Monday, June 16, 2014

இந்த பயிர் வட்டங்களை வரைவது யார்?

இந்த பயிர் வட்டங்களை வரைவது யார்?
அமானுஷ்ய சக்திகளின் வேலையா?

2013 வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த பயிர் வட்டங்கள் ஒரு சுவாரசியமான மர்மங்கள். விளைந்திருக்கும் பயிரில் ஒரே இரவில் ஏதோவொரு அமானுஷ்ய சக்தி இதுபோன்ற உருவங்களை உருவாக்கிச் செல்வதாய் கதைகள் நீள்கின்றன.

இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இந்த பயிர் வட்டங்கள் தோன்றியிருக்கும் போதும் இங்கிலாந்தில்தான். பெரும்பாலான உருவங்கள் ஒரே இரவில் மனிதர்கள் உருவாக்க சாத்தியமேயில்லாத முறையில் உருவாக்கப்பட்டிருப்பது இதன் மர்மத்தை மேலும் கூட்டுகிறது.

இரவுப்பொழுதில் வெளிச்சம் இல்லாமல் சுற்றியிருக்கும் பயிருக்கு எந்தவொரு சிறு சேதமும் இல்லாமல் எந்தவொரு வாகனமோ, மனிதக்காலடியோ, இல்லை இயந்திரத்தின் தடயமோ இல்லாமல் இப்படிப்பட்ட படைப்புகள் உருவாக்கப்படுவது மர்மத்திலும் மர்மமே. அதுவும் சில ஆராய்ச்சிகளில் இந்த பயிர்வட்டங்கள் உருவாக்கப்பட்ட இடத்தின் மண் மட்டும் பாறைப்படிவம் போல மாறியிருப்பது மர்மத்தின் உச்சம்.

ஏனென்றால் ஒரு சாதாரண மண் இறுகிப் பாறைபடிவம் போல மாற வேண்டுமென்றால் அதற்கு இயற்கையாய் 1000 ஆண்டுகளுக்குமேல் தேவைப்படும். இப்படி ஒரேயிரவில் பாறைப்படிவம் போல மாற வேண்டுமானால் கிட்டத்தட்ட 8000 டிகிரி வெப்பத்தில் மண்ணை சூடுபடுத்தவேண்டும்.

அவ்வாறு வெப்பம் உண்டாக்கப்படும் பட்சத்தில் அந்த இடமே சின்ன புல் பூண்டு கூட இல்லாமல் பஸ்பமாகிவிடும். மேலும் இதேப்போன்ற பயிர் வட்டங்களை மனிதர்களைக்கொண்டு உருவாக்க நடந்த ஆராய்ச்சிகளின் முடிவில் ஒரு சாதாரண உருவத்தை பகல் வெளிச்சத்தில் உருவாக்கவே 5 நாட்களுக்கும் மேல் ஆகியிருக்கிறது.

அதைவிட முக்கிய விஷயம் மனிதர்களைக்கொண்டு இந்த முயற்சியைச் செய்தபோது பயிர்கள் நிறைய உடைபட்டிருக்கின்றன. மனிதர்களின் சேற்றுக் காலடித்தடங்கள் பயிர்களில் பதிந்திருக்கின்றன. ஆனால் உண்மையான பயிர்வட்டங்களில் பயிர்கள் மடக்கப்பட்டிருந்தாலும், வளைக்கப் பட்டிருந்தாலும் இதுவரை ஒரு பயிர்கூட சேதப்பட்டிருக்கவில்லை என்பது கூடுதல் ஆச்சர்யம்.

இந்தப் பயிர் வட்டங்கள் இரவு நேரத்தில் வானத்திலிருந்து வரும் ஒரு ஒளிக்கற்றையால் உருவாக்கப்படுவதாகவும், வேற்றுக்கிரக வாசிகளின் வாகனம் இறங்கிச் சென்ற தடையங்களே இந்தப்பயிர் வட்டங்கள் என்றும், இந்தப்பயிர் வட்டங்களுக்குள் செல்லும் மிருகங்கள் மிரண்டு ஓடுவதாகவும், இந்தப்பயிர் வட்டங்களுக்குள் கடிகாரம் வேகமாகவும், மெதுவாகவும் மாறி மாறிச்சுற்றுவதாகவும்,

சில மனிதர்களுக்கு இந்தப்பயிர் வட்டங்களுக்குள் நுழையும்போது தலைச்சுற்றல் வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றுவதாகவும், சில மனிதர்களுக்கு இந்தப்பயிர் வட்டத்துக்குள் நுழைந்ததும் தங்கள் உடம்பிலிருந்த நோய்கள் சரியானதாகவும் வித விதமான மர்மக்கதைகள் நமக்கு மயக்கத்தையே வர வைக்கின்றன. எனினும் வெறும் காகிதத்திலேயே வரையச் சிரமப்படும் பல டிசைன்கள், பயிர்களில் சேதமில்லாமல் உருவாகியிருப்பது மர்மமான ஆச்சர்யம்தான்….!

நாசாவின் நிலவிற்கான பயணமும் மர்மமும்.

20/6/1969 அன்று அப்பலோ 11 விண்கலத்திட்டத்தின் படி நீல் ஆம்ஸ்ரோங் நிலவில் காலடிவைத்ததாக உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்டது. அதுவரை பூமியைத் தரையை தவிர வேறு தரைகளை கண்டிராத மக்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் அப்பலோ திட்டத்தின் சுவடுகளாக கிடைக்கப்பெற்ற புகைப்படங்களும் வீடியோ ஆதாரங்களும் பெரும் விருந்தாக அமைந்தன. எனினும் புகைப்படங்கள் வெளியிடப்பட்ட காலம் தொட்டே பலரால் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுவந்துள்ளது. அந்த சந்தேகங்களையும் அவற்றின் உண்மைத்தன்மைகளையும் பார்ப்போம்...

அமெரிக்க கொடி அசைந்தது. மிகப்பரவலாக சர்ச்சையை ஏற்படுத்திய ஒரு விடையம் இது. நாசா வெளியிட்ட வீடியோ
மற்றும் புகைப்படங்களின் படி நிலவில் அமெரிக்க கொடியை
ஊன்றிய போது அக் கொடி அசைவதாக காட்டப்பட்டுள்ளது. நிலவில் வளி மண்டலமும் காற்றும் இல்லாத நிலையில் எப்படி கொடி அசைந்தது என்ற தர்க்கவியலான கேள்வி பல விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்டது....

நாசா அதற்கு கொடுத்த விளக்கம், அந்த கொடி விசேட தன்மையுடன் தயாரிக்கப்பட்டதாகவும்… அதில் அலைவடிவ அலங்கரிப்புக்கள் இருந்ததாகவும் அதுவே கொடி காற்றில் பறப்பது போன்ற விளைவை ஏற்படுத்தியதாகவும் மழுப்பியுள்ளார்கள்!...

நிழல்களின் முரன்பாடு. நிலவில் பெறப்பட்டதாக வெளியிடப்பட்ட புகைப்படங்களில், சம்பந்தப்பட்ட பொருட்கள், நபர்களின் நிழல்கள் ஒன்றிற்கொன்று முரன்பட்டதாக உள்ளது. (புகைப்படத்தை பாருங்கள்.) நிலவிற்கு ஒளிதரும் ஒரே ஒரு முதல் சூரியன். ஆகவே ஒரே திசையில் தான் நிழல்கள் விழவேண்டும். ஆனால், புகைப்படத்தில் இரண்டு திசைகளில் நிழல்கள் விழுகின்றன. ( நிலவில் காலடி வைத்த சம்பவம் ஒரு Stuido வில் எடுக்கப்பட்டதாகவும் அங்கு இருந்த இரு வேறு விளக்குகளின் விளைவாகவே இவ்வாறான நிழல்கள் உருவானதாகவும் கூறப்படுகிறது.)...

இதற்கு நாசா கூறும் விளக்கம், நிலவின் தரை புவியின் தரை போன்று நீண்ட தூர சமதரை அல்ல, பல குன்றுகள் மலை வடிவங்களுடனான தரை. எனவே, குன்றுகளில் பட்டுத்தெறிப்படைந்த ஒளியினால் நிழலில் மாற்றம் ஏற்பட்டதாக அறிவித்தார்கள்....

விண்வெளி வீரர்களின் முகத்தில் தெரியும் மர்ம உருவம்! நிலவில் இறங்கிய விண்வெளி வீரர்கள் தங்களை தாங்களே எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் ஒன்றில், விண்வெளி வீரரின் முகக்கவசத்தில் திட்டத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு உருவம் தெரிகிறது! இது Stuido களில் பயன்படுத்தப்படும் கமெராவாக இருக்கும் என கருதப்படுகிறது....

இதற்கு இதுவரை நாசா விளக்கம் கொடுக்கவில்லை. ( தெளிவற்ற புகைப்படப்பிடிப்பு என நாசா விஞ்ஞானிகள் சிலர் காரணம் சொல்லியுள்ளார்கள்.)...

நடை அசைவும் நாடாவும். நிலவில், நிலவில் ஈர்ப்புவிசைக்கு ஏற்றவாறு வீரர்கள் பாய்ந்து நடக்கிறார்கள். ஆனால், வீடியோவை உற்று அவதானிக்கும் போது அவர்கள் நாடாக்கள் மூலம் பாய்வது இனங்காணப்பட்டுள்ளது. அதாவது சினிமாக்களில் பயன்படுத்தப்படும் யுக்தி!...

சார்பாளர்கள் சொல்லும் காரணம், “1970 ஆண்டு படப்பிடிப்பு கருவிகளில் இருந்த தொழில் நுட்ப கோளாறுகளின் விளைவே அது.” எனினும் ஒரு காட்சியில், தரையில் மண்டியிட்டிருக்கும் ஒரு விண்வெளி வீரர் எழும் போது சாதாரன பெளதீக விதிகளுக்கு ஏற்ப அவரது அசைவு இல்லை. அவரது முதுகுப்புறமாக மேல் நோக்கி இழுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. கால்களில் அசைவு மூலம் பறக்கும் நிலவு தூசுகள் உடனடியாவ தரையில் விழுகின்றன. (புவியின் ஈர்ப்பு விசையில் விழும் வேகத்தில்!)...

நிலவின் கல்லில் “C” அடையாலம்! நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில், அங்கு தரையில் கிடக்கும் ஒரு கல்லில் “C” என்ற அடையாளம் உள்ளது. Stuido வில் அடையாளத்திற்காக போடப்பட்ட அது, ஒழுங்கமைப்பாளரின் தவறான திருப்பத்தால் கமெராவில் பதியப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது....

நாசா சொல்லும் மழுப்பல் விளக்கம், புகைப்படத்தை முதல் அச்சிட்டவர் நகைச்சுவையாக போட்ட அடையாளம் அது என்றார்கள். பின்னர், அச்சிட்டவரின் தலைமுடி விழுந்திருக்கலாம் என்றார்கள்....

நிலவின் பின்னனி. நிலவில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் காட்சிகளில் ஒரே பின்னனி பயன்படுத்தப்பட்டிருப்பது இனங்காணப்பட்டுள்ளது. இதற்கு நாசா சொன்ன விளக்கம் நிலவின் பின்னனி புவியைப்போன்றதல்ல, ஒரே மாதிரியான அமைப்பை கொண்டது எனவே அப்படியொரு தோற்றப்பாடு என்றார்கள். ஆனால், ஒரே விண்வெளி பயண திட்டத்தில் எடுக்கப்பட்டதாக காட்டப்படும் காட்சிகளில் தரை இறங்கிய விண்கலம் ஒரு காட்சியில் இருக்கிறது, மறு காட்சியில் இல்லை! (படத்தை பாருங்கள்.)...

மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது இப்படியான குற்றச்சாட்டுகளுக்கு நிலவில் முதலில் காலடிவைத்த மனிதன் நீல் ஆம்ஸ்ரோங் எந்த வித கருத்தையும் கூறாது இருந்தது தான்! (நீல் ஆம்ஸ்ரோங் நிலவிற்கு சென்றுவந்ததும் இஸ்லாம் மதத்தை தழுவினார். அதற்கு அவர் சொன்ன காரணம், நிலவில் ஓதும் சத்தத்தை கேட்டதாக. ஆனால், நிலவில் வளிமண்டலம் இல்லாதவிடத்து அதற்கு சந்தர்ப்பம் இல்லை! அவர் அப்படி சொன்னமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.)...

அந்த காலகட்டத்தில் அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனிற்கும் விண்வெளியில் ஆதிக்கம் தொடர்பான பனிப்போர் நடந்துகொண்டிருந்தது. ஏற்கனவே 12/4/1961 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் சார்பாக விண்வெளியில் பயணித்த முதல் ம
னிதரானார் யூரி ககாரின். எனவே, அதை ஈடுகட்டும் முகமாக அமெரிக்கா நடத்திய நாடகமாக நிலவுப்பயணம் இருக்கலாம். மேலும், 4 சகாப்தங்களில் பாரிய தொழில் நுட்ப மேம்பாடுகளை கண்டிருந்தாலும், 1972 ஆம் ஆண்டிற்குப்பின்னர் அமெரிக்கா நிலவிற்கான பயணத்தை நிறுத்திக்கொண்டுள்ளது. நவீன நுட்பங்கள் இருந்தும் இப்போது பயணம் இல்லை! சமீபத்தில், நிலவில் கால் பதித்ததற்காக இருந்த ஒரே ஒரு நேரடி ஒளிப்பதிவும் தவறுதலாக அழிக்கப்பட்டுவிட்டதாக நாசா அறிவித்தது!...
  
பறவைகளை கற்சிலைகளாக மாற்றிடும் அதி பயங்கர ஏரி

பல்வேறு மர்மங்களைக் கொண்ட இந்த பூமியில் தற்போது நீர் அருந்தும் பறவைகளை கற்சிலைகளாக மாற்றிடும் அதிபயங்கர ஏரி குறித்த தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. புராண காலங்களில் மந்திரவாதிகளும் மாயாஜால வித்தகர்களும் தங்களை எதிப்பவர்களையெல்லாம் கற்சிலைகளாக மாற்றி மகிழ்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்....

இந்த கற்சிலைகளுக்கு உயிர்கொடுத்திட அன்றைய கதாநாயகர்கள் ஏழு கடல்,ஏழு மலை தாண்டிச் சென்று கடைசியாக சூட்சுமத்தை கண்டுபிடித்து கற்சிலைகளை அகலிகளாக மீண்டும் உயிர்பெற்று தருவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.இந்நிலையில் உலகிலுள்ள மக்களுக்கு உயிரூட்டம் கொடுத்திடும் பல்வேறு ஏரிகள் குறித்து நாம் கேள்விப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டிலுள்ள ஏரியொன்று தன்னில் நீரருந்தும் பறவைகளையெல்லாம் கற்சிலைகளாக மாற்றியிருக்கும் அதிபயங்கர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது....

தான்சானியா நாட்டின் வடபகுதியில் கென்யா நாட்டின் எல்லையை ஒட்டிய நாட்ரன் எனும் ஏரிதான் தன்னில் நீரருந்தும் பறவைகளையெல்லாம் கற்சிலைகளாக மாற்றி வருகிறது.இதனை கண்டுபிடித்து வெளிஉலகிற்கு கொண்டுவந்தவர் ஆப்பிரிக்காவின் தலைசிறந்த வைல்ட்லைப் புகைப்படகலைஞர் நிக்பிராண்ட்.இவர் கடந்த 2010-2012 ஆண்டுகளில் நாட்ரன் ஏரியை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்துள்ளார்.அப்போது தான் ஏரிக்கரைகளிலும் ஏரியின் நடுவிலும் ஏராளமான பிளமிங்கோ உள்ளிட்ட பறவைகள் கற்சிலைகளாக மாறி உப்புப்பொரிந்து நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.இருப்பினும் மனம் தளராத நிக்பிராண்ட் மனதை கல்லாக்கிக் கொண்டு கற்சிலை பறவைகளை தனது விலையுயர்ந்த கேமராவில் பதிவு செய்துள்ளார்....

ன்னர் தான் நாட்ரன் ஏரியில் கண்ட அனைத்து சம்பவங்களையும் ஒருங்கிணைத்த நிக்பிராண்ட் Across the ravaged land என்ற புத்தகத்தை எழுதி தற்போது உலகப்புகழ் பெற்றுள்ளார்.மேலும் நாட்ரன் ஏரியில் நிக்பிராண்ட் எடுத்த புகைப்படங்கள் 2012 ஆண்டின் Best wild animal photography award பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வேதியல் விஞ்ஞானிகள் நாட்ரன் ஏரியில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டதில் பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகின....

அதில் நாட்ரன் ஏரியில் எப்பொழுதும் 140 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருப்பதால் மீன்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வாழவழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் நாட்ரன் ஏரியில் அதிகளவு கால்சியம்,நேட்ரோ கார்பன்கள்,தாது உப்புகள் மற்றும் ஏராளமான வேதிப்பொருட்கள் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்தது....

மேலும் நீண்ட நாட்கள் முகாமிட்டு நாட்ரன் ஏரியில் ஆய்வு மேற்கொணட் விஞ்ஞானிகள் பறவைகள் கற்சிலைகளாக உறுமாறுவது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.அந்த ஆய்வுகளில் நச்சுத்தன்மை கொண்ட தாது உப்புகள் மற்றும் வேதிப்பொருட்கள் கொண்ட நாட்ரன் ஏரியின் நீரை அருந்திய பறவைகள் தங்களின் உடலுக்குள் கலந்துள்ள உப்புக்கள் உறைவதால் உடனடியாக மரணமடைந்து காலப்போக்கில் கற்சிலைகள் போன்று மாறி உப்புப்பொரிந்து போய் உருமாறுவதை கண்டுபிடித்துள்ளனர்.இதனை தங்களது உள்ளுணர்வால் தெரிந்து கொண்ட சிலவகை பறவையினங்கள் இந்த அதிபயங்கர ஏரிக்கு வரமுற்றிலுமாக நிறுத்திக் கொண்டு கென்யநாட்டு நன்னீர் ஏரிக்கு தங்களது வாழ்வாதாரத்தை மாற்றிக்கொண்டு விட்டன.இருப்பினும் இந்த ஏரியின் தன்மை குறித்து அறியாத சிலவகை பறவைகள் நாட்ரான் ஏரியின் தண்ணீரை குடித்துவிட்டு தங்களது அறியாமையினால் உயிரை இழந்து கற்சிலைகளாக மாறி பார்வையாளர்களின் காட்சிப் பொருட்களாக மாறிவிடுகின்றன....

மழை மறைவுப்பிரதேசமாக காணப்படும் தான்சானியா நாட்டு வடபகுதியிலுள்ள இந்த எரிப்பகுதியில் எப்போதாவது மழைபெய்யுமானால் மழைநீர் பட்டு ஏரியிலிருந்து நச்சுவாயுக்கள் வெளியேறுவது கண்கூடாகத் தெரியுமாம்.அப்போதிலிருந்து சில நாட்களுக்கு மட்டும் நாட்ரன் ஏரி நன்னீர் ஏரியாக நிசப்தத்துடன் காட்சிதருமாம்.இப்பொழுது பறவைகள் கற்சிலைகளாக நிற்பதைக் காண்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப்பயணிகள் அதிகளவு வருகை தருகின்றனர்.இதன் மூலம் தான்சானியா நாட்டின் அந்நிய செலவாணி வருவாய் அதிகமாக கிடைப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் பெருமையுடன் தெரிவிக்கின்றனர்.எது எப்படியோ இறைவனின் அருட்கொடையான தண்ணீரை நாட்ரன் ஏரியில் அருந்திடும் பறவைகள் உயிரை இழந்து கற்சிலைகளாக மாறும் சம்பவம் இந்த படங்களைப் பார்த்திடும் நமது மனங்களை ரணங்களாக்கி கல்லாக மாற்றிடும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை...

நாஸ்கா கோடுகள் – விடை காண முடியாத மர்மம்.!!!

நாஸ்கா கோடுகள் – விடை காண முடியாத மர்மம்.!!!

இந்த பூமிப்பந்தானது பல்வேறு மர்மங்களையும் அதிசயங்களையும் தன்னகத்தே அடக்கியது. இம்மர்மங்களின் முடிச்சுகள் அவிழ்க்கப்படும் தருணம் அவை மானுட வாழ்வியலுக்கான புதியதொரு திறவுகோலாக அமையும். பலகோடி நட்சத்திர மண்டலங்களையும் கிரகங்களையும் உள்ளடக்கிய இந்த அண்டத்தில் பூமி என்னும் இக்கோளில் மட்டுமே உயிர்கள் தோன்றியது முதல் அவ்வுயிர்கள் அண்டத்தை ஆளும் வேட்கை கொண்டு அலைவது வரை அனைத்துமே விந்தையானது. இதில் இன்றும் மானுட அறிவிற்கு சவால் விடும் அதிசயங்களையும் மர்மங்களையும் இயற்கை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அவற்றுள் ஒன்றுதான் இந்த நாஸ்கா கோடுகள்....

பெரு நாட்டின் தெற்கில் அமைந்திருக்கும் நாஸ்கா பாலைவனத்திலிருந்து, லிமா, பல்பா, பம்பாஸ் சமவெளிகளுக்கிடையே 400 கி.மீ., சுமார் தெற்கு கடற்கரை அமைந்துள்ள மிகப்பிரமாண்டமான கோடுகள் அவை. 1994 ல் “உலக தொல்லியல் பாரம்பரிய தளம்” என்று யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டது....

நாஸ்கா கோடுகள் 1927 விமானத்தில் இருந்து தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது.அறிவியலாளர்கள் நாஸ்கா கலாசார மக்களால் கி.பி.400 மற்றும் கி.பி.600 ஆகியவற்றிற்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் இவற்றை உருவாக்கியிருக்கலாம் என்று கருதுகின்றனர்...

ஒரு சாரர் பலநூறு விலங்கு,பறவை,தாவர இனங்களின் உருவங்களை வெளிப்படுத்தும் இந்த நாஸ்கா கோடுகளை விவசாயிகள் உருவாகினார்கள் என்றும், மற்றொரு தரப்பினர் இவை வேற்றுலகவாசிகளால் ஏற்ப்படுத்தப்பட்டவை என்று கூறிவருகின்றனர். இவற்றில் எது உண்மை என்று இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை....

இருந்தும் விஞ்ஞானம் வளராத அக்காலக்கட்டத்தில் இவ்வளவு பிரமாண்டமான கோடுகளை அப்பெரும் நிலப்பரப்பில் எவ்வாறு நேர்த்தியாகவும், துல்லியமாகவும் வரைய முடிந்தது ?
யாரால் வரையப்பட்டது?
அவற்றை வரைய வேண்டிய அவசியமென்ன?
அவை நமக்கு உணர்த்துபவை யாவை?...

இம்முடிச்சுகள் இன்னமும் அவிழ்க்கப்படவில்லை.
நவீன விஞ்ஞானம் நாஸ்கா கோடுகளுடன் இன்றும் போரடிக்கொண்டிருகிறது.
  
அமில மழை.

25 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் அமில மழை.

அனைத்து வளங்களும் நிறைந்த பூமி தோன்றி சுமார் 500 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சுமார் 25 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் பொழிந்ததாக கண்டறியப்பட்டுள்ள அமில மழை மற்றும்ஓசோன் குறைவு காரணமாக மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.
பெர்மியான் காலத்தின் முடிவில் ஏற்பட்ட இந்த பேரழிவின் போது கடலில் வாழ்ந்த 90 சதவிகித உயிர்களும் மற்றும் நிலத்தில் வசித்த 70 சதவிகித உயிர்களும் அழிந்துவிட்டன என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. இதில் டைனோசர் போன்ற மிகக் கொடூரமான உயிரினங்களும் இறந்துவிட்டன என்று கூறப்படுகிறது.
சைபீரியாவில் மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதறியபோது பீச்சியடிக்கப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் சல்பர் டை ஆக்ஸைடு வாயுக்களால் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றமே இந்த அமில மழை அழிவிற்கு காரணம் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த மிகப்பெரிய அழிவிற்கு பிறகு பூமியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு எந்த உயிரினங்களும் தோன்றவில்லை என்றும் கிடைத்த படிமங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராட்சத மெமத் உயிரினத்தின் பதப்படுத்தப்பட்ட உடல் கண்டுபிடிப்பு.

இராட்சத மெமத் உயிரினத்தின் பதப்படுத்தப்பட்ட உடல் கண்டுபிடிப்பு.

ஆர்டிக் சமுத்திரத்தின் புதிய சைபீரிய தீவுப் பகுதியில் பனியில் நன்கு பதப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்ட இராட்சத மெமத் உயிரினத்தின் உடலினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவ்வுடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி வடக்கு கரையோர சைபீரியாவின் லியநொவோசிபேர்ஸ்க் ஆர்கிபிலாகோ எனவும் அவ்வேளையில் அப்பகுதியில் வெப்பநிலை -7 முதல் -10 பாகை செல்சியஸ் ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது 10,000 வருடங்கள் பழைமையானதாகக் கருதப்படும் இவ் விலங்கின் உடலிலிருந்து குருதி மாதிரியை வெற்றிகரமாக ஆராய்ச்சிக்கென பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தனை வருடங்கள் குருதி உறையா நிலையில் இருந்தமை அனைவரையும் அதிர வைத்துள்ளது. குறித்த மெமத் 60 வயதாக இருக்கும் போது உயிரிழந்திருக்கலாம் என்ற விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆராய்ச்சியாளர் செம்யொன் கிரிகோர்யெவ் தலைமையிலான ரஸ்ய மற்றும் கொரிய நாட்டுக் குழுவே இதனைக் கண்டுபிடித்துள்ளது. தென்கொரியாவும், ரஸ்யாவும் அழிந்து போன மெமத்தினை மீண்டும் உருவாக்கும் கூட்டு ஒப்பந்தமொன்றில் கடந்த வருடம் கையெழுத்திட்டிருந்தன. மெமத்தின் உடலை மூடியிருந்த பனிக்கட்டியை அகற்றியதும் அதன் வயிற்றிலிருந்து இருண்ட நிறத்தில், கனமான இரத்தம் வடிந்து வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளனர்....
இரத்தம் திரவ நிலையிலேயே இருந்தமை, அதன் தசை இழையமும் புதிய இறைச்சியைப் போல சிகப்பு நிறத்திலேயே இருந்தமையும் தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக செம்யொன் கிரிகோர்யெவ் தெரிவித்துள்ளார். பொதுவாக ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் போன்ற பனிப்பிரதேசங்களில் வாழும் சில உயிரினங்கள் பனியில் தமது உடல் இழையங்கள் உறைவதைப் பாதுகாக்கும் பொருட்டு கிரயோபுரடெக்டன்ட் “cryoprotectant” எனும் இரசாயனத்தை உடலில் சுரக்கும் இயல்பினைக் கொண்டுள்ளன. மெமத்தின் குருதியிலும் கிரயோபுரடெக்டன்ட் இராசயனம் அடங்கியிருக்கக் கூடுமெனவும் அதன் காரணமாகவே தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மெமத்தில் குருதி உறையாமல் திரவ நிலையில் இருந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்....

இதேவேளை இரத்தத்திற்கு மேலதிகமாக பற்கள், எலும்புகள், தசை இழையங்கள் ஆகியவற்றையும் ஆராய்ச்சியாளர்கள் சேகரித்துள்ளனர். இத்தகைய கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தில் மெமத்தை குளோனிங் முறையில் மீண்டும் உருவாக்கும் முயற்சிக்கு புத்துணர்வு அளிக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

இதுமட்டுமன்றி “மெமத்” இனை குளோனிங் முறையில் தம்மால் உருவாக்க முடியுமென ஜப்பானிய விஞ்ஞானியொருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். ஜப்பானிய கொயாட்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அகிரா இரிடானியே ஒரு மெமத்தினை வெறும் 4 வருடங்களிலேயே உருவாக்க முடியுமென நம்பிக்கை வெளியிட்டார்.
இதற்காக சிதைவடையாத நேர்த்தியான மெமத்தின் கருவை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் இதனை ஆபிரிக்க யானைகளின் கரு முட்டைகளில் செலுத்துவதன் மூலம் உருவாக்க முடியுமென அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இவ்வாராய்ச்சிக்கு பொருத்தமான கருவினைத் தேடி சைபீரியாவிற்கு செல்லவுள்ளதாகவும் அகிரா அப்போது தெரிவித்திருந்தார். மேலும் 1990 ஆம் ஆண்டு இத்தகைய ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சைபீரிய நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன் இறந்துபோன மெமத்தின் உடல் தோல் மற்றும் தசை இழையத்திலிருந்து கருவைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியானது தோல்வியடைந்தது. கடும் குளிரினால் கருவானது சிதைவடைந்திருந்தமையே அதற்கான காரணமாகும். சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தாக விஞ்ஞானிகளால் கூறப்படும் இந்த இராட்சத விலங்கினம் பின்னாளில் முற்றாக அழிந்து போனமை குறிப்பிடத்தக்கது.

கென்னடி குடும்பம்,, தொடரும் மர்மங்கள்,,

கென்னடி குடும்பம்,,
தொடரும் மர்மங்கள்,,

அமெரிக்காவின் அரசியல் வரலாற்றில், மிகவும் முக்கியமான ஒரு குடும்பம் கென்னடி குடும்பம். ”வருங்காலத்தில் நீ என்னவாகப் போகிறாய்?” என்று அமெரிக்க பள்ளிக் குழந்தைகளை கேட்டால், பெரும்பாலான பதில் ”அமெரிக்காவின் குடியரசு தலைவராவது” என்று தான் இருக்கும்.

அவர்களில் சிலர் மட்டுமே அந்த குறிக்கோளை நோக்கி முயல்வார்கள் என்ற போதிலும், ஒரு குடும்பத்து குழந்தைகள் மட்டும் , “ குடியரசு தலைவராவேன்” என்று கூறினால், அது சாத்தியமாக வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது என்றால், அது கென்னடி குடும்பத்திற்கு மட்டும் தான். அமெரிக்காவின் அரசியல் வரலாற்றில், கடந்த 150 ஆண்டுகளாக தங்களின் பங்களிப்பை வழங்கி வரும் இந்த குடும்பத்திற்கு மட்டும், தொடர்ந்து வந்த மரணங்கள், மக்களிடையே, இந்த குடும்பத்தின் மீதான பார்வையையே மாற்றியுள்ளது.

காரணம், 1963 ஆம் ஆண்டு, டாலசில் நடந்த மக்கள் கூட்டத்தில் ஜான் கென்னடி, துப்பாகியால் சுடப்பட்டார். அவரைத் தொடர்ந்து, 1968 இல் அவரின் சகோதரர் பாபியும் சுடப்பட்டார். 1984 ஆம் ஆண்டு, பாபியின் மகனான டேவிட் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டதால் காலமானார். அவரை தொடர்ந்து, 1997 இல் பாபியின் அடுத்த மகனான மைக்கேல் மரணமடைந்தார்.

பின்பு, 1999 இல் கெனடியின் மகனான, ஜான் ஜூனியரும் மரணமடைந்தார். இந்த தொடர் மரணங்கள், அமெரிக்க மக்களிடையே, கென்னடியின் குடும்பம், சபிக்கபட்ட குடும்பமோ என்ற எண்ணத்தையே வரவைத்து விட்டது என்று கூட சொல்லலாம்.

ஆபிரகாம் லிங்கன் ஜான் எப். கென்னடி

ஆபிரகாம் லிங்கன் மற்றும் ஜான் எப். கென்னடி இவர்களை குறித்து அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் இவர்கள் இருவரின் வாழ்விலும் நடந்த சில நிகழ்வுகள் சரித்திரத்தில் ஒரு வியப்பு என்றால் மிகை ஆகாது.

*ஆபிரகாம் லிங்கன் அவர்கள் US காங்கிரசுக்கு 1846ம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*ஜான் எப்.கென்னடி அவர்கள் US காங்கிரசுக்கு 1946 ம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

*ஆபிரகாம் லிங்கன் அவர்கள் அமெரிக்காவின் குடியரசு தலைவராக 1860ம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*ஜான் எப்.கென்னடி அவர்கள் அமெரிக்காவின் குடியரசு தலைவராக 1960 ம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

*லிங்கனின் காரியதரிசியின் பெயர் கென்னடி.
*கென்னடியின் காரியதரிசியின் பெயர் லிங்கன்.

*லிங்கனை கொலை செய்த ஜான் வில்கெஸ் பூத் 1839 வருடத்தில் பிறந்தான்.
*கென்னடியை கொலை செய்த லீ ஹார்வே ஆஸ்வால்ட் 1939 ம் வருடத்தில் பிறந்தான்.

*லிங்கன் போர்ட் என்று அழைக்கப் பட்ட தியேட்டரின் முன் சுடப்பட்டார்.
*கென்னடி போர்ட் கம்பனியின் லிங்கன் என்ற காரில் செல்லும்போது சுடப்பட்டார்.

*லிங்கனை சுட்டவுடன் தியேட்டரில் இருந்து பண்டக சாலைக்கு கொலைக்காரன் தப்பி சென்றான்.
*கென்னடியை சுட்டவுடன் பண்டக சாலையில் இருந்து தியேட்டருக்கு கொலைக்காரன் தப்பி சென்றான்.

*இருவரும் மனித உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள்.

*இருவரின் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வசிக்கும் போது தங்கள் குழந்தைகளை இழந்தவர்கள்.

*இருவரும் வெள்ளிக்கிழமையில் தலையில் சுடப்பட்டு இறந்தார்கள்.

*பூத் மற்றும் ஆஸ்வால்ட் இரண்டு பெரும் வழக்கு முடிவதற்கு முன்பு கொல்லப்பட்டனர்.

பல விஷயங்களில் ஓன்றுபட்டிருக்கும் மாண்புமிகு லிங்கன் மற்றும் கென்னடி சரித்திரத்தின் ஒரு வியப்பு தானே...!

தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ்

நாஸ்ட்ரடாமஸ் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். இவர்களது குடும்பம் வருங்காலம் உரைத்தலில் திறமை பெற்றிருந்தது. அதன் வழி இவருக்கும் அந்த ஆற்றல் வந்தது. பாரம்பரிய ஜோதிட முறையை தனது முன்னோர்களிடம் பயின்ற இவர், “கப்பாலா” முறை எனப்படும் ரகசிய ஆருட முறையையும் பயின்றார். ஆனாலும் அவற்றை எல்லாம் விடுத்து மருத்துவத்தை முறையாகப் பயின்று டாக்டர் ஆனார். தம்மை பிரச்சனை என்று நாடி வந்தவர்களது பிரச்சனைகளைப் போக்கினார். அவர்களது நோய்களைக் குணப்படுத்தினார். மனத் தெளிவை ஏற்படுத்தினார். வருங்காலத்தில் நிகழ இருக்கும் செயல்களை முன்னரே கூறி அவர்களை எச்சரிக்கை செய்தார். அதனால் மக்களுக்கு அவர் மீது பெரிய மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது.

நாளடைவில் ரசவாதம், மாந்த்ரீகம், இறந்தவர்களுடன் பேசுதல், உடலை விடுத்து வெளியே சென்று வருதல் போன்ற பல ஆற்றல்கள் கை வரப் பெற்றார். ஆனால் மதவாதிகள் எதிர்த்ததால் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். பின் பிரான்ஸின் தெற்குப் பகுதிக்குக் குடியேறினார். ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார். நாளடைவில் தனது ஆரூடங்களினால் அவருக்கு புகழும் ஆதரவும் பெருகியது. மக்களிடையே செல்வாக்கு வளர்ந்தது.

ஒருமுறை ஒரு செல்வந்தரின் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார் நாஸ்ட்ரடாமஸ். அச்செல்வந்தரின் மாளிகையின் பின்புறம் இரண்டு பன்றிகள் கட்டப்பட்டு இருந்தன. ஒன்று கறுப்பு; மற்றொன்று வெள்ளை.

அந்தச் செல்வந்தர் அவற்றைக் காட்டி, “இந்த இரண்டு பன்றிகளில் எதை நாம் இன்றிரவு விருந்தில் சாப்பிடப்போகிறோம் என்று உங்களால் சரியாகக் கணித்துச் சொல்ல முடியுமா?”, என்று கேட்டார்.

“சந்தேகமென்ன? கறுப்புப் பன்றியை நாம் சாப்பிடுவோம். வெள்ளைப் பன்றியை ஓநாய் உண்டு விடும்,” என்றார் நாஸ்ட்ரடாமஸ்.

”இந்த மாளிகைக்குள் ஓநாயா?” என்று கிண்டலாகச் சிரித்த பிரபு அங்கிருந்து அகன்றார். பின் நாஸ்ட்ரடாமஸுக்குத் தெரியாமல் ரகசியமாக சமையற்காரரை அழைத்தவர், அந்த வெள்ளைப் பன்றியைத்தான் கொன்று சமைக்க வேண்டும் என்று சொன்னார். உடனே சமையற்காரனும் அவர் கண் முன்னாலேயே அந்த வெண்ணிறப் பன்றியைக் கொன்று சமைக்க உள்ளே எடுத்துச் சென்றான்.

விருந்தும் முடிந்தது. அனைவரும் உண்டு முடித்தபின், பிரபு மீண்டும் நாஸ்ட்ரடாமஸிடம், “நாம் சற்றுமுன்பு எந்தப் பன்றியைச் சாப்பிட்டோம்?” என்று கேட்டார். உடனே நாஸ்ட்ரடாமஸ், ”அதுதான் முன்பே சொன்னேனே, கறுப்புப் பன்றியைத்தான் சாப்பிட்டோம்” என்றார்.

கிண்டலாகச் சிரித்த அப்பிரபு, உடனே சமையற்காரரை அழைத்தார். “எந்தப் பன்றியைச் சமைத்தாய் என்பதை இங்கு எல்லாரிடமும் சொல்” என்றார்.

சமையற்காரர், “கறுப்புப்பன்றி” என்றார்.

பிரபுவுக்கு ஒரே அதிர்ச்சி.

” நான் உன்னை வெள்ளைப் பன்றியைத்தானே சமைக்கச் சொன்னேன்? என் கண் முன்னால்தானே அதனை நீ கொன்றாய்?” என்றார் பிரபு கோபத்துடன்.

“ஆம்! பிரபுவே! ஆனால் அடுப்பில் வேக வைக்க வைத்திருந்த பன்றி இறைச்சியை உங்கள் வேட்டை நாய் கவ்வி இழுத்துச்சென்று விட்டது. அதனால் வேறு வழியின்றி கறுப்புப் பன்றியைக் கொன்று சமைத்துப் பரிமாறினேன்” என்றார்.

அந்தப் பிரபுவின் வேட்டைநாய் உண்மையிலேயே ஒரு ஓநாய்க்குப் பிறந்தது.

நாஸ்ட்ரடமஸின் பல ஆருடங்கள் புத்தகமாக வெளிவந்தும் புகழ் பெற்றன.

இவ்வாறு தன் வாழ்வில் பல்வேறு அதிசய ஆருடங்களைச் சொன்ன, பல மன்னர்களை, பிரபுக்களை, செல்வச் சீமான்களை நடுங்க வைத்த நாஸ்ட்ரடாமஸின் ஆருடங்கள், அவர் இறந்த பின்னும் பலித்தது. இன்றும் பலித்து வருகிறது என்பது அதிசயத்திலும் அதிசயம் அல்லவா?

ESP

ஈ.எஸ்.பி. ஆற்றல்கள்.

அதீத உள்ளுணர்வுத் திறன், கூடுதல் புலனறிவு, என்றெல்லாம் அழைக்கப்படும் ஈ.எஸ்.பி உலகெங்கிலுமுள்ள மனிதர்கள் பலருக்கும் வியப்பைத் தரும் ஒன்று. சரி, , ஈ.எஸ்.பி , E.S.P (Extra Sensory Perception) உண்மைதானா? இல்லை, மனிதர்களின் ஆதீத கற்பனைகளின் விளைவா?

நாம் ஆறறிவு கொண்டவர்கள். ஐம்புலன்களால் செயல்படுபவர்கள். பகுத்தறிவு எனப்படும் அந்த ஆறாம் அறிவு மூலம் நாம் சிந்திக்கிறோம். முடிவுகள் எடுக்கிறோம். செயல்படுகிறோம். ஆனால் அதையும் மீறிய ஒன்றாக, புலன்களுக்கு அப்பாற்பட்டதாக, ஏழாம் அறிவாக விளங்குவதுதான் ஈ.எஸ்.பி. உலகெங்கிலும் பல்வேறு ஈ.எஸ்.பி. சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல ஈ.எஸ்.பி. மனிதர்கள், தங்களது ஆற்றல்களைக் கொண்டு பல்வேறு அதிசயச் செயல்களைச் செய்துள்ளனர். குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க உதவியுள்ளனர்.
சரி, ஈ.எஸ்.பி என்றால் என்ன? பொதுவாக பின்னர் வருவதை, அல்லது நடக்கப் போகும் ஒன்றை முன் கூட்டியே அறிவதுதான் ஈ.எஸ்.பி. எனப்படுகிறது. பொதுவாக, ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் எல்லா மனிதருக்குமே ஓரளவு இருக்கிறது. ஆனால் பலரும் அந்த ஆற்றலின் மீது கவனம் செலுத்துவதில்லை. அல்லது அந்தத் திறனை வளர்த்துக் கொள்ளுவதில்லை. அதனால் பலரும் அது பற்றிய உண்மைகளை அறியாமல் உள்ளனர். உதாரணமாக திடீரென நாம் நெருங்கிய நண்பர் ஒருவரைப் பற்றி அடிக்கடி நினைப்போம். அவரைப் பார்க்க வேண்டுமென நினைப்போம். திடீரென அவர் கண் முன்னே வந்து நிற்பார். அல்லது அவரைப் பற்றிய செய்தி நமக்கு வந்து சேரும். இதுதான் ஈ.எஸ்.பி. என்பதன் எளிமையான விளக்கம். இந்த ஈ.எஸ்.பியில் பல வகைகள் உள்ளன.

வேறு ஒருவருடைய எண்ணங்களை, மனதில் உள்ள செய்திகளைப் படிக்கும் ஆற்றல் – டெலிபதி எனப்படுகிறது. எதிர்காலத்தை அவதானித்து, மிகச் சரியாக அதை முன்கூட்டியே கூற முடிவதற்கு - Precognition என்று பெயர். இருந்த இடத்தில் இருந்து கொண்டே வேறு ஒரு இடத்தில் நடக்கும் விஷயங்களை சரியாகக் கணித்துக் கூறுவதற்கு – Clairvoyance என்று பெயர். ஒரு நபரது கடந்த காலத்தை, சம்பவங்களை, வாழ்க்கை நிகழ்ச்சிகளை மிகத் துல்லியமாகக் கூறுவதற்கு Retro cognition என்று பெயர். ஒரு நபருக்குச் சொந்தமான பொருளை தொடுவதன் மூலமோ அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட ஏதேனும் உடைமைப் பொருள் ஒன்றைக் கொண்டு அந்த நபர் பற்றி, அவர் இருக்கும் இடம், தன்மை, அவரது செயல்பாடுகள் பற்றிக் கூறும் திறனுக்கு Psychometric என்று பெயர்.

இதில் முக்கியமான விஷயம் ஈ.எஸ்.பி என்பது அமானுஷ்ய ஆற்றலோ அல்லது ஆவிகள் போன்றவற்றின் உதவியால் செயல்படுத்தப்படுவதோ இல்லை. முழுக்க முழுக்க மூளை மற்றும் மனத்தில் செயல்பாடுகளால் ஏற்படும் அதீத திறனே ஈ.எஸ்.பி.

இனி ஒரு உதாரண சம்பவத்தைப் பார்ப்போம். இது 1977ல் பிரிட்டனில் நடந்த சம்பவம். ஹில்ஹெட் லார்ட் ஜெக்கின்ஸ் என்பவர் தொழிலாளர் கூட்டமைப்புக் கட்சியின் எம்.பியாக அப்போது இருந்தார். அவர் பணி நிமித்தமாக ரோம் நகரத்துக்குச் சென்றிருந்தார். அங்கு ஒரு ஹோட்டலில் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருக்கு ஒரு கனவு வந்தது. அதில் அவரது சக எம்.பியும், நண்பருமான ஆண்டனி கிராஸ்லாண்ட் என்பவர் தோன்றினார். அவர், இவரிடம், “நண்பா, நான் இன்னும் சற்று நேரத்தில் இறக்கப் போகிறேன்.. விடைபெறுகிறேன். நன்றி” என்று கூறிவிட்டு மறைந்து விட்டார்.

திடுக்கிட்டுக் கண் விழித்தார் ஹில்ஹெட். இது வெறும் சாதாரணக் கனவுதானா அல்லது ஏதேனும் முன்னறிவிப்பா என்று புரியாமல் திகைத்தார். சிலமணி நேரங்களில் ஆயிரம் மைல்களுக்கும் அப்பாற்பட்ட ஆக்ஸ்போர்டிலிருந்து அவருக்கு ஒரு தொலைபேசிச் செய்தி வந்தது, ஆண்டனி இறந்து விட்டாரென்று.

தான் இறக்கப் போவதை எப்படியாவது தனது நண்பருக்குத் தெரிவித்துவிட வேண்டுமென்று ஆண்டனியின் ஆழ்மனம் நினைத்ததன் விளைவுதான் அந்தக் கனவு என்பதை உணர்ந்து கொண்டார் ஹில்ஹெட்.

மனிதர்கள் மட்டும்தான் என்றில்லை. விலங்குகளுக்கும் கூட இத்தகைய ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் உண்டு. குறிப்பாக மனிதர்களோடு நெருங்கி வாழும் நாய், பூனை போன்றவற்றிற்கு இயல்பாகவே இந்த ஆற்றல்கள் அதிகம். அது பற்றிய சம்பவங்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்கா தங்கப்புதையல்

லத்தின் அமெரிக்காவில் மத்திய ஈகுவடாரில் அமைந்திருக்கும் அடர்ந்த மலைப்பிரதேசத்தின் குகைகளில் டன் கணக்கில் தங்கப்புதையல் இருப்பதான கதைகளின் பின்னனி சுவாரசியமான வரலாறு.

1532ம் ஆண்டு ஃபிரான்சிஸ்கோ பிஸ்ஸாரோ என்பவரின் தலைமையில் ஸ்பானீஷ் படையொன்று இன்கா பேரரசரை சிறைபிடிக்கும் முயற்சியில் முன்னேறியது. ஏற்கனவே இன்கா பேரரசில் அப்போதுதான் சகோதர யுத்தம் நடந்து தனது சகோதரர் குயாஸ்கரை வீழ்த்தி அரியணையில் அமர்ந்திருக்கிறார் அதூல்பா. ஏற்கனவே நடந்த உள்நாட்டு யுத்தத்தில் களைப்படைந்து போயிருந்த இன்கா படைகள் ஸ்பானீஷ் படைகளிடம் எளிதாய் வீழ்ந்திருக்கிறது. அதூல்பா இன்கா தலைநகரான கஜமார்காவில் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்.

தன்னை விடுவித்தால் அதற்கு ஈடாக மலை மலையாக தங்கம் தருவதாக பிஸ்ஸாரோவிடம் பேரம் முடித்திருக்கிறார் அதூல்பா. அதன்படி தங்கள் அரசரை விடுவிப்பதற்காக இன்கா பேரரசு முழுவதுதிலுமுள்ள மக்களிடமிருந்து தங்கமும் வெள்ளியுமாய் பெறப்பட்டு அவை இரண்டு தவணையாக பிஸ்ஸாரோவிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. விதவிதமான தங்க கைவினைப்பொருட்கள் முதல் தவணையில் ஒப்படைக்கப்பட்டவுடன் பிஸ்ஸாரோ அந்த அழகிய தங்க வைவினைப்பொருட்கள் அனைத்தையும் உருக்கி தங்கக்கட்டிகளாய் ஸ்பெயினுக்கு அனுப்பி விட்டு இரண்டாவது தவணையைப் பற்றி அறியாமல் தனது வாக்குறுதியைக் மீறி இன்கா பேரரசர் அதூல்பாவை ஆகஸ்ட்-29, 1533 அன்று இன்கா தலைநகரான கஜமார்காவிலேயே கொன்று தீயிலிட்டு கொளுத்தியிருக்கிறான்.

கிட்டத்தட்ட 60,000 பணியாட்கள் மூலம் 750 டன் தங்க கைவினைப்பொருட்களை இன்கா தலைநகரை நோக்கி சுமந்து வந்து கொண்டிருந்த இன்கா ஜெனரல் ருமினாஹீய், இன்கா பேரரசர் கொல்லப்பட்ட செய்தியை அறிந்ததும் தங்கம் மொத்தத்தையும் ல்லங்கானேட்ஸ் என்ற ஈகுவடாரின் மலைப்பிரதேசத்துக்கு எடுத்துச்சென்று மறைத்துவிட்டார். அதற்குப் பின்னர் இன்கா ஜெனரல், ஸ்பானீஷ் படைகளுடன் தொடர்ந்து போரிட்டு, சிறைபிடிக்கப்பட்டு, பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டும் இன்கா தங்கத்தை வைத்த இடம் பற்றி எவ்விதத் தகவலையும் கூறாமல் அந்த மர்மப்புதையலை தனது மரணத்தோடு சேர்த்தே மறைத்து கொண்டார்.

தொடர்ந்து வந்த காலங்களில் இன்று வரையிலும் தங்க வேட்டைக்காக பலவிதமான தேடல்கள் நடந்து கொண்டேயிருந்தாலும் எல்லாமே வெறுங்கையாகவே முடிந்த கதைகள் இன்கா தங்கப்புதையலை இன்னமும் தீரா மர்மமாகவே நீட்டித்திருக்கிறது.

இறந்த பின்னரான வாழ்க்கை - மம்மிபிகேஷன்

மம்மிகள் நாம் சினிமாவில் பார்த்ததோடு சரி . அவர்களின் இறந்த பின்னரான வாழ்க்கை பற்றிய நம்பிக்கை பற்றியோ அவர்களின் ரகசியம் பற்றியோ அறிந்ததில்லை . மம்மிகள் சீனா மம்மிகள் , அரசியல் வாதி மம்மிகள் , குரு மம்மிகள், மிருக மம்மிகள் , உரிந்த மம்மிகள் , காய்ந்த மம்மிகள் என எத்தனையோ வகை . அவற்றையும் இறந்த பின் வாழ்க்கையையும் , பிரமிட்டையும் அவர்களின் முறைகளையும் பார்ப்போம் .

உலகத்தில் எத்தனை கண்டுபிடிப்புகள் வந்தாலும் பெரும்பாலான விடயங்கள் எகிப்த்தியர்களின் வழிகாட்டலிலேயே தோன்றியுள்ளது . ஏன் இப்போது உலகில் உள்ள இரு பெரிய மதங்களும் அவற்றின் கதைகளும் எகிப்தியர்களிடம் இருந்து எடுக்கப்பட்டவை என்றும் கூறலாம் .அதன் காரணம் எகிப்தியர்கள் அனைத்து விடயங்களையும் தமது கல் வெட்டுகளில் பொறித்து விட்டு சென்றமை .

எகிப்த்தியர்களின் (கி மு (4650 - 3050 )) கல் வெட்டுகளில் அவர்களின் பொருளாதாரம் , விஞ்ஞானம், கணிதம் , போக்குவரத்து என அனைத்தும் குறிக்கப்பட்டுள்ளது .

இவை அனைத்தையும் பொறித்து விட்டுசென்றவர்கள் அவர்களின் இறந்த பின்னரான வாழ்க்கை பற்றியோ அல்லது அவர்கள் இறந்த உடல்கள் பாதுகாத்தல் தொடர்பையோ எந்த குறிப்புகளையும் எழுதி வைக்க வில்லை . எழுதி வைக்காததன் மர்மம் என்ன ? அதற்க்கான கேள்வி மனதில் நிற்கட்டும் . இவ்வாறு எழுதி வைக்காத முறைமை கிரேக்க சுற்றுலாப்பயணி(கி மு 2500 ) ஒருவரால் அடிப்படை விடயங்களை வைத்து ஊகித்து எழுதப்பட்டது தான் மம்மிபிகேஷன் .

அனைத்து தொழில்நுட்பவியலாளர்களும் , தற்ப்போதைய கட்டிட நிபுணர்களும் பார்த்து வியந்த பிரமிட்டுகள் ஆயிரமாயிரம் தொழிலாளர்களை வைத்து கட்டப்பட்டது . அதற்க்கான காரணம் அவர்களது இறந்த உடல்களை பாதுகாக்கவும் இறந்த பின்னரான வாழ்க்கையை உறுதி செய்யவுமே .

இறந்த உடல்களை பத்திரப்படுத்தி வைக்கும் முறையில் எகிப்தியர்களை பார்த்து வியந்து நிற்க்கிறது மருத்துவ உலகம் . மம்மிபிகஷோன் நடந்த மம்மி 18 ஆம் நூற்றாண்டுகளில் கண்டு பிடிக்கப்பட்டது . இறந்த உடல்களை பத்திரப்படுத்தி வைப்பது தான் மம்மிபிகாஷோன் .

மம்மிபிகேஷன்

நைல் நதியை தாண்டி கொண்டு செல்லப்படும் இறந்த உடல்களுக்கான மம்மிபிகாஷோன் உயர்ந்தமலையில் வைத்து நடத்தப்படுகிறது . மம்மிபிகேஷன் ஆரம்பமாக அவர்களுடைய குருமார்களால் பிரார்த்தனை நடத்தப்படுவதுடன் ஆரம்பிக்கிறது .

பின்னர் மூக்கினூடாக ஒரு நீண்ட கம்பி போல ஒன்றை வைத்து மூளை இழுத்து எடுக்கப்படும் . வயிற்றிலிருந்து ஏனைய முக்கிய உறுப்புகளும் எடுக்கப்படும் . அவை தான் உடல் கெட்டுப்போக காரணமானவை .

பின்னர் கழுவப்பட்ட உடல் நீரை உடலில் இருந்து உறிஞ்சும் உப்புக்களால் முழுமையாக மூடி நாப்பது நாட்களுக்கு விடப்படும் . நாற்ப்பது நாட்களுக்கு பின்னர் நைல் நதியில் இருந்து எடுக்கப்படும் நீரால் உடல் கழுவப்பட்டு உடலை லாஸ்டிக் போல வைத்திருக்க எண்ணெய் வகை பூசப்படுகிறது .

எடுக்கப்பட்ட உள் உறுப்புகளிட்க்காக வேறு பொருட்கள் இட்டு உடல் நிரப்பப்பட்ட பின்னர் , எடுக்கப்பட்ட உறுப்புகள் சாடிகளில் இடப்படும் . அதாவது அவர்கள் வணங்கிய கடவுள் ஹோறச்சின் நான்கு மகன்கள் என அழைக்கப்படும் ஜாடிகளில் இட்டு வைக்கப்படும்.
வாசமான திரவியம் உடலை சுற்றி பூசப்பட்ட பின் துணியால் சுற்றப்படும் .

அவர்களின் சுற்றும் முறையே தனி . சுற்றிய பின் சடங்குகள் இடம் பெற்று அவை உறவினர்களிடம் விடப்படும் . அங்கு அவர்களுக்கு இறுதி உணவு , இறுதி சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்டு அவர்களுக்காக செய்யப்பட்ட பிரமிட்டுகளில் வைக்கப்பட்டு மூடப்படும் .

இதில் நெகிழ வைக்கும் விடயம் என்னவென்றால் . அரசன் மறுபடியும் வாழ்க்கை வாழ்வான் என்ற நம்பிக்கை இருந்தவர்கள் பணம், பொருள் , உணவு என அணித்தையும் இட்டு அனுப்புவர் .அதனுடன் வேலை செய்பவர்களையும் காவலாளிகளாக உயிருடன் வைத்து மூடுவதே . காரணம் இறந்த பின்னரும் அரசன் உயிரித்து எழுந்தால் காவலுக்கு காவலாளிகள் தேவை என்பதே .

எகிப்தியர்கள் இறந்த உடல்களை வரிசையாக பிரமிட்டுகளுக்குள் இறக்கும் விதம் . அப்போதே இத்தகைய தொழில் நுட்பம் .

ஆனால் நமக்கெல்லாம் தெரிந்தது எகிப்திய மம்மிகள் தான் . அவை தான் பிரபல்யமும் கூட . ஆனால் தேன் அமெரிக்காவில் கடற்க்கரை பகுதிகளில் வாழ்ந்த பழங்குடி மக்களின் மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன . இதுவரை கண்டெடுக்கப்பட்ட மம்மிகளில் 6000 ஆண்டுகள் பழமையான சின்ன குழந்தை ஒன்றின் மம்மியே மிக மிக பழமையானது .

எகிப்திய ராஜாக்களால் தாம் இறக்கும் முன்னர் தாம் இறந்ததன் பின்னான வாழ்க்கைக்கு தேவையான இடத்தை அவர்களே இருந்து கட்டுகின்றனர் . மிகவும் பணம் செலவழிக்கும் விடயம் என்றால் இது தான் .

நவீன மம்மி (லெனின் )

உலக புரட்ச்சியாளன் லெனின் இறந்த பின்னர் (1924 ) அவருடைய உடலை பக்குவப்படுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது . காரணம் மக்களால் அனைவராலும் அதிகமாக விரும்பப்பட்டவர் , தம்முடனேயே இருக்க வேண்டும் என முடிவு செய்தனர் .
முதலில் அடியில் வைத்து -30 டிகிரியில் புதைக்கப்பட்ட அவரது உடல் மீண்டும் எடுக்கப்பட்டு மருத்துவர்களால் மேலும் நிறைய காலம் வைத்திருக்க முடிவெடுக்கப்பட்டது .

ஆனால் அவரது உடலுக்கு மம்மீகளுக்கு செய்யப்பட்ட அதே வேலைகள் மாற்றமில்லாமல் இடம் பெற்றது . ஆனால் ரகசியமாக ஒரு முறை இன்று வரை பேணப்பட்டு வருகிறது ரஷ்ஷியர்களால் . இறந்த அவரது உடல் 70 வருடங்களாக அப்படியே இருக்கிறது . இப்போதும் பேணப்பட்டு வருகிறது .

ஒரு வேலை லெனினின் உடலும் நிலத்துக்கடியில் செல்லலாம் . காரணம் கம்யுனிஸ்ட் ஆட்சி இல்லை . அனைத்து மம்மிகளும் , அது எகிப்திய மும்மியோ ,6000 வருடங்கள் பழமையான குழந்தை மம்மியோ!!. இவை அனைத்தும் காலத்தால் கூறும் ஒரே பதில் . எமது இறந்த காலத்துக்கான எயக்ச்டயினின் நேர பயணம் . பல விடயங்கள் மர்மமாகவே தொடர்கிறது .

அமானுஷ்யங்கள்

விஞ்ஞானம் திகைக்கும் நமது சமீப கால அமானுஷ்யங்கள் !!

ஐம்புலன்களுக்கு உட்பட்டு ஆராய்வது விஞ்ஞானம். புலனையும் கடந்து மெய்யை உணர்வது மெய்ஞானம். புலன்களை அடக்கி ஆள்கின்றபோது ஏராளமான வியத்தகும் சக்திகளை சித்தர்களும் யோகிகளும் அடைகின்றனர். அவர்கள் இதைப் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால் சாமானியர்அதிசயிக்கின்றனர். இதை நேருக்கு நேர் பார்க்கும் போது விஞ்ஞானமும் திகைக்கிறது.

வள்ளலாரின் மரணமிலாப் பெரு வாழ்வு

நமது காலத்திற்கு சற்று முன்னர் வாழ்ந்த வள்ளலார் (வடலூர் ராமலிங்க சுவாமிகள்) 1874ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி நள்ளிரவில் தனது அறையில் உள்ளே சென்று தாளிட்டுக் கொண்டவர் திரும்பி வரவில்லை. அறையின் உள்ளே இருந்த விளக்கை வெளியே கொண்டு வந்து வைத்த அவர், தனது சீடர்களிடம் யாரும் அறையைத் திறக்க வேண்டாம் என்று அருளி விட்டு உள்ளே சென்றார். அவர் ஜோதியாக ஆனாரா, காற்றிலே கலந்தாரா என்பது தெரியாவிட்டாலும், அவர் மரணத்தை வென்ற மாபெரும் ஞானி என்பதை உலகம் உணர்ந்தது.

வள்ளலார் பற்றி அறிய தென் ஆற்காடு கலெக்டர் ஒரு டாக்டருடன் சித்திவளாகம் விரைந்தார். உடல் சிதைந்து நாற்றம் எடுக்கும் என்று நம்பிய டாக்டர் அறைக்குள் நுழைந்தவுடன் திகைத்தார். பச்சைக் கற்பூர மணம் கமழ்ந்தது! அங்கிருந்த சீடர்களிடம் வள்ளலார் பற்றி நன்கு விசாரித்து அறிந்த கலெக்டர், அவரது மாபெரும் ஆன்மீக உயர்வைப் போற்றியதோடு தன் பங்கிற்கு இருபது ரூபாயை அளித்தார்.

1878ல் சவுத் ஆர்காட் கெஜட்டில், அறைக்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்டவர் திரும்பி காணப்படவில்லை என்று குறிப்பிட்டு அவரைப் பின்பற்றுவோர் அவர் கடவுளுடன் ஒன்றாகி விட்டார் என்று நம்புவதையும் குறிப்பிட்டார் ஜே.ஹெச் கார்ஸ்டின். 1906ல் டபிள்யூ. பிரான்ஸிஸ் ஐ.சி.எஸ் சவுத் ஆர்காட் கெஜட்டில் வள்ளலார் மறைந்ததை விளக்கி அதிசயப்படுகிறார்!

பரமஹம்ஸ யோகானந்தரின் யோக ஆற்றல்

'ஆட்டோபயாகிராபி ஆஃப் எ யோகி' என்ற உலகப் பிரசித்தி பெற்ற நூலை எழுதிய பரமஹம்ஸ யோகானந்தர் (1893-1952) 1952ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி மஹா சமாதி அடைந்தார். அவரது உடல் இருபது நாட்கள் கழித்து மார்ச் 27ம் தேதி வெங்கல மூடியிட்ட பேழையில் வைக்கப்பட்டது. அதுவரை அந்த உடலில் எந்த வித மாற்றமும் இல்லை. லாஸ் ஏஞ்சலீஸைச் சேர்ந்த ஃபாரஸ்ட் லான் மெமோரியல் பார்க்கின் மார்ச்சுவரி டைரக்டர் ஹாரி டி ரோ, “பரமஹம்ஸ யோகானந்தரின் இறந்த உடலில் சிதைவுக்கான எந்த வித அறிகுறிகளும் தோன்றாதது எங்கள் அனுபவத்திலேயே மிகவும் அசாதாரணமான ஒன்றாக விளங்குகிறது. உடல் தோலிலோ அல்லது திசுக்களிலோ எந்த வித மாற்றமும் இல்லை! இது போன்று மாறாமல் இருக்கும் ஒரு உடல் எங்கள் சவக் கண்காணிப்பு வரலாறிலேயே இல்லாத இணையற்ற ஒரு சம்பவம்! நாளுக்கு நாள் எங்கள் வியப்பு கூடிக் கொண்டே போனது” என்று குறிப்பிடுகிறார்!

சூரிய ஒளியை உட்கொண்டு உயிர் வாழும் யோகி

ஹீரா ரதன் மனேக் (1937 செப்டம்பர் 12ம் தேதி பிறந்தவர்) என்ற யோகி சூரிய ஒளியை மட்டும் உண்டு உயிர் வாழ்வதாகக் கூறியதும் நாஸா விஞ்ஞானிகளே வியந்து அவரை தமது ஆராய்ச்சிக்காக அழைத்தனர். சூரிய ஆற்றலை பயன்படுத்துவது எப்படி என்று அறிவதே நாஸா விஞ்ஞானிகளின் நோக்கம்!

விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களின் கட்டுப்பாடான சோதனைக்கு உட்பட்ட இவர் 1995-96ல் 211 நாட்கள் கொல்கத்தாவில் எந்த வித உணவையும் உட்கொள்ளாமல் இருந்தார். அடுத்து 2000-2001ல் அஹமதாபாத்தில் 411 நாட்கள் 21 மருத்துவர்கள் உள்ளிட்ட நிபுணர் குழுவின் கண்காணிப்பிலும் ஆய்விலும் எதையும் உட்கொள்ளாமல் இருந்தார்! அடுத்து பென்ஸில்வேனியாவில் பிலடெல்பியாவில் தாமஸ் ஜெபர்ஸன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஆன்ட்ரூ நியூபெர்க் மூளையை ஸ்கேன் செய்தவாறு இருக்க, 130 நாட்கள் எதையும் உட்கொள்ளாமல் இருந்தார்.

65 ஆண்டுகள் எதுவும் உட்கொள்ளாத யோகி

பிரஹ்லாத்பாய் ஜானி என்ற 76 வயது ஆகும் யோகி குஜராத்தில் அம்பாஜி ஆலயத்திற்கு அருகே உள்ள குகை ஒன்றில் வசிக்கிறார்! கடந்த 65 ஆண்டுகளில் திரவ பதார்த்தத்தையோ எந்த வித உணவு வகைகளையுமோ தான் தொட்டதே இல்லை; உட்கொண்டதே இல்லை என்கிறார் அவர்! ஆன்மீக தாகம் மீதூற ஏழு வயதில் வீட்டை விட்டுப் புறப்பட்டவர்தான்! 11ம் வயதில் ஒரு தேவதை அவருக்கு அருள் பாலித்தது. அவரது வாயில் மேல் பகுதியிலிருந்து அமிர்தம் சொட்ட ஆரம்பித்தது. அன்றிலிருந்து சிறுநீர் மலம் எதையும் கழிக்கவில்லை! உயிர் காக்கும் அமிர்தம் சொட்ட ஆரம்பித்ததிலிருந்து எனக்கு உணவோ குடிநீரோ தேவை இல்லாமல் போய் விட்டது என்றார் அவர்!

இவரை விஞ்ஞான முறைப்படி ஆராய 2003ம் ஆண்டு நவம்பரில் டாக்டர் சுதிர் வி.ஷா தலைமையில் 21 ஸ்பெஷலிஸ்டுகள் ஒன்று சேர்ந்தனர். பத்து நாட்கள் 24 மணி நேர முழு சோதனை நடத்தப்பட்டது. கார்டியாலஜி, நியூராலஜி, யூராலஜி, கேஸ்ட்ரோ என்டிரோலொஜி, ஆப்தமாலஜி, ரீனல் பங்க்ஷன், பல்மனரி பங்க்ஷன், ஈ என் டி அனாலிஸிஸ், சைக்கியாட்ரி, பொது மருத்துவம் உள்ளிட்ட ஏராளமான துறை நிபுணர்கள் குழுவில் இருந்தனர். இந்த அனைத்துத் துறை நிபுணர்களும் தத்தம் துறையில் உள்ள தீவிர சோதனைகளை அவர் மேல் மேற்கொண்டனர். சோதனைகள் அனைத்தும் முடிந்த பின்னர் பிரஹலாதின் சொல்லுக்கு மறுப்பு ஏதும் அவர்களால் தெரிவிக்க இயலவில்லை. அவர்கள் திகைத்துப் போனார்கள். விளக்க முடியாத மர்மமாக அவர் விளங்கினார்.

எப்படி ஒருவரால் தண்ணீர், உணவு இன்றி வாழ முடியும்? சிறுநீர் மலம் கழிக்காமல் இருக்க முடியும்? அவர்களின் ஆச்சரியத்திற்கு எல்லையே இல்லை! சோதனையின் முதல் கட்டமாக அவரை இன்டென்ஸிவ் கேர் யூனிட்டில் 24 மணி நேரம் வைத்தனர். அடுத்து ஒன்பது நாட்கள் ஒரு கண்ணாடி கதவு கொண்ட டாய்லட் வசதி பூட்டப்பட்ட ஒரு விசேஷமான அறையில் அவர் வைக்கப்பட்டார். அந்த அறையில் ஒரு வீடியோ கேமராவும் பொருத்தப்பட்டது. அத்தோடு விசேஷ பணியாளர்கள் சிலர் 24 மணி நேர டியூட்டியில் தொடர்ந்து அவரைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டனர்! அவர் உணவு அருந்துகிறாரா, தண்ணீர் குடிக்கிறாரா, சிறுநீர், மலம் கழிக்கிறாரா என்று இவை அனைத்தும் கண்காணிக்கப்பட்டன!

ஒரு அல்ட்ரா சவுண்ட் கருவி அவரது சிறுநீரகத்தைப் பரிசோதித்தது. அந்தக் கருவியின் கண்டுபிடிப்பின்படி அவரது சிறுநீரகத்தில் சிறுநீர் சேர்ந்தது. ஆனால் அது சிறுநீரக சுவரில் உறிஞ்சப்பட்டு விட்டது. இது எப்படி நேரிடுகிறது என்பதை குழுவால் விளக்க இயலவில்லை. பத்து நாட்கள் சோதனைக்குப் பின்னர் ஆய்வுக் குழு அவர் திரவ பதார்த்தத்தையோ திட உணவையோ உட்கொள்ளவில்லை என அறிவித்தது. சாதாரணமாக, குடி நீர் இன்றி நான்கு நாட்களுக்கு மேல் ஒருவரால் உயிர் வாழ முடியாது. ஆய்வின் போது அவர் முழு ஆரோக்கியத்துடன் இருந்ததையும் குழு உறுதிப்படுத்தியது. மருத்துவமனையின் டெபுடி சூபரின்டெண்டெண்ட் டாக்டர் தினேஷ் தேசாய் தனது அறிக்கையில் தொடர் சோதனைகள் அவர் மீது நிகழ்த்தப்பட்ட போதிலும் அவரது உடல் இயங்கிய விதம் ஒரு சகஜமாகவே இருந்தது என்று உறுதிப்படுத்திக் கூறினார்!

கண்களைக் கட்டிப் படிப்பவர்

காஷ்மீரில் பிறந்த குடா பக்ஸ் தன் கண்களை இறுகக் கட்டிய பின்னர் ஊசியில் நூல் கோர்ப்பார். பார்வையாளரில் ஒருவரை வரவழைத்து அவர் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்து ஏதேனுமொரு பக்கத்தை எடுக்கச் சொல்லுவார். அதை அப்படியே வரிக்கு வரி படிப்பார். அயல் நாட்டு மொழிகளில் வார்த்தைகளை எழுதச் சொல்லி அதை அப்படியே திருப்பி எழுதுவார். லண்டன் பல்கலைக்கழக அதீத உளவியல் விஞ்ஞானிகள் 1935ல் ஒரு சோதனைக்கு இவரை அழைத்தனர். அதை ஏற்ற இவர் சோதனைக் கட்டுப்பாடுகளுக்கு இணங்க தீ மீது நடந்தார். தீயின் மேற்பரப்பு உஷ்ணம் 806 டிகிரி பாரன்ஹீட் என அளக்கப்பட்டது. தீயின் உக்கிரமான உஷ்ணமோ 2552 டிகிரி பாரன்ஹீட். இரும்பையும் உருக்கும் உஷ்ண நிலை! புகைப்படக்காரல் இதனைப் படம் பிடிக்கத் தவறி விட்டதால் மீண்டும் ஒரு முறை குடா பக்ஸை நடக்கச் சொல்லி வேண்டினார். குடா பக்ஸும் நடந்தார். உலகமே வியந்தது!

கண்களை மூடிய பின்னர் பார்வை எப்படிக் கிடைக்கிறது என்ற ரகசியத்தை ஒரு கேள்விக்கு விடை அளிக்கும் போது அவர் வெளிப்படுத்தினார். இரு புருவ மத்தியில் கண்களை வைத்து இருபத்தி நான்கு வருடங்கள் தியானம் செய்தால் அகக் காட்சி வந்து விடுமாம்! புறக் கண்களின் உதவி பிறகு தேவை இல்லையாம்!! 1906ல் பிறந்த இவர் 1981 பிப்ரவரி 5ம் தேதி மறைந்தார்.

மெய்யுணர்வுத் தேட்டப் பாதையில் புலன்களைக் கடந்த பெரும் ஆற்றல் நிச்சயமாக வரும்; அது ஒரு சாதாரண விஷயம் என்று கூறிச் சிரிக்கிறது மெய்ஞானம்! பிரமிக்கிறது விஞ்ஞானம்

டைனோசர் முட்டை

சீனாவில் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் முட்டை கண்டுப்பிடிப்பு.

120 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் ஒன்றின் முட்டை ஒன்று முழுவடிவில் சீனாவில் கிடைத்துள்ளது. டைனோசர் குறித்து கடந்த பத்து வருடங்களாக ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் அடங்கிய ஒரு குழு இந்த முட்டையை கண்டுபிடித்துள்ளது. உலகிலேயே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் முட்டைகளில் இதுதான் மிகவும் பழமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு சீனாவில் உள்ள Xinjiang Uygur Region, என்ற பகுதியில் உலகிலேயே இதுவரை கண்டுபிடிக்கப்படாத அளவில் மிகப்பெரிய டைனோசர் முட்டையை Chinese Academy of Sciences, என்ற அமைப்பை சேர்ந்த ஒரு குழு கண்டுபிடித்துள்ளது. இந்த குழுவில் சீனப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் உள்ளனர். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக டைனோசர் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த முட்டை டைனோசர்களில் ஒரு வகையான Pterosaurs என்ற இனத்தை சேர்ந்தது என்று கூறப்படுகிறது.

இந்த முட்டை 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் அப்போது ஏற்பட்ட பயங்கரமான புயலில் இந்த முட்டைக்கு சொந்தமான இனம் அழிந்துள்ளது என்றும் அவர்கள் தங்கள் ஆராய்ச்ச்சியின் மூலம் கண்டுபிடித்ததாக கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சி குழுவின் தலைவர் Wang Youlin, மேலும் இதுபோன்ற பலமுட்டைகள் இந்த பகுதியில் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், எனவே அந்த இடத்தில் தங்கள் ஆய்வை இன்னும் தீவிரப்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளனர்

உலகின் புதிரான முதல் கொலையும், மிகப் பழமையான மனித இரத்தமும்

உலகின் புதிரான முதல் கொலையும், மிகப் பழமையான மனித இரத்தமும்.

Photo: உலகின் புதிரான முதல் கொலையும், மிகப் பழமையான மனித இரத்தமும்.

அறிவியல் உலகில் அதிரடித் திருப்பு முனையாக, உலகத்தை பிரமிக்கச் செய்த ஒரு தகவல் இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உடலிலிருந்து இரத்தம் வெளியேறிய கண நேரத்தில், காற்று அதன் மேல் பட்டவுடன், இரத்தம் இறுகிக் கெட்டியாகி, கட்டியாகிவிடும். இதுதான் இரத்தத்தின் இயல்புத் தன்மை. சிவப்பணுக்களின் ஆயுள் என்பது சுமார் 120 நாட்கள் மட்டுமே. அதற்குள் அவை தன் உருவிழந்து மறைந்து விடும். ஆனால் சுமார் 5,300 ஆண்டுகளுக்கு முன் இறந்த மனிதன் ஒருவனின் உடலிலிருந்து இரத்தம் எடுக்கப்பட்டு, அன்றைய மனித இரத்த செல்களின் தன்மையும் கண்டறியப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பழமையான இரத்தம்.. 5300 ஆண்டுகள் ..!
ஓட்சி என்ற பனி மனிதனை 1991ல், இரண்டு மலையேறிகள் ஆஸ்திரிய இத்தாலிய எல்லையில் அமைந்துள்ள ஆல்பைன் பனியாற்றிலிருந்து கண்டெடுத்தனர். தற்போதைய அறிவியல் தகவல்படி, உலகில் அதிக வயதுள்ள நன்றாக இயற்கையான முறையில் பதப்படுத்தப்பட்டுள்ள மனித மம்மி இது மட்டுமே. இதில் பல ஆராய்ச்சிகள் செய்து, இந்த கற்கால மனிதன் ஒரு காயத்தினால் உடனே இறந்திருக்கிறான். பனி மனிதன் மிக வன்மையாகத் தாக்கப்பட்டு, கொடூரமான முறையில் இறந்திருக்கிறான் என்றும் கண்டறிந்துள்ளனர். இந்த உடலைக் கண்டுபிடித்து 23 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட, இதனைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் முடிந்தபாடில்லை.
ஆஸ்திரியாவிலுள்ள ஆறாவது உயரமான மலை இது. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,210மீ (10,500 அடி). ஆனால் இதில் ஜோசப் ராபைனேர் மற்றும் தொயோடோர் காசெரெர் (Josef Raffeiner and Theodor Kaserer.) இருவரும் அந்த மலை மீது ஏறுகின்றனர். இதன் மலைச் சரிவில்தான் ஹெல்முட் சைமன் மற்றும் எரிக்கா சைமன் (Helmut Simon and Erika Simon)இருவரும், 1991ம் ஆண்டு அங்குள்ள பனியாற்றில் ஒரு மனிதனைக் கண்டுபிடிக்கின்றனர்.
ஓட்சி பனி மனிதன்..!
ஓட்சி என்ற இடத்திலிருந்து அந்த மனிதனைக் கண்டுபிடிக்கப்பட்டதாலும், அவன் பனியில் உறைந்து பதப்படுத்தப்பட்டிருந்ததாலும் "ஓட்சி பனி மனிதன்" என்று செல்லமாய் அழைக்கின்றனர். ஆனால் அவன் தாமிர காலத்திற்கு முற்பட்ட ஐரோப்பிய மனிதன் என்றும் கருதப்படுகிறது. இப்போது அந்தப் பனிமனிதனும், அவனது சொத்துக்களான உடை மற்றும் பொருள்களும், இத்தாலியின் தெற்கு டைரோளில் உள்ள, போல்சானோவின்அருங்காட்சியத்தில் (South Tyrol Museum of Archaeology in Bolzano, South Tyrol, Italy.) வைக்கப்பட்டுள்ளது. பனிமனிதன் காயத்தில் உறைந்திருந்த‌ இரத்த செல்தான், நாம் இதுவரை அறிந்தவற்றில் மிக மிகப் பழமையான இரத்த செல்.
பனிமனிதன் உடம்பில் இரண்டு காயங்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்று கூர்மையான ஆயுதம் தாக்கிய தடயம் உள்ளது.
உலகில் இதுவரை அதிகமாக ஆராயப்பட்ட ஒரு மம்மி உண்டென்றால் அது ஓட்சிதான். அவன் பைநேல்ச்பிட்ஸ் மற்றும் சிமிளைன் மலைகளுக்கிடையே (Fineilspitze அண்ட் Similaun) உள்ள ஹாச்லாப்ஜூ (Hauslabjoch ) என்னும் இடத்தில் ஓட்சி பள்ளத்தாக்கில் கிடந்திருக்கிறான் இந்தப் பனி மனிதன். இந்தப் பகுதியில் ஓட்சி பள்ளத்தாக்கின் ஓரங்களை அலங்கரிக்க அடுக்கி வைத்தது போல வரிசையான ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள் காணப்படுகின்றன. அங்கே ஓட்சி ஆல்ப்ஸ் பள்ளத்தாக்கில் இன்(Inn River) நதியில், பனிப்பாளங்களுக்கிடையே சொருகிக் கிடந்திருக்கிறான் இந்த மனிதன். இப்பகுதி ஆஸ்த்திரிய, இத்தாலிய எல்லையில் உள்ளது என்பதால், இது இரு நாடுகளுக்கும் சொந்தமானது. இதுவரை கிடைத்த ஐரோப்பிய மம்மிகளிலேயே இதுதான் நன்கு இயற்கையில் பதப்படுத்தப்பட்ட மனித மம்மியாகும்.
ஓட்சி பற்றிய புதிய உண்மைகள்..!
ராயல் சொசைடி இண்டர்பேசில்(Royal Society Interfece) என்ற அறிவியல் பத்திரிகையில் 2012, மே முதல் நாள் ஓட்சி பற்றிய புதிய கண்டுபிடிப்புத் தகவல் வந்துள்ளது. அதுதான் ஒட்சியின் இறப்பு பற்றிய தெளிவான கதையை விலாவாரியாக நம் முன்னே விரித்து வைக்கிறது. அவன் நல்ல ஆரோக்கியமான உடல் நிலையில் இருந்திருக்கிறான்; அவன் இறப்பதற்கு முன் தானிய ரொட்டியையும், சிவப்பு மானின் இறைச்சியையும் உண்டிருக்கிறான். அவன் ஏன் இறந்தான் என்பதன் காரணமும் கூட கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஒரு அம்பு அவனது தோளில் இறங்கி, அங்குள்ள தமனியை ஊடுருவிச் சென்றதன் விளைவால் இறப்பு நிகழ்ந்திருக்கிறது.
ஆல்பர்ட் ஜின்க் & குழுவும் கண்டறிந்த ஓட்சியின் இரத்தம்..!
iceman_mummy_390போஜென்/போயசனோவின் ஐரோப்பிய அகாடமியின் மனிதவியல் துறை தலைவரும், இத்தாலிய மனிதவியலாளரும், ஆய்வாளருமான ஆல்பர்ட் ஜின்க் (Albert Zink,)தான் ஓட்சி பற்றிய உண்மைகளைக் கண்டறிந்தவர். அவர் நழுவும் நிலையிலுள்ள இரத்த செல்கள் (elusive cells) பற்றி ஆய்வு செய்து அதிசயங்களைப் பகிர்ந்தவர். அவரின் கூற்றாவது: உண்மையிலேயே எங்களுக்கு இது ரொம்ப ரொம்ப ஆச்சரியமாய்ப் போய்விட்டது. ஏனெனில் நாங்கள் அங்கே முழுமையான சிவப்பணுவைப் பார்ப்போம் என்று கற்பனையிலும் கருதவில்லை. நாங்கள் நிஜமாகவே, அங்கே ஏதாவது சுருங்கிய அல்லது சிதைந்த ஓரிரு சிவப்பணுக்கள் இருக்கும் என்றுதான் நம்பி இருந்தோம். ஆனால் அங்கே, நவீன கால மாதிரி /சாம்பிள் போல அதே பரிமாணத்துடன், சிவப்பணுக்கள் முழுமையாகக் கிடைத்தன. எங்கள் கண்களை எங்களால் நம்பவே முடியவில்லை," என்று சொல்கிறார்.
ஆல்பர்ட் ஜின்க்கும் அவரது குழுவினரும் ஒட்சியின் தோள் காயத்திலிருந்து திசு மாதிரிகளை எடுத்தனர். அது போலவே, அவனின் வலது கைக்காயத்திலிருந்தும் திசு மாதிரிகள் எடுத்தனர். வெறும் சாதாரண உருப்பெருக்கி கொண்டு பார்த்தபோதே, அவை வட்ட வடிவ சிவப்பணுக்கள் போலவே காணப்பட்டன. ஜின்க் இது கட்டாயமாய் இறந்த மனிதனின் சிவப்பணுக்கள்தான் என்று உறுதியாய் நம்பினார். மேலும் இது தொடர்பான நவீன தொழில்நுட்ப அளவிலான ஆராய்ச்சிகள் செய்யவும் விரும்பினர்.
ஆராய்ச்சியாளர்கள் அணு அழுத்த உருப்பெருக்கி (an atomic force microscope) என்ற நவீன சாதனம் மூலம் இரத்த திசுக்களைப் பார்த்தனர். அது ஒரு பொருளைப் பார்ப்பதைவிட, அதனை ("feeling" )உணரவே செய்யும் தன்மை கொண்ட கருவி அது. இந்தக் கருவி உள்ளே நுழைந்து ஊடுருவித் தேடிப் பார்ப்பது, ஓர் ஒலித்தட்டின் மேல் ஓர் ஊசி ஓடுவதைப் போலிருக்கும். அந்த சாதனம் ஒரு பொருளின் உருவரை பரப்புகளில் மேலும், கீழும் குதித்து ஊடுருவும். அதிலிருக்கும் லேசர் ஒரு நொடியின் பல துணுக்குக்களையும் கூட விடாமல், அதன் ஒவ்வொரு சிறிய நகர்வையும் அளக்கும். இதன் மூலம் அந்தப் பொருளின் முப்பரிமாண அளவுகளை அப்படியே அச்செடுத்துவிடும். இந்த நடைமுறைகளில் புதிரான ஓட்சியின் உடல் பொருட்களிலிருந்து ஆச்சரியப்படத்தக்க படங்கள் கிடைத்தன. அதுதான் வட்ட வடிவமான உருவங்கள். உண்மையிலேயே சிவப்பணுக்கள்தான்.
ஓட்சியின் சிவப்பணுக்களும், இன்றைய சிவப்பணுவும்..!
ஓட்சியின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட சிவப்பணுக்கள் இப்போதுள்ள நமது சிவப்பணுக்களின் அளவையும் உருவையும் பெற்றுள்ளன. சின்ன மாவு உருண்டையை பரோட்டாவுக்கு அமுக்கி வைப்பது போன்ற தோற்றத்துடன் இருக்கின்றன. அதன் பரிமாணமும் கூட, இன்றுள்ள செல்களின் அளவே. ஓட்சி 5,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து கொண்டு, இபெக்ஸ் மற்றும் மானின் இறைச்சியை உண்டு, ஆல்ப்ஸ் மலைகளில் ஏறி இறங்கித் திரிந்திருக்கிறான். 1991ல் அவனைக் கண்டுபிடித்தபோது, அவனது இரத்தக் குழாய்களில் இரத்தம் இல்லை. ஓட்சி இறந்து வெகு காலமாகி விட்டபடியால், அவன் உடம்பிலிருந்த இரத்தம் தோள் காயத்தின் வழியே முழுதும் வடிந்திருக்கலாம் அல்லது அவனது இரத்தம் கால ஓட்டத்தில் உருமாறி அழிந்து போயிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதினர். இருப்பினும் அம்பு சொருகி காயம் பட்ட தோள் பகுதி மற்றும் வலக்கையின் காயம் என இரண்டு இடங்களையும் விஞ்ஞானிகள் பெரிது பண்ணிப் பார்த்தனர். இரத்தக் கட்டு /இரத்தத் திசு எதுவும் அப்போது தென்படவில்லை. இருப்பினும் வன்முறையாய் அம்புத் தாக்குதல் மற்றும் மற்ற காயங்களால் இறப்பைத் தழுவிய அந்த மனிதனின் காயத்தை வேறு செயல்கள் மூலம் ஆராய்ந்தனர். இரத்தக் குழாய்களைத் திறந்தபோதும் கூட ஒரு துளி இரத்தத் துணுக்கு கூட இல்லை. இரத்தம் பதப்படுத்தப் படவில்லை/பாதுகாக்கப்படவில்லை என்றே எண்ணினார். இருப்பினும், நானோ கருவி (Nano probe) கொண்டு தேடியபோதுதான் அம்பு தைத்த இடம் மற்றும் வலது கையின் வெட்டில் முழுமையான சிவப்பணுவின் பரிமாணம் கிடைத்தது. நானோ கருவியின் ஒவ்வொரு நிமிட தேடலும் பதிவு செய்யப்பட்டது. அதன் ஸ்கேன் படிவம், பனி மனிதனின் இரத்த சிவப்பணு , தற்போதைய நவீன மனிதனுடையதைப் போலவே இருந்ததும் ஆச்சரியத்துடன் கண்டறியப்பட்டது .
கொலையுண்ட பனி மனிதன்..!
பனிமனிதனின் இறப்பு என்பது ஏதோ இயற்கையில் நிகழ்ந்தது அல்ல. இவன் ஆட்டிடையன், தெய்வத்திற்குப் பலி கொடுக்கப்பட்டவன், என்றெல்லாம் விஞ்ஞானிகள் கருதினர். ஆனால் இப்போது அவன் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. பனிமனிதனின் உடலை வைத்தே அவனது வாழ்க்கை முறைகளைக் கணித்துள்ளனர் விஞ்ஞானிகள். அவனுடன் இருந்த மதிப்பு மிக்க தாமிர பட்டை கொண்ட கோடரி இருந்ததை வைத்து, அவன் உயர்ந்த சமூக அந்தஸ்துள்ளவனாக இருந்திருக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர். அவன் தன் பயணத்தின் போது மூன்று அடுக்குகள் கொண்ட உடைகளைப் போட்டிருந்தான்; எனவே அப்போது மிகுந்த குளிர் இருந்திருப்பது தெரிகிறது. அவனது கால் ஷூக்கள் அழுத்தமாக, கடினமாக இருந்தன. அதன் அடிப்பகுதி கரடியின் தோலினால் ஆனது; அவன் கூர்மையான பழக்கப்பட்ட கல் கத்தியை வைத்திருந்தான். அவனுக்கு நெருப்பை உண்டாக்கத் தெரிந்திருந்தது. நெருப்பு உண்டாக்கும் கருவிகள் கொண்ட ஒரு பையும் இடுப்பில் கட்டி வைத்திருந்தான். மேப்பிள் (Mapple) இலைகளால் சுற்றப்பட்ட சாம்பல் மற்றும் கங்குகளையும் பிரீச் பட்டையில் (பிர்ச்பர்க்) வைத்திருந்தான். அவன் முழுமையான கவசம் போன்ற உடை அணிந்திருக்க வேண்டும் என்றே நம்பினர். அவன் உடலில் தைத்த அம்பு அவ்வளவாய் கூர்மை இல்லை. அவனை ஒரு பசுமரத்தின் கூர்மையான பெரிய தண்டு கொண்டு அம்பினால் பலமாய்த் தாக்கி உள்ளனர். அதனால் பெரிய காயம் ஏற்பட்டு அதில் இரத்தம் வழிந்து, வடிந்து, மயக்கம் போட்டு பின்னர் இறந்திருக்கிறான்.
இரத்த பைபிரின் சொல்லும் உண்மைக் கதை..!
ஓட்சியின் இரத்த செல்களுடன், அதன் அருகிலேயே பைபிரினும் (Fibrin) காணப்பட்டது. எந்த இடத்தில் அம்பு குத்தி உள்ளே இறங்கியதோ அந்த அம்பு முனை பட்ட இடத்தில்தான் பைபிரின் இருந்தது. பைபிரின் என்பது இரத்தம் உறைவதற்கான புரதம். இந்த பைபிரின் துணுக்கு, நமக்கு ஓர் அருமையான உண்மையை நம் முன்னே பிட்டு வைக்கிறது. அதுதான் காயம் பட்டவுடனேயே அவன் இறக்கவில்லை என்பதே. ஏனெனில் பைபிரின் புதிதாக ஏற்பட்ட காயத்தில்தான் உருவாகும், பின்னர் சிதைந்துவிடும். அதன் பின் ஆராய்ச்சியாளர்கள் அந்த இரத்த செல்களில், கடந்த காலங்களில் மூலக்கூறு அமைப்பில் என்னென்ன மாற்றங்கள் நடந்துள்ளன என்றும், அதிலுள்ள நீர் இழப்பு மற்றும் வயது மூலம் தெளிவாக அறியலாம் என்று தெரிவிக்கின்றனர். இம்முறை மூலம் எதிர்காலத்தில் தடயவியல் துறைக்கு பல குற்றங்களைத் துலக்க உதவி செய்யும். இதற்காக ஆய்வாளர்கள் ராமன் Spectroscopy (Raman spectroscopy) யைப் பயன்படுத்தினர்.
மற்ற ஆய்வாளர்கள் பழங்கால கற்கால கருவிகளில் இரத்தம் அறிய ஆராய முயற்சி செய்யும்போது, இந்த பனிமனிதனின் இரத்த சான்று நேரிடையாக நின்று மனிதவியல் துறைக்கு பெரிதும் உதவுகிறது. அவன் அம்பால் குத்துப்பட்டும் கூட பல மணி நேரம் அல்லது சில் நாட்கள் இறக்காமல் இருந்திருக்கிறான். அவன் தோள்பட்டையில் உள்ள இரத்த தமனி அறுபட்டு, அதிகமாக இரத்தம் வடிந்து, இதயம் இயங்க மறுத்து மரணித்திருக்கலாம் என்றும் சொல்கின்றனர் ஆய்வாளர்கள். .
அவனது முதுகில் அம்பின் தலை குத்திக் கிடக்கிறது. அது 6.5 செ.மீ ஆழமான காயத்தை உண்டு பண்ணியுள்ளது. அவன் அந்த இடத்தைச் சுற்றி சுமார் 65 கி.மீ சுற்றளவில் மட்டுமே சுற்றி வந்திருக்கிறான் என்றும் இப்போது தெரிவிக்கின்றனர்.
இந்தப் பனி மனிதனின் உடைமைகள் மற்றும் துணிகளின் தன்மை மூலம், அன்றைய புதிய கற்கால மனிதன் ஐரோப்பாவில் என்ன மாதிரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தான் என்பதை கணிக்க உதவுகிறது.
அவன் மிகவும் பிரபலமான நமது நாகரிகத்தின் பகுதியாக இருந்தான்.
அந்தக் காலத்திய மனிதர்களை விட, ஓட்சியின் உடல் நல்ல உடல் நிலை திடகாத்திரத்துடன் இருந்தது என்பதே.
அவனை முழுதும் ஆராய்ந்த விஞ்ஞானிகள் அவன் 5 அடி , 2.5 அங்குலம் இருந்தான் என்று கணிக்கின்றனர். அவன் இறந்த பிறகு, உடலின் உயரம் சில அங்குலங்கள் குறைந்திருக்கலாம். இறப்பு நிகழும்போது அவனது எடை 110 பவுண்டுகள். ஆனால் இப்போதுள்ள மம்மியின் எடை வெறும் 29 பவுண்டுகள் மட்டுமே.
பனி மனிதன் இறக்கும்போது அவனுக்கு வயது 46. பொதுவாக அந்தக் காலத்தில் இந்த வயது வரை வாழ்ந்ததில்லை.
பனி மனிதனுக்கு ஏராளமான பிரச்சினைகள் இருந்ததாகவும் அறியப்படுகிறது. அவனது பெருங்குடலில், கொக்கிப் புழுவின் முட்டைகள் இருந்தன. அதாவது அவனுக்கு வயிற்றுப் பிரச்சினைகள் இருந்தன. அதனால் அவனுக்கு வயிற்றுப்போக்கும் இருந்திருக்கிறது. அவனுக்கு ஆர்த்திரிடிஸ் என்னும் கீல் வாதம் இருந்திருக்கிறது.
அவனது வலது கால் மற்றும் முதுகெலும்பு போன்ற இடங்களில் பச்சை குத்தியது போன்ற தழும்புகள் உள்ளன். இவை அவன் கீல் வாத நோயிலிருந்து விடுபட எடுத்துக் கொண்ட துவக்க சிகிச்சை என்றே கணிக்கப்படுகிறது.
அவனது உடைகளில் இரண்டு பூச்சிகள் இருந்தன. அவனது இடது இடுப்பு எலும்பு, அவனது வயதான தன்மையையும், அங்கே ஏற்பட்ட சின்ன எலும்பு முறிவையும் காட்டுகிறது. அவனது விலா மற்றும் மூக்கு எலும்புகள் உடைந்துள்ளன
அவன் இறப்பதற்கு முன், கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்தான் என்பதை அவனது கை நகங்கள் காண்பிக்கின்றன.
அவனது நுரையீரல் புகையினைச் சுவாசித்ததால் நிறம் மாறி இருந்தன. அவனின் இரைப்பையில் பார்லி, மாமிசம் மற்றும் தானியங்கள் இருந்தன. இவைதான் ஓட்சி உண்ட இவனது கடைசி உணவு என்பதைக் காட்டுகிறது.
அவன் வயிற்றில் மஞ்சள் மகரந்தம் காணப்பட்டது. அவன் ஓடையிலிருந்து நீர் குடிக்கும்போது விழுந்திருக்கலாம்.
அவனுக்கு பல் வியாதி எதுவும் இல்லை. அவன் உடம்பில் 12வது விலா எலும்பைக் காணோம். அவனது தோல் முழுவதும் பனியில் கிடந்து உரிந்து விட்டது.
தலை முழுவதும் முன்பு அடர்த்தியாக முடி இருந்திருக்கிறது. அதுவும் பனியில் கிடந்ததால் முழுமையாக உரிந்துவிட்டது.
அவனது இடுப்பு எலும்பிலிருந்து திசுக்களை எடுத்து DNA வை அறிந்து, அவனது முழு ஜீனோம் (Genome) வரையப்பட்டுவிட்டது.
பனி மனிதனின் DNA அமைப்பு, அவனது சில குணாதியங்களை நமக்கு எடுத்து இயம்புகிறது.
அவை:
பனி மனிதனுக்கு பழுப்பு வண்ணக் கண்கள் இருந்தன.
அவனது இரத்தம் ஓ ("O" group)பிரிவைச் சேர்ந்தது.
அதுவும் rh+ (Rhesus positive )வகை இரத்தம்தான்.
அவனுக்கு பால், சர்க்கரை சேராது.
இனறைய கோர்சிகன்கள் அல்லது சார்டினியான்கள் போன்றவர்களின் இனத்தைச் சேர்ந்தவன் இவன். இவர்கள்தான் பனி மனிதன் உடம்பு கிடைத்த இடத்தின் அருகில் ஆல்ப்ஸ் மலையில் வாழ்பவர்கள்.
மனித சமுதாயம் கண்டறிந்தவைகளில் இதுதான் உலகின் முதல் கொலையும், முதல் மனித இரத்தமும்.

உலகின் தீரா மர்மங்கள் - ஸ்டோன் ஹென்ஜ்

உலகின் தீரா மர்மங்கள் -
ஸ்டோன் ஹென்ஜ்

உலகின் தீரா மர்மங்களில் ஸ்டோன் ஹென்ஜ் முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. தோராயமாக இதன் வயதை 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கணித்திருக்கிறார்கள். இன்றைய பிரிட்டனின் மிகப்பழமையான புராதனச்சின்னங்களில் இதுதான் முதலிடம் என்பது கூடுதல் சிறப்பு. ஸ்டோன் ஹென்ஜ் பார்க்க எண்ணி பயணீத்தீர்களேயானால், ஒரு சில மலைகளைத் தாண்டிச் செல்லும் பயணத்தில் திடீரென இந்த அமானுஷ்ய இடத்துக்குள் நுழைவீர்கள். இந்த இடத்தின் மயான அமைதியும், வீசும் வித்தியாசமான காற்றும் உங்களுக்குள் ஒரு மர்மத்தாக்கத்தை நிச்சயம்
உண்டாக்கும். இது உருவாக்கப்பட்ட விதமாக ஆராய்ச்சியாளர்களால் கணிக்கப்பட்ட தகவல்கள் இதுதான்…

1) முதலில் கி.மு.3100ம் ஆண்டில் மதச்சடங்குகளுக்காக தொடர் பள்ளங்கள்
தோண்டப்பட்டிருக்கின்றன.

2) அதன் பின்னர் ஆயிரம் ஆண்டுகள் கழித்துதான் இந்த கல் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. வேல்ஸ் மலையிலிருந்து பெரிய பெரிய
கருங்கற்கள் கிட்டத்தட்ட 240மைல் தொலைவுக்கு எடுத்துவரப்பட்டிருக்கிறது.
சக்கரம் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில் எதற்காக, யாரால், எப்படி இந்தக் கற்கள் இவ்வளவு தூரம் எடுத்து வரப்பட்டிருக்கும் என்பது மர்மமே. இவ்வாறு எடுத்து வரப்பட்ட கற்கள் முற்றுபெறாத ஒரு இரட்டை வட்ட வடிவில் மிட்சம்மர் சூரிய உதயத்திற்கு அலைன்மெண்ட் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கிறது.

3) இதன் முன்னர் மூன்றாவது நிலையாக கி.மு.2000வது ஆண்டில் மேலும் சில கற்கள் 25மைல்களுக்கு அப்பால் உள்ள இடத்திலிருந்து எடுத்துவரப்பட்டிருக்கிறது
.
4) இதன் பின்னர் மேலும் 500 ஆண்டுகளுக்குப் பிறகு யாரோ ஒரு சிலரால் இன்றைய குதிரைக் குளம்பு போன்ற வட்டவடிவத்தில் இந்தக்கற்கள்
மறுஒழுங்கு செய்யப்பட்டு அடுக்கப்பட்டிருக்கிறது. இன்று வரையிலும் இந்தக்கற்கள் அடுக்கப்பட்டிருப்பதன் அர்த்தம் எந்தவொரு முடிவையும் எட்டவில்லை. இது ஒரு வழிபாட்டுத்தலம், வானவெளி சம்பந்தப்பட்ட காலண்டர், சுடுகாட்டு மயானம் என்று விதவிதமான கதைகள் திரிந்தாலும் இது இன்னமும் தீர்க்கப்படாத ஒரு மர்மம்தான்!!!

சேலம் மாடர்ன் தியேட்டர் இப்போது...!

சமீபத்தில் ஒரு வேலை நிமித்தமாக சேலம் செல்ல நேரிட்டது. நகரத்தை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வந்ததில் ஏற்காடு செல்லும் வழியில், வலது பக்கமாக ‘தி மாடர்ன் தியேட்டர் லிட்’ என்று அரண்மனை முகப்பு தோற்றமுடைய ஒரு வளைவு மட்டும் தென்பட்டது.

அப்போது சட்டென நினைவுக்கு வந்தது, ‘ஆஹா...ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை, குறிப்பாக தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என அழைக்கப்பட்ட ஜெய்சங்கரை வைத்து பல துப்பறியும் மற்றும் க்ரைம் கதை படங்களை தயாரித்து வெளியிட்ட ஸ்டுடியோவாச்சே மார்டன் தியேட்டர்...இவ்வளவு தூரம் வந்துவிட்டோம், உள்ளே போய் பார்த்துவிடுவோம்' என எழுந்த ஆவலில் பேருந்தை நிறுத்தச் சொல்லி இறங்கிவிட்டேன்.

மாடர்ன் தியேட்டர் முகப்பை நோக்கி நடக்கும்போதே சிஐடி சங்கர்', வல்லவனுக்கு வல்லவன், இரு வல்லவர்கள், எதிரிகள் ஜாக்கிரதை, குமுதம், கைதி கண்ணாயிரம், வண்ணக்கிளி போன்ற மார்டன் தியேட்டர் தயாரிப்பில் வெளிவந்து ரசித்து பார்த்த படங்களின் காட்சிகள் மனத்திரையில் ஓடியது.

அந்த முகப்பு பகுதிக்கு சென்றால் ‘வழி அடைக்கப்பட்டுள்ளது’ என்கிற தகவலோடு தகர பலகை ஒன்று வரவேற்றது. அந்த முகப்பு சுவரை தவிர வேறு அடையாளங்கள் பின்பக்கம் இருப்பதாகவும் தெரியவில்லை. மேலும் அந்த வாசல் குப்பை கொட்டும் இடமாகவும், சிறுநீர் கழிக்கும் இடமாகவும் மாறியிருந்ததால் மேற்கொண்டு அந்த இடத்தில் நிற்கவும் முடியவில்லை. எதிரே இருந்த ஒரு வீட்டில் விசாரித்தால், "ஓ அதுவா...?கொஞ்சம் அந்த பக்கமா போனீங்கன்னா பெரிய கேட் வரும்; உள்ளே போய் பாருங்க!" என்று வலதுகையை காட்டி வழி சொன்னார்.

அவர் கை காட்டிய பக்கமாக சென்று பார்த்தால் பெரிய நுழைவு வாயில். அடுக்கு மாடி குடியிருப்புக்கான வாசல்போல தென்பட்டது. வாசலில் தடுத்து நிறுத்தினார் காவலாளி. ‘‘சார் அந்த பக்கம் மார்டன் தியேட்டர் என்று ஒரு அடையாளத்தைப் பார்த்தேன். வழி அடைக்கப்பட்டுள்ளது. அங்கு போக வழியுண்டா? என விசாரித்தேன். ‘நீங்க நின்னுகிட்டு இருக்குறதுகூட மார்டன் தியேட்டர் இருந்த இடம்தான்" என்றார். அதிர்ந்து விட்டேன்.

எதிரே பார்த்தால் கிட்டத்தட்ட பலநூறு தனித்தனி பங்களா வீடுகள். தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் உலாவி திரிந்த இடம், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மாதச்சம்பளத்துக்கு வேலைபார்த்த இடம், இன்று ரியல் எஸ்டேட் புரமோட்டர்கள் மூலம் மினி நகரமாக உருமாறியிருந்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் என பல மொழிகளிலும் சுமார் 150 க்கும்மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்த நிறுவனம். 1930லிருந்து 1935 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டங்களில் திரைப்பட தயாரிப்பில் இறங்கிய இந்த நிறுவனத்தின் முதல் வெற்றிப்படம் 'நல்லதங்காள்'. பிறகு தொடர்ச்சியாக பல வெற்றிப்படங்கள்.

1982 வரை மார்டன் தியேட்டர் சினிமா கம்பெனி மூலம் படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

அதற்கு பிறகும் கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து 1999 ல் மம்முட்டி நடித்த 'ஜனநாயகம்' என்கிற படத்தின் படப்பிடிப்பு இங்கு நடந்துள்ளதாக சொல்கிறார்கள் திரைப்பட ஆர்வலர்கள்.

தமிழ் சினிமாவின் முதன் இரட்டை வேட படமான உத்தமபுத்திரன் (1940), முதல் கலர் படமான அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956) மலையாளத்தில் முதல் பேசும்படமான பாலம் (1938) மற்றும் தமிழின் மிகப்பெரிய வெற்றிப்படமான மனேகரா போன்ற பல திரைப்படங்கள் மாடர்ன் தியேட்டரால் எடுக்கப்பட்ட காலத்தால் அழியாத காவியங்கள். நமது ‘ஜேம்ஸ்பாண்ட்’ ஜெய்சங்கர், மார்டன் தியேட்டரின் ஆஸ்தான நடிகராக இருந்த காலங்களும், முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு. கருணாநிதி மார்டன் தியேட்டரில் மாத சம்பளத்துக்கு கதை வசனம் எழுதியதும், கவிஞர் கண்ணதாசன் இங்கு மாத சம்பளத்துக்கு பாடல்கள் எழுதியதாகவும் இருக்கிறது வரலாறு. இந்த ஸ்டூடியோ மூலம் யானை, சிங்கங்களை வைத்து சாண்டோ சின்னப்பா தேவரும் பல படங்களை எடுத்திருக்கிறார். .

இங்கிலாந்தில் படித்த டி.ஆர்.சுந்தரத்தால் ஆரம்பிக்கப்பட்ட மார்டன் தியேட்டர் கம்பெனி கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன்,

ஜி.ராமநாதன், மற்றும் ஆந்திர திரை துறையின் பல வெற்றியாளர்களை உருவாக்கியதும், ஊக்கப்படுத்தியது வரலாற்றுப் பதிவுகள்.

1963 ல் டி.ஆர்.சுந்தரம் மறைந்த பிறகு அவரது மகன் ராம சுந்தரம் அதை தொடந்து நடத்திய நிலையில், ஜெய்சங்கரை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தது மார்டன் தியேட்டர். 60 களின் இறுதியில் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் முழுவதுமாக சென்னை ஸ்டுடியோக்களுக்கு இடம்பெயர்ந்து, பின்னர் ஸ்டுடியோக்களிலிருந்து கிராமங்களுக்கு இடம்பெயர, மார்டன் தியேட்டர் ஸ்டுடியோவில், படப்பிடிப்பு மட்டுமல்லாது பட தயாரிப்பும் நின்றுபோனது.

இன்று மார்டன் தியேட்டர் அதன் அனைத்து சுவடுகளையும் இழந்து, முகப்பை மட்டுமே தாங்கி நிற்கிறது. எல்லாத்தையும் கடந்துபோகச் செய்துவிடும் காலத்தால், மனதில் தேங்கிப்போன நினைவுகளை விரட்ட முடிவதில்லை...அந்த நினைவுகள் தந்த ஏக்கத்துடன் மார்டன் தியேட்டர் முகப்பை பார்த்துக்கொண்டிருக்கையில், " சார் கொஞ்சம் தள்ளிக்கிறீங்களா...?" எனக் கேட்டு விட்டுவிட்டு பதிலை எதிர்பாராமல், கம்பெனியின் பழைய வாசலில் மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை குவித்து தீ வைத்துக்கொண்டிருந்தனர். எரிந்த குப்பை எதையோ உணர்த்தியது.
                                                                                                         -Source from vikatan