கடந்த காலங்களில் சக்கரகிரி என்று அழைக்கப்பட்ட உடுமலையானது இராண்டாயிரம் ஆண்டு கால வரலாற்றைக் கொண்டு விளங்குகிறது. கிழக்கே பழனி மலையையும், மேற்கே ஆனைமலையையும், வடக்கே செஞ்சேரி மலையையும், தெற்கே திருமூர்த்தி மலையையும் கொண்டு இவற்றிக்கு ஊடே இருப்பதால் உடுமலை என்றுபெயர் பெற்றது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் இந்த நகரம் தளி பாளையப்பட்டின் கட்டுப்பாட்டில் இருந்தது. உடுமலை நகரில் பல்வேறு சிறப்பு மிக்க கோவில்கள் உள்ளன. மிகப்பழைமையான சித்தாண்டீஸ்வரர் கோயில் உடுமலை நகரில் உள்ளது.
மிகப்பழைமையான சித்தாண்டீஸ்வரர் கோயில் உடுமலை நகரில் உள்ளது. தெற்கு நோக்கி அமைந்துள்ள லிங்கம் உள்ளது. இந்த நகரின் சிறப்பாகும். தளி பாளையப்பட்டு பொறுப்பில் இருந்து சித்தாண்டீஸ்வரர் கோயிலுக்கு பூமி தானமிட்டது, கோவிலை பராமரிப்பது முதலியவற்றை தெரிவிக்கும் செப்புபட்டையம் தளி பாளையப்பட்டு எத்தலப்ப நாயக்கரால் எழுதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டையத்தில் கீழ்கண்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளன்.
கோயில்கடவு, கொழுமம், கணியூர், கடத்தூர், காரதொழுவு என பல்வேறு இடங்களில் மிகப் பழமையான சிவன் கோயில்கள் உள்ளன்....
No comments:
Post a Comment