Thursday, April 11, 2013

பிட்டுக்கு மண் சுமந்த கடவுள்....





''வைகையாற்றில் வெள்ளம் கரை புரண்டோடிய நேரம். அதனால் ஆற்றின் கரையை அடைக்க வீட்டுக்கு ஒருவர் வரவேண்டும் என அரசர் ஆணையிட இறை பற்றுக் கொண்ட பிட்டு விற்கும் கிழவி தனக்கு ஆள் இல்லையே என வருத்தமடைந்தாள்.

இதையடுத்து இறைவனே கூலி ஆளாக வந்து, பிட்டு தந்தால் மண் சுமப்பதாகக் கூறி அக்கிழவி சார்பில் கூலியாளாகச் சென்றார். ஆனால், சரிவர வேலைசெய்யாமல் அங்கு கூலியாள் தூங்குவதைக் கண்ட அரசன், பிரம்பால் கூலியாளை முதுகில் அடித்தார்.

அப்போது அரசருக்கே முதுகில் பிரம்படிபட்டது போல வலித்தது. இதன் பிறகே, கூலியாளாக வந்தவர் இறைவன் என்பதை உணர்ந்த அரசர் இறைவனை வணங்கினார். அப்போது, அக்கிழவியை வாழ்த்திய இறைவன், மாணிக்கவாசகர் பெருமையையும் கூறி அருளியதாகப் புராணம்.''

இது உண்மையா? பொய்யா? என்று ஆராய்வதை விட, இதில் இருக்கும் கருத்துகளை நாம் ஏற்றுக் கொள்ள தவறக் கூடாது. இது போன்ற கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவமே தலைச்சிறந்த ஒன்றாகும்.

கூலியாட்களை அடிமையாக நடத்தும் அரசர்களுக்குப் பாடம் புகட்ட, அதுமட்டுமல்ல ஒரு நாட்டை ஆளும் பெரிய பதவியில் உள்ளவர்கள் தன் மக்களின் வயிற்றில் அடித்தால்.. இறுதியில் அது அவர்களுக்கே வினையாக வந்து முடியும் என்பதையே இந்த கதை எடுத்துக் காட்டுகிறது. இப்போது இருக்கும் சூழலில் இக்கதை ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

Wednesday, April 10, 2013

TAMIL











தமிழைப் பலரும் இன்று பலவிதமாகப் பேசுகிறார்கள். உண்மையில், உண்மைக்காக ஆராய்ந்தவர்கள் மிகச் சிலரே ஆவர். அவர் ஆராயாது கூறியதை, இவர் ஆராயாது கூறியதைச் சற்று மாற்றிக் கூறி வருகின்றனர். தமிழின் வயது 2000 ஆண்டு 3000 ஆண்டு என ஏலம் போட்டு வருகின்றனர்.




பல சுனாமிகள் தோன்றி குமரிக் கண்டத்தைச் சிறிது சிறிதாகச் சிதைத்து வந்தன. ஒவ்வொரு 10,000 ஆண்டுகளிலும் ஒரு பெரிய சுனாமி தோன்றியதாக ஆய்வறிஞர்கள் கூறி வருகின்றனர். இதனால் சில இலட்சம் மக்கள் மடிந்தனர். ஆனால், மிகச் சிறிதளவு நிலப்பகுதியே அழிந்தது.ஆனால் கடற்கோள் என்பது கி.மு.10,000 அளவில் தோன்றி கி.மு. 8,000 அளவு நீண்ட காலம் நடந்தது. இதனை மேலை நாட்டு ஆய்வாளர்கள் பெரும்பனிக்காலம் ( THE GREAT ICE-AGE ) என்கின்றனர்.இதன் காரணமாகவே குமரிக் கண்டம் முற்றிலுமாகவே அழிந்தது.

முதல் பெருஞ்சுனாமி கி.மு. 60,000 ஆண்டுகளை ஒட்டி நிகழ்ந்ததாக ஆய்வறிஞர்கள் கூறினார்கள். இதற்கு அஞ்சியே குமரிக் கண்டத் தமிழர்கள் கட்டுமரங்களில் ஏறி ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆசிய கண்டங்களுக்குக் குடியேறினர். இதனால் அந்தக் கண்டத்து இன்றைய மக்களிடம் திரியாத தமிழ்ச் சொற்களும், திரிந்த தமிழ்ச் சொற்களும் பற்பல இலக்கணக் கூறுகளும் இன்றும் அழியாத நிலையில் உள்ளன.

.ஆஸ்திரேலியப் பழங்குடிகள்

நீ...நீங்கள் என்பதை, நீ, நிங்க என்கின்றனர். நான், நாம் ( நாங்கள் ) என்பதை நா, நாங்க என்கின்றனர். கண் ஐம்புலன்களில் சிறந்த தலையாய புலன் என்பதால், அதனை புலன் என்கின்றனர்.

என் கண் - நா புலன், உன் கண் - நின் புலன், அவன் கண் - அவன் புலன் என்கின்றனர். பிரதி பெயர்கள் நாடு விட்டு நாடு போகாது. மேலும் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் கடந்த 50,000 - 30,000 ஆண்டுகளை ஒட்டியோ அல்லது அதன் பின்னரோ தமிழகத்துடன் தொடர்பு இல்லை.

ஆப்பிரிக்கப் பழங்குடிகள்

எள் + நெய் என்பதுதான் எண்ணேய் ஆயிற்று. எனவே OIL என்ற சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல் நெய் என்பதே ஆகும். தமிழகத்தில் நெய் என்ற சொல் பசுவின் நெய் என்றாகிறது. ஆனால், ஆப்பிரிக்காவின் வழக்கு மொழிகளில் நெய் என்பதே ஆயில். உண் என்ர வினைச் சொல் எகிப்து மொழியில் 4000 ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது.

தென் அமெரிக்கத் தமிழர்

அன்னை என்ற அருமையான அற்புதத் தமிழ்ச் சொல், தென் அமெரிக்காவில் ஒரு மொழியான இன்கா மொழியில் உள்ளது. சரி என்று நாம் கூறுவதைம் அவர்கள் கரி ( ச = க ) என்கின்றனர். நம் பயிர் பச்சைகளுக்குக் கடவுளாகப் பச்சை அம்மன் என்று நாம் கூறுவதைப் போல், அவர்களும் தம் பயிர்க் கடவுளாகப் பச்சை அம்மன் என்றே வைத்துள்ளனர். 60,000 - 50,000 ஆண்டுகளாக நமக்கும் தென் அமெரிக்காவின் பல குடி மக்களுக்கும் தொடர்பு எதுவும் இருந்ததில்லை.

எனவே 60,000 ஆண்டுகளுக்கு மு8ன்னரே தமிழ் செம்மையான செம்மொழியாக இருந்தது என்றால் தமிழின் வயது ( 1,00,000 ) ஓர் இலட்சம் ஆண்டுகள் என்று கணிக்கலாம். வெறும் சொல் ஆராய்ச்சிச் சான்றுகள் மட்டுமில்லை; கரி, அணு ஆய்வுகளும் ஆண்டுக் கணக்கை உறுதி செய்கின்றன

Monday, April 8, 2013

"ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி"




ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விஷயங்கள்:

1) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற மனைவி,

4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்..

இவர்களை கொண்டிருப்பவன், அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும்.

Wednesday, April 3, 2013

கிராஜுவிட்டி தொகையை எவ்வாறு கணக்கிடுவது?



கிராஜுவிட்டி = கடைசியாக வாங்கிய சம்பளம் x 15/26 x பணியாற்றிய மொத்த ஆண்டுகள். இவ்வாறு கணக்கிட்டு அதில் கிடைக்கும் தொகை கிராஜுவிட்டியாக வழங்கப்படும். அதாவது 10000x15/26x10 = Rs 57,692 வழங்கப்படும்.


ஒரு சில காரணங்களுக்காக 5 வருடம் வேலை செய்த தொழிலாளிக்கு கிராஜுவிட்டி தொகையை வழங்க மறுக்கலாம். ஒருவேளை அந்த தொழிலாளி நிறுவனத்தின் சொத்துக்களுக்கோ அல்லது அங்குள்ள பொருள்களுக்கோ ஏதாவது சேதத்தை ஏற்படுத்தினால் அதைக் காரணம் காட்டி அவருக்கு கிராஜுவிட்டித் தொகைய வழங்காமல் இருக்கலாம்.

ஆகவே இந்த கிராஜுவிட்டித் தொகைய ஒரு தொழிலாளி பெற வேண்டும் என்றால் அவர் ஒரு நிறுவனத்தில் குறைந்தது 5 ஆண்டுகளாவது தொடர்ந்து வேலை செய்திருக்க வேண்டும். ஆனால் ஒரு வேளை 5 ஆண்டுகளுக்குள் ஒருவர் இறந்துவிட்டால் அவர் அந்த நிறுவனத்தில் 1 ஆண்டு முழுமையாக வேலை செய்திருந்தாலும் அவருக்கு அந்த கிராஜுவிட்டித் தொகை வழங்கப்படும். எனவே இந்த கிராஜுவிட்டித் தொகையை தொழிலாளிகளின் ஒரு வரப்பிரசாதம் என்றே அழைக்கலாம்.

பிரபஞ்ச ரகசியம்: 'கடவுள் துகள்' கண்டுபிடிப்பு!



ஜெனீவா: பிரபஞ்சம் உருவானது எப்படி என்ற ரகசியத்தை அவிழ்க்கிற விதத்தில், கடவுள் துகளை கண்டறிந்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது மிகப்பெரிய ரகசியமாகவே இருந்து வருகிறது. கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று ஆன்மிகம் சொல்கிறது.ஆனால் விஞ்ஞானம் அதைக் கொஞ்சம் மாற்றிச்சொல்கிறது. அணுக்களால் ஆனது உலகம் என்று.

13,750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு `பிக்-பேங்க்' எனப்படும் பெரு வெடிப்பின்போது வாயுக்கள் உருவாகி பின்னர் அதில் உள்ள அணுக்கள் ஒன்றிணைந்து பிரபஞ்சமும், அதில் உள்ள மற்ற பொருட்களும் உருவானதாக விஞ்ஞானம் கூறுகிறது.

எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் என்ற 3 உட்பொருட்களின் சேர்க்கைதான் அணு. இந்த அணுக்களின் சேர்க்கைதான் நாம் வாழுகிற பூமி,நம்மைச் சுற்றிலும் இருக்கிற டி.வி.,செல்போன்,மேஜை,நாற்காலி என வெவ்வேறு திடப்பொருட்களாக ஆகி உள்ளன.இவற்றைப் போலவே எல்லாம் ஒன்றிணைந்த இந்த பிரபஞ்சமும் அடிப்படையில் அணுக்களின் சேர்க்கைதான்.

இந்நிலையில், அணுக்களை சேர்க்கும் ஒட்டுப்பொருள் எது என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தது.

அணுக்களை ஒன்றோடு ஒன்று ஒட்டவைக்கும் பொருள் என்ன என்பதை கண்டுபிடித்தால்,பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதால், அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

அணுக்களை மிக வேகமாக ஒன்றுடன் ஒன்று மோதவிடுவதன் மூலம் பெரு வெடிப்பின் போது ஏற்பட்ட சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் அணுக்களின் ஒட்டுப்பொருள் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

இதற்காக பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே 574 அடி ஆழத்தில் 27 கிலோ மீட்டர் நீளம் உள்ள சுரங்கப்பாதை போன்று செர்ன் என்ற பெயரில் (அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய மையம்) ஒரு ஆராய்ச்சிக்கூடம் அமைத்து,உலக பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகள் ஒன்றுசேர்ந்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.

கடவுள் துகள்

இதில் அணுக்களின் ஒட்டுப்பொருள் 12 துகள்களின் சேர்க்கை என தெரியவந்தது. அதில் 11 துகள்கள் கண்டறியப்பட்டன.12-வது துகள் ஒன்று உண்டு என்று விஞ்ஞானி ஹிக்ஸ், 1964-ம் ஆண்டு கண்டுபிடித்தார். அது அவரது பெயரையும் இணைத்து ஹிக்ஸ் பாசன் துகள் என்று அழைக்கப்பட்டு வந்தாலும், அது கடவுள் துகள் என்று கூறப்படுகிறது.

இந்த கடவுள் துகளை கண்டறியும் முயற்சியில் ஜோ இன்கண்டேலா என்ற பிரசித்தி பெற்ற அணு விஞ்ஞானி தலைமையில், இரண்டு விஞ்ஞானிகள் குழுக்கள் இரவு பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த ஆராய்ச்சியின் முடிவில் இப்போது 'கடவுள் துகள்' எனப்படும் ஹிக்ஸ் பாசன் துகள் கண்டறியப்பட்டு விட்டது.

இது தொடர்பான அறிவிப்பை ஜெனீவாவில் திரளான விஞ்ஞானிகள் முன்னிலையில் விஞ்ஞானி ஜோ இன்கண்டேலா வெளியிட்டார்.அதே நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஹிக்ஸ் பாசன் துகள்தானா என்பதை உறுதி செய்வதற்கு இன்னும் அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

பிரபஞ்ச ரகசியம் அவிழும்

செர்ன் தலைமை இயக்குனர் ரோல்ப் ஹியூயர் இது பற்றி கூறுகையில்,"ஒரு புதிய மைல் கல்லை நாங்கள் எட்டி இருக்கிறோம். ஹிக்ஸ் பாசன் துகளை கண்டறிந்து இருப்பது, புதிய விரிவான ஆய்வுகளுக்கு வழிநடத்தி இருக்கிறது. இது பிரபஞ்ச ரகசியம் பற்றிய திரைகளை அவிழ்க்க உதவும்"என்றார்.





இந்த கண்டு பிடிப்பு புதியது அல்ல.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இந்தியாவில் நிலை பெற்றிருந்த மெடா சயின்ஸின் அடிப்படை இந்த தத்துவம்.

குவாண்டம் தியரியின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு ஒரு துகள் சக்தி பயணிக்கும் தூரம் அளவிட முடியாத நிலை காலம் ஒரு மாயை என்ற நிலைப்பாட்டிற்கு உதாரணம்.மெடா சயின்ஸ் உண்மையான உணர்தலை அடிப்படையாக கொண்டது என்பதால் இடம், பொருள், ஏவல், காலம், தகவலறிவு போன்ற மாயைகள் கடந்தது. நிரூபனம் உணர்தலால்.அளத்தலால் இல்லை.

லாடென்ட் எனெர்ஜி, கடவுள் துகள், இன்ட்யூஷன் இவை யாவும் மனித சக்தியின் நிரூபணத்திற்கு அப்பாற்பட்டவை.இவை மனித உடலின் ஆன்மா என்னும் நிலையுடன் ஒப்பிடக் கூடியவை.அதனாலேயெ இந்த சக்திகளை சூப்பர் நேச்சுரல் சக்தி என்கிறோம். இந்த சக்தியின் ஒரு ஃப்ராக்ஷன் எல்லா படைப்பிலும் உண்டு.அந்த உந்துதலே இயற்கையின் போக்கில் மனிதனை இயங்கச்செய்கிறது.ரோபோவிற்கும் மனிதனுக்கும் வித்தியாசம் ஏற்படுத்துவதும் இதுவே.

இந்த இடம் அங்கீகாரமாவது தனி மனித வாழும் உரிமையில் இருக்கிறது.சராசரி நிலைப்பாட்டில் மக்களை இருத்தாமல், அவர்கள் இயல்புத் திறனுக்கு இடம் தந்து அவர்களின் சிறப்பு நிலையில் செயலாற்றச் செய்வதில் இருக்கிறது.

எத்தனை நுணுகிய ஆராய்ச்சி செய்தாலும், கடலின் அடியில், மலையை குடைந்து ஆராய்ச்சித் தளம் அமைத்தாலும் இந்த பகுதி சர்வ நிச்சயமாக மனிதனின் கட்டுக்குள் வராது.இயற்கையின் அதிசயம் மட்டுமே இது.உணர முடியும்.அங்கீகரிக்க முடியும்.அந்த சக்தி தரும் பயனை ஏற்று இலகு வாழ்வு ஒவ்வொரு மனிதனும் அமைக்க முடியும்.ஆள முடியாது.

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்


ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. இந்த பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு….


1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்’ ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்’ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட் )

3. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்’ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க…

4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்’ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)

5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.

6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்’ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. “நீ ரொம்ப அழகா இருக்கே”ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஆர்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்’ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், ” இந்த ட்ரஸ்’ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்”. (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க.

RULE - RULE IS THE RULE

ஒரு கூட்டத்தின் வெற்றிக்கும் அங்கு போடப்பட்ட விருந்திற்கும் நேரடி தொடர்புண்டு.

ஒரு வேலையை நீங்கள் சரியாக செய்து கொண்டிருந்தால் அது யார் கண்களிலும் படாது.
வேலைக்குத் தகுதியான ஆட்கள் எப்போதுமே இறந்த காலத்தில் தான் இருந்திருப்பார்கள்.
பச்சையாக இருந்து ஆட முடியுமென்றால் - தாவர இயல், சுருங்க முடியுமென்றால் - வேதியியல், வேலை பார்க்க வில்லை என்றால் - இயற்பியல்!
வேலை நடக்கிறதோ இல்லையோ, நிர்வாகச் செலவு மட்டும் உயர்ந்து கொண்டே செல்லும்.
ஒரு பொருளை அதை விடச் சிறிய இடத்திற்குள் உங்களால் செலுத்த முடியவில்லையென்றாலும் ஒரு மேதாவி அதையும் செய்து விடுவான்!
எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு வேலையை நீங்கள் செய்தாலும், நிர்வாகத்தின் பார்வைக்கு இன்னும் கொஞ்சம் நீங்கள் கஷ்டப்பட்டிருக்கலாம் என்றே தோன்றும்.
நாளை மறுநாள் வரை தள்ளிப்போடக் கூடிய வேலையை நாளைக்கே செய்யாதீர்கள்.
நீங்கள் சேமித்த ஒரு பைசா ஒரு பைசா தான்.
எதையுமே முடிக்காமல் விடாதீர்க
ஆண்கள் செய்யும் ஒரு வேலையில் பாதியைத் தான் பெண்களால் இரண்டு மடங்கு கஷ்டப்பட்டு செய்ய இயலும். ஆனால் அது பெண்களால் எளிதில் முடியும் என்பது தான் பிரச்னையே!
ஒரு திட்டம் தீட்டப் படும் போது எவ்வளவு மோசமாக தீட்டப் படுகிறதோ அவ்வளவு எளிதாக அதை நிறைவேற்ற இயலும்.
முடியக் கூடிய எதுவுமே நல்லது தான்.
உங்களால் அவர்களை அடிக்க முடியாவிட்டால் அவர்களுடன் சேர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

சரித்திரத்தை அறியாதவர்கள் அதில் உள்ள தவறுகளைத் திரும்பச் செய்வார்கள். அறிந்தவர்களோ, புது விதமான தவறுகளைச் செய்து அதை சரித்திரமாக்குவார்கள்.

உடனடியாக செய்யக் கூடிய வேலை எதுவுமே சின்ன வேலை தான். அதைச் செய்யாமல் விட்டால் தான் அது பெரிய வேலையாக மாறும்.

நீங்கள் தற்போது நிற்கும் இடம் தான் தொடங்குவதற்கு தோதான இடம் ஆகும்.

வேறு ஏதாவதைப் பிடிக்கும் வரை இருக்கும் பிடியை விட்டுவிடக் கூடாது.

ஒவ்வொருவரும் தனக்கு அழகான, அறிவான, பணக்கார, சிக்கனமறிந்த, குறிப்பறிந்து செயல்படும், நன்றாகச் சமைக்கக் கூடிய மனைவி தான் வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால், அந்தோ பரிதாபம், சட்டம் ஒரு மனைவிக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது.

உங்களிடம் சில்லறை இல்லையென்றால் நடத்துனரிடம் மட்டும் எப்படி இருக்கும்?

First Mobile Secret

ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி! இதே நாள் 1973 ஆம் வருடத்தில் தான் உலகின் முதல் கையடக்க மொபைல் போனை மோட்டோ ரோலா நிறுவனத்தின் தலைமை பொறியாளர் மார்டின் கூப்பர் நிருபர்கள் முன்னிலையில் இயங்கச் செய்து உலகத்திற்கு அறிமுகப் படுத்தினார்.

9 இன்ச் நீளமும் 2.5 பவுண்ட் எடையும் உள்ள அந்த மொபைல் போனில் 30 நிமிடங்களுக்கு பேச 10 மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டுமாம்.
இது பழைய செய்தி.. இதன் லேட்டஸ்ட் அப்டேட் யூ-டியூபில் பல லட்ச பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்திருக்கும் ''டைம் ட்ராவலர் இன் 1938 ப்லிம்''.

1930 களில் வந்த ஆங்கிலப் படம் ஒன்றில் ஒரு பெண் மொபைல் போனில் பேசிச் செல்லும் சில நிமிட வீடியோ காட்சிகள்.
இது எப்படி சாத்தியம் என ஊரே தலை பிய்த்துக் கொள்ள, அந்த வீடியோவில் வந்த ஜெர்ட்ரூட் ஜோன்ஸ் என்ற பெண்ணின் பேரப் பிள்ளையான ப்ளானர்செக் தன் கொள்ளு பாட்டியிடம் இதுக்குறித்து கேட்டதாக அது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.

"அப்போது என் கொள்ளு பாட்டிக்கு 17 வயது. லியோமின்ஸ்டெரின் மாஸ்சச்சுசெட்ஸ் நிறுவனம் மொபைல் போன் குறித்த ஆய்வுகளில் ஈடுப்பட்டிருந்தது. முதலில் தயாரான ஐந்து போன்களை என் பாட்டியிடமும் மற்ற நான்கு பெண்களிடமும் கொடுத்து பரிசோதித்தது. இதை தான் என் பாட்டி கூறினார்'' என்கிறார் ப்ளானட்செக்.

இதன் உண்மை தன்மை இன்னும் நிரூபிக்கப் படவில்லை. ஒருவேளை நிரூபிக்கப் பட்டால் கிட்டத் தட்ட முதல் போன் என்று நாம் சொல்லும் தேதியை விட இது 40 வரும் முன்னே இருக்கும்.