக்கும்.

முதல் வீடான - மேஷத்தில் - அஸ்வினி ( 4 பாதங்கள் ) , பரணி ( 4 பாதங்கள் ), கார்த்திகை (1 பாதம் மட்டும் ) , ஆக மொத்தம் - 9 பாதங்கள் இருக்கும்.

கார்த்திகை நட்சத்திரத்தில் இருக்கும் , மீதி 3 பாதங்கள் - ரிஷபத்தில் இருக்கும். ரோஹிணி ( 4 பாதங்கள் ) , மிருக சீரிஷத்தில் 2 பாதங்கள் மட்டும் வரும்.
மிருக சீரிஷத்தில் வரும் மீதி 2 பாதங்கள் - அடுத்த ராசியான மிதுனத்தில் வரும். இதைப் போல - மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களையும் - வகைப் படுத்த வேண்டும்..




ராசிகள் நட்சத்திரங்கள்


மேஷம் - அசுவினி, பரணி, கார்த்தி கை 1-ஆம் பாதம் முடிய
ரிஷபம் - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம்
பாதம் முடிய
மிதுனம் - மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம்
3-ஆம் பாதம் முடிய
கடகம் - புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய
சிம்மம் - மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
கன்னி - உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம்
முடிய
துலாம் - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம்
முடிய
விருச்சிகம் - விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
தனுசு - மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
மகரம் - உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம்
பாதம் முடிய
கும்பம் - அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம்
முடிய
மீனம் - பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய

நட்சத்திர அதிபதிகள் :


மேலே கூறிய படி , 27 நட்சத்திரங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக எழுதுங்கள்.
ஒவ்வொரு வரிசைக்கும், ஒவ்வொரு நவகிரகம் அதிபதியாக இருப்பார்.


ராசி அதிபதிகள் :

ஒவ்வொரு ராசியும், ஒரு நவகிரகத்தின் வீடு. ஒரு சிலருக்கு இரண்டு வீடு. நிழல் கிரகம் எனப்படும் ராகு, கேதுக்கு சொந்த வீடு இல்லை.

இதைப் பற்றி அடுத்த பாடத்தில் பார்க்கலாம்.

இப்போ நீங்க செய்ய வேண்டியது என்ன னு கேட்டால்... மேலே சொன்ன படி , ஒன்பது கிரகம், 12 ராசி , 27 நட்சத்திரம், எந்த நட்சத்திரத்துக்கு எந்த ராசி ? - இதை எல்லாம் , நல்லா மனசிலே உள்ள பதியுங்க.. அப்போ தான் , நமக்கு பின்னாலே வர்ற பாடங்கள் நல்லா புரியும் ..

நல்ல நினைவாற்றல் , எந்த ஒரு சோதிடருக்கும் முக்கியம். அதுக்காக பார்க்கிற ஜாதகம் எல்லாம் மனசிலே பதிய வைக்காதீங்க ... உங்க ஜாதகம் தவிர வேற எந்த ஜாதகமும் உங்களுக்கு ஞாபகம் இருக்கக் கூடாது..



ஜோதிட பாடங்கள் - ( பாடம் - 02 )
| Feb 5, 2011


முதல் பாடத்தை நன்றாக படித்து மனதில் பதித்துக் கொண்டு விட்டீர்களா?
சரி , அடுத்த பாடத்தை கவனிப்போம்...


எல்லோருடைய ஜாதகத்திலேயும், லக்கினம் , ( ல) , அப்படின்னு போட்டிருப்பாங்க. அதுதான் அந்த ஜாதகருக்கு - முதல் வீடு. எந்த வீட்டில் சந்திரன் இருக்கிறதோ, அது அவரது ராசி.

இன்னைக்கு நடைமுறைலே யாருக்கும் அவங்க லக்கினம் என்ன னு தெரியாது. ராசி ஓரளவுக்கு எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும். லக்கினம் அப்படின்னு பேச்சு எடுத்தாலே, அவருக்கு ஓரளவு ஜாதகம் பத்தி தெரிஞ்சு இருக்கும் னு நம்பலாம்.


எந்த ஒரு ஜாதகருக்கும், அவரது லக்கினம் தான் , முதல் முக்கியமான புள்ளி. லக்கினம் தெரியலை , இல்லை தப்பு னா, மொத்த பலன்களுமே தப்பா தான் போகும். அதைப் பற்றி , நாம் அப்புறமா பார்க்கலாம்.

ராசி அதிபதிகள் :


கீழே கொடுக்கப் பட்டுள்ள வீடுகளைப் பாருங்கள்.




மேஷம், விருச்சிகம் - செவ்வாய்க்கு சொந்த வீடுகள்.
ரிஷபம் , துலாம் - அதிபதி - சுக்கிரன்.
மிதுனம், கன்னி - அதிபதி - புதன்
கடகம் - அதிபதி - சந்திரன்
சிம்மம் - அதிபதி - சூரியன்
தனுசு , மீனம் - அதிபதி - குரு
மகரம் , கும்பம் - அதிபதி - சனி

ராகு, கேதுக்கு சொந்த வீடுகள் இல்லை. எந்த கட்டத்தில் இருக்கிறார்களோ , அதுவே அவர்களுக்கு வீடுகள் .

சரி, எதற்கு இந்த சொந்த வீடுகள். நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் என்ன செய்வீர்கள்? நீங்க தானே ராஜா.. முழு பலத்துடன் இந்த கிரகங்கள் - சொந்த வீட்டில் இருக்கும்போது இயங்கும். இந்த வீடுகளுக்கு ஆட்சி வீடுகள் என்று பெயர்.

சாதரணமா ஒரு கிரகத்துக்கு - சக்தி ஒரு மடங்கு னா, ஆட்சி ஸ்தானங்களில் மூன்று மடங்கு சக்தியுடன் இருக்கும்.

அதைப் போல , சில வீடுகள் - அந்த கிரகங்களுக்கு - உச்ச பலம் , நீச பலம் என்றும் இருக்கிறது. உச்ச வீடுகளில் அந்த கிரகங்கள் - ஐந்து மடங்கு பலத்துடன் இருக்கும். நீச வீடுகளில் , பலம் இழந்து பரிதாபமாக இருக்கும்.

இதைப் போல, ஒவ்வொரு இடமும் , ஒவ்வொரு கிரகத்திற்கு , நட்பு, பகை, சமம் என்று மூன்று பண்புகளுடன் இருக்கும். நம்ம வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரங்க கிட்டே , நாம இருப்போம் இல்லே.. ஒருத்தரைப் பிடிக்கும். ஒருத்தரை பிடிக்காது.. அந்த மாதிரி..
அவை எப்படி னு பார்க்க கீழே உள்ள அட்டவணையைப் பாருங்க.





இதை நீங்கள் கண்டிப்பாக , உங்கள் மனதில் நன்றாக பதிய வைத்துக் கொள்ளுங்கள்.



சூரியன் - மேஷத்தில் உச்சம் எனில், அதற்கு நேர் ஏழாம் வீட்டில் நீசம் ஆகும்.
இதைப் போல ஒவ்வொரு கிரகத்திற்கும் பொருந்தும். கீழே பாருங்க.

நல்லா புரியுதுங்களா? இதெல்லாம் அடிப்படை பாடங்கள். இது எல்லாம் உங்களுக்கு எப்பவும் finger tips லெ இருக்கணும். இது பின்னாலே உங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.

மேலே உள்ள அட்டவணையைப் பார்த்தாலே , உங்களுக்கு சில விஷயம் புரியணும். ஒரு கிரகத்துக்கு , இன்னொரு கிரகம் நட்பா இருக்கும். இல்லை பகையா இருக்கும்.
யாருக்கு , யாரைப் பிடிக்கும் , யாருக்கு யாரு - பகை னு பாருங்க.
இது எல்லாத்துக்கும் , நம்ம இந்து தர்ம முறைப்படி , நிறைய சுவாரஸ்யமான , பின்னணி இருக்கு... அதை எல்லாம் , பின்னாலே பார்க்கலாம்.





சரி, இப்போ ஒரு - செயல்முறைப் பயிற்சி : ( Practical)

இங்கே கொடுக்கப் பட்டிருக்கும் ஜாதகம், நமது தற்போதைய முதல்வர் , கலைஞர் அவர்களுடையது : இதிலே எந்த , எந்த கிரகம் என்ன நிலைலே இருக்குதுன்னு பாருங்க :





எப்படி பார்க்கணும் ?


முதல்லே எடுத்ததும் - நீங்க பார்க்க வேண்டியது , லக்கினம்......


இவருக்கு - என்ன லக்கினம் ? - கடகம் ... (குட்... நீங்களும் கண்டு பிடிச்சு இருப்பீங்க.. இல்லையா? )


இவருக்கு என்ன ராசி ? - சந்திரன் எங்கே இருக்கிறார் ? - ரிஷபத்திலே. So , இவருக்கு ரிஷப ராசி.



சரி, இப்போ மத்த கிரகங்களைப் பார்க்கலாம்...

சூரியன் - ரிஷபத்திலே . ரிஷபம் அவருக்கு - பகை வீடு.
சந்திரன் - ரிஷபம் , உச்ச வீடு. ( ஐந்து மடங்கு - பலம் ... )
செவ்வாய் - மகரம் - உச்ச வீடு ( ஐந்து மடங்கு - பலம் ... )
புதன் - மிதுனம் - ஆட்சி வீடு ( மூன்று மடங்கு - பலம். )
குரு - விருச்சிகம் - நட்பு வீடு.
சுக்கிரன் - மிதுனம் - நட்பு வீடு
சனி - துலாம் - உச்ச வீடு ( ஐந்து மடங்கு - பலம் ... )
ராகு / கேது - பகை வீடு.

மொத்தமா மூணு - உச்ச கிரகங்கள் , ஒரு - ஆட்சி கிரகம் , ரெண்டு கிரகம் - நட்பு ஸ்தானம், ....

மீதி - மூணு கிரகம் - சரி இல்லைன்னு வச்சுக்கலாம். (இப்போதைக்கு நமக்கு தெரிந்த விதிகள் படி.... )

யார் ஒருத்தருக்கு , நீசம் இல்லாம, ஒரு ஒரு கிரகம் ஆட்சியோ, உச்சமோ இருந்தாலே அவங்களுக்கு.. வாழ்க்கை நல்லா இருக்கும். .. மூணு கிரகம் னா அவரு , கிட்டத் தட்ட ராஜா தான்.. இவருக்கு எப்படி னு பாருங்க.. கொடுத்து வைச்ச மனுஷன்..
மத்த அம்சங்களைப் பத்தி , பின்னாலே விரிவா அலசுவோம்..

சாமி எல்லாம் இல்லை. ஜாதகம்லாம் பொய்யி னு அவர் சொன்னா.. போச்சா? அவருக்கே ரகசியமா எத்தனை ஜோதிடர்கள் இருக்கிறாங்களோ..?

இன்னொரு விஷயம் நல்ல நோட் பண்ணிக்கோங்க. .... ராகு எங்க இருந்தாலும், அதுக்கு நேரா , ஏழாம் வீட்டிலே - கேது இருப்பார். ... ஒன்னு தலை, இன்னொன்னு வால் மாதிரி னு நெனைச்சுக்கோங்க. .... இது எல்லோருக்கும். ... இது ஒரு விதி. அப்படி இல்லாம, மாத்தி இருந்தா... ஜாதகம் தப்பா எழுதி இருக்கிறாங்க னு அர்த்தம்..

சரி, இப்போதைக்கு இந்த ரெண்டு படங்களை தெளிவா , படிச்சு புரிஞ்சுக்கோங்க...
மீதி அடுத்த பாடத்திலே பார்க்கலாம்... OK வா?
Read more: http://www.livingextra.com/2011/02/02.html#ixzz2HLkNmcrA




ஜோதிட அடிப்படை பாடங்கள் : ( பாடம் : 03 )
|


வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.. இன்னைக்கு நம்ம அடுத்த பாடத்தை பார்ப்போம்.

இது வரைக்கும், நாம - 12 ராசிகளையும், அது எந்த கிரகத்தோட வீடு, எந்த கிரகம் எந்த வீட்டுலே - உச்ச , நீசம், பகை , நட்பு - எல்லாம் பார்த்தோம்.

இன்னைக்கு நாம பார்க்கப் போறது - நட்சத்திரங்களை., நட்சத்திர அதிபதிகளை.

நம்மோட முதல் பாடத்திலே , 27 நட்சத்திரங்களை - பார்த்தோம். ஞாபகம் இருக்கிறதா?
அதை கீழே கொடுத்த படி, 9 வரிசைலே எழுதி இருந்தோம்..



இதிலே - முதல் வரிசையிலே - மூன்று நட்சத்திரங்கள் இருக்கு இல்லையா? - இந்த நட்சத்திரங்களுக்கு - அதிபதி - கேது. இதைபோலே எல்லா நட்சத்திரங்களுக்கும் யார் யார் நட்சத்திர நாயகர்கள் னு பார்ப்போம்.

கேது - அஸ்வினி, மகம், மூலம்
சுக்கிரன் - பரணி, பூரம், பூராடம்,
சூரியன் - கார்த்திகை , உத்திரம், உத்திராடம்.
சந்திரன் - ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்,
செவ்வாய் - மிருக சீரிஷம் , சித்திரை, அவிட்டம்
ராகு - திருவாதிரை, சுவாதி , சதயம்
குரு - புனர்பூசம், விசாகம் , பூரட்டாதி
சனி - பூசம் , அனுஷம் , உத்திரட்டாதி
புதன் - ஆயில்யம் , கேட்டை, ரேவதி

இது எதுக்காக இந்த வரிசைனு கேளுங்க ..?

நீங்க எந்த நட்சத்திரத்திலே பிறந்தாலும் - அந்த நட்சத்திர அதிபரோட தசை தான் - உங்களுக்கு முதல்லெ வரும்... அதன்பிறகு, அடுத்த அதிபர், .. இப்படி வரிசையா வந்து , திரும்ப முதல் தசை கேது, அப்புறம் சுக்கிரன், .. இப்படியே போகும்..

நீங்க பிறந்த நட்சத்திரம் - சித்திரைனு வச்சுக்கோங்களேன் - நீங்க , பிறந்ததும் - முதல் ல வரும் தசை - செவ்வாய் தசை. அதன் பிறகு , ராகு தசை , அப்புறம் - குரு , சனி , புதன் தசை வரும். அதுக்கு அப்புறம் - மேலே போகணும் - கேது தசை , சுக்கிரன், சூரியன்... இப்படியே வரணும்.

ஒவ்வொரு தசையும் எத்தனை வருஷம்னு பார்ப்போம்.

கேது - 7 வருடங்கள்
சுக்கிரன் - 20 வருடங்கள்
சூரியன் - 6 வருடங்கள்
சந்திரன் - 10 வருடங்கள்
செவ்வாய் - 7 வருடங்கள்
ராகு - 18 வருடங்கள்
குரு - 16 வருடங்கள்
சனி - 19 வருடங்கள்
புதன் - 17 வருடங்கள்


ஒரு சுற்று முடிய - 120 வருஷங்கள் ஆகும். So , எல்லாருக்கும் , எல்லா திசையும் வருவது இல்லை. ... உதாரணத்துக்கு , ஒருத்தருக்கு ஜாதகத்திலே சுக்கிரன் - நல்ல நிலை லெ இருக்கும் னு வைச்சுக்குவோம். ஆனா , அவர் பிறந்தது கார்த்திகை நட்சத்திரம் னு வைச்சுக்கோங்களேன். அவரு, கிட்டத்தட்ட் - நூறு வருஷம் முடிச்ச பிறகு தான், சுக்கிர தசையை பார்க்க முடியும். நல்லா இருந்தும், பிரயோஜனம் இல்லை.

மனுஷன் செஞ்ச பாவ, புண்ணியத்துக்கு ஏற்ப , சரியாய் இந்த தசை நடக்கும். ..எப்படி எல்லாம் "செக்" வைக்கிறாங்க பாருங்க...

ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் , நான்கு பாதங்கள் இருக்கும். இல்லையா?
உதாரணத்திற்கு பிறந்த நட்சத்திரம் = = = திருவோணம் 3 ஆம் பாதம் னு வைச்சுக்கோங்களேன்.
அதனாலே, முதல்ல சந்திர தசை வரும் இல்லையா. மொத்த வருஷம் - 10 . கரெக்டா?
So , ஒவ்வொரு பாதத்திற்கும் - 2 1 /2 வருடங்கள் வரும். so , மீதி இருப்பது, ( 3 ஆம் பாதம், 4 ஆம் பாதம் மட்டுமே ) 5 வருஷங்கள் இருக்கும். இதிலே , கர்ப்ப செல் போக கழிவு இருப்பு பார்க்கணும். அதை எப்படி பார்க்கிறது னு, நாம மெதுவா பார்க்கலாம். இப்போவே சொன்னா, ரொம்ப கஷ்டமா பீல் பண்ணுவீங்க.. ஒரு உதாரணத்திற்கு - கர்ப்ப செல் இருப்பு. 6 மாதங்கள் னு எடுத்துக்கலாம்.

அதனாலே , அவர் ஜாதகத்திலே - சந்திர தசை இருப்பு - 4 வரு , 6 மாதங்கள், 0 நாட்கள் அப்படின்னு எழுதி இருப்பாங்க.

இப்போ இன்னொரு விஷயம் ஞாபகம் வைச்சுக்கோங்க. மொத்தம் - 10 வருடம் , சந்திரா தசை வருது இல்லையா. ஒவ்வொரு கிரகத்திற்கும் - புத்தி இருப்பு மாறுபடும்.
மொத்தம் 9 கிரகம் இருக்கு. இல்லையா..

சந்திர தசை , வந்ததுனா - முதல்லே - சந்திர புத்தி வரும் (10 மாதங்கள் ) . அப்புறம் செவ்வாய் புத்தி( 7 மாதங்கள் ) , அப்புறம் ராகு புத்தி (18 மாதங்கள்) . ... மொத்தமா எல்லாம் கூட்டினா 10 வருடங்கள் வரும்.

புத்தி இருப்பு எப்படி பார்க்கணும் னு ஒரு பார்முலா இருக்கு.
புக்தி
( B x C / A ) = வருடங்கள்

மொத்த தசை இருப்பு : (A ) - 120 வருடங்கள்
தசா கிரகத்தோட மொத்த வருடங்கள் : (B)
புத்தி பார்க்க வேண்டிய கிரகத்தோட இயல்பான தசை வருடங்கள் : (C )







சனி தசை லெ - கேது புத்தி எவ்வளவு னு பார்க்கலாம்.? ( சிறிய டெஸ்ட் ..)

சனி தசை மொத்தம் எவ்வளவு - 19 வருஷம். B = 19 ;
கேது வோட இயல்பான தசை = 7 வருஷம் ; C = 7


( 19 * 7 / 120 ) = 1 .108333 வருதா...? அதை அப்படியே , மாதம் நாளா மாத்திக்கோங்க.
நீங்க இதை 360 ஆலே பெருக்கிக்கோங்க. = 399 வருதா. 13 மாதம் , 9 நாள் வரும்.

(ஜோதிடப்படி, கணக்கு பண்ண ஈஸியா , 1 வரு = 360 நாட்கள் ; 1 மாதம் - 30 நாட்கள் னு எடுத்துக்கோங்க.. )

பிறக்கும் போது , எந்த தசை , எந்த புக்தி இருப்பு னு தெளிவா எழுதி இருப்பாங்க..
அந்த டீடைல் தெளிவா இருந்தாத் தான், உங்களுக்கு இப்போ நடப்பு தசை , புக்தி என்னனு தெளிவா கண்டு பிடிக்க இயலும். .... அது கண்டு பிடிச்சாத்தான் , உங்களுக்கு என்ன பலன்கள் இப்போ ஏற்படும் னு கண்டு பிடிக்க இயலும்.....

சரி, இன்னும் கொஞ்ச நாளைக்கு - நோ பார்முலா... ஒன்லி தியரி , ப்ராக்டிக்கல் மட்டும் தான். OK வா...?

மேலே சொன்ன பாடத்தை நல்ல படிச்சு, மனசிலே பதிய வைச்சுக்கோங்க... மீதி , அடுத்த பாடத்திலே பார்க்கலாம்.





ஜோதிட பாடங்கள் ( பாடம் : 04 )
|


நமது வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நமது ஜோதிட பாடங்களை படித்துக் கொண்டு வரும் அன்பர் ஒருவர், தசா / புக்தி பாடத்தை படித்துவிட்டு - புத்தி யைப் பற்றி சற்று விரிவாக , விளக்கம் தர முடியுமா என்று கேட்டு இருந்தார். கண்டிப்பாக விளக்கமாக நாம் கூற இருக்கிறோம் என்பதை வாசகர்கள் அனைவருக்கும் தெரியப் படுத்துகிறோம்.

ஆனால், இப்போது இல்லை - இன்னும் சில பாடங்களுக்குப் பிறகு. ஏன் என்று கூறுகிறேன்.. நமது பாடங்களைப் படிக்கும் அனைத்து வாசகர்களும் , ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆர்வம் இருப்பவர்கள். ஆனால், இப்போதுதான் அவர்களுக்கு அடிப்படையில் இருந்து சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறோம்.. இதையே இன்னும் சற்று விளக்கமாக கூற, அவர்கள் சுவாரஸ்யம் சற்றுக் குறையக் கூடும். சில அடிப்படை பாடங்களை விவரித்துவிட்டு , அவர்களை ஜாதகங்களை ஆராய்ச்சி செய்யும் நிலைக்கு வர வைத்து விட்டு, பின்பு ஜோதிட விதிகளை அலசி ஆராயலாம்.

இப்போது - இதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். 9 கிரகங்களுக்கு - 9 தசா. ஒவ்வொரு தசா விலும் - 9 புத்திகளும் வரும்.
தசா நல்லா தசையாய் இருந்தாலும் , புக்தி அவருக்குப் பகையாய் இருந்தால் பலன்கள் , அந்த கால கட்டத்தில் நல்லதாய் இராது. நல்ல சாலையில் பயணம் போகிறோம்.. வழியில் குண்டும் , குழியுமாய் சில நேரம் படுத்தி எடுக்கும் அல்லவா? அதைப் போல.
இதைப் பற்றி சிறிது விளக்கமாக பின்னால் , பார்த்துக் கொள்ளலாம்... சரியா?

இன்றைய பாடத்தைப் பார்ப்போம்....
=====================================

நவகிரகங்களில் - சுப கிரகங்கள் , பாவ கிரகங்கள் என்று இரண்டு வகை உள்ளனர்.

குரு, சுக்கிரன், புதன் , சந்திரன் - சுப கிரகங்கள்
சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது - அசுப கிரகங்கள்.

சந்திரனைப் பொறுத்தவரை - வளர் பிறை சந்திரன் மட்டுமே , முழு சுபர் ஆவார். தேய் பிறையில் இருந்தால் , அவர் அவ்வளவு நல்ல பலன்களை தருவது இல்லை.

சரி, இப்போது இன்னொரு விஷயமும் தெரிந்து கொள்ளுங்கள். மேல சொன்னது பொதுவான விதி. செவ்வாய் , சனி எல்லாம் பாவ கிரகங்கள் தான். அதுவே உங்களுக்கு அவர்கள் இலக்கின அதிபதிகளாய் இருந்தால் , என்ன செய்வது..? உயிர் கொடுப்பவர்கள் ஆயிற்றே. அவர்களுக்கு நல்லது தான். ஆனால் இந்த தீய கிரகங்களின் பார்வை படும் இடங்கள், நல்ல பலன்களை தராது..
==========================================
வளர் பிறை சந்திரன் , தேய் பிறை சந்திரன் என்று - ஒருவர் ஜாதகத்தைப் பார்த்தாலே தெரிந்து கொள்ள முடியும்.. எப்படி?

மொத்தம் இருப்பது - 12 ராசிகள். நம் தமிழ் மாதங்களும் - 12 . எதாவது லிங்க் இருப்பது போல தெரிகிறதா? எஸ்.. யு ஆர் ரைட் .
சித்திரை மாதம் பொறந்தாலே - சூரியன் , மேஷம் ராசிக்குள்ளே வர்றார் னு அர்த்தம். வைகாசி லெ - ரிஷபம். ஆனி யில் - மிதுனம் ... இப்படியே ... பங்குனி - மாதத்தில் , மீனம் ராசியில் சூரியன் இருப்பார்.

ஜாதகத்தில், சூரியன் இருக்கிற ராசி இலிருந்து 1 முதல் ஏழு இடங்களில் இருந்தால் வளர்பிறை. ... எட்டில் இருந்து - 12 வரை - தேய் பிறை.. இப்போ இன்னொரு விஷயம் பிடிபடணுமே...!! அதே தான்... சூரியனுக்கு 1 ஆம் இடத்தில் - அதாவது சூரியனும், சந்திரனும் - சேர்ந்து ஒரே வீட்டில் இருந்தால் , அவர் அமாவாசையிலோ , அமாவாசையை ஒட்டியோ பிறந்து இருப்பார். அதே போல - சூரியனுக்கு நேர் எதிரில் - ஏழாம் வீட்டில் இருந்தால் - பௌர்ணமியை ஒட்டி பிறந்து இருப்பார்.

சித்திரை மாசம் - சூரியன் மேஷத்திலே ; அதுக்கு ஏழாம் வீடு என்ன..? துலாம் - அங்கே சந்திரன் சித்திரை நட்சத்திரத் தில் இருக்கும்போது , பௌர்ணமி யா இருக்கும்.

நம்ம மனசிலே பதிஞ்ச சில நாட்களைப் பாருங்க :
வைகாசி - விசாகம் ; ஆவணி - அவிட்டம் ; திருக் கார்த்திகை ; மார்கழி - திருவாதிரை ; தைப் பூசம் ; மாசி -மகம் ..... இது எல்லாமே பௌர்ணமி தினங்கள். இந்த தினங்களில் சந்திரனும், சூரியனும் - ஒன்றை யொன்று நேர் எதிர் நோக்கி தழுவிக் கொண்டு இருப்பார்கள்.


ஒவ்வொரு கிரகமும் - ஒவ்வொரு வீட்டில் எத்தனை நாட்கள் இருக்கும் - ? எப்படி கணக்கு பார்க்கிறது..? கீழே உள்ள அட்டவணையைப் பாருங்க..

சூரியன் - ஒரு மாதம் - ஒரு ராசி னு பார்த்தோம்.. மொத்தம் 12 வீட்டுக்கும் , ஒரு வருடம் ஆகுது. கீழே பூமி னு போட்டு இருக்கோம் பாருங்க...
அதை பன்னி ரெண்டாலே வகுத்தால் - ஒரு வீட்டுக்கு வரும்..
சந்திரன் - ஒரு நாளைக்கு ஒரு நட்சத்திரம் - so , இரெண்டே கால் நாளிலிருந்து - மூன்று நாள்கள் - ஒரு ராசிக்கு.
புதன் -( 88 / 12 ) - சுமார் 7 நாள்கள் / ஒரு ராசிக்கு
செவ்வாய் - (687 /12 ) - சுமார் 57 நாட்கள்
குரு - ஒரு ராசிக்கு சுமார் - ஒரு வருடம்
சுக்கிரன் - சுமார் - 20 நாட்கள்
சனி - ராசிக்கு - சுமார் இரண்டரை வருடங்கள்
ராகு - கேது - சுமார் - ஒன்றரை வருடங்கள்..






இப்போ , பஞ்சாங்கப்படி - குரு - மீன ராசி இலே இருக்கிறார். இல்லையா? பன்னிரண்டு வருஷம் முன்னாலே - இதே மாதிரி - மீனம் ராசிலே இருந்து இருப்பார். (1999 , 1987 , 1975 இப்படி ) .. நீங்க பிறந்த வருஷம் உதாரணத்துக்கு - 1976 னு வைச்சுக்கோங்க.. அனேகமா அவர், மேஷம் ராசிலே இருக்கணும். இல்லை , மீனம் இலே இருந்து கெளம்ப ரெடி யா இருக்கணும். அதை விட்டுட்டு, கடகம், சிம்மம், துலாம் னு அவங்க சவுகர்யத்துக்கு போட்டு இருந்தா ... ஜாதகம் தப்பா எழுதி இருக்கிறாங்க னு அர்த்தம்..

இதே மாதிரி - சனி - ஒரு சுற்று முடிக்க 30 வருஷம் ஆகும். ராகு, கேது - 18 வருஷம் ஆகும். இப்போ அவங்க இருக்கிற ராசி பார்த்துக் கிட்டு , அதை யொட்டி அவங்க ஜாதகத்திலே இருக்கானு ஒரு தடவை , சரி பார்த்துக்கிட்டு - பலன் சொல்லணும்.

இல்லைனா, நம்ம மனோபாலா சார் சொல்ற மாதிரி பொழப்பு - சிரிப்பாப் போயிடும்..

=======
சரி , இன்னொரு விஷயம் - ஜாதகம் பார்க்கிறப்போ , சில கிரகங்களுக்கு (வ) அப்படின்னு போட்டு இருப்பாங்க. அப்படினா வக்கிரம் னு அர்த்தம். அதாவது முன்னாலேயே போக வேண்டிய கிரகம் , கொஞ்சம் பின்னாலே சுத்த ஆரம்பிக்குதுன்னு பொருள். அந்த நேரத்திலே , அந்த கிரகங்களுக்கு - பலம் கம்மியா இருக்கும். பலன் அளிக்கும்
சூரியனுக்கு 6 , 7 , 8 ஆம் இடங்களில் வரும்போது - கிரகங்கள் (பொதுவா) வக்கிரம் அடையும். ராகு, கேது, சந்திரன் தவிர எல்லா கிரகங்களும் - வக்கிரம் அடையும்.

அதி சாரம் னு ஒன்னு இருக்கு. வக்கிரத்துக்கு நேர் எதிர். அதாவது ஒரு இடத்திலே நிக்க வேண்டிய கிரகம் , இன்னும் ஸ்டெப் தாண்டி முன்னாலே போகிறது. போன தடவை , கும்பத்திலே நிற்க வேண்டிய குரு - மீனத்துக்கு அதி சாரம் ஆனார். திரும்ப கும்பத்துக்கு - சிறிது நாட்கள் வக்கிரமானார். ... அப்போ சூரியனுக்கு 6 ,7 ,8 இடங்களில் இருந்திருப்பார்.

சரி, மேலே சொன்ன பாடங்கள் புரியுதா உங்களுக்கு .....?

இன்னைக்கு - மேலும் ரெண்டு பாடங்கள் எழுத முடியும் னு நெனைக்கிறேன்... பார்க்கலாம்...

இதுக்கு மேல நாம் பார்க்க விருப்பது - கிரகங்களின் காரகத்துவம், கிரகங்களின் பார்வைகள் , .... அப்புறம்.... 12 வீடுகளின் அமைப்புகள்..

இந்த ரெண்டும் தெரிஞ்சுகிட்டா, உங்களுக்கு எந்த கேள்விக்கு என்ன என்ன பார்க்கணும் ? அப்படி னு தெரிய வரும்...
தினசரி யிலோ, இல்லை நாட்காட்டிகளிலோ, கிரகம் எங்கே எங்கே இருக்கு னு பார்த்து தெரிஞ்சுக்கலாம். ஒரு பாவ கிரகம், வில்லங்கமா உட்கார்ந்து இருக்குதுனா, அப்போ நீங்க ஜாக்கிரதையா, அடக்கி வாசிக்கணும்னு அர்த்தம்..

சரி அடுத்த பாடத்தில் பார்க்கலாம்...



ஜோதிட பாடங்கள் (பாடம் : 05 )
|


ஜோதிடம் பார்க்கிற எல்லோரும், பஞ்சாங்கம் னு ஒன்னு வச்சு இருப்பாங்க.. இல்லையா?
பஞ்சாங்கம் னா என்ன? பஞ்சாங்கம்னா ஐந்து அங்கங்கள்னு அர்த்தம்.

அந்த ஐந்து அங்கங்கள்:

1.வாரம் / நாள் 2 திதி 3. நட்சத்திரம் 4. யோகம் 5. கரணம்

ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்கள்தான் வாரம்.
--------------------------------------------------------------
திதி என்பது வளர்பிறைப் பிரதமை முதல் பெள்ர்ணமி
வரை உள்ள பதினைந்து நாட்களும், தேய்பிறைப்
பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து
நாட்களும், அதாவது அந்த முப்பது நாட்களும் திதியாகும்
திதியில் இருந்து பிறந்ததுதான் தேதி

வானவெளியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள தூரத்தைச் சொல்வதுதான் திதி

விரதங்கள் இருப்பவர்கள், இறைவனுக்கு அபிஷேகம் செய்பவர்கள் இந்தத் திதி பார்த்துத்தான் செய்வார்கள்

அதேபோல் புதுக் கணக்குப் போடுபவர்கள் அதிகம் விரும்புவது தசமித் திதி

3. திருமணம், இடம் வாங்குவது போனற சுப காரியங்களைச் செய்பவர்கள் அஷ்டமி, நவமி திதியில் செய்வதில்லை.

4. ஒரு மனிதனின் மரணத்தை திதியை வைத்துதான் குறிப்பிடுவார்கள். ஒருவன் ஐப்பசி மாதம் வளர்பிறை நவமி திதியில் காலமானால், ஒரு ஆண்டு கழித்து அல்லது வருடா வருடம் அவனது சந்ததியினர்அதே ஐப்பசி மாதம் வளர்பிறை நவமி திதியில் தான் அவனுக்கு நினைவுச் சடங்குகளைச் செய்வார்கள்.கிராமங்களில் தங்கள் வீட்டில் படையல் போடுவார்கள். இதுபோன்று இன்னும் பல பழக்கங்கள் இந்தத் திதியை வைத்துப் பல சமூகங்களில் பலவிதமாக உள்ளது.


---------------------------------------------------------------
நட்சத்திரம் என்பது அஸ்வினி முதல் ரேவதி வரையுள்ள 27 நட்சத்திரங்கள். பூமியை சுற்றி சந்திரன் செல்லும் பாதையில் எந்த நட்சத்திரம் உள்ளதோ அதுதான் அன்றைய ந்ட்சத்திரம். 27 நாட்களில் சந்திரன் வானவெளியில் ஒரு சுற்றை முடித்துவிட்டு அடுத்த சுற்றை அரம்பித்துவிடும்

தினசரி ஒரு நட்சத்திரம் என்பதால் ஒவ்வொரு நாளும் சந்திரனை வைத்துப் பிறந்த நட்சத்திரம் மாறும், அதேபோல 2.25 நாட்களுக்கு ஒருமுறை பிறந்த ராசியும் மாறும்.
மொத்தம் இருக்கிற 27 நட்சத்திரங்களைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்து இருக்கிறோம்.. இல்லையா?

==========================================================
கரணம் - என்பது திதியில் பாதி தூரத்தைக் குறிக்கும்.
கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன:1. பவ, 2. பாலவ, 3. கெலவ, 4. தைதூலை, 5. கரசை, 6. வணிசை, 7. பத்தரை, 8. சகுனி, 9. சதுஷ்பாதம், 10. நாகவம், 11. கிம்ஸ்துக்னம்.

===========================================================
வானவெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனும், சந்திரனும் செல்கிற மொத்த தூரத்தைக் குறிப்பது யோகம்.




நல்ல நாளா , இல்லையா? னு ஜோசியரைப் பார்த்து நாள் குறிக்கிறப்போ, இதை எல்லாம் பார்த்துத் தாங்க சொல்லணும்.


யார் வர்றாங்களோ, அவருக்கு லக்கினத்தில் இருந்து 9 ஆம் வீட்டுக்கு அதிபதி யாரோ, அவருக்கு உரிய கிழமை தேர்ந்து எடுத்து , நல்ல நேரம் பார்த்து சொன்னா, சிறப்பா இருக்கும்.

சில நாட்களை காலண்டரில் பார்த்தாலே போட்டு இருப்பார்கள் - சித்த யோகம், மரண யோகம், அமிர்த யோகம் என்று...

===========================================
சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகிவிடும்.

ஞாயிறு: அவிட்டம், கார்த்திகை
திங்கள் : அஸ்விணி, உத்திராடம்
செவ்வாய்: பூரட்டாதி, ரோகிணி, விசாகம், திருவாதிரை
புதன் கிழமை: ஹஸ்தம்
வியாழக்கிழமை: கார்த்திகை, திருவாதிரை, உத்திரம், சதயம், அனுஷம்
வெள்ளிக்கிழமை: ரோகிணி , ஆயில்யம், மகம்,திருவோணம்,
சனிக்கிழமை: ஆயில்யம், பூரட்டாதி, சித்திரை, உத்திரம்

மேற்கண்ட கிழமைகளில், குறிப்பிட்டுள்ள இந்த நட்சத்திரங்கள் சேர்ந்துவந்தால் அன்று மரணயோகம். மரணயோகத்தன்று சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.
அன்று செய்யும் முக்கியமான செயல்கள் விருத்தி அடையாது.

உதாரணத்திற்கு, மரணயோகத்தன்று நீங்கள் ஒரு இடத்தை வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நிலம் உங்களிடம் தங்காது. கையை விட்டுப் போய்விடும். அல்லது சிக்கல் மிகுந்த இடமாகி உங்கள் பணம் மாட்டிக் கொண்டுவிடும். மரண யோகத்தன்று ஒருவர் புதிதாக ஒரு வியாபாரத்தைத் தொடங்கினால், அது அபிவிருத்தியாகாது. வியாபாரம் செழிப்படையாது. அன்றையத் தேதியில், திருமணம் செய்து கொண்டால், மண வாழ்க்கை கசப்பில் முடிந்துவிடும். பிரிவில் முடிந்துவிடலாம்.
பணி மாற்றத்தில் வேறு ஒரு ஊருக்குச் செல்கிறீர்கள். சென்று அங்கு பணியில் சேரும் நாள், மரண யோக நாளாக இருந்தால், அங்கே நீங்கள் பல பிரச்சினை களைச் சந்திக்க நேரிடும்.
மரணயோகத்தன்று யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். கொடுத்தால் அது வராக் கடனாகிவிடும். (நம்ம ஏங்க சார் கடன் கொடுக்கிற நிலைமை லெ இருக்கோம் னு கேக்கிறீங்களா ? ஒன்னு பண்ணலாம்.. ... நீங்க வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு அந்த நாளைப் பயன்படுத்தலாம். கடன் தீர்ந்துவிடும். அந்த நபரிடமோ, அல்லது அந்த வங்கியிலோ மீண்டும் கடன் ஏற்படாது.. ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.. .)

இதுபோல முடிவிற்குக் கொண்டுவர , கழட்டி விட வேண்டும் என்று நினைக்கும் செயல்களை, அன்று செய்யலாம்.

இதற்கு எதிரிடையாக , சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் சேரும்போது, அது அமிர்தயோக நாளாகிவிடும்.

ஞாயிறு: உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, திருவோணம், பூசம், மூலம்
திங்கள் : சுவாதி, புனர்பூசம்,ரோகிணி, மிருகசீரிடம்
செவ்வாய்: உத்திரம், மூலம்
புதன் : உத்திராடம், பூரம், பூராடம், பூரட்டாதி, உத்திரம்
வியாழன் : சுவாதி, மூலம்
வெள்ளி : அஸ்விணி, பூசம், ஹஸ்தம், மூலம்
சனி: மகம், சதயம், கார்த்திகை, சுவாதி

அமிர்தயோகத்தன்று சுப காரியங்களைச் செய்யலாம். நமக்குச் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பணிகளைச் செய்யலாம். சுருக்கமாகச் சொன்னால், மரண யோக தினங்களில் எது எதைச் செய்யக்கூடாது என்று சொன்னேனோ, அதையெல்லாம் இந்த நாட்களில் செய்யலாம்......


மேல சொன்ன ரெண்டும் முக்கியமான யோகங்கள்.முக்கியமா மனசிலே ஞாபகம் இருக்கட்டும். மற்றது , இல்லேன்னா கூட பரவா இல்லை.

சுபா சுப யோகம்; சித்த யோகமும் அமிர்த யோகமும் சுபகருமங்களுக்கு உரிய சுப யோகங்களாகும்.

மரண யோகம், நாச யோகம், உற்பாத யோகம், பிரபலா நிஷ்ட யோகம், திரிபுஷ்கர யோகம் எனபன சுப கருமங்களுக்கு விலக்கப்படும் அசுப யோகங்களாகும்.

================================
சரி, இந்த பாடத்திலே இவ்வளவு போதும்... ... மீதி அடுத்த பாடத்திலே பார்க்கலாம்.
===============================

நமது வாசகர் எடப்பாடி சிவம் - போன பதிவிலே இருந்து , ஒரு கேள்வி கேட்டு இருந்தார்.. கிரகங்கள் வக்கிரம் அடைவது பற்றி..

ஒரு கிரகம் பின் நோக்கிச் செல்வது வக்கிரம் எனப்படும்.“அவன் வக்கிரம் பிடிச்ச ஆளு, அவனிடம் எதுவும் வைத்துக்கொள்ளாதே” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறீகள் அல்லவா? அதுபோல ஜாதகத்தில் கிரகம் வக்கிரகதியில் இருப்பது நன்மையானதல்ல. வக்கிரமான கிரகம் ஜாதகனுக்கு முழுப்பயனையும் தராது. பலனே தராது என்று அர்த்தம் அல்ல.
ஒருவருக்கு சுக்கிரன் ஆட்சி ஸ்தானத்தில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். வக்கிரம் ஆகி இருந்தால்...அவருக்கு கிடைக்க வேண்டிய முழு பலனும் தராது ... நீசம் ஆகி , வக்கிரமும் இருந்தால் சற்று கடுமையாகவே இருக்கும்.

4 கிரகங்கள் வக்கிரமடைந்திருந்தால், ஜாதகன் பல தகாத செயல்களைச் செய்து கொண்டிருப்பான். பின்லேடனின் ஜாதகத்தில் 4 கிரகங்கள் வக்கிரம் அடைந்துள்ளதாக யாரோ சொல்லி இருந்தார்கள்.
கிரகங்களின் காரகத்துவம் பார்க்கும் போது, சற்று விரிவாக இதைப் பற்றி காண்போம்..



ஜோதிட சூட்சுமங்கள் ( பாடம் : 06 ) - விருட்ச சாஸ்திரம்
|


வாசக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நேற்று , நமது இணையத்தில் வெளியான - பிரகாஷ் ராஜ் சம்பந்தப்பட்ட கட்டுரையை படித்து , நமது வாசகர்களில் நிறைய பேர், கண்டனக் குரலே எழுப்பி இருந்தார்கள். பெரும்பாலானோரின் எண்ணம், இது போன்ற சினிமா , அரசியல் போன்ற சாக்கடைக்கு ஒப்பான சமாச்சாரங்களைப் பற்றிய கட்டுரைகளை , நமது இணைய தளத்தில் தவிர்க்கலாமே யென்று .

நமது தளத்தில் நிச்சயமாக சர்வ சாதாரணமாக இருக்கும் எந்த ஒரு விஷயங்களும் , பிரசுரிக்கப் பட மாட்டது. குடும்பம் , கணவன் - மனைவி , என்கிற ஒரு அமைப்பே சமீப காலத்தில் கேலிப் பொருளாகிக் கொண்டிருக்கிறது. மது , மாது என்கிற விசயங்கள் - சமூகத்தில் மெல்ல மெல்ல அங்கீகாரம் ஆகிக் கொண்டிருக்கின்றன. இது , சமூக நலன் எண்ணமுள்ள எல்லோராலும், நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.

பஞ்ச பூதங்களை சாட்சியாகக் கொண்டு , கரம் பிடிக்கும் வாழ்க்கைத் துணை - குழந்தைகள் பெற்று, ஒரு 10 வருடம் மனம் ஒருமித்து வாழ்ந்து.. பிறகு திடீரென இன்னொரு தகாத தொடர்பு ஏற்பட்டு , மன முறிவு ஏற்பட்டு , அந்த குடும்பமே சீரழியும் நிலை இப்போது , சர்வ சாதாரணமாக அடித்தட்டு மக்களிடமும் , கிராமங்களிலும் கூட
ஏற்படுகிறது..(பிரபு தேவா - நயன் தாரா விஷயமும் கிட்டத்தட்ட இதே கதி தான்.)
கேட்டால், மனது ஒத்துப் போகவில்லை யென்று சொல்கிறார்கள்.
எத்தனை பேர்தான் "சதி லீலாவதி - கல்பனா" போல் இருக்க முடியும்? திட்டமிட்டே சில பேர் இது போன்ற செயல்களில் ஈடு படுகின்றனர்.
.
நேற்று வரை , மனைவி , குழந்தைகள் என்று நிம்மதியாக இருந்த ஒருவரது வாழ்க்கை, இப்போது பல குடும்பங்களின், அருவருப்புக்கு ஆளாகி உள்ளது. வசதி இருப்பவர்கள் ஓரளவுக்கு தப்பித்து விடுகிறார்கள்..இல்லாதவர்களுக்கு.. பட்டினி, திருட்டு, தற்கொலை, விபச்சாரம் .. கொஞ்சம் , கொஞ்சமாய் மனிதம் செத்துப் போகும்..


நமது இணையத்தின் தீவிர வாசகர்களில் , திரையுலகை சேர்ந்த சில பிரபலங்களும், குடும்பங்களும் உண்டு.. எத்தனையோ மனைவி மார்கள், ஒரு சில பெண்களால் எங்கே கணவர் தம்மை ஒதுக்கி விடுவாரோ என்கிற பயமும்.. கேட்டாலே பிரச்னை வந்துவிடுமோ என்று மருகுவதுமாக உள்ளனர். சில கணவன் மார்களுக்கும் இதே நிலைமை தான். .. பொறி வைத்து குடும்ப பெண்களாகவே பார்த்து பழகும் சில பேர்களால்...

குடும்பம் சிதறாமல் பாது காப்பாய் இருக்க வேண்டிய பொறுப்பு - கணவன் , மனைவி இருவருக்குமே உண்டு..


ஆன்மீக தேடல் இருப்பவர்கள் ஒவ்வொருவரும், பிரம்மசாரிகளாய் இருந்தால் பரவா இல்லை. குடும்பம் என்று வந்து விட்டால் , குடும்ப கடமைகளே முடித்து விட்டே , இறை தேடல் இருக்க வேண்டும்.. மனைவியையும், குழந்தைகளையும் சேர்த்துக் கொண்டு.. ஞான தேடலில் ஈடுபடுங்கள்.. வருங்கால சந்ததி வளமுள்ளதாகட்டும்..


ஆசிரியர் என்கிற முறையில், இனிமேல் இதைப் போன்ற கழிசடை சமாச்சாரங்கள் நிச்சயம் வராது என்கிற உறுதி மொழி அளிக்கிறேன். நமக்கு பிரதானம் ஆன்மிகம் மட்டுமே. ஆனால், சமூக பிரக்ஞை , அக்கறை கொண்ட கட்டுரைகள் ஒன்றிரண்டு வந்தால், அது நிச்சயம் ஒரு விழிப்புணர்வுக்காக மட்டுமே.. உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.. என்றும் உங்கள் ஆதரவை நோக்கி....
ரிஷி (ஆசிரியர்)
==================================
சரி, இன்றைய ஜோதிட பாடம் பார்க்கலாம்.. இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது .. விருட்சங்களை பற்றி.. நாம் பிறந்த நட்சத்திரங்களுக்கும், ஒரு சில விருட்சங்களுக்கும் நேரடி தொடர்பு உண்டு.

மனிதனாய் பிறந்த அனைவருக்கும் , ஏதாவது ஒரு வகையில் பிரச்னைகள் இருந்து கொண்டு தான் இருக்கும்.. சிலருக்கு விஸ்வ ரூபம் எடுக்கும்.. சிலருக்கு, பணம், சிலருக்கு நோய், சிலருக்கு குடும்பம் , ..... இது சகலருக்கும் பொருந்தும்.. பிரச்னை இல்லாதவர்கள் ... குழந்தைகள் .. இல்லையேல் ஞானிகள்...

பந்தம், பாசம் அற்று இருக்க வேண்டும்.. இல்லையேல் ஒன்றும் அறியாத குழந்தையாய் இருத்தல் வேண்டும். மொத்தத்தில் மனம் நிச்சலனமாய் இருக்க வேண்டும். தன்னை அறிவதே வாழ்க்கை. நாம் இந்த பிறவியில் எந்த நோக்கத்திற்காக பிறந்து இருக்கிறோம், அனைத்தும் ஒடுங்கி அந்த பரம்பொருளில் இணைவதே.. முடிவில் வாழ்க்கை என்று தெரிய வரும்.. ஜோதிடம் என்பது அந்த வகையில் ஒரு கருவி நமக்கு. .. நாம் சென்ற பிறவியில் நல்லவனாய் இருந்தோமா.. இந்த பிறவியில் எப்படி இருப்போம்..? நமக்கு எப்போது நேரம் நல்லபடியாக இருக்கும்? எப்போது கடுமையாக இருக்கும்? என்று பல விதங்களில் உங்களுக்கு வழி காட்டும்.. ஜோதிடம் படிக்க, படிக்க , நாம் நம்மை அறியாமலேயே நிறைய ஜாதகங்களை .. தெரிந்தவர்களை, பிரபலங்களை அலசி ஆராய்வோம் ... அது பல விதங்களில் உங்களுக்கு நன்மைகள் செய்யும்.. பல சூட்சுமங்களை நமக்கு உணர்த்தும்.. நீங்கள் மற்றவர்களுக்கு ஜாதக பலன்கள் சொல்லுகிறீர்களோ இல்லையோ, உங்கள் ஜாதகத்தில் நீங்கள் Ph D செய்து தான் ஆக வேண்டும்.. ..


நம்மை அறியாமல் நாம் செய்யும் பாவங்களை, பாவ கதிர்களை கிரகிக்கும் சக்தி விருட்சங்களுக்கு உண்டு.. உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால் நட்டு , நீரூற்றி வளர்த்து வாருங்கள்.. அந்த மரம் வளர , வளர உங்கள் வாழ்வும் வளம் பெறும். உங்கள் பாவக் கதிர்களை கிரகித்து , உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும். சில மரங்களை வீட்டில் வளர்க்க முடியாது.. உங்கள் கண் படும் இடங்களில் , உங்கள் தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ, இல்லை ஆன்மிக ஸ்தலங்களில் , ஒரு கோயில்சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம், பாபநாசம், குருவாயூர், திருப்பதி, திருத்தணி,சுவாமி மலை) தென்மேற்குப் பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும்.அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.

மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.

இப்படிச் செய்த மறு விநாடிமுதல், அம்மரக்கன்று வளர,வளர அதை நட்டவரின் வாழ்க்கை மலரும்.அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.
அம்மரக்கன்று பூத்து,காய்க்கும்போது,உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத்துவங்கும்.அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும்.கர்மவினைகளை வெற்றிகொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி ஒரு வழிகாட்டுகிறது.

இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:

அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு


பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை

ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்

மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு

திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி

பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி

ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா

மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி

பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா



உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்

ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி

சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி

அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு

கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு

மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா

பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை

உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை

திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு

அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்

சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்

பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை

உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்

ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா

தங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து , வளம் பெறுங்கள்..
சில மரங்கள் - நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம். அருகில் இருக்கும் சித்த மருத்துவரையோ, அல்லது , கூகுள் லெ யோ தேடிப் பாருங்கள்.. இல்லையா , அந்த நட்சத்திரத்துக்கு மற்ற பாதங்களுக்குரிய - பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம்.

மரங்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல விருட்சங்கள் உண்டு. அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில், அருகில் நீங்கள் அமர்வது , நீங்கள் அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது.. திருவண்ணாமலை சென்றால், அந்த மகிழ மரத்தடியில் சில நிமிடங்கள் அமர்ந்து, உணர்ந்து பாருங்கள்.. உங்கள் ஊரில் அருகில் இருக்கும் ஸ்தலங்களில் விருட்சங்களின் அடியில் அமர்ந்து உணர்ந்து பார்த்துவிட்டு ... உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் ..

எந்த ஒரு ஜாதகருக்கும், சில சமயங்களில், கிரக நிலைக்கு ஏற்ப எத்தனையோ பரிகாரங்களை செய்த போதிலும், பலன்கள் உடனடியாக கிடைக்காமல் போனால், நீங்கள் தாராளமாக இந்த விருட்சங்களை பரிந்துரைக்கலாம்

கம்ப்யூட்டரில் சிக்கல்

நம் கம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களை சரிசெய்வதற்க்கு இஞ்னியர் தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. பைசா செலவில்லாமல், என்ன சிக்கல் பென்பதை நீங்களே கண்டுபிடித்துவிடலாம்.

கம்ப்யூட்டரில் அடிக்கடி தோன்றும் சிக்கல்களுக்கான அறிகுறிகளும், அவற்றுக்கான் காரணங்களும்...

மானிட்டர் விளக்கு மினுமினுத்தல்:
மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள்கள், ராம், டிஸ்பிளே கார்டு, மற்றும் சி.பி.யூ இணைப்புகள் சரியில்லை என்றால் இது தோன்றும். அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்கவும்.

மூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள்:
ராம் இணைப்பில் சிக்கல் உள்ளது. சி.பி.யூ திறந்து ராம் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

மூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள் (1 ஒலி நீளமாக, மற்ற இரண்டும் சிறியதாக):
உங்கள் டிஸ்பிளே கார்டு இணைப்பில் சிக்கல் உள்ளது. முதலில் அதை கவனிக்கவும்.

மூன்று நீளமான பீப் ஒலிகள்:
பயாஸ் அல்லது ராம்-இல் சிக்கல் உள்ளது.

நிற்க்காமல் தொடர்ச்சியாக பீப் ஒலிகள்:
விசைப் பலகை (கீ போர்டு) சிக்கல். சில நேரம் விசைப்பலகையில் உள்ள முக்கியமான கீ-கள் தொடர்ந்து அழுத்தப்பட்டிருக்கும். இதனால் இந்த் சிக்கல் ஏற்படும்.

பிளாப்பி டிரைவுக்கான இடத்தில் உள்ள விளக்கு தொடந்து மினுக்குதல்:
டேட்டா கேபிள் (முறுக்கிய கேபிள்) சரியாக பொருத்தப்படவில்லை.

திரையில் எதுவும் தெரியவில்லை:
ஹார்டு டிஸ்க் தவறாக இணைக்கப்பட்டுள்ளது. அதை சரியாக பொருத்த வேண்டும்
முக்கியமான பவர் விளக்கு எரியவில்லை:
1. முக்கியமாக பவர்கார்டை சரிபார்க்கவேண்டும்
2. எஸ்.எம்.பி.எஸ்., சோதிக்கவும்
3. மதர்போர்டு இணைப்பை சரிபார்க்கவும்

திரையில் படங்கள் அலை அலலயாய் நடனமாடுதல்:
1.டிஸ்பிளே கார்டு இனைப்பை சரிபார்க்கவும்
2.வைரஸ் புகுந்துள்ளதா எனப்பார்க்கவும்
3.வீடியோ மெமரி கூட இந்த சிக்கலுக்கு காரணமாக இருக்கலாம்

திரை அதிருதல்:
மின்சார எர்த் கசிவு காரணமாக இருக்கலாம். காந்தப் பொருள் அருகில் இருப்பதால் ஏற்பட்டிருக்கலாம். (நீங்கள் கம்ப்யூட்டருக்கு அருகில் வைத்திருக்கும் ஸ்பீக்கர் பாக்ஸ் இதற்க்கு காரணமாக இருக்கலாம்)

செயல்படும்போது ஹார்டு டிஸ்க் சத்தமிடுதல்:
1.முறையற்ற பவர் சப்ளை
2.கேபிள்கள் மற்றும் பிளக்குகள் சரியாக செருகப்பட்டுள்லதா என்பதை பார்க்கவும்.
3.ஹார்டு டிஸ்க்கிற்க்கு Y கனெக்டர்களை பயன்படுத்த வேண்டாம்

வண்ணக் காட்சி பொருத்தமின்றி இருத்தல்:
டிஸ்பிளேகார்டை, அதன் சிடி உதவியுடன் முறையாக மீண்டும் இன்ஸ்டால் செய்யவும்