ஒரு போராளி இரு போராட்டத்தை எதிர்கொண்டான்
காந்தியவாசிகளின் அஹிம்சா பற்றையும் வெள்ளையினத்தின்
அடிமையாக்கும் அடிமை பற்றையும் !!!!!
சொந்தநாட்டிலே இரு துருவங்களை கையாண்ட
பெருமைக்குரியவன் !!!!
ஜான்சி ராணி இயக்கத்தை உருவாக்கி பெண்ணின போராளிகளை
உருவாக்கிய முதல் தலைவன் இவன் !!!!
ஆத்திரக்காரர் என்று சொன்ன அஹிம்சைக்கும், பதற்றகாரர்
என்று சொன்ன முதல் பாரத பிரதமருக்கும் தான் ஒரு
போராட்ட சரித்திரத்தை தோற்றுவிக்கும் பாத்திரக்காரர்
என்பதை நிருபித்தவர் !!!!
ஹிட்லர் போன்றவன் இந்தியாவில் நுழைந்திருந்தால்
காற்றில் பறந்திருக்கும் காந்திய கொள்கை !!!!
இன்றுவரை இந்தியாவின் மனம் குன்றிய வீழ்ச்சிக்கு இந்த
திணிக்கப்பட்ட அஹிம்சைதான் காரணம் !!!!!
அஹிம்சையை பின்பற்றும் நாட்டில் எதற்கு இன்றுவரை லத்தியேந்திய
காவலர்கள் -மாடு மேய்பவர்கள் போல
இந்தியா அஹிம்சை நாடு என்பதை விடவும் , தர்மத்திற்காய் எதையும்
செய்திடும் நாடு என்பதில்தான் பெருமிதம் அடங்கியுள்ளது -அதனை
நிரூபிக்க போரடிய மகத்தான வீரன் !!!!
தர்ம போராட்டத்தில் வெற்றியடைய ரத்தம் சிந்துவது என்று
முடிவெடுத்துவிட்டால் முதலில் சிந்துவது எதிரியின்
ரத்தமாக இருக்கட்டும் -இதுதான் சுபாஷின் மூச்சுகாற்றில்
வெளிவந்த புரட்சி முழக்கம் !!!!
அதர்மத்தை அடிபணியவைக்க அஹிம்சை ஒருபக்கமும்
ஆயுதம் மறுபக்கமும் அணிவகுத்து அவனியிலே
சுதந்திர இந்தியா தலைநிமிரட்டும் -என்றவனின்
சிந்தனை இன்னும் பலமாக பலரின் நெஞ்சத்தில்
சூடான ரதத்தை சுழற்றியவாறு இயங்கி கொண்டுதானிருக்கிறது !!!!!
போராளியின் வாழ்கையில் மரணம் மண்டியிட்டு பின் தொடரும் !!!!
ஆனால் அஹிம்சை ஏந்தியும் அதே சமயம் ஆயுதம்
ஏந்தியும் போராடும் இவன் போன்ற போராளிக்கு முன்னால்
மரணமும் குழப்பதொடு தனது தோல்வியை ஒப்புக் கொள்ளும் !!!!
அப்படி, மரணத்தால் தோல்வியை ஒப்புக்கொள்ள வைத்த
ஒரே வீரன் சந்திரனை ஒரு நாசியிலும் சூரியனை மறு நாசியிலும்
சுவாசித்த சுபாஷ் சந்திர போஸ் எனும் தீரன் !!!!
இந்த போராளியின் வெற்றிச்சலனம் இன்னும் இந்திய
தாயின் கர்ப்பத்தில் - தான் ஜனிக்க போகும் நாட்களை எண்ணியவாறு
வளர்ந்து வருகிறது !!!!
ஜனித்திடும் நாளில் எனது இந்தியாவிடம் அவசியமான ஆவேசமும்
அடிமைதனமற்ற அஹிம்சையும் அடுத்தடுத்த பக்கத்தில்
அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்துகொண்டிருக்கும் !!!!
மாபெரும் போராளியை இந்தியா நியாபகத்தில் கொள்ளாத வரை - அடிமைத்தனமும் அநீதிகளும் ,அடுத்தவனின் நாட்டில்
கையேந்தும் ஈனமும் இம்மண்ணில் ஓயாது,தலை சாயாது !!!!!
இறுதிகட்ட உரையென்று இவனுக்கில்லை ,காரணம் இறுதிவரை இவன் எங்கிருந்தான் இறந்தானா அல்லது இருந்தானா இன்றுவரை தனதிறப்பை சர்ச்சையில் வைத்திருக்கும் சாகாகலை அறிந்த
சரித்திர நாயகன் !!!
//நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவானில், ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்ட தினம் இன்று./