Friday, August 5, 2011

கிளி ராஜாவான கதை.


விக்கிரமாதித்தனாகிய கிளி பட்டியுடன் ஊர் திரும்பியதை போன பதிவில் பார்த்தோம்பட்டி எப்படி கிளியை ராஜாவாக மாற்றினான் என்று பார்ப்போம்.
பட்டி ஊர் திரும்பியவுடன் அந்தப்புரத்திற்கு ஒரு செய்தி சொல்லியனுப்பினான்அதாவது அவர்கள் இருந்த விரதம் முடிந்து விட்டது என்றும் மகாராஜா இனி அந்தப்புரத்திற்குள் வருவதற்கு தடை இல்லையென்றும் ராஜாவிடத்தில் சொல்லிவிடுங்கள் என்பதுதான் அந்த செய்திஅவர்களும் ஒஹோநமது ராஜனைப்பற்றி ஏதாவது செய்தி கிடைத்திருக்க வேண்டும்அதனால்தான் பட்டி இவ்வாறு சொல்லியிருக்கவேண்டும் என்று சந்தோஷப்பட்டுஅதே மாதிரி(கம்மாளராஜாவுக்கும் தோழிகள் மூலமாக சொல்லியனுப்பினார்கள்.
கம்மாளனும் ஆஹாநம் நீண்டநாள் அபிலாட்சை நிறைவேறப்போகிறது என்று சந்தோஷத்துடன் ஆடைஆபரண அலங்கிருதனாய் அந்தப்புறம் நோக்கி வந்தான்அந்தப்புறம் வருவதற்கு சற்று முன்பாக சில தோழிகள் ராஜாவிடம் வந்து “இந்த மாதிரி விரதம் முடிந்து ராஜா அந்தப்புரம் வருமுன் ஒரு ஆட்டுக்கிடா சண்டை வைப்பது வழக்கம்அதில் ஒன்று ராஜாவின் கிடா என்றும்மற்றொன்று ராணிகளின் கிடா என்றும் வைத்துக்கொண்டு கிடாக்களை சண்டைக்கு விடுவோம்அதில் ராஜா கிடா ஜெயித்தால்தான் ராஜா அந்தப்புரம் வரலாம்” என்று சொன்னார்கள்ராஜாவும் அப்படியே நடக்கட்டும் என்று சொல்லி பட்டியிடம் கிடாச்சண்டைக்கு ஏற்பாடு செய்யச்சொன்னான்.பட்டி ஏற்கெனவே தயாராக இருந்த இரண்டு கிடாக்களை கொண்டுவந்து சண்டைக்கு விடச்சொன்னான்பட்டி அதில் தாட்டியான கிடாவை ராணிகளின் கிடா என்றும் கொஞ்சம் நோஞ்சானாக இருக்கும் கிடாவை ராஜா கிடா என்றும் அறிவித்தான்.

இரண்டு கிடாக்களும் வீரமாக ஒன்றுக்கொன்று முட்டி மோதி சண்டை போட்டனஅவைகளில் ராஜா கிடா நோஞ்சானாக இருந்தபடியால் அதை ராணிகளின் கிடா முட்டி மோதி கொன்றுவிட்டதுஇதைப்பார்த்த ராஜா,ஆஹாநம் கிடா செத்துவிட்டதா என்று ஆக்ரோஷமாய் தன்னுயிரை கிடாவின் உடம்பில் புகுத்திகிடாவை எழுப்பி திரும்பவும் ராணிகளின் கிடாவுடன் சண்டை போடப்போனான்இதைப்பார்த்துக்கொண்டிருந்த பட்டி ஆஹாநாம் எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது என்று உடனே விக்கிரமாதித்தனாகிய கிளியைக்கொண்டு வந்து ராஜாவின் உடம்பின் அருகில் விட்டான்விக்கிரமாதித்தனும் உடனே கிளியின் உடம்பை விட்டு தன் உடலில் பிரவேசித்தான்பட்டி உடனே மல்லர்களை விட்டு கம்மாளன் பிரவேசித்த கிடாவைப்பிடித்து கொன்றுவிடச்சொன்னான்.மல்லர்களும் அவ்வாறே செய்ய கம்மாளனின் உயிர் ஒன்றுக்குமுதவாமல் போய்விட்டது.

உடனே பட்டி எல்லோருக்கும் நமது விக்கிரமாதித்த ராஜா வந்துவிட்டார் என்று பிரகடனம் செய்து அது நாள் வரைக்கும் நடந்த விருத்தாந்தங்களை எல்லோருக்கும் சொன்னான்சகல ஜனங்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துஇந்த வைபவத்தை நாடெங்கிலும் கொண்டாடினார்கள்.

விக்கிரமாதித்தன் தலையை பட்டி இரவல் வாங்கின கதை

விக்கிரமாதித்தனும் பட்டியும் உஜ்ஜனிமாகாளிப்பட்டினத்தில் தங்கள் தேசத்தை நிர்மாணித்து அரசாண்டு வரும் வேளையில் நாடு மிகுந்த சுபிட்சமாயும் நாட்டு மக்கள் எல்லா வளங்களும் பெற்று சந்தோஷத்துடனும் இருந்தார்கள். நாட்டில் மாதம் மும்மாரி பெய்தது. புலியும் பசுவும் ஒரே துறையில் நீர் அருந்தின. கீரியும் பாம்பும் ஓடிப்பிடித்து விளையாடின. விக்கிரமாதித்தனும் நீதிநெறி தவறாமல் அரசாண்டு வந்தான். அவனுடைய புகழ் நாடு நகரமெங்கும் பிரசித்தி பெற்று விளங்கியது.

இவ்வாறிருக்கும் நாளில் தேவலோகத்தில் ஒரு பிரச்னை உருவாயிற்று. தேவலோகத்தில் ரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை என்ற நான்கு நடன மங்கையர் உண்டு என்பது எல்லோரும் அறிந்ததே. தமிழ் சினிமா நடிகைகள் என்று குழம்பவேண்டாம், இவர்கள் வேறு. இதில் ரம்பைக்கும் ஊர்வசிக்கும் தொழில் போட்டி வந்துவிட்டது. தங்களில் யாருடைய நடனம் சிறந்தது என்பதில் வாக்குவாதம் தொடங்கி பெரிய சண்டையாகி தேவேந்திரனிடம் பஞ்சாயத்திற்குப் போயிற்று. அவனும் ஒரு நாள் தேவசபையில் இவர்கள் இருவரையும் நடனமாடச்சொல்லி கவனமாகப் பார்த்தான். அவனால் இவர்களின் ஆட்டத்தில் உயர்வு தாழ்வு கண்டுபிடிக்க முடியவில்லை. தேவசபையில் இருந்த எல்லோரையும் கேட்டான். ஒருவராலும் இவர்கள் ஆட்டத்தில் வேறுபாடு காண முடியவில்லை. சரி, அப்புறமாக தீர்ப்பு கூறுகிறேன் என்று அவர்களை அனுப்பிவிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்தான். 

அப்போது சர்வலோக சஞ்சாரியான நாரதர் அங்கே வந்தார். தேவேந்திரன் நாரதரைப் பார்த்து வாரும் நாரதரே, இங்கு நடந்ததைப்பார்த்தீர்கள் அல்லவா? இவர்கள் நடனத்தில் வெற்றி தோல்வியைச்சொல்ல என்னால் முடியவில்லை. நீர்தான் திரிலோக சஞ்சாரியாயிற்றே, இந்தப்பிரச்னைக்கு தீர்வு சொல்லக்கூடியவர்கள் எங்காவது இருக்கிறார்களா என்று கேட்க, நாரதர் சொன்னார், பூலோகத்திலே உஜ்ஜனிமாகாளிப்பட்டினம் என்ற ஊரிலே விக்கிரமாதித்தன் என்று ஒரு ராஜா இருக்கிறான். அவன் சகல கலைக்ஞானமும், வீரதீரப் பராக்கிரமும், அதிவிவேகமும் உடையவனாய், பூலோக முழுவதும் பிரக்யாதி பெற்று விளங்குகிறான். அவனை நீர் நமது தேவலோகத் தேரை அனுப்பி வரவழைத்தீராகில் அவன் இந்தப்பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டு பிடித்து சொல்லுவான் என்றார்.

உடனே தேவேந்திரனும் தேவலோக சாரதி மாதலியைக் கூப்பிட்டு உடனே பூலோகத்தில் உஜ்ஜனிமாகாளிபுரத்திற்கு போய் அங்கு அரசாண்டு கொண்டிருக்கும் விக்கிரமாதித்த ராஜாவை நாம் அழைத்து வரச் சொன்னதாய்க் கூறி அவனை நம் ரதத்தில் ஏற்றிக்கொண்டு சீக்கிரம் வருவாயாக என்று உத்திரவிட்டான். அவ்வாறே மாதலியும் தேவலோக ரதத்தில் குதிரைகளைப் பூட்டி பூலோகத்தில் உஜ்ஜனிமாகாளிபுரத்திற்கு வந்தான். அந்தக்குதிரைகள் எப்படிப்பட்டவை என்றால் தேரில் பூட்டிவிட்டால் வாயு வேகம் மனோ வேகம் என்று சொல்லக்கூடிய வேகத்தில் செல்லக்கூடியவை.


மாதலி விக்கிரமாதித்தன் அரச சபையில் பிரவேசித்து ராஜாவிற்கு வந்தனம் சொல்லி தன்னை இன்னாரென்று அறிமுகப்படுத்திக் கொண்டான். விக்கிரமாதித்தனும் அவனுக்கு முகமன் கூறி வரவேற்று யாது பிள்ளாய், இவ்வளவு தூரம் வந்த காரணம் என்ன என்று கேட்க, மாதலி, மகாராஜா, தேவேந்திரன் யாது காரணமாகவோ தங்களை அழைத்து வரச்சொன்னார் என்று கூறினான். விக்கிரமாதித்தன் பட்டியை நோக்க, பட்டியும் ராஜாவின் குறிப்புணர்ந்து மகாராஜா, எல்லாம் நல்ல காரியமாய் முடியும், சென்று வாருங்கள் என்று கூற, விக்கிரமாதித்தனும் சர்வாபரண, ஆயுதலரங்- கிருதனாய் புறப்பட்டு மாதலியைப்பார்த்து, போகலாமா என்று கேட்டான். மாதலியும் தேரை அரண்மனை வாசலில் கொண்டு வந்து தயாராக நிறுத்தினான். விக்கிரமாதித்தனும் சபையில் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு அரண்மனை வாசலுக்கு வந்து தேரில் ஏறுவதற்காக ஒரு கையினால் தேர்க்காலைப்பிடித்துக்கொண்டு ஒரு காலைத்தூக்கி தேர்த்தட்டில் வைக்கும்போது மாதலி குதிரைகளின் லகானைச்சுண்ட, அந்தக் குதிரைகள் வாயுவேகம் மனோவேகமாக நூறு யோஜனை தூரம் சென்றன. அது ஏனென்றால், மாதலிக்கு மனதிற்குள் ஒரு மானுடனை நம் தேரில் ஏற்றிச்செல்வதா என்ற ஆணவம். 

விக்கிரமாதித்தன் தேர்க்காலை ஒரு கையில் பிடித்து ஒரு கால் பெருவிரல் தேர்த்தட்டில் இருக்க, பிடித்த பிடியும், வைத்த காலும் அப்படியே இருக்க தேரில் ஒட்டிக்கொண்ட அட்டை போல் அசராமல் வந்து கொண்டிருந்தான்.
இதைப்பார்த்த மாதலி, ஆஹா, நாம் என்னவோ இவன் சாதாரண மானுடன் என்று எண்ணினோம், ஆனால் இவன் மிகுந்த வீரதீரப்பராக்கிரமசாலியாய் இருக்கிறானே, இவனை நாம் சரியானபடி தேவலோகம் கொண்டுபோய் சேர்க்காவிடில் நமக்கு வேலை போய்விடும் என்று யோசித்து தேரை நிறுத்தி, கீழே இறங்கி விக்கிரமாதித்தனை வணங்கி, மகாராஜா, நான் தங்களை சாதாரணமாக நினைத்து விட்டேன், என்னை மன்னிக்கவேண்டும் என்று கூறி, கைலாகு கொடுத்து விக்கிரமாதித்தனை தேரில் ஏற்றி ஆசனத்தில் உட்காரவைத்து, தேரை தேவேந்திரன் சபை வாசலில் கொண்டு போய் நிறுத்தினான். விக்கிரமாதித்தன் வருவதைப்பார்த்த தேவேந்திரன் முதலான தேவர்கள் சபையின் வாசலுக்கே வந்து ராஜனை வரவேற்று சபைக்குள் அழைத்துப்போய் தனக்கருகில் ஓர் ஆசனம் போடச்செய்து, தேவேந்திரனும், விக்கிரமாதித்தனும் உட்கார்ந்துகொண்டு பரஸ்பரம் குசலம் விசாரித்துக் கொண்டார்கள்.

அப்போது விக்கிரமாதித்தனும் தேவேந்தரனை நோக்கி, தேவேந்திரா, என்னை இங்கு அவசரமாய் அழைத்து வரச்சொன்ன காரணம் என்னவெனக்கேட்க, தேவேந்திரன் சொன்னான், அகோ வாரும் விக்கிரமாதித்தா, நமது இந்திர சபையில் வழமையாக நடனமாடும் நால்வரில் ரம்பை, ஊர்வசி ஆகியோருக்கிடையில் தங்கள் தங்கள் திறமையில் கர்வமுண்டாகி நான்தான் சிறந்தவள் என்று இருவரும் கூறிக்கொண்டு, தங்களில் யார் சிறந்தவள் என்று தீர்மானித்துக் கூறும்படியாய் என்னிடத்தில் வந்தார்கள். நானும் அவர்களது நடனத்தைப்பார்த்து யாருடைய நடனம் சிறந்தது என்று கூற முடியவில்லை. அப்போது நாரதர் உன்னுடைய வீரப்பிரதாபங்களையும், சகல கலைக்ஞானத்தைப்பற்றியும், நீதி தவறாத ஆட்சியைப்பற்றியும் கூறி, இந்த நடனமாதர்களின் சிறப்பை உன்னால்தான் கணித்துச்சொல்ல முடியும் என்று கூறியதால் அந்தக்காரியத்திற்காக உன்னை இங்கு வரவழைத்தோம் என்று கூறினான். விக்கிரமாதித்தனும் சரி, நாளைக்காலையில் அவர்கள் இருவரையும் இங்கு சபையில் நடனமாடச்சொல்லுங்கள், நான் எனக்குத்தெரிந்த வரையில் அவர்களின் ஆட்ட நுட்பத்தை அறிந்து சொல்கிறேன் என்று கூறினான்.

பிறகு இந்திரன் சில சேடிப்பெண்களைக் கூப்பிட்டு விக்கிரமாதித்த மகாராஜாவை அழைத்துப்போய் நமது அரண்மனையில் தங்க வைத்து வேண்டிய உபசாரங்களைச் செய்யுமாறு பணித்தான். அவ்வாறே பணிப்பெண்களும் விக்கிரமாதித்தனை அழைத்துப்போய் போஜனம் செய்வித்து அம்சதூளிமா மஞ்சத்தை தயார் செய்து அவனை சயனம் கொள்ளும்படி கேட்டுக்கொண்டு ஒரு புறமாய்ப் போய் இருந்தார்கள். விக்கிரமாதித்தனும் சிறிது நேரம் யோசனையாய் இருந்துவிட்டு நித்திரை போனான்.



மறுநாள் காலையில் எழுந்த விக்கிரமாதித்தன் தேவலோகநந்தவனத்திற்குப் போய் மல்லிகைமுல்லைஇருவாட்சிசெண்பகம்,முதலான பூக்களைச் சேகரித்துசில,பல நண்டுநட்டுவாக்களிதேள்ஆகிய விஷ ஜந்துக்களையும் சேகரித்துஅந்த விஷ ஜந்துக்களைஉள்ளே வைத்து அந்த ஜந்துக்கள் வெளியே தெரியாதபடிமலர்களைக்கொண்டு இரண்டு செண்டுகள் தயாரித்தான்.

பிறகு விடுதிக்குச் சென்று காலைக்கடன்களை முடித்துஅந்தமலர்ச்செண்டுகளை எடுத்துக்கொண்டுஆடையாபரணலங்கிருதனாய்இந்திர சபைக்கு வந்தான்அப்போது இந்திரனும் வர,அவர்களிருவரும் பேசிக்கொண்டே சென்று அவரவர்கள் ஆசனத்தில்அமர்ந்தார்கள்அப்போது இந்திரன் விக்கிரமாதித்தனைப்பார்த்துநடனத்தை ஆரம்பிக்கலாமா என்று கேட்க, விக்கிரமாதித்தனும்சம்மதித்தான்இந்திரன் சைகை காட்ட ரம்பையும் ஊர்வசியும்சபையினுள் புகுந்து அனைவருக்கும் வணக்கம் சொல்லி தங்கள்நடனத்தை ஆரம்பித்தார்கள்அவர்கள் முன்னும் பின்னும் சுழன்றும்,குனிந்தும்நிமிர்ந்தும்மான்களைப்போல் துள்ளிக்குதித்தும் ஒருவருக்கொருவர் சளைக்காமலும்தாளம் தப்பாமலும் ஆடினநடனத்தைப்பார்த்த தேவர்களும்மற்றோர்களும்விக்கிரமாதித்தன்இவர்கள் நடனத்தில் வெற்றி தோல்வி எவ்வாறு கண்டுபிடித்துசொல்வானோவென்று ஆச்சரியத்துடன் காத்திருந்தார்கள்.

அப்போது விக்கிரமாதித்தன் அந்த நடனமாதர் இருவரையும் அருகில்அழைத்துநீங்கள் நடனம் ஆடும் சிறப்பு மிகவும் மேன்மையாகஇருக்கிறதுஆனாலும் நீங்கள் வெறும் கையால் அபிநயம் பிடித்துஆடுவதை விட இந்த மலர்ச்செண்டை கையில் பிடித்துக்கொண்டுஆடினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கூறி, அவன்கொண்டுபோயிருந்த மலர்ச்செண்டுகளை அவர்கள் கையில்கொடுத்தான்அவர்களும் ஆஹாவிக்கிரமாதித்த மகாராஜா நமதுநடனத்தை மெச்சி பரிசாக இந்தமலர்ச் செண்டுகளைக் கொடுத்தார்என்று சந்தோஷப்பட்டு அந்த மலர்ச்செண்டுகளை கையில்பிடித்துக்கொண்டு இன்னும் உற்சாகத்துடன் நடனமாடினார்கள்.

இப்படி அவர்கள் நடனமாடியதில் ரம்பையானவள் அந்தப்பூச்செண்டை லாவகமாகவும்லேசாகவும் பிடித்துக்கொண்டுஆடினாள்ஊர்வசியோ அந்த மலர்ச்செண்டை இறுக்கிப்பிடித்துக்கொண்டு ஆடினபடியால் அதனுள் இருந்த விஷ ஜந்துக்கள்அவள் விரலைத் தீண்டஅவளுக்கு விஷம் ஏறி நடனத்தில் தாளம்தப்பிதடுமாறி கீழே விழுந்து விட்டாள்அப்போது விக்கிரமாதித்தன்எழுந்து ரம்பையே போட்டியில் வென்றவள் என்று சபையோருக்குஅறிவித்தான்இந்திரன் முதலான சகல தேவர்களும் கைகொட்டிஅதை ஆமோதித்தார்கள்.

ஆனாலும் அவர்களுக்கு விக்கிரமாதித்தன் இந்த வெற்றிதோல்வியினை எவ்வாறு கண்டுபிடித்தான் என்று தெரிந்துகொள்ளஆவல்இதை தேவேந்திரனே விக்கிரமாதித்தனிடம் கேட்க,விக்கிரமாதித்தன் அந்த இரண்டு மலர்ச்செண்டுகளையும் கொண்டுவரச்செய்து அவைகளைப் பிரித்துக் காட்டினான்அவைகளுக்குள்இருந்த விஷ ஜந்துக்களை எல்லோரும் பார்த்தார்கள்.விக்கிரமாதித்தன் சொன்னான்நான் இவ்வாறு மலர்ச்செண்டுகளைகாலையில் தயார் செய்து கோண்டு வந்திருந்தேன்அவைகளைஇந்த நடனமாதர்களின் கையில் கொடுத்து ஆடச்சொன்னதையாவரும் பார்த்தீர்கள்ரம்பை இந்த மலர்ச்செண்டை லகுவாகப்பிடித்துக்கொண்டு ஆடியதால் இந்த விஷ ஜந்துக்கள் அவளைஒன்றும் செய்யவில்லைஊர்வசியோ இந்த மலர்ச்செண்டைஇறுக்கிப் பிடித்துக்கொண்டு ஆடினபடியால் அவளை இந்த விஷஜந்துக்கள் தீண்டிஅவள் தாளம் தப்பி ஆடினாள் என்று சொல்ல,எல்லோரும் விக்கிரமாதித்தனின் புத்தி சாதுர்யத்தை மெச்சிப்புகழ்ந்தார்கள்பிறகு சபை கலைந்தது.

தேவேந்திரன் கேட்டுக்கொண்டதினால் விக்கிரமாதித்தன் மேலும் சிலதினங்கள் இந்திரலோகத்தில் தங்கினான்நான்கைந்து தினங்கள்சென்றபிறகுவிக்கிரமாதித்தன் தேவேந்திரனைப்பார்த்துநான் என்நாட்டைவிட்டு வந்து பல தினங்கள் ஆகிவிட்டனஎல்லோரும்என்னை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பார்கள்ஆகவே எனக்கு விடைகொடுக்கவேண்டும் என்று கேட்கஇந்திரனும் அப்படியே ஆகட்டும்என்று கூறிகுபேரனைக்கூப்பிட்டு நமது பொக்கிஷசாலையில்இருக்கும் அந்த முப்பத்திரண்டு பதுமைகள் வைத்த ரத்தினசிம்மாசனத்தை எடுத்து வருமாறு பணித்தான்அவனும் அவ்வாறேஅந்த சிம்மாசனத்தை சபையில் கொண்டு வந்து வைத்தான்அந்தசிம்மாசனமோ மிகுந்த வேலைப்பாட்டுடனும்விலைமதிக்க முடியாதநவரத்தினங்கள் பதித்துமுப்பத்திரண்டு படிகளுடனும்ஒவ்வொருபடியிலும் ஒவ்வொரு பதுமையும் கூடிகண்டோர் வியக்கும்வண்ணம் தேவலோக சிற்பி மயனால் இயற்றப்பட்டதாகும்.

தேவேந்திரன் விக்கிரமாதித்தனை பலவாறாகப் புகழ்ந்துஅந்தசிம்மாதனத்தை விக்கிரமாதித்தனுக்கு கொடுத்துஇந்தசிம்மாசனத்தை எங்கள் அன்புப் பரிசாக ஏற்றுக்கொள்ள வேண்டும்என்று கூறிஇந்த சிம்மாசனத்தில் நீ ஏறின சிம்மாசனம் இறங்காமல்ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிவாயாக என்ற வரமும்கொடுத்தருளினான்கூடியிருந்த மற்ற தேவர்களும்முனிவர்களும்,ரிஷிகளும் அவ்வாறே ஆகுக என்று வாழ்த்தினார்கள்பிறகு இந்திரன்மாதலியைக்கூப்பிட்டுவிக்கிரமாதித்த மகாராஜாவையும்இந்தசிம்மாசனத்தையும் அவருடைய நாட்டில் சேர்ப்பித்துவிட்டுவருவாயாக என்று பணித்தான்விக்கிரமாதித்தனும் எல்லோரிடமும்விடை பெற்றுக்கொண்டு தேரில் ஏறமாதலியும் சில நொடிகளில்விக்கிரமாதித்தனின் சபை முன்பு தேரைக் கொண்டு போய்நிறுத்தினான்ராஜா தேரிலிருந்து இறங்கிக்கொண்டு பணியாட்களைக்கூப்பிட்டு முப்பத்தியிரண்டு பதுமைகள் கூடிய சிம்மாசனத்தைஇறக்கி ராஜசபையில் வைக்கச்சொல்லிவிட்டுமாதலிக்கு விடைகொடுத்தனுப்பினான்அதற்குள் ராஜா வந்துவிட்ட சேதி தெரிந்துபட்டியும்மற்ற மந்திரி பிரதானிகளும் வாசலுக்கு வந்து ராஜாவிற்குமுகமன் கூறி வரவேற்று அரண்மனைக்குள் அழைத்துப் போனார்கள்.

எல்லோரும் அவரவர்கள் ஆசனங்களில் அமர்ந்தானபிறகு பட்டிஎழுந்திருந்து “தேவரீர் இங்கிருந்து தேவலோகம் சென்று திரும்பினவரையிலான செய்திகளைக்கேட்க அனைவரும் ஆவலாகஇருக்கிறோம்ஆகவே அவற்றை தாங்கள் எடுத்துக்கூறவேண்டுகிறோம்” என்று விக்ஞாபித்தான்விக்கிரமாதித்தனும்அவ்வாறே தான் தேவலோகம் சென்று ரம்பை ஊர்வசிநடனப்போட்டிக்கு தீர்ப்பு சொன்னதுதேவேந்திரன் ரத்தினசிம்மாசனம் கொடுத்து ஆயிரம் ஆண்டுகள் ஆயுள் வரம் கொடுத்துஅனுப்பியது வரையிலான விருத்தாத்தங்கள் எல்லாவற்றையும்விரிவாகச் சொன்னான்எல்லாவற்றையும் கேட்ட பட்டிதேவரீருக்குஆயிரம் ஆண்டுகள் வரம் வாங்கி வந்தீர்களேஎனக்கு ஏதாவதுகேட்டு வாங்கி வந்தீர்களாவென்று கேட்கபட்டிஉன்னைமறந்தேனேஎன்ன செய்வது என்கபட்டியும் போனால் போகிறது,விடுங்கள் என்று சொன்னான்அப்போது சூர்யாஸ்தமன நேரம்ஆகிவிட்டபடியால் சபை கலைந்து எல்லோரும் அவரவர்கள் இருப்பிடங்களுக்குப் போய் சேர்ந்தார்கள்.

அன்று இரவு படுக்கப்போன பட்டிக்கு தூக்கம் வரவில்லைநமதுராஜா இவ்வாறு தனக்கு மட்டும் ஆயுள் வாங்கிக்கொண்டு என்னைமறந்து வந்தாரேநாம் இருவரும் ஆயுள் பரியந்தம் ஒன்றாகஇருப்பதாக அம்மன்முன் சபதம் எடுத்தோமேஅது இப்போதுவீணாய்ப்போய்விடும்போல் இருக்கிறதே என்று பலவாறாகயோசனை செய்துஎதற்கும் நமக்கு நம் மாகாளியம்மன் துணைஇருக்கும்போது என்ன கவலை என்று உடனே புறப்பட்டுஉச்சினிமாகாளியம்மன் கோவிலை அடைந்தான்அப்போது இரவுமூன்றாம் ஜாமம் ஆரம்ப சமயமானதால் அம்மன் நகர்வலம்போயிருந்தாள்சரிஅம்மன் வரட்டும் என்று பட்டி அம்மனைத்துதித்துக் கொண்டு அங்கேயே இருந்தான்சிறிது நேரத்திற்குப் பின்வந்த அம்மன் பட்டியை அங்கே பார்த்து ஆச்சர்யப்பட்டுஏதுபிள்ளாய் பட்டிஇந்த நேரத்தில் இங்கு விஜயம் என்று கேட்க,பட்டியும் அம்மனைப் பலவாறாகத் தோத்திரம் செய்துஅம்மா,நீயல்லவோ ஏழை பங்காளன்எனக்கு உன்னை விட்டால்யாரிருக்கிறார்கள்நீதான் எனக்கு அருள் புரியவேண்டும் என்றுதோத்திரம் செய்யபட்டியும் விக்கிரமாதித்தன் இந்திரலோகம் சென்றுவந்த விருத்தாத்தங்களயெல்லாம் கூறி அங்கு அவன் தனக்கு மட்டும்ஆயிரம் ஆண்டுகள் வரம் வாங்கிக்கொண்டு, தன்னை மறந்து விட்டுவந்ததையும் கூறினான்.

அப்போது அம்மன் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கபட்டியும்விக்கிரமாதித்தன் தேவலோகத்துக்குப் போய் ஆயிரம் ஆண்டுகள்ஆயுள் வாங்கி வந்திருக்கிறான்நீ எனக்கு இரண்டாயிரம் ஆண்டுகள்வாழ வரம் கொடுக்க வேண்டுமென்று கேட்கஅம்மன் இது என்னால்முடியாத காரியம் ஆயிற்றே என்று சொல்லபட்டியும் “அம்மா,உன்னால் முடியாத காரியமும் இந்த லோகத்தில் இருக்கிறதோஎன்று பலவாறாக வேண்டஅம்மன் ஏதாவது சால்ஜாப்பு சொல்லிஇவனை அனுப்பிவிடலாம் என்றெண்ணிஅப்படியானால் நீ போய்விக்கிரமாதித்தனுடைய தலையை வெட்டிக்கொண்டு வந்தாயானால்உன்னுடைய கோரிக்கையை நிறைவேற்றுகிறேன் என்று சொன்னாள்.பட்டி சரிஅப்படியே செய்கிறேன் என்று சொல்லிவிட்டுஉடனேவிக்கிரமாதித்தன் அரண்மனைக்குச்சென்று அவன்சயனமண்டபத்துக்குள் புகுந்து அவனை எழுப்பினான்எழுந்தவிக்கிரமாதித்தன் பட்டியைப்பார்த்து ஏது பிள்ளாய் பட்டி,இன்னேரத்தில் இங்கு வந்த காரணம் என்னவென்று கேட்கபட்டியும்தேவரீர் தலை ஒரு காரியமாய் அவசரமாகத் தேவைப்படுகிறது,அதற்காகத்தான் வந்தேன்” என்றான்விக்கிரமாதித்தனும் “சரிஎடுத்துக்கொண்டு போ” என்று சொல்லி படுத்துக்கொண்டான்.

பட்டி உடனே உடைவாளை உருவி விக்கிரமாதித்தன் தலையை ஒரேவெட்டாக வெட்டி தலையை எடுத்துக்கொண்டு அம்மன்கோவிலுக்குச் சென்று தலையை அம்மன் காலடியில் வைத்தான்.அம்மன் திடுக்கிட்டுஓஹோஇனிமேல் இவனுக்கு சால்ஜாப்புசொல்லக்கூடாது என்று முடிவு செய்து வாரும் பிள்ளாய் பட்டிநான்சொன்ன காரியத்தை நீ செய்து முடித்துவிட்டபடியால் நீ கேட்டஇரண்டாயிரம் வருடம் ஆயுளைத் தந்தோம்சுகமாக வாழ்வாயாகஎன்று ஆசீர்வதித்தாள்கேட்ட வரத்தைப் பெற்றுக் கொண்ட பட்டிஅம்மனைப் பார்த்து கெக்கெக்கென பலமாகச் சிரித்தான்அம்மனுக்குஇவன் சிரித்த்தைப்பார்த்ததும் கோபம் வந்து யாது பிள்ளாய் நீஇப்போது சிரித்த காரணம் யாதுஉடனே சொல்லக்கடவாய் என்றுகேட்க பட்டியும் கூறலுற்றான்அம்மா தாயே இதோ இருக்கும்விக்கிரமாதித்தன் தேவலோகத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும்,மற்றுமுள்ள முனி சிரேஷ்டர்களும் கூடி ஆசீர்வதித்து ஆயிரம்ஆண்டுகள் ஆயுள் வரம் கொடுத்தனுப்பி இன்னும் ஒரு நாள் கூடஆகவில்லைஅதற்குள் என் கையால் வெட்டப்பட்டு அவன் தலைஉன் முன்னால் இருக்கிறதுஅப்பேர்க்கொத்த வரத்திற்கே இந்தகதியென்றால் நீ கொடுத்த வரம் எத்தனை நாளைக்குநிற்கப்போகிறதோ என்று நினைத்துச் சிரித்தேன் என்றான்.

அம்மனும் அவன் வார்த்தைச் சாதுர்யத்திற்கு மெச்சி,வாரும் பிள்ளாய் பட்டிநீ அப்படி சந்தேகப்படவேண்டியதில்லை,என்னுடைய வரம் என்றென்றும் நிற்கும்நீபயப்படவேண்டியதில்லைஆனாலும் உன்னுடைய வாக்குச்சாதுர்யத்தை மெச்சிவிக்கிரமாதித்தனையும் உயிரூட்டுகிறோம்என்று கூறிஇதோ தீர்த்தமும் பிரம்பும் தருகிறோம்நீ இந்ததலையை எடுத்துக்கொண்டு போய் விக்கிரமாதித்தன் உடம்பில்வைத்து தீர்த்தம் தெளித்து பிரம்பால் தட்டியெழுப்புவாயாகில் அவன்உயிருடன் எழுந்திருப்பான் என்று சொல்லி தீர்த்தமும் பிரம்பும்கொடுத்தனுப்பினாள்பட்டியும் அம்மனைப் பலவாறாகப் புகழ்ந்துதீர்த்த த்தையும் பிரம்பையும் வாங்கிக்கொண்டுவிக்கிரமாதித்தன்தலையையும் எடுத்துக்கொண்டு விக்கிரமாதித்தன் உடல்இருக்குமிடத்திற்கு வந்து தலையை உடலுடன் ஒட்டி வைத்துதீர்த்தத்தை தெளித்து பிரம்பால் தட்டி எழுப்பினான்

விக்கிரமாதித்தனும் தூக்கத்திலிருந்து எழுபவன் போல் எழுந்திருந்து,வாரும் பிள்ளாய் பட்டிஎன் தலையை அவசரமாக இரவல்வாங்கிக்கொண்டு போன காரியம் என்னவென்று கேட்கபட்டியும்நடந்த விருத்தாந்தங்களைச் சொல்லி தான் அம்மனிடம்இரண்டாயிரம் ஆண்டுகள் வரம் வாங்கி வந்தது வரை சொன்னான்.அதைக்கேட்ட விக்கிரமாதித்தன் நல்ல காரியம் செய்தாய் பட்டி,ஆனால் ஒன்றுஎனக்கு தேவேந்திரன் கொடுத்த ஆயுள் ஆயிரம்வருடம்தானேநீ இப்போது அம்மனிடம் பெற்றுள்ள ஆயுள்இரண்டாயிரம் வருடம் ஆயிற்றேஇதற்கு என்ன செய்வது என்றுகேட்கபட்டி சொன்னான்தேவரீர் இந்திரனிடம் பெற்ற வரம்,ஆயிரம் வருடங்கள் ஏறின சிம்மாசனம் இறங்காமல் ஆட்சிபுரிவதற்கல்லவாநாம் ஒன்று செய்வோம்ஆறு மாதம் அரசாட்சிசெய்த பிறகு ஆறு மாதம் காட்டுக்குச் சென்று வனவாசம்செய்வோம்அப்போது தேவரீருடைய ஆயளும் இரண்டாயிரம்வருடங்கள் ஆகிவிடும் என்று சொல்ல விக்கிரமாதித்தனும் பட்டியின்புத்தி சாதுர்யத்தை மெச்சிஆகாபட்டி உன்னுடைய புத்தியேபுத்தியென்று சொல்லி அவனைப்பாராட்டிசரிஇரவு வெகு நேரம்ஆகிவிட்டதுநீ சென்று நித்திரை கொள் என்று அவனைவழியனுப்பிவிட்டு விக்கிரமாதித்தனும் நித்திரை போனான்

பட்டி விக்கிரமாதித்தன் தலையை இரவல் வாங்கின கதை முடிந்தது. சுபம்.