திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆழ்வார் திருநகர் கோயிலில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் இரண்டு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒன்று இசைத் தூண் வகையைச் சார்ந்தது. மற்றொன்று துளை இசைத் தூண் வகையைச் சார்ந்தது.
இங்குள்ள இசைத் தூண்களைத் தட்டினால் ஏழு ஸ்வரங்களின் ஒலியைக் கேட்க முடிகின்றது. மற்றொன்று இரண்டு துவாரங்களைக் கொண்ட தூணை அமைக்கப்பட்டுள்ளது. துளை இசைத் தூணின் அடியில் காணப்படும் துவாரத்தில் படுத்துக் கொண்டு ஊத முடியும். ஒரு பக்கம் ஊதினால் சங்கொலியும், மறுபக்கம் ஊதினால் எக்காள ஒலியும் எழுகிறது.
இதே கோயிலின் மற்றொரு கருங்கல் தூணில் குடைந்துள்ள குழலில் நின்று கொண்டு ஊதலாம்.